search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "answer sheet"

    • பீகாரில் பத்தாம் வகுப்பு தேர்வு கடந்த மாதம் 15-ம் தேதி தொடங்கி 23-ம் தேதி முடிந்தது.
    • விடைத்தாள் திருத்தும் பணி தற்போது மாநிலம் முழுவதும் நடந்து வருகிறது.

    பாட்னா:

    பீகார் மாநிலத்தில் கடந்த மாதம் 15-ம் தேதி பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கி 23-ம் தேதி முடிவடைந்தது. பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி தற்போது மாநிலம் முழுவதும் நடந்து வருகிறது. விடைத்தாள் திருத்தும் பணி முடிந்தபின் தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளது.

    இந்நிலையில், பத்தாம் வகுப்பு மாணவி ஒருவரது விடைத்தாள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    இதுதொடர்பாக, அந்த மாணவி தனது விடைத்தாளில், விவசாயியான எனது அப்பாவுக்கு வருமானம் குறைவு. எனவே நிதி நெருக்கடியால் படிப்பை கைவிடும்படி கூறிவருகிறார். தேர்வில் நல்ல மதிப்பெண் எடுக்கவேண்டும். இல்லாவிட்டால் திருமணம் செய்துவைப்பதாக கூறியுள்ளார். தயவுசெய்து எனக்கு நல்ல மதிப்பெண் தந்து எதிர்காலத்தை காப்பாற்ற உதவுங்கள் என தெரிவித்துள்ளார்.

    மாணவியின் இந்த கோரிக்கை சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

    • 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் கடந்த 6-ந் தேதி தொடங்கி, 20-ந் தேதியுடன் நிறைவடைந்தது.
    • 25-ந் தேதி முதல் உதவி தேர்வாளர்கள் விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபடவுள்ளனர்.

    சேலம்:

    தமிழகத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் கடந்த 6-ந் தேதி தொடங்கி, 20-ந் தேதியுடன் நிறைவடைந்தது. இதனையடுத்து விடைத்தாள் திருத்தும் பணிகளை நாளை மாநிலம் முழுவதும் தொடங்கவுள்ளது. இதற்காக மாணவர்களின் விடைத்தாள்கள் ஏற்கனவே விடைத்தாள் திருத்தும் மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தை பொறுத்த வரை 625 அரசு, உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 44,831 மாணவர்கள் நடப்பாண்டு 10-ம் வகுப்பு தேர்வெழுதினர். தொடர்ந்து, விடைத்தாள் திருத்தும் பணிக்காக 3 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    சேலம் கல்வி மாவட்டத்தில், சூரமங்கலம் செயின்ட் ஜோசப் பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், ஆத்தூர் தேவியாக்குறிச்சி தாகூர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியிலும், சங்ககிரி கல்வி மாவட்டத்தில் ஜலகண்டாபுரம் மினர்வா பள்ளியிலும் விடைத்தாள் திருத்தும் மையம் அமைக்கப்பட்டுள்ளது.

    விடைத்தாள் திருத்தும் பணிக்காக முகாம் அலுவலர்கள் தலை மையில், மதிப்பெண் சரிபார்ப்பு அலுவலர், முதன்மை தேர்வாளர், கூர்ந்தாய்வாளர், உதவி தேர்வாளர், இதர பணியாளர்கள் என சுமார் 2,400-க்கும் மேற்பட்டோர் நியமிக்கப்பட்டுள்ளனர். நாளை 24-ந் தேதி முதன்மை தேர்வாளர், கூர்ந்தாய்வாளர் பணி களை தொடங்கி வைத்து, 25-ந் தேதி முதல் உதவி தேர்வாளர்கள் விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபடவுள்ளனர். இதனிடையே விடைத்தாள் திருத்தும் பணியின்போது, தேர்வுகள் இயக்கம் வெளியிட்டுள்ள நேர விதிகளை முழுமையாக கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இது குறித்து ஆசிரியர்கள் கூறுகையில், விடைத்தாள் மதிப்பீட்டுப் பணி என்பது மிகவும் பொறுப்பான பணி. ஆனால் பல நேரங்களில் உரிய நேர விதிகள் கடைபிடிக்கப்படு வதில்லை. ஒரு சிலர் அவசர, அவசரமாக ஒதுக்கிய நேரத்திற்கு முன்னதாகவே மதிப்பீடு செய்துவிடுகின்றனர்.

