search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாஸ்"

    • மேலதிகாரிகளை பழைய பொருட்களை வாங்கும் இ காமர்ஸ் வெப்சைட்டில் விற்பதுப் போல் விளம்பரம் செய்கின்றனர்.
    • அனைவரும் ஏதோ ஒரு வேலை செய்தாக வேண்டும் என்ற சூழ்நிலையில் தள்ளப்பட்டுள்ளனர்.

    தற்போதைய சமூதாய சூழ்நிலையில் அனைவரும் ஏதோ ஒரு வேலை செய்தாக வேண்டும் என்ற சூழ்நிலையில் தள்ளப்பட்டுள்ளனர். அந்த வேலை பிடிக்கிறதோ, இல்லையோ அதை அனைவரும் செய்துக்கொண்டு தான் இருக்கிறார்கள்.

    எல்லா வேலைகளிலும் நமக்கு மேல் அதிகாரி என்பவர் இருப்பார், அவர் கொடுக்கும் வேலை பளுவினால் வருவது மனசோர்வு, கோபம் மட்டும்தான். சில நபர்களுக்கு அவர்களுக்கு வேலை செய்யும் நிறுவனம் பிடிக்காது, மேலதிகாரி மற்றும் மேலதிகாரி நடத்தும் விதமும், அவர்கள் நடந்து கொள்ளும் விதமும் பிடிக்காது. இதனை சீன மக்கள் புதுவிதமான அணுகியுள்ளனர்.

    அவர்களது மன சோர்வை குறைத்துக்கொள்ள அவர்களுக்கு பிடிக்காத வேலையையும் , பிடிக்காத மேலதிகாரிகளையும் பழைய பொருட்களை வாங்கும் இ காமர்ஸ் வெப்சைட்டில் விற்பதுப் போல் விளம்பரம் செய்கின்றனர்.

    அலிபாபா என்ற இந்த தளத்தில் அவர்களது வேலை பளுவை குறைத்துக் கொள்ள இப்படி செய்து வருகின்றனர். இந்த வேலையையும் , தொல்லை பிடித்த மேலதிகாரிகளை 4 முதல் 9 லட்ச ரூபாய் வரை விற்பதாக சீன மக்கள் பதிவிடுகின்றனர்.

    அதில் ஒரு நபர் அவர் மாதம் 33 ஆயிரம் ஈட்டித்தரும் வேலையை 91000 ரூபாய்க்கு விற்பதாகவும் நீங்கள் முதலீடு செய்யும் பணத்தை 3 மாதங்களில் திரும்பி எடுத்துக் கொள்ளலாம் என்றும் நகைச்சுவையாக பதிவிட்டுள்ளார்.

    மற்றொருவர் அவருடன் வேலை பார்க்கும் சக நக்கல் பிடித்த ஊழியரை 45 ஆயிரம் ரூபாய்க்கு விற்பதாக பதிவிட்டுள்ளார். கூடுதலாக அவரை எப்படி சமாளிக்கவேண்டும் என்பதை நானே கற்று தருகிறேன் என்று அதில் எழுதியுள்ளார்.

    ஆனால் இதெல்லாம் ஒரு விளையாட்டுக்காகவும், மன சோர்வை குறைக்கும் ஒரு செயலுக்காக தான் இப்படி செய்கிறார்கள். யாரும் இதன் மூலம் பணபரிவர்தனை செய்யக்கூடாது. அப்படி யாரெனும் விளம்பரத்தை பார்த்து முன்வந்தால் அவர்கள் அந்த பதிவை அழித்து விடுகின்றனர்.

    இப்படி உங்களுக்கும் உங்கள் வேலையில் மனசோர்வு மற்றும் பிடிக்காத மேலதிகாரி அல்லது கடுப்பேற்றும் சக ஊழியர்கள் இருந்தால் இப்படி எதையாவது புதுவிதமாக முயற்சி செய்து உங்கள் மனசோர்வை குறைத்துக் கொள்ளுங்கள்.

    • எஸ்.ஜே சூர்யா முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின
    • இது சிவகார்த்திகேயனின் 24 வது படமாகும்.

    தமிழ் சினிமாவில் பிசியாக இயங்கி வரும் நடிகர் சிவகார்த்திகேயன் அடுத்தடுத்து படங்களில் கமிட்டாகி வருகிறார். ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து முடித்த அமரன் திரைப்படம் வரும் செப்டம்பர் 27 ஆம் தேதி வெளியாகும் என எதிர்பாக்கப்படுகிறது.

    இதில் கதாநாயகியாக சாய் பல்லவி நடிக்கிறார். தொடர்ந்து ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் புதிய படம் ஒன்றிலும் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளார். இந்த நிலையில்தான் கடந்த 2022 ஆம் ஆண்டு டான் படம் மூலம் ஹிட் கொடுத்த சிவகார்த்திகேயன்- இயக்குனர் சிபி சக்கரவர்த்தி காம்போ மீண்டும் இணைய உள்ளதாக தகவல் வெளியானது. இது சிவகார்த்திகேயனின் 24 வது படமாகும்.

     

    இந்த படத்தில் ராஸ்மிகா மந்தனா ஹீரோயினாக நடிக்க உள்ளதாகவும், எஸ்.ஜே சூர்யா முக்கிய காதாபாத்திரம் ஒன்றில் நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியது. டான் படத்திலும் எஸ்.ஜே சூர்யா வில்லனாக நடித்திருந்தது கவனிக்கத்தக்கது. இதற்கிடையில் இந்த படத்திற்கு 'பாஸ்' [BOSS] என பெயரிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • பீகாரில் பத்தாம் வகுப்பு தேர்வு கடந்த மாதம் 15-ம் தேதி தொடங்கி 23-ம் தேதி முடிந்தது.
    • விடைத்தாள் திருத்தும் பணி தற்போது மாநிலம் முழுவதும் நடந்து வருகிறது.

    பாட்னா:

    பீகார் மாநிலத்தில் கடந்த மாதம் 15-ம் தேதி பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கி 23-ம் தேதி முடிவடைந்தது. பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி தற்போது மாநிலம் முழுவதும் நடந்து வருகிறது. விடைத்தாள் திருத்தும் பணி முடிந்தபின் தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளது.

    இந்நிலையில், பத்தாம் வகுப்பு மாணவி ஒருவரது விடைத்தாள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    இதுதொடர்பாக, அந்த மாணவி தனது விடைத்தாளில், விவசாயியான எனது அப்பாவுக்கு வருமானம் குறைவு. எனவே நிதி நெருக்கடியால் படிப்பை கைவிடும்படி கூறிவருகிறார். தேர்வில் நல்ல மதிப்பெண் எடுக்கவேண்டும். இல்லாவிட்டால் திருமணம் செய்துவைப்பதாக கூறியுள்ளார். தயவுசெய்து எனக்கு நல்ல மதிப்பெண் தந்து எதிர்காலத்தை காப்பாற்ற உதவுங்கள் என தெரிவித்துள்ளார்.

    மாணவியின் இந்த கோரிக்கை சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

    ×