search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Oscars"

    • ஆஸ்கர் தேர்வு குழுவில் உறுப்பினர்களாக இணைவதற்கு பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தலைச்சிறந்த கலைஞர்களுக்கு ஒவ்வொரு ஆண்டு அழைப்பு விடுக்கப்படுகிறது.
    • 2023 ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருது தேர்வு குழுவில் இந்தியர்கள் உட்பட 398 பேர் உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

    ஒவ்வோரு ஆண்டும் ஆஸ்கர் விருது குழுவில் உறுப்பினராக சேர பல்வேறு நாடுகளைச் சேர்ந்த கலைஞர்கள் அழைக்கப்படுவார்கள். அந்த வகையில் 2023-ஆம் ஆண்டிற்கான புதிய உறுப்பினர்களை சேர்ப்பது தொடர்பான பட்டியலை ஆஸ்கர் வெளியிட்டுள்ளது. அதன்படி, 2023ம் ஆண்டு 'ஆஸ்கர் விருதுகள்' தேர்வுக்குழுவுக்கு இந்தியர்கள் உட்பட 398 பேர் உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

    இயக்குனர் மணிரத்னம், இசையமைப்பாளர் கீரவாணி, நடிகர்கள் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர். ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஒளிப்பதிவாளர் கே.கே.செந்தில்குமார், தயாரிப்பாளர் கரண் ஜோகர் ஆகியோரும் உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.



    இந்நிலையில் ஆஸ்கர் விருது குழுவில் தேர்வாகியுள்ளவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து இயக்குனர் ராஜமவுலி பதிவிட்டுள்ளார். அதில், ஆர்.ஆர்.ஆர் படக்குழுவிலிருந்து 6 நபர்கள் ஆஸ்கர் தேர்வு குழுவில் இணைந்திருப்பது மிகவும் பெருமையாகவுள்ளது. இந்திய சினிமாவில் இருந்து இடம்பெற்றிருக்கும் அனைவருக்கும் வாழ்துக்கள் என்று பதிவிட்டுள்ளார்.

    ஏற்கனவே தமிழகத்தில் இருந்து இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், நடிகர் சூர்யா ஆகியோர் உறுப்பினர்களாக உள்ளது குறிப்பிடத்தக்கது.



    • ஆஸ்கர் தேர்வு குழுவில் உறுப்பினர்களாக இணைவதற்கு பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தலைச்சிறந்த கலைஞர்களுக்கு ஒவ்வொரு ஆண்டு அழைப்பு விடுக்கப்படுகிறது.
    • 2023 ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருது தேர்வு குழுவில் இந்தியர்கள் உட்பட 398 பேர் உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

    ஆஸ்கர் தேர்வு குழுவில் உறுப்பினர்களாக இணைவதற்கு பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தலைச்சிறந்த கலைஞர்களுக்கு ஒவ்வொரு ஆண்டு அழைப்பு விடுக்கப்படுகிறது. இதற்கு முன்பு தமிழகத்தில் இருந்து இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், நடிகர் சூர்யா ஆகியோர் உறுப்பினர்களாக இருக்கின்றனர்.


    இந்நிலையில் 2023 ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருது தேர்வு குழுவில் இந்தியர்கள் உட்பட 398 பேர் உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில் இயக்குனர் மணிரத்னம், இசையமைப்பாளர் கீரவாணி, நடிகர்கள் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர். ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மேலும் ஒளிப்பதிவாளர் கே.கே.செந்தில்குமார், தயாரிப்பாளர் கரண் ஜோகர் ஆகியோரும் உறுப்பினர்களாக தேர்வாகியுள்ளனர்.

    • ஆஸ்கர் விருது வழங்கும் விழா லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்றது.
    • ஆர்.ஆர்.ஆர். மற்றும் தி எலிபென்ட் விஸ்பரர்ஸ் ஆவண குறும்படத்திற்கு விருது வழங்கப்பட்டது.

    புவனேஸ்வர்:

    ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் சுதர்சன் பட்நாயக். இவர் சிறந்த மணல் சிற்ப கலைஞராவார். உலகில் நடந்து வரும் அனைத்து விஷயங்கள் தொடர்பாக தனது கருத்தை தயங்காமல் தெரிவித்து வருபவர். எந்த விஷயமானாலும் அது தொடர்பாக ஒடிசா கடற்கரையில் மணல் சிற்பங்களை வரைந்து வருபவர். பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார்.

    இதற்கிடையே, அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்ற ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் ஆர்.ஆர்.ஆர். படத்திற்கும் 'தி எலிபென்ட் விஸ்பரர்ஸ்' ஆவண குறும்படத்திற்கும் விருது வழங்கப்பட்டது.

