என் மலர்
நீங்கள் தேடியது "don"
- மாபெரும் வெற்றி திரைப்படமாக அமைந்த டான் திரைப்படத்தை இயக்கியவர் சந்திரா பரோட்.
- இன்று மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் உயிரிழந்தார்.
1978 ஆம் ஆண்டு அமிதாப் பச்சன் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி திரைப்படமாக அமைந்த டான் திரைப்படத்தை இயக்கியவர் சந்திரா பரோட்.இப்படத்தை பல மொழிகளில் ரீமேக் செய்துள்ளனர்.
86 வயது ஆகும் சந்திரா ப்ரோட் கடந்த 7 ஆண்டுகளாக நுரையீரல் பிரச்சனைக்கு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இன்று மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் உயிரிழந்தார்.
இவரது இறப்பு இந்தி திரையுலகை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. பலரும் அவரது இரங்கலை இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர். இவர் இயக்கிய டான் திரைப்படத்தை தமிழில் ரஜினிகாந்த் நடிப்பில் பில்லா திரைப்படமாக உருவாந்து குறிப்பிடத்தக்கது.
- தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் சிவகார்த்திகேயன் படத்தயாரிப்பிலும் ஈடுபட்டு வருகிறார்
- சிவகாத்திகேயன் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் வெளிவந்த கனா, அருவி, டாக்டர், டான் போன்ற திரைப்படங்கள் வெற்றி பெற்றன
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் சிவகார்த்திகேயன் படத்தயாரிப்பிலும் ஈடுபட்டு வருகிறார். இவர் சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் என்கிற நிறுவனத்தின் மூலம் ஏராளமான படங்களை தயாரித்து வருகிறார்.
சிவகாத்திகேயன் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் வெளிவந்த கனா, அருவி, டாக்டர், டான் போன்ற திரைப்படங்கள் வெற்றி பெற்றன. தற்போது சூரி நடிக்கும் கொட்டுக்காளி என்ற படத்தை சிவகார்த்திகேயன் தயாரித்து வருகிறார். இப்படம் சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு பாராட்டை பெற்றுள்ளது. விரைவில் இத்திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் அவருடைய தயாரிப்பில் வெளியாகும் புதிய படம் தொடர்பான அறிவிப்பை சிவகார்த்திகேயன் வெளியிட்டுள்ளார்.
தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் ஒரு வீடியோவை அவர் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில் கோவில், பள்ளிக்கூடம் தொடர்பான காட்சிகள் உள்ளது. நாளை இத்திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து சிறப்பான திரைப்படங்களை சிவகார்த்திகேயன் தயாரித்து வருவதால், அவரின் அடுத்த படம் தொடர்பான அறிவிப்பும் மக்களிடையே கவனம் பெற்றுள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- அறிமுக இயக்குனரான சிபி சக்கரவர்த்தி 2022 ஆம் ஆண்டு சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்தது டான் திரைப்படம்.
- டான் திரைப்படத்தின் வெற்றியை அடுத்து கவனிக்கப்படும் இயக்குனராகியுள்ள சிபி சக்ரவர்த்தி ஒருவரானார்.
அறிமுக இயக்குனரான சிபி சக்கரவர்த்தி 2022 ஆம் ஆண்டு சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்தது டான் திரைப்படம். இப்படம் மக்களிடையே மிகப் பெரிய வரவேற்பை பெற்று வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றியடைந்தது.
டான் திரைப்படத்தின் வெற்றியை அடுத்து கவனிக்கப்படும் இயக்குனராகியுள்ள சிபி சக்ரவர்த்தி ஒருவரானார்.
இதையடுத்து சிபி சக்கரவர்த்தி ரஜினிகாந்த் மற்றும் நானி ஆகியோருக்கு கதை சொன்னார். ஆனால் இரண்டு பேருக்குமே அந்த கதை பிடிக்காத நிலையில் அந்த படங்கள் அடுத்த கட்டத்துக்கு நகரவில்லை. இந்நிலையில் இப்போது அவர் தன்னுடைய முதல் பட ஹீரோவான சிவகார்த்திகேயனுடன் மீண்டும் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த படத்தை பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பாக சுகன் தயாரிக்க உள்ளாராம். இதற்கான ஆரம்ப கட்ட வேலைகள் இப்போது நடந்து வரும் நிலையில் இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க ராஷ்மிகா மந்தனாவோடு பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. படப்பிடிப்பு பணிகள் இன்னும் சில மாதங்களில் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. சிவகார்த்திகேயன் தற்பொழுது அமரன் மற்றும் ஏ. ஆர் முருகதாஸ் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- எஸ்.ஜே சூர்யா முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின
- இது சிவகார்த்திகேயனின் 24 வது படமாகும்.
தமிழ் சினிமாவில் பிசியாக இயங்கி வரும் நடிகர் சிவகார்த்திகேயன் அடுத்தடுத்து படங்களில் கமிட்டாகி வருகிறார். ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து முடித்த அமரன் திரைப்படம் வரும் செப்டம்பர் 27 ஆம் தேதி வெளியாகும் என எதிர்பாக்கப்படுகிறது.
இதில் கதாநாயகியாக சாய் பல்லவி நடிக்கிறார். தொடர்ந்து ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் புதிய படம் ஒன்றிலும் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளார். இந்த நிலையில்தான் கடந்த 2022 ஆம் ஆண்டு டான் படம் மூலம் ஹிட் கொடுத்த சிவகார்த்திகேயன்- இயக்குனர் சிபி சக்கரவர்த்தி காம்போ மீண்டும் இணைய உள்ளதாக தகவல் வெளியானது. இது சிவகார்த்திகேயனின் 24 வது படமாகும்.

