என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆஸ்கார்"

    • சசிகுமாரின் டூரிஸ்ட் ஃபேமிலி சிறந்த திரைப்படப் பிரிவுக்கான தகுதிப் பட்டியலில் தேர்வாகியது.
    • இறுதிப் பரிந்துரைப் பட்டியல் ஜனவரி 22 அன்று வெளியாகும்.

    சென்னை:

    2026-ம் ஆண்டிற்கான 98-வது ஆஸ்கார் விருதுவிழா மார்ச் மாதம் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற உள்ளது.

    இந்நிலையில், விருதுகளுக்கான தகுதியுடைய 201 திரைப்படங்களின் பட்டியலை ஆஸ்கார் அகாடமி வெளியிட்டுள்ளது. அதன்படி ஆஸ்கார் விருதுகளுக்கான தகுதிப்பட்டியலில் சிறந்த திரைப்படப் பிரிவில் தமிழில் இருந்து சசிகுமாரின் டூரிஸ்ட் ஃபேமிலி தேர்வாகியுள்ளது.

    இறுதிப் பரிந்துரைப் பட்டியல் ஜனவரி 22 அன்று வெளியாகும்.

    இந்நிலையில், ஆஸ்கார் விருதுக்கான பரிந்துரைப் பட்டியலில் இடம்பெற்றதற்காக அனைவர்க்கும் நன்றி என எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளார் சசிகுமார்.

    • 'காந்தாரா: அத்தியாயம் 1', 'தன்வி தி கிரேட்' ஆகிய படங்கள் இப்போட்டியில் நேரடியாகத் தகுதி பெற்றுள்ளன.
    • சசிகுமாரின் டூரிஸ்ட் ஃபேமிலி சிறந்த திரைப்படப் பிரிவுக்கான தகுதிப் பட்டியலில் தேர்வாகியுள்ளது.

    2026-ஆம் ஆண்டிற்கான 98-வது ஆஸ்கார் விருதுவிழா, மார்ச் மாதம் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற உள்ளது. இந்நிலையில் விருதுகளுக்கான தகுதியுடைய 201 திரைப்படங்களின் பட்டியலை அகாடமி வெளியிட்டுள்ளது. அதன்படி ஆஸ்கார் விருதுகளுக்கான தகுதிப்பட்டியலில் இடம்பெற்றுள்ள இந்தியப் படங்கள் குறித்து காண்போம்..

    சிறந்த திரைப்படப் பிரிவில் ரிஷப் ஷெட்டியின் 'காந்தாரா: அத்தியாயம் 1', அனுபம் கெர் இயக்கிய 'தன்வி தி கிரேட்' ஆகிய படங்கள் இப்போட்டியில் நேரடியாகத் தகுதி பெற்றுள்ளன. தமிழில் இருந்து சசிகுமாரின் டூரிஸ்ட் ஃபேமிலி சிறந்த திரைப்படப் பிரிவுக்கான தகுதிப் பட்டியலில் தேர்வாகியுள்ளது.

    நீரஜ் கய்வான் இயக்கிய 'ஹோம் பவுண்ட்' திரைப்படம் இந்தியாவின் அதிகாரப்பூர்வப் பதிவாக அனுப்பப்பட்டு, தற்போது 15 படங்களைக் கொண்ட சுருக்கப்பட்ட பட்டியலில் இடம் பிடித்துள்ளது. "மகாவதார் நரசிம்மா" படம் சிறந்த அனிமேஷன் திரைப்படப் பிரிவில் இடம்பெற்றுள்ளது. ராதிகா ஆப்தே நடித்த சிஸ்டர் மிட்நைட் படம், சிறந்த திரைப்படம் உள்ளிட்ட பொதுப் பிரிவுகளில் போட்டியிடத் தகுதி பெற்றுள்ளது. தொடர்ந்து இறுதிப் பரிந்துரைப் பட்டியல் ஜனவரி 22 அன்று வெளியாகும்.

    உலகளவில் 855 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்து சாதனை படைத்தது.

    2022-ல் வெளியாகி நாட்டையே திரும்பிப் பார்க்க வைத்த கன்னட படம் ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த 'காந்தாரா'.