    இதனை பார்த்து மற்றவர்கள் பதற்றமடைந்து விரைவாக திருத்த வேண்டிய சூழல் உருவாகிறது. இதனால், துல்லியத்தன்மை இல்லா ததுடன், குளறுபடிகளும் நடப்பதால் மாணவர்கள் தான் பாதிக்கப்படுகின்றனர். கடந்த முறை விடைத்தாள் திருத்தும் பணியில் கவனக்கு றைவுடன் இருந்ததாக ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

    ஒரு சிலர் செய்யும் தவறால் ஒட்டுமொத்த மையமும் பாதிக்கப்படும் சூழல் உள்ளது. எனவே, விடைத்தாளை பொறுமையாக மதிப்பீடு செய்யும் வகையில், உரிய நேர விதிகளை கடைபிடிக்க வேண்டும் என்றனர்.

    • கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் மாணவர்கள் தேர்வெழுதி தபால் மூலம் அனுப்பிய விடைத்தாள்கள்.
    • பல்கலைக்கழக வளாக அறையில் இருந்த விடைத்தாள்கள் ஜன்னல் வழியாக திருட்டு.

    காமராஜர் பல்கலைக்கழகத்தின் கீழ் தொலைநிலைக் கல்வி படிப்புக்கான ஆன்லைன் தேர்வு கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற்றது. மாதத்தில் மாணவர்கள் தேர்வெழுதி தபால் மூலம் அனுப்பியுள்ளனர்.

    இதையடுத்து பல்கலைக்கழக அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், விரகனூரில் பழைய பேப்பர் குடோனில் விடைத்தாள்கள் மீட்கப்பட்டுள்ளது.

    மதுரையில் பழைய பேப்பர் கடையில் இருந்து பல்கலைக்கழக தேர்வு விடைத்தாள்கள் கண்டெடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    மேலும், விசாரணையில் பல்கலைக்கழக வளாக அறையில் இருந்த விடைத்தாள்கள் ஜன்னல் வழியாக ஆடு மேய்க்கும் சிறுவர்கள் திருடப்பட்டிருக்கலாம் எனவும் அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.

    காணாமல்போன விடைத்தாள்கள் மீட்கப்பட்ட நிலையில், அதுபற்றி விரிவாக விசாரிக்கப்படும் என பல்கலைக்கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • முதற்கட்டமாகபிளஸ் 2 விடைத்தாள்கள், தொடர்ந்து, 10ம் வகுப்பு விடைத்தாள், பிளஸ் 1 விடைத்தாள்களும் திருத்தப்பட உள்ளன.
    • அந்தந்த மாவட்ட கல்வி அலுவலர்கள் இதனை கண்காணித்து வருகின்றனர்.


    திருப்பூர்:

    10-ம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் முடிவடைந்த நிலையில் விடைத்தாள் திருத்தும் பணிகள் அந்தந்த மாவட்டங்களில் கடந்த ஜூன் 1ந் தேதி துவங்கியது.திருப்பூரில் பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கான விடைத்தாள் திருத்தும் பணிகள், லிட்டில் பிளவர் மெட்ரிக் பள்ளி, தாராபுரம் விவேகம் மேல்நிலைப்பள்ளிகளில் நடக்கிறது.10-ம்வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணிகள் திருப்பூர் இன்பான்ட் ஜீசஸ் பள்ளி மற்றும் உடுமலை ஸ்ரீனிவாசா மெட்ரிக் மேல்நிலை பள்ளிகளில் நடக்கிறது.