    இந்நிலையில், ஆஸ்கர் விருது வென்ற ஆர்.ஆர்.ஆர். படக்குழுவினருக்கும், தி எலிபென்ட் விஸ்பரர்ஸ் படக்குழுவினருக்கு மணல் சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக் மணல் சிற்பம் வரைந்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் வரலாற்றிலேயே முதன்முறையாக இந்த ஆண்டு சிறந்த வெளிநாட்டு படமாக மெக்சிகோ நாட்டின் ரோமா திரைப்படம் பெற்றுள்ளது. #Oscars #Oscars2019 #OscarsAllAccess #Roma #BestForgienFilm
    லாஸ் ஏஞ்சல்ஸ்:

    அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 91-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு பிரிவுகளில் விருதுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. காலை 7 மணியளவில் துவங்கிய இந்த நிகழ்ச்சி தொகுப்பாளர் இன்றி நடந்து வருகிறது.

    இந்த ஆண்டிற்கான சிறந்த வெளிநாட்டு மொழி படமாக மெக்சிகோ நாட்டின் ‘ரோமா’ திரைப்படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.  இந்த திரைப்படம் 1970களில்,  நடுத்தர பணிப்பெண்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டதாகும். இதுவே ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்ட  8வது மெக்சிகன் திரைப்படம் ஆகும்.



    இத்திரைப்படத்தில் கிளியோ எனும் கதாபாத்திரம், கியூரோனின் வீட்டில் பணிபுரிந்த லிபோரியாவின் உண்மைக் கதையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டதாகும். இந்த கதாப்பாத்திரத்தில் யலிட்சா அபராசியோ எனும் அறிமுக நடிகை நடித்திருந்தார். இவர் சிறந்த நடிகைக்கான ஆஸ்கர் விருதிற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளார். மேலும்  நெட்ஃப்ளிக்ஸில் வெளியிடப்பட்ட திரைப்படங்களில் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டு விருது வென்ற முதல் திரைப்படம் ஆகும்.  

    இவ்விருதினை பெற்ற கியூரோன் பேசுகையில், ‘வெளிநாட்டுப் படங்களை அதிகம் விரும்பி பார்ப்பதோடு, இவற்றை கற்றுக் கொண்டே வளர்ந்தேன். சிட்டிசன் கேன், ஜாஸ், ராஷ்மோன், தி காட்பாதர் மற்றும் ப்ரீத்லேஸ் போன்ற திரைப்படங்கள் எனக்கு உத்வேகமாக இருந்தன. இந்த விருதினை லிபோரியாவிற்கு சமர்ப்பிகிறேன்’ என்றார்.

    மேலும் இந்த திரைப்படம் சிறந்த கோல்டன் குளோப், கிரிடிக்ஸ் சாய்ஸ் திரைப்பட விருது மற்றும் சிறந்த வெளிநாட்டு மொழி படத்திற்கான பஃப்டா விருது ஆகியவற்றையும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. #Oscars #Oscars2019 #OscarsAllAccess #Roma #BestForgienFilm

    அமெரிக்காவில் நடைபெற்ற ஆஸ்கர் விருது விழாவில் அகாடமி விருதை வென்ற திரைப்படங்கள், பிரபலங்கள் குறித்த முழு விவரத்தை இங்கே காணலாம். #Oscars #Oscars2019 #OscarsAllAccess
    லாஸ் ஏஞ்சல்ஸ்:

    ஹாலிவுட் திரையுலகின் கவுரவமிக்க விருதாக கருதப்படுவது, ஆஸ்கார் எனப்படும் அகாடமி விருது. கதை, வசனம், இயக்கம், இசை, நடிப்பு என 24 பிரிவுகளில் இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது. உலகமே உற்று நோக்கும் 91-வது ஆஸ்கார் விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்றது. இதில் பல்வேறு பிரிவுகளில் விருதுகளை வென்றவர்கள் விவரம் வெளியாகி உள்ளது. காலை சுமார் 7 மணியளவில் நிகழ்ச்சி தொகுப்பாளர் இன்றி விழா துவங்கியது.

    இதில் போகிமியான் ராஃப்சோடி படம் அதிகபட்சமாக சிறந்த நடிகர் உட்பட நான்கு பிரிவுகளில் ஆஸ்கர் விருதை வென்றுள்ளது. பிளாக் பேந்தர், ரோமா படங்கள் தலா 3 ஆஸ்கர் விருதுகளை வென்றன. கிரீன் புக் உள்ளிட்ட படங்கள் தலா 2 பிரிவுகளில் விருதுகளை வென்றுள்ளன.



