search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Suri"

    • தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் சிவகார்த்திகேயன் படத்தயாரிப்பிலும் ஈடுபட்டு வருகிறார்
    • சிவகாத்திகேயன் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் வெளிவந்த கனா, அருவி, டாக்டர், டான் போன்ற திரைப்படங்கள் வெற்றி பெற்றன

    தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் சிவகார்த்திகேயன் படத்தயாரிப்பிலும் ஈடுபட்டு வருகிறார். இவர் சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் என்கிற நிறுவனத்தின் மூலம் ஏராளமான படங்களை தயாரித்து வருகிறார்.

    சிவகாத்திகேயன் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் வெளிவந்த கனா, அருவி, டாக்டர், டான் போன்ற திரைப்படங்கள் வெற்றி பெற்றன. தற்போது சூரி நடிக்கும் கொட்டுக்காளி என்ற படத்தை சிவகார்த்திகேயன் தயாரித்து வருகிறார். இப்படம் சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு பாராட்டை பெற்றுள்ளது. விரைவில் இத்திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்நிலையில் அவருடைய தயாரிப்பில் வெளியாகும் புதிய படம் தொடர்பான அறிவிப்பை சிவகார்த்திகேயன் வெளியிட்டுள்ளார்.

    தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் ஒரு வீடியோவை அவர் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில் கோவில், பள்ளிக்கூடம் தொடர்பான காட்சிகள் உள்ளது. நாளை இத்திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    தொடர்ந்து சிறப்பான திரைப்படங்களை சிவகார்த்திகேயன் தயாரித்து வருவதால், அவரின் அடுத்த படம் தொடர்பான அறிவிப்பும் மக்களிடையே கவனம் பெற்றுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • முத்தையா இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடித்துள்ள படம் விருமன்.
    • இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சில தினங்களுக்கு முன்பு மதுரையில் நடைபெற்றது.

    கார்த்தி நடித்துள்ள விருமன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சில தினங்களுக்கு முன்பு மதுரையில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு பேசிய சூரி, அகரம் அறக்கட்டளை குறித்து பேசினார். அப்போது ஆயிரம் கோவில் கட்டுவதைவிட, அன்னசத்திரத்தை விட ஒரு மாணவனுக்கு கல்வி வழங்குவது சிறந்தது என பேசினார். அதற்கு சில இந்து அமைப்புகள் கண்டனம் தெரிவித்தன.

     

    சூரி

    சூரி

    இந்நிலையில் விருமன் படத்தின் சென்னை செய்தியாளர் சந்திப்பில் பேசிய சூரி, படக்குழுவினர் பற்றியும், நடிகை அதிதி செயல்பாடுகள் குறித்தும் நகைச்சுவையாக பேசினார். அதன் பின், மதுரையில் தான் பேசிய பேச்சுக்கு விளக்கமளித்தார். அதில் நான் எப்போதும் மீனாட்சி அம்மனை குறிப்பிட்டுதான் பேசுவேன். எனக்கு மீனாட்சி அம்மன் மிகவும் பிடிக்கும். நான் நடத்தும் ஹோட்டல்களுக்கு அம்மன் எனதான் பெயர் வைத்துள்ளேன். என்னுடைய பேச்சு தவறாக புரிந்துகொள்ளப்பட்டது. நான் கோவிலுக்கு எதிரானவன் கிடையாது நான் படிக்காதவன், அதன் முக்கியத்துவம் எனக்கு தெரியும் என அவர் பேசினார். 

    ×