    முதற்கட்டமாகபிளஸ் 2 விடைத்தாள்கள், தொடர்ந்து, 10ம் வகுப்பு விடைத்தாள், பிளஸ் 1 விடைத்தாள்களும் திருத்தப்பட உள்ளன.அதன்படி பணிகளில் மதிப்பெண் சரிபார்ப்பு அலுவலர்களாக, பள்ளி தலைமை ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். ஆனால் வரும், 13-ந் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளதால், அதற்கான முன்னேற்பாட்டு பணிகளுக்காக, தலைமை ஆசிரியர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

    மேலும்பொதுத்தேர்வு விடைத்தாள்களை திருத்துவதில் கடுமை கூடாது எனவும், விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களுக்கு கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.அவ்வகையில் மாணவர்கள் ஓரளவு விடை அளித்து இருந்தால் முழு மதிப்பெண்கள் அளிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளதால் மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சிவக்குமார் (பொறுப்பு) கூறுகையில், 10-ம் வகுப்பு விடைத்தாள்களை திருத்த ஆயிரத்து 700 ஆசிரியர்களும், மேல்நிலை வகுப்புகளுக்கு ஆயிரத்து, 360 ஆசிரியர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.விடைத்தாள் திருத்தும் மையங்களில் போலீசார் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அந்தந்த மாவட்ட கல்வி அலுவலர்கள் இதனை கண்காணித்து வருகின்றனர் என்றார்.

    பிளஸ்-2 விடைத்தாள் திருத்துவதில் கவனக்குறைவாக செயல்பட்டதாக 500 ஆசிரியர்களுக்கு பள்ளி கல்வித்துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
    சென்னை:

    உயர்கல்வியை நிர்ணயிப்பதில் பிளஸ்-2 பொதுத்தேர்வு மதிப்பெண் முக்கியமானதாக கருதப்படுகிறது.

    ஒரு மதிப்பெண்ணால் சிறந்த கல்லூரியையும், படிப்பையும் கூட கைவிட வேண்டிய நிலை ஏற்படுகிறது. மாணவர்களின் தலைவிதியை ஒவ்வொரு மதிப்பெண்களும் நிர்ணயிப்பதால் எதிர்பார்த்த மார்க் கிடைக்காத மாணவர்கள் மறு மதிப்பீடு, மறு கூட்டலுக்கு விண்ணப்பிப்பது வழக்கம்.

    ஒவ்வொரு ஆண்டும் பிளஸ்-2, எஸ்.எஸ்.எல்.சி. விடைத்தாள் திருத்துவதில் கவனக்குறைவாக ஆசிரியர்கள் செயல்படுவதால் மாணவர்களின் வாழ்க்கை திசை திரும்பி போய் விடுகிறது. விடைத்தாள் திருத்தி மதிப்பெண் அளித்ததை ஒவ்வொரு பக்கம் வாரியாக கூட்டல் செய்யும்போது தவறு ஏற்படுகிறது.

    இந்த வருடமும் நிறைய மாணவர்களுக்கு பிளஸ்-2 மதிப்பெண் கூட்டலில் தவறு ஏற்பட்டுள்ளதை விடைத்தாள் நகல் வாங்கிய மாணவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். 100-க்கு 72 மதிப்பெண் பெற்ற ஒரு மாணவனுக்கு 27 மதிப்பெண் பெற்றதாக கூட்டலில் தவறு இழைத்து தேர்வு முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது.



    அதே போல ஒரு பாடத்தில் 81 மார்க் எடுத்த மாணவனுக்கு 57 பெற்றதாக கொடுத்துள்ளனர். இந்த தவறுகள் எல்லாம் மதிப்பெண்களை கூட்டும்போது ஏற்பட்ட பிழையாகும். இதுபோல பல மாணவர்களுக்கு கூட்டல் பிழையுடன் மதிப்பெண் கொடுக்கப்பட்டுள்ளது.

    இந்த ஆண்டு 72 மையங்களில் 25 ஆயிரம் ஆசிரியர்கள் விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 60 லட்சம் விடைத்தாள்கள் திருத்தப்பட்டன. 50 ஆயிரம் மாணவர்கள் விடைத்தாள் நகல் கேட்டு விண்ணப்பித்து இருந்தனர். அவர்களுக்கு வழங்கப்பட்ட விடைத்தாள் நகலை பார்த்தபோதுதான் கூட்டலில் பிழை ஏற்பட்டு இருப்பது தெரிய வந்தது.

    மேலும் ஒரு சில விடைத்தாள்கள் முறையாக திருத்தப்படாமல் மதிப்பெண் வழங்கப்படாமல் இருந்ததும் தெரிய வந்தது. 4,500 பேர் மறு மதிப்பீடு செய்யுமாறு விண்ணப்பித்து இருந்த நிலையில் ஆசிரியர்களின் தவறுகள் கண்டு பிடிக்கப்பட்டன.