    இதன் முன்கதையாக கடந்த ஆண்டு அக்டோபரில் வெளியான 'காந்தாரா சாப்டர் 1' அதே அளவு கதை இல்லையென்றாலும் பிரமாண்டத்தில் குறை வைக்கவில்லை. ஹாலிவுட் தரத்திலான VFX காட்சிகள் பிரமிக்க வைத்தன.

    இந்தப் படம், உலக அளவில் சுமார் 855 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்து சாதனை படைத்தது.

    இந்நிலையில் இந்த ஆண்டு மார்ச் மாதம் நடக்க உள்ள 98-வது ஆஸ்கர் விருது விழாவில் சிறந்த திரைப்படப் பிரிவில் போட்டியிடத் தகுதியுள்ள உலகளாவிய 201 திரைப்படங்களின் பட்டியலில் 'காந்தாரா சாப்டர் 1' இடம்பெற்றுள்ளது.

    ஆஸ்கர் அகாடமி விதித்துள்ள தகுதி வரம்புகளை இந்தப் படம் வெற்றிகரமாகப் பூர்த்தி செய்துள்ளது.

    இந்தப் பட்டியிலில் காந்தாராவுடன் சேர்த்து அனுபம் கெர் இயக்கிய 'தன்வி தி கிரேட்' திரைப்படமும் தகுதி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. முன்னதாக கடந்த 2022 வெளியான காந்தாரா படமும் அப்போதைய ஆஸ்கார் பட்டியலில் இடம்பெற்றது. அனால் இறுதிப்பட்டியலில் இடம்பெறவில்லை. 

    98-வது ஆஸ்கர் விருதுகளுக்கான இறுதிப்பட்டியல் வரும் ஜனவரி 22, 2026 அன்று அறிவிக்கப்பட உள்ளது. அதில் 'காந்தாரா சாப்டர் 1' இறுதிப்  பட்டியலுக்குள் நுழையுமா என்பதை ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.

    • நான் கேட்டு வளர்ந்த கதைகள், என்னுள் இருந்த பயங்கள் மற்றும் மௌனங்களின் வெளிப்பாடே பிரம்மயுகம்.
    • 'Where the Forest Meets the Sea' என்ற சிறப்புத் திரையிடல் இதுவாகும்.

    மலையாளத் திரையுலகின் மெகா ஸ்டார் மம்மூட்டி நடிப்பில், ராகுல் சதாசிவன் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற திரைப்படம் 'பிரம்மயுகம்'.

    இந்நிலையில் இந்த படம் வரும் பிப்ரவரி 12, அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள புகழ்பெற்ற ஆஸ்கர் அகாடமி அருங்காட்சியகத்தில் திரையிடப்பட உள்ளது.

    உலகளவில் நாட்டுப்புறக் கதைகளை அடிப்படையாகக் கொண்ட திகில் படங்களுக்காக நடத்தப்படும் 'Where the Forest Meets the Sea' என்ற சிறப்புத் திரையிடல் இதுவாகும். 

    ஆஸ்கர் அகாடமி அருங்காட்சியகத்தில் திரையிடப்படும் மம்மூட்டியின் முதல் திரைப்படம் இதுவாகும். மேலும் இந்த பிரிவில் திரையிடப்பட தேர்வான முதல் இந்திய படம் இதுவாகும். 

    இது குறித்து இயக்குநர் ராகுல் சதாசிவன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், "நான் கேட்டு வளர்ந்த கதைகள், என்னுள் இருந்த பயங்கள் மற்றும் மௌனங்களின் வெளிப்பாடே பிரம்மயுகம்.

    மொழி மற்றும் நிலங்களைக் கடந்து இந்தப் படம் அங்கீகரிக்கப்படுவது மட்டற்ற மகிழ்ச்சியைத் தருகிறது" என்று தெரிவித்துள்ளார்.

    பிரம்மயுகம் படத்துடன் புகழ்பெற்ற திகில் திரைப்படங்களான 'Midsommar', 'The Witch' மற்றும் 'The Wicker Man' போன்ற படங்களுடன் இதில் திரையிடப்படுகிறது.   

    • பிஎஸ் வினோத்ராஜின் அடுத்த படைப்பாக சூரி நடிப்பில் உருவாகியுள்ள கொட்டுக்காளி திரைப்படம் விளங்குகிறது
    • சமீபத்தில் ஜெர்மனியில் நடந்த 74 வது பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் கொட்டுக்காளி திரையிடையப்பட்டது.