இந்த படத்தில் ராஸ்மிகா மந்தனா ஹீரோயினாக நடிக்க உள்ளதாகவும், எஸ்.ஜே சூர்யா முக்கிய காதாபாத்திரம் ஒன்றில் நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியது. டான் படத்திலும் எஸ்.ஜே சூர்யா வில்லனாக நடித்திருந்தது கவனிக்கத்தக்கது. இதற்கிடையில் இந்த படத்திற்கு 'பாஸ்' [BOSS] என பெயரிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.


- சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் வெளியான டான் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.
- இப்படத்தன் நகைச்சுவை காட்சி குறித்து சிவகார்த்திகேயன் பேசியது சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது.
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் சில மாதங்களுக்கு முன்பு வெளியான 'டான்' திரைப்படம் வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இந்த படத்தில் இடம்பெற்ற நகைச்சுவை காட்சிகள் ரசிகர்களை, குறிப்பாக குழந்தைகளை பெரிதும் கவர்ந்தன. இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன், திருச்சியில் உள்ள ஒரு பள்ளியில் நடைபெற்ற கலை நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்.

சிவகார்த்திகேயன்
அப்போது அவர், டான் படத்தில் இடம்பெற்ற நகைச்சுவை காட்சி குறித்து மாணவர்களிடம் பேசியது தான் சமூக வலைதளங்களில் தற்போது பேசுபொருளாகியுள்ளது. டான் படத்தில் அவரும், நடிகர் சூரியும் தென் கொரிய மொழியில் பேசுவது போல், உளறல் மொழியில் பேசும் நகைச்சுவை காட்சி இடம்பெற்றிருக்கும்.

சிவகார்த்திகேயன்
அந்த காட்சியை நினைவு கூர்ந்த சிவகார்த்திகேயன் "நான் தென் கொரிய படங்களை பார்க்கும் போது அதில் நடிக்கும் நடிகர்கள் அனைவரும் ஒரே மாதிரி தெரிவார்கள். சில நேரங்களில் யார் ஹீரோ, யார் ஹீரோயின் என்பதே தெரியாது. அது போல் பல்வேறு கொரிய மொழி தொடர்களை பார்த்து தான், 'டான்' படத்தில் நான் கொரிய மொழியில் பேசுவது போல் பேசினேன். ஆனால் அது உண்மையான கொரிய மொழி கிடையாது. கொரியர்கள் பார்த்தால் கோபமாகி விடுவார்கள்" என்று நகைச்சுவையாக பேசினார்.

சிவகார்த்திகேயன்
அவரது பேச்சுக்கு மாணவர்களிடையே பெரும் ஆரவாரம் எழுந்தது. இருப்பினும் சிவகார்த்திகேயனின் இந்த பேச்சு, சமூக வலைதளங்களில் குறிப்பாக கொரியன் வெப் சீரீஸ்களின் ரசிகர்களுக்கு பெரும் எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது. ஒரு நடிகராக இருந்து கொண்டு, உருவ கேலி செய்யும் வகையில் அதுவும் மாணவர்களிடம் சிவகார்த்திகேயன் பேசியுள்ளதாக அவர் மீது விமர்சனங்கள் எழுந்துள்ளன.

சிவகார்த்திகேயன்
மேலும் சிலர் சிவகார்த்திகேயனின் கருத்து இனவாத கருத்துக்கு ஒப்பானது என்றும், அவரைப் போன்ற பிரபலங்கள் பொது இடங்களில் பேசும் போது மிகவும் கவனமாக பேச வேண்டும் என்றும் சமூக வலைதளக்களில் பலர் கருத்து பதிவிட்டு வருகின்றனர். அதே சமயம் சிவகார்த்திகேயன் நகைச்சுவைக்காக தான் அவ்வாறு பேசினார் என்றும், இதில் எந்த சர்ச்சையும் இல்லை என்றும் அவரது ரசிகர்கள், அவர் மீதான விமர்சனங்களுக்கு பதிலளித்து வருகின்றனர்.









