'டான்' இயக்குனருடன் சிவகார்த்திகேயன் இணைந்த புதிய படத்தின் டைட்டில் இதுவா?

எஸ்.ஜே சூர்யா முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகினஇது சிவகார்த்திகேயனின் 24 வது படமாகும்.
'டான்' இயக்குனருடன் சிவகார்த்திகேயன் இணைந்த புதிய படத்தின் டைட்டில் இதுவா?
Published on

தமிழ் சினிமாவில் பிசியாக இயங்கி வரும் நடிகர் சிவகார்த்திகேயன் அடுத்தடுத்து படங்களில் கமிட்டாகி வருகிறார். ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து முடித்த அமரன் திரைப்படம் வரும் செப்டம்பர் 27 ஆம் தேதி வெளியாகும் என எதிர்பாக்கப்படுகிறது.

இதில் கதாநாயகியாக சாய் பல்லவி நடிக்கிறார். தொடர்ந்து ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் புதிய படம் ஒன்றிலும் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளார். இந்த நிலையில்தான் கடந்த 2022 ஆம் ஆண்டு டான் படம் மூலம் ஹிட் கொடுத்த சிவகார்த்திகேயன்- இயக்குனர் சிபி சக்கரவர்த்தி காம்போ மீண்டும் இணைய உள்ளதாக தகவல் வெளியானது. இது சிவகார்த்திகேயனின் 24 வது படமாகும்.

இந்த படத்தில் ராஸ்மிகா மந்தனா ஹீரோயினாக நடிக்க உள்ளதாகவும், எஸ்.ஜே சூர்யா முக்கிய காதாபாத்திரம் ஒன்றில் நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியது. டான் படத்திலும் எஸ்.ஜே சூர்யா வில்லனாக நடித்திருந்தது கவனிக்கத்தக்கது. இதற்கிடையில் இந்த படத்திற்கு 'பாஸ்' [BOSS] என பெயரிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

X

Maalai Malar
www.maalaimalar.com