    திரைப்படங்களுக்கு கிடைக்கும் அதிகப்பட்ச அங்கீகாரம் ரசிகர்களின் கைதட்டலே என்றாலும் சர்வதேச திரைப்பட விழாக்களில் தாங்கள் பிரசவித்த திரைப்படங்களுக்கு கிடைக்கும் அங்கீகாரம் இயக்குனருக்கு பெரும் உத்வேகத்தையும் தங்களின் பாதையில் சரியாவே பயணிக்கிறோம் என்ற உறுதியையும் தருவதாக அமைந்துள்ளது.

    அந்த வகையில், கடந்த 2022 ஆம் ஆண்டு இந்தியா சார்பில் ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட கூழாங்கல் படத்தை இயக்கிய அறிமுக இயக்குனர் பிஎஸ் வினோத்ராஜின் அடுத்த படைப்பாக சிவகார்த்திகேயன் தாயாரிப்பில் சூரி நடிப்பில் உருவாகியுள்ள கொட்டுக்காளி திரைப்படம் விளங்குகிறது. டீசர்மட்டும் வெளியிடப்பட்டுள்ள இந்த படம் இன்னும் திரையரங்குகளில் வெளியாகாத நிலையில் தற்போது சர்வதேச திரைப்பட விழாக்களில் அங்கீகாரங்களை குவித்து வருகிறது. 

     

    அந்த வகையில் தற்போது நடந்து வரும் 53 வது டிரான்சில்வேனியா சர்வதேச திரைப்பட விழாவில் சிறப்பு ஜூரி விருதை கொட்டுக்காளி திரைப்படம் வென்று அசத்தியுள்ளது. இந்த நிகழ்ச்சியில்  கொட்டுக்காளி பட இயக்குனர் பிஎஸ் வினோத்ராஜ், நடிகை அனா பென் ஆகியோர் கலந்துகொண்டனர்.

    சமீபத்தில் ஜெர்மனியில் நடந்த 74 வது பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் கொட்டுக்காளி திரையிடையப்பட்டது. இதுதவிர்த்து தற்போது நடந்து வரும் 53 வது டிரான்சில்வேனியா சர்வதேச திரைப்பட விழாவில் 'பிக் ஸ்க்ரீன் போட்டிப் பிரிவில்' தேர்வாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • ஜெர்மனியில் நடந்த 74 வது பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் கொட்டுக்காளி திரையிடையப்பட்டது.
    • சிறந்த படத்திற்கான 'GOLDEN LYNX' விருதை வென்ற 'கொட்டுக்காளி' திரைப்படம் வென்றுள்ளது.

    கடந்த 2022 ஆம் ஆண்டு இந்தியா சார்பில் ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட கூழாங்கல் படத்தை இயக்கிய அறிமுக இயக்குனர் பிஎஸ் வினோத்ராஜ் தனது அடுத்த படைப்பாக கொட்டுக்காளி திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

    சிவகார்த்திகேயன் தாயாரிப்பில் சூரி நடிப்பில் உருவாகியுள்ள இப்படத்தின் டீசர் மட்டும் வெளியாகியுள்ளது. இந்த படம் இன்னும் திரையரங்குகளில் வெளியாகாத நிலையில் தற்போது சர்வதேச திரைப்பட விழாக்களில் அங்கீகாரங்களை குவித்து வருகிறது.

    அந்த வகையில் தற்போது நடந்து வரும் 53 வது டிரான்சில்வேனியா சர்வதேச திரைப்பட விழாவில் சிறப்பு ஜூரி விருதை கொட்டுக்காளி திரைப்படம் வென்று அசத்தியுள்ளது.

    சமீபத்தில் ஜெர்மனியில் நடந்த 74 வது பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் கொட்டுக்காளி திரையிடையப்பட்டது. இது தவிர்த்து தற்போது நடந்து வரும் 53 வது டிரான்சில்வேனியா சர்வதேச திரைப்பட விழாவில் 'பிக் ஸ்க்ரீன் போட்டிப் பிரிவில்' தேர்வாகியுள்ளது.

    இந்நிலையில், போர்ச்சுக்கலில் நடைபெற்ற புதிய படங்கள், இயக்குநர்களுக்கான 20ஆவது FEST Festival விழாவில் சிறந்த படத்திற்கான 'GOLDEN LYNX' விருதை 'கொட்டுக்காளி' திரைப்படம் வென்றுள்ளது.

