என் மலர்
நீங்கள் தேடியது "Exam results"
- கடந்த ஆகஸ்ட் மாதம் யுபிஎஸ்சி தேர்வு நடைபெற்றது.
- நடப்பு ஆண்டில் தேர்ச்சி விகிதம் 13.97 சதவீதம் அதிரித்துள்ளது.
யுபிஎஸ்சி 2025 பிரதான தேர்வு முடிவுகள் இணையத்தில் இன்று வெளியாகியுள்ளது.
கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் தேர்ச்சி விகிதம் 13.97 சதவீதம் அதிரித்துள்ளது.
அதன்படி, யுபிஎஸ்சி தேர்வு முடிவுகளை http://upsc.gov.in என்ற முகவரியில் பார்த்துக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தேர்வில், தமிழ்நாட்டில் இருந்து தேர்வு எழுதியவர்களில் 155 பேர் யுபிஎஸ்சி பிரதான தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
கடந்த ஆண்டு 136 பேர் தேர்ச்சி பெற்றிருந்த நிலையில் இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
- கிராம நிர்வாக அலுவலர், தட்டச்சர் உள்ளிட்ட 4662 காலிப் பணியிடங்களுக்கு தேர்வு நடைபெற்றது.
- 11 லட்சத்து 48 ஆயிரம் பேர் குரூப் 4 தேர்வை எழுதினர்.
4,662 பணியிடங்களை நிரப்ப கடந்த ஜூலை மாதம் 12ம் தேதி நடந்த குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியாகின.
கிராம நிர்வாக அலுவலர், தட்டச்சர் உள்ளிட்ட 4662 காலிப் பணியிடங்களுக்கு தேர்வு நடைபெற்றது.
இதில், 11 லட்சத்து 48 ஆயிரம் பேர் குரூப் 4 தேர்வை எழுதினர். இந்நிலையில், தேர்வு முடிவுகளை வெளியாகியுள்ளன.
தேர்வர்கள் http://tnpsc.gov.in என்கிற தேர்வாணைய இணையதளத்தில் தங்களது பதிவு எண்களை உள்ளீடு செய்து முடிவுகளைப் பார்க்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- 70 பதவிகளுக்கு நடத்தப்பட்ட குரூப் 1 தேர்வு முடிவுகள் வெளியானது.
- முதன்மை தேர்வு டிசம்பர் 1 முதல் 4ம் தேதி வரை சென்னையில் நடைபெற இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி. சார்பில் குரூப் 1 பதவியில் காலியாக உள்ள 70 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு கடந்த ஏப்ரல் 1-ந்தேதி வெளியிடப்பட்டது.
இதில், துணை கலெக்டர் பதவிக்கு 28 இடங்கள், போலீஸ் டி.எஸ்.பி. பதவிக்கு 7 இடங்கள், வணிகவரி உதவி ஆணையர் பதவிக்கு 19 இடங்கள், ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர் பதவிக்கு 7 இடங்கள், மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரி பதவிக்கு 3 இடங்கள், தொழிலாளர் நல உதவி ஆணையர் பதவிக்கு 6 இடங்கள் ஆகிய 70 பணியிடங்கள் அடங்கும். அதோடு உதவி வன பாதுகாவலர் பதவிக்கு 2 காலியிடங்களுக்கான குரூப் 1 ஏ அறிவிப்பும் வெளியிடப்பட்டது.
இந்த தேர்வை எழுத ஏராளமான பட்டதாரிகள் போட்டி போட்டு விண்ணப்பித்தனர். குரூப் 1, குரூப் 1 ஏ தேர்வுகளை எழுத மொத்தம் 2 லட்சத்து 49 ஆயிரத்து 296 பேர் விண்ணப்பித்தனர். குரூப் 1 தேர்வை எழுத 2 லட்சத்து 27 ஆயிரத்து 982 பேரும், குரூப் 1 ஏ தேர்வை எழுத 6,465 பேரும் அனுமதிக்கப்பட்டனர்.