    ஒரு விடைத்தாள் திருத்தம் செய்வதற்கு 4 பேர் ஆசிரியர்கள் பொறுப்பாகிறார்கள். தவறு ஏற்படும்போது அவர்கள் அதற்கு பதில் சொல்ல வேண்டும். அந்த அடிப்படையில் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 விடைத்தாள் மறுகூட்டல், மறுமதிப்பீடு செய்யப்பட்டு மதிப்பெண் மீண்டும் வழங்கப்பட்டுள்ளன.

    விடைத்தாள் திருத்தம் செய்வதில் ஆசிரியர்கள் எவ்வாறு தவறு செய்திருக்கிறார்கள் என்பதை இணை இயக்குனர்கள் கண்டு பிடித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முதல் கட்டமாக நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

    500 ஆசிரியர்களுக்கும் மேலாக தவறு குறித்து அவர்களிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து அரசு தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தராதேவி கூறியதாவது:-

    மறு கூட்டல், மறு மதிப்பீடு செய்யும்போது ஆசிரியர்களின் தவறு தெரிய வருகிறது. கடந்த காலங்களை விட படிப்படியாக தவறுகள் குறைந்துள்ளது. கவனக்குறைவாக செயல்பட்ட ஆசிரியர்கள் மீது பள்ளி கல்வித்துறை இயக்குனர் தான் நடவடிக்கை எடுப்பார். நாங்கள் அவர்களின் பட்டியலை கொடுத்து விடுவோம்.

    தலைமை கண்காணிப்பாளர், எஸ்.ஒ, வி.ஒ உள்பட 4 பேர் விடைத்தாள் திருத்தம் செய்வதற்கு பொறுப்பாளர்கள். அவர்களை மீறி தவறு நடந்திருக்காது என்றால் அதற்கு அவர்களும் பொறுப்பாவார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மாணவர்கள் மதிப்பெண் தவறுக்கு காரணமாக உள்ள ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கல்வித்துறை வட்டாரம் தெரிவிக்கின்றது.
    குரூப்-2 தேர்வுக்கான உத்தேச விடைகளை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. #GroupII #TNPSC
    சென்னை:

    தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) கடந்த 5-ந் தேதி குரூப்-2-ல் அடங்கிய உதவி பொது வக்கீல் மற்றும் உதவி தொழில்நுட்பவியலாளர் பதவிக்கான எழுத்து தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வுக்கான உத்தேச விடைகள் தேர்வாணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டு இருக்கிறது.

    உத்தேச விடைகளில் மறுப்பு ஏதேனும் இருப்பின் தேர்வு எழுதிய விண்ணப்பதாரர்கள் மட்டும் அதனை தேர்வாணையத்துக்கு தெரிவித்து சரியான விடைகளை கோர முடியும். அதற்கான கோரிக்கைகள் விண்ணப்பதாரர்களிடம் இருந்து 16-ந் தேதி மாலை 5.45 மணி வரை இணையதள பக்கத்தில் பதிவு செய்யலாம். அதன்பின்னர் பெறப்படும் கோரிக்கைகள் பரிசீலிக்கப்படமாட்டாது.

    மேற்கண்ட தகவல் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வுக்கட்டுப்பாட்டு அலுவலர் இரா.சுதன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    குரூப்-2 தேர்வு உத்தேச விடைகள் இன்று (புதன்கிழமை) வெளியிடப்படும் என டி.என்.பி.எஸ்.சி. அறிவித்துள்ளது. #TNPSC
    சென்னை:

    டி.என்.பி.எஸ்.சி. செயலாளர் மற்றும் தேர்வுக்கட்டுப்பாட்டு அலுவலர் (பொறுப்பு) க.நந்தகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) கடந்த 11-ந்தேதி குரூப்-2 தேர்வினை தமிழகம் முழுவதும் 116 மையங்களில் நடத்தியது. மேற்படி தேர்வுக்கான உத்தேச விடைகள் 14-ந் தேதி(இன்று) இணையதளத்தில் வெளியிடப்பட உள்ளது.