    இந்த தகவலை இப்படத்தின் தயாரிப்பாளரான சிவகார்த்திகேயன் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • ஒரு பக்கம் அரசியல் சாசனத்தின் நகலைப் பறைசாற்றிக் கொண்டிருக்கிறார் ராகுல் காந்தி.
    • மறுபுறம் அவரது கட்சி அதை இழிவுபடுத்துகிறது என்றார் பி.ஆர்.எஸ் கட்சி தலைவர்.

    ஐதராபாத்:

    பாரத ராஷ்டிர சமிதி கட்சியில் இருந்து 7 எம்.எல்.ஏ.க்கள், 6 எம்.எல்.சி.க்கள் மற்றும் ஒரு மாநிலங்களவை எம்.பி. ஆகியோர் காங்கிரஸ் கட்சிக்கு மாறினர்.

    இந்நிலையில், பி.ஆர்.எஸ். கட்சி தலைவரும், முன்னாள் முதல் மந்திரி சந்திரசேகர் ராவின் மகனுமான கே.டி.ராமாராவ் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    பாரதி ராஷ்டிர சமிதி கட்சியிலிருந்து விலகிய உறுப்பினர்களுக்கு எதிராக சட்டப் போராட்டத்திற்குத் தயாராகி வருகிறோம்.

    இதுதொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யத் திட்டமிட்டுள்ளோம். சமீபத்திய கட்சித் தாவல்களின் பிரதிபலிப்பாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    அரசியலமைப்புச் சட்டத்தின் பாதுகாவலர்களான அனைவரையும் சந்திப்போம்.

    ஒரு பக்கம் அரசியல் சாசனத்தின் நகலைப் பறைசாற்றிக் கொண்டிருக்கிறார் ராகுல் காந்தி. மறுபுறம் அவரது கட்சி அதை இழிவுபடுத்துகிறது. அரசியல் சாசனத்தைப் பாதுகாப்பதுபோல் ஆஸ்கார் லெவலில் செயல்படுகிறார்.

    பா.ஜ.க மற்றும் காங்கிரசால் பாதிக்கப்பட்ட அனைவரும் கட்சி மாறுதலுக்கு எதிராக ஒன்றுபட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

    • பூட்டிய வீட்டுக்குள் பிரபல ஹாலிவுட் நடிகரான ஜீன் ஹேக்மேன் இறந்து கிடந்தார்.
    • இவர் இரண்டு முறை ஆஸ்கார் விருதை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    வாஷிங்டன்:

    ஆஸ்கார் விருது பெற்ற ஹாலிவுட் நடிகர் ஜீன் ஹேக்மேன் (95). சூப்பர்மேன் உள்பட பல்வேறு படங்களில் நடித்து பிரபலமானார். ஆஸ்கார் விருதுக்கு இவரது பெயர் 5 முறை பரிந்துரை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. தி பிரெஞ்சு கனெக்சன் உள்ளிட்ட படங்களுக்காக ஆஸ்கார் விருதை தட்டிச்சென்றார். அதன்பின் 1970-களின் நடுப்பகுதியில் சினிமாவை விட்டு ஒதுங்கினார்.

    இதையடுத்து, நியூ மெக்சிகோ மாகாணத்தில் தனது மனைவி பெட்ஸி அரகாவா (63) உடன் வசித்து வந்தார்.

    இந்நிலையில், நியூ மெக்சிகோவில் உள்ள ஜீன் ஜேக்மேன் வீடு நீண்ட நேரமாக பூட்டியே கிடந்தது. இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் போலீசுக்கு தகவல் அளித்தனர்.

    தகவலறிந்த போலீசார் அவரது வீட்டுக்குச் சென்றனர். வீடு பூட்டிக் கிடந்ததால் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்றனர். அங்கு ஜீன், அவரது மனைவி அரகாவா ஆகியோர் பிணமாக கிடந்தனர். அவர்களின் செல்லப் பிராணியான நாயும் செத்துக் கிடந்தது.

    இதுதொடர்பாக, வழக்குப்பதிவு செய்த போலீசார் அவர்கள் தற்கொலை செய்துகொண்டனரா அல்லது கொலையா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×