இந்த நிலையில், கடந்த ஜூன் 15ம் தேதி நடந்த குரூப்-1 முதல் நிலை தேர்வுக்கான முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
இதைதொடர்ந்து, குரூப் 1 முதன்மை தேர்வு எழுத தகுதி பெற்றவர்கள் செப்டம்பர் 1ம் தேதி முதல் 12ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
குரூப்-1 முதல்நிலை தேர்வு முடிவு வெளியான நிலையில் முதன்மை தேர்வு டிசம்பர் 1 முதல் 4ம் தேதி வரை சென்னையில் நடைபெற இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- இந்த முறை 2.42 லட்சத்திற்கும் மேற்பட்ட தேர்வர்கள் கணினி முறையில் தேர்வு எழுதினர்.
- எஸ்சி/ எஸ்டி/ ஓபிசி பிரிவினருக்கு 40 பர்சண்டைல் ஆக உள்ளது.
முதுகலை மருத்துவப்படிப்புகளுக்கான NEET PG 2025 தேர்வு நாடு முழுவதும் கடந்த ஆகஸ்ட் 3 அன்று நடைபெற்றது. இதில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே முதுகலை படிப்புகளில் சேர முடியும்.
இந்த முறை 2.42 லட்சத்திற்கும் மேற்பட்ட தேர்வர்கள் கணினி முறையில் தேர்வு எழுதினர்.
இந்நிலையில் மருத்துவ அறிவியலுக்கான தேசியத் தேர்வுகள் வாரியம் இன்று இந்த தேர்வின் முடிவுகளை வெளியிட்டுள்ளது.
அதன்படி, https://natboard.edu.in என்ற இணையதளத்தில் தேர்வர்கள் தங்கள் தேர்வு முடிவுகளை தெரிந்துகொள்ளலாம்.
800 மதிப்பெண்கள் கொண்ட இந்த தேர்வுக்கான கட் ஆப் ஆக பொதுப் பிரிவு / பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கு 50 பர்சண்டைல் (276), எஸ்சி/ எஸ்டி/ ஓபிசி பிரிவினருக்கு 40 பர்சண்டைல் (235), பொது மாற்றுத் திறனாளிகளுக்கு 45 பர்சண்டைல் (255) ஆக உள்ளது.
- நெல்லை பல்கலைக் கழகத்தில் முதுநிலை பாடப்பிரிவு தேர்வுகள் கடந்த ஜனவரி 13-ந் தேதி முடிவடைந்தது.
- விடைத்தாள் நகலை பெறுவதற்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்.
நெல்லை:
நெல்லை பல்கலை கழக பதிவாளர் (பொறுப்பு) அண்ணாத்துரை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-
நெல்லை மனோன் மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தில் நவம்பர் 2022-ல் நடத்தப் பட்ட முதுநிலை பாடப்பிரிவு களுக்கான தேர்வுகள் அனைத்தும் கடந்த ஜனவரி 13-ந் தேதி முடிவடைந்தது. இந்நிலையில் ஒரு மாத காலத்திற்குள் தேர்வுதாள்கள் திருத்தும் பணி முடிக்கப்பட்டு தேர்வு முடிவுகள் கடந்த மாதம் 28-ந் தேதி வெளி யிடப்பட்டுள்ளது.
தேர்வு முடிவுகளை மாணவர்கள் தாங்கள் பயின்ற கல்லூரி வழியாகவோ அல்லது www.msuniv.ac.in என்ற பல்கலைக்கழக இணையதளம் வழியாகவோ அறிந்து கொள்ளலாம்.
முதுநிலைப் பாடப் பிரிவுகளுக்கான தேர்வுக ளில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களை மறு மதிப்பீடு செய்ய விருப்பம் உடையவர்கள் அதற்குரிய படிவங்களை www.msuniv. ac.in என்ற இணையதளம் வழியாக பதிவேற்றம் செய்து கொள்ளலாம்.