    போகிமியான் ராஃப்சோடி திரைப்படம் (4 விருதுகள்)

    ஆஸ்கார் விருதை வென்ற படங்கள், கலைஞர்கள் குறித்த முழுவிவரம் வருமாறு:

    சிறந்த படம் - கிரீன் புக்

    சிறந்த இயக்குநர் - அல்போன்சோ குவாரோன் (ரோமா)

    சிறந்த நடிகர் - ரமி மாலக் (போகிமியான் ராஃப்சோடி)

    சிறந்த நடிகை - ஒலிவியா கோல்மேன் (த ஃபேவரைட்)

    சிறந்த ஆவணப்படம் - எலிசபெத் சாய் வசர்ஹெலி, ஜிம்மி சின், இவான் ஹேஸ் மற்றும் ஷானன் டில் (ப்ரீ சோலோ)

    சிறந்த வெளிநாட்டு படம் - ரோமா (மெக்ஸிகோ)

    சிறந்த அனிமேஷன் திரைப்படம் - ஸ்பைடர் மேன் - இன்டூ த ஸ்பைடர் வெர்ஸ்



    சிறந்த திரைப்படத்திற்கான விருது வென்ற `கிரீன் புக்'

    சிறந்த அனிமேஷன் குறும்படம் - பாவ்

    சிறந்த ஆவண குறும்படம் - பீரியட். எண்ட் ஆப் சென்டன்ஸ்

    சிறந்த லைவ் ஆக்சன் குறும்படம் - ஸ்கின்

    சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ் - ஃபர்ஸ்ட் மேன்

    சிறந்த ஒளிப்பதிவாளர் - அல்போன்சோ குவாரோன் (ரோமா)

    சிறந்த படத்தொகுப்பாளர் - ஜான் ஓட்மேன் (போகிமியான் ராஃப்சோடி)

    சிறந்த திரைக்கதை - நிக் வல்லலோங்கா, பிரெயன் கியூரி, பீட்டர் ஃபேரலி (கிரீன் புக்)

    தழுவல் திரைக்கதை - சார்லி வச்டெல், டேவிட் ரேபினோவிட்ஸ், கெவின் வில்மோட் மற்றும் ஸ்பைக் லீ (பிளாக்கிளான்ஸ்மேன்)



    சிறந்த வெளிநாட்டு படமாக விருது வென்ற `ரோமா'

    சிறந்த பின்னணி இசை - லட்விக் கோரன்சான் (பிளாக் பேந்தர்)

    சிறந்த பாடல் - ஷாலோ (எ ஸ்டார் இஸ் பார்ன்)

    சிறந்த துணை நடிகர் - மஹர்ஷலா அலி (கிரீன் புக்)

    சிறந்த துணை நடிகை - ரெஜினா கிங் (இஃப் ப்பீல் ஸ்ட்ரீட் குட் டாக்)

    சிறந்த ஒப்பனை - கிரேக் கேனம், கேட் பிஸ்கோ மற்றும் பேட்ரிசியா டெஹானி (வைஸ்)

    ஆடை வடிவமைப்பு - ரூத் கார்டர் (பிளாக் பேந்தர்)

    தயாரிப்பு வடிவமைப்பு - ஹன்னா பீச்லெர் (பிளாக் பேந்தர்)

    சிறந்த ஒலி படத்தொகுப்பு - ஜான் வார்ஹஸ்ட் மற்றும் நினா ஹார்ட்ஸ்டோன் (போகிமியான் ராஃப்சோடி)

    ஒலி கோர்ப்பு - பால் மேஸ்சி, டிம் கேவஜின், ஜான் கேசலி (போகிமியான் ராஃப்சோடி)

    #Oscars #Oscars2019 #OscarsAllAccess 
    இந்திய பெண்கள் மாதவிடாய் காலத்தில் சந்திக்கும் பிரச்சனைகளை மையப்படுத்தி எடுக்கப்பட்ட ஆவண குறும்படத்துக்கு ஆஸ்கர் விருது வழங்கப்பட்டுள்ளது. #Oscars #Oscars2019 #OscarsAllAccess #PeriodendOfSentence #BestDocumentaryShort
    லாஸ் ஏஞ்சல்ஸ்:

    அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 91-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு பிரிவுகளில் விருதுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. காலை 7 மணியளவில் துவங்கிய இந்த நிகழ்ச்சி தொகுப்பாளர் இன்றி நடந்து வருகிறது.

    இந்நிலையில் கோவையைச் சேர்ந்த நாப்கின் உற்பத்தியாளர் முருகானந்தம் , மலிவு விலையில் நாப்கின்களை அறிமுகப்படுத்தினார். அவ்வப்போது பல இடங்களுக்கு சென்று பெண்களிடையே கலந்துரையாடி விழிப்புணர்வும் ஏற்படுத்தி வருகின்றார்.