    இவ்வாறு வெளியிடப்படும் உத்தேச விடைகளில் தவறு இருப்பின் விண்ணப்பதாரர்கள் அதனை தேர்வாணையத்திற்கு தெரிவித்து சரியான விடைகளைக் கோர முடியும். அதற்கான கோரிக்கைகள் விண்ணப்பதாரர்களிடமிருந்து இதுநாள் வரை எழுத்துப்பூர்வமாக கடிதம் மற்றும் மின்னஞ்சல் மூலம் பெறப்பட்டு வந்தன. இதனால் தேர்வு முடிவுகள் வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டது. அதை குறைக்க தேர்வாணையம் புதிய முறை ஒன்றை அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ளது.

    வினாத்தாள் குறித்த கோரிக்கைகள் இந்த குரூப்-2 தேர்வு முதல் இணையவழியில் மட்டுமே பெறப்படும். தேர்வு எழுதிய விண்ணப்பதாரர்கள் மட்டுமே அத்தேர்வுக்குரிய உத்தேச விடைகளை மறுத்து சரியான விடைகளை கோர முடியும். தேர்வர்கள் எந்த வரிசை கேள்வித்தாளை பயன்படுத்தி விடையளித்திருந்தாலும், தேர்வாணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள மாதிரி கேள்வித் தாள் வரிசையில் உள்ளபடி மட்டுமே தேர்வர்கள் உத்தேச விடைகளை மறுத்து சரியான விடைகளை கோர முடியும்.

    விண்ணப்பதாரர்கள் தங்களது பதிவு எண், விண்ணப்ப எண், பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளடு செய்ய வேண்டும். பதிவு எண், விண்ணப்ப எண் ஆகிய இரண்டும் தங்களது தேர்வுக்கூட நுழைவுச்சீட்டிலேயே (ஹால் டிக்கெட்) இருக்கும். தேர்வர்கள் தேர்வு எழுதிய பாடத்தினை தேர்வு செய்து பின்னர் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள கேள்வித்தாள் வரிசையில் உள்ளபடி வினா எண்ணை தேர்வு செய்தால் அதற்கான கேள்வி மற்றும் சரியான விடைக்குறிப்பு திரையில் தோன்றும். விடைக்குறிப்பில் விடைகளில் மாறுபட்ட கருத்து இருப்பின் அதன் கீழே தோன்றும் சரியான விடை, விடைகளை தேர்வு செய்ய வேண்டும்.

    பின்னர் அதன் கீழே இருக்கும் குறிப்பு காலத்தில் தேர்வர்கள் தங்களது கருத்துக்களை பதிவு செய்யலாம். அதனைத்தொடர்ந்து தேர்வர்கள் தெரிவிக்கும் விடைகள் எந்த புத்தகத்தில் உள்ளது, அதன் ஆசிரியர், பதிப்பு வருடம், பதிப்பாளர், பக்க எண் ஆகிய தகவல்களை உள்ளடு செய்ய வேண்டும்.

    தேர்வர்கள் தெரிவித்த விடைக்கு வலுசேர்க்கும் உரிய ஆவணங்களை ‘பி.டி.எப்.’ கோப்புகளாக பதிவேற்றம் செய்யவேண்டும். தேர்வர்கள் தெரிவிக்கும் விடைகள் எந்த புத்தகத்தில் உள்ளது என்பதற் கான தகவல்களும் விடைக்கு வலுசேர்க்கும் உரிய ஆவணங் களும் இல்லாத கோரிக்கைகள் பரிசீலிக்கப்படமாட்டாது.

    ஒருவர் எத்தனை விடைகளுக்கு வேண்டுமானாலும் மறுப்பு தெரிவிக்கலாம். கையால் எழுதப்பட்ட குறிப்புகள் விடைக்கான ஆதாரமாக கருதப்படமாட்டாது. அஞ்சல், மின்னஞ்சல் மூலம் பெறப்படும் கோரிக்கைகள் எக்காரணம் கொண்டும் பரிசீலிக்கப்படமாட்டாது. வருகிற 20-ந்தேதிக்குள் தேர்வர் கள் இதை செய்ய வேண்டும். அதற்கு மேல் வரும் கோரிக்கைகள் பரிசீலிக்கப்படாது.

    இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார். 
    ×