மறுமதிப்பீடு செய்ய விரும்புபவர்கள் முதலில் விடைத்தாள் நகலைப் பெற்றுக் கொண்ட பின்னனர் தான் மறுமதிப்பீடு செய்து விண்ணப்பிக்க முடியும்.
விடைத்தாள் நகலை இணையதளம் வழியாக பெறுவதற்கு உரிய கட்டணத்துடன் படிவம் ஏ மூலம் இன்று (3-ந்தேதி) முதல் விண்ணப்பிக்கலாம். வருகிற 9-ந் தேதி விண்ணப்பிக்க கடைசி நாள் ஆகும்.
விடைத்தாள் நகல்கள் பல்கலைக்கழக இணைய தளத்தில் பதிவேற்றம் செய் யப்படும். அதன் பின்னர் மாணவர்கள் மறுமதிப்பீடு செய்ய விண்ணப்பிக்க லாம். மறு மதிப்பீடு செய்ய இணையதளம் வழியாக உரிய கட்டணத்துடன் படிவம் பி யை வருகிற 16-ந் தேதி முதல் விண்ணப்பிக்கலாம். விண் ணப்பிக்க கடைசிநாள் மார்ச் 21-ந் தேதி ஆகும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள 1021 உதவி மருத்துவர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறி விப்பை 11.10.2022 அன்று எம்.ஆர்.பி. வெளியிட்டது.
- இதையடுத்து 25 ஆயிரம் டாக்டர்கள் தேர்வுக்கு விண்ணப்பித்தனர்.
சேலம்:
தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள 1021 உதவி மருத்துவர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறி விப்பை 11.10.2022 அன்று எம்.ஆர்.பி. வெளியிட்டது. இதையடுத்து 25 ஆயிரம் டாக்டர்கள் தேர்வுக்கு விண்ணப்பித்தனர்.
தமிழகம் முழுவதும் 91 மையங்களில் தேர்வு கடந்த ஏப்ரல் மாதம் 25-ந்தேதி நடைபெற்றது. ஒரு மணி நேரம் தமிழ் மொழி தகுதித் தேர்வும், 2 மணி நேரம் கணினி வழியில் கொள்குறி வகையில் சரியான விடையை தேர்ந்தெடுக்கும் தேர்வும் நடைபெற்றது. விடைத்தாள்கள் திருத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. இன்னும் ஓரிரு வாரங்களில் தேர்வு முடிவுகளை வெளியிட எம்.ஆர்.பி. திட்டமிட்டுள்ளது.
இதனிடையே தமிழ் மொழித் தேர்வு கடினமாக இருந்ததாகவும், எனவே தமிழ் மொழி தகுதித் தேர்வு மதிப்பெண்ணை குறைக்க வேண்டும் என்றும் டாக்டர்கள் தேர்வு வாரி யத்துக்கு கோரிக்கை வைத்துள்ளனர். தமிழ் மொழி தகுதி தேர்வில் தேர்ச்சி மதிப்பெண் 20-ல் இருந்து 15- ஆக குறைக்க வேண்டும் என கூறியுள்ளனர்.
- எங்களைப் பொருத்தவரை விஷாலின் 35 சதவீத மதிப்பெண் கூட பெரிய விஷயம்தான்.
- பெற்றோரின் மனதைக் கவரும் பதிலைக் கண்டு இணையப் பயனர்கள் இன்ப அதிர்ச்சி அடைந்தனர்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் 10ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான முடிவுகள் வெளியானது. இதில், மும்பையைச் சேர்ந்த பெற்றோர் தங்களது மகன் விஷால் 6 பாடங்களிலும் 35 மதிப்பெண்களைப் பெற்று ஜஸ்ட் பாஸ் ஆனாதை நெகிழ்ச்சியுடன் கொண்டாடியுள்ளனர்.
பொதுத்தேர்வுகளில் குறைந்த மதிப்பெண் எடுத்