    இவரது மலிவு விலை நாப்கின்கள் மற்றும்  இந்திய  பெண்கள் மாதவிடாய் காலத்தில் படும் அவதிகளை எடுத்துச் சொல்வதை மையமாகக் கொண்டு ஆவணக் குறும்படமாக ‘பீரியட்- எண்ட் ஆஃப் சென்டன்ஸ்’ எனும் பெயரில் கடந்த ஆண்டு வெளியானது. இப்படத்தினை குனேட் மோங்கா தயாரித்திருந்தார்.  

    இப்படம் இந்த ஆண்டிற்கான சிறந்த ஆவணக் குறும்படமாக ஆஸ்கர் விருது விழாவில் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

    இது குறித்து மலிவு விலை நாப்கின் உற்பத்தியாளர் முருகானந்தம் கூறுகையில், ‘இந்த படத்திற்கு ஆஸ்கர் விருது கிடைப்பதன் மூலம் சர்வதேச அளவில் மாதவிடாய் குறித்து விழிப்புணர்வு ஏற்படும்’ என கூறினார். இப்படத்தில் முருகானந்தம் ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. #Oscars #Oscars2019 #OscarsAllAccess #PeriodendOfSentence #BestDocumentaryShort
    அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 91-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா கோலாகலமாக தொடங்கியது. #Oscars #Oscars2019 #OscarsAllAccess
    லாஸ் ஏஞ்சல்ஸ்:

    அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 91-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு பிரிவுகளில் விருதுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. காலை 7 மணியளவில் துவங்கிய இந்த நிகழ்ச்சி தொகுப்பாளர் இன்றி நடந்து வருகிறது.

    இதில் இஃப் ப்பீல் ஸ்ட்ரீட் குட் டாக் படத்தில் நடித்த ரெஜினா கிங் சிறந்த துணை நடிகைக்கான விருதை பெற்றார். சிறந்த ஆவணப்படமாக ப்ரீ சோலோ படமும், வைஸ் படத்திற்கு சிறந்த ஒப்பனைக்கான விருதும் வழங்கப்பட்டது. சிறந்த ஆடை வடிவமைப்பு, தயாரிப்பு வடிவமைப்பு என பிளாக் பேந்தர் படத்திற்கு தொடக்கத்திலேயே 2 விருதுகள் கிடைத்துள்ளது.



    ஆடை வடிவமைப்பு - ரூத் கார்டர் (பிளாக் பேந்தர்)

    தயாரிப்பு வடிவமைப்பு - ஹன்னா பீச்லெர் (பிளாக் பேந்தர்)

    சிறந்த ஒளிப்பதிவாளருக்கான விருதை ரோமா படத்திற்காக அல்போன்சோ குவாரோன் பெற்றார். சிறந்த ஒலி படத்தொகுப்புக்கான ஆஸ்கார் விருது போகிமியன் ராப்சோடி படத்திற்கு கிடைத்தது. #Oscars #Oscars2019 #OscarsAllAccess 

    உலகளவில் பிரபலமான ஆஸ்கார் விருதுக்கான சிறந்த வேற்று மொழி படத்திற்கான பட்டியலில் இந்தியா சார்பில் அசாம் திரைப்படம் `வில்லேஜ் ராக்ஸ்டார்' பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. #VillageRockstars #Oscars91
    உலகளவில் பிரபலமான ஆஸ்கார் விருது வழங்கும் விழா ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்காவில் நடத்தப்படுகிறது. அதில் சிறந்த படங்கள், நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு ஆஸ்கார் விருது வழங்கி கவுரவிக்கப்படுகிறது.

    அந்த வகையில் 91-வது ஆஸ்கார் விருது வழங்கும் விழா அடுத்த ஆண்டு நடைபெற இருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும், இந்திய அளவில் சிறந்த திரைப்படங்களை தேர்வு செய்து வேற்று மொழிக்கான ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரை செய்யப்படும். அந்த வகையில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஆஸ்கார் விருது நிகழ்ச்சியில், சிறந்த வேற்று மொழி படத்திற்கான பட்டியலில் அசாமிய திரைப்படம் `வில்லேஜ் ராக்ஸ்டார்' என்ற படம் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.



    ரீமா தாஸ் இயக்கிய இந்த திரைப்படம் ஏற்கனவே இந்த ஆண்டுக்கான தேசிய விருதினை வென்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 

    இந்திய குழு தேர்வு செய்யும் பட்டியலில் நயன்தாராவின் கோலமாவு கோகிலா மற்றும் தேசிய விருதை வென்ற டூலெட் படங்களும் இடம்பிடித்துள்ளன. இவை ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்படுகிறதா என்பது விரைவில் தெரிய வரும். #Oscars #Oscars91 #Oscars2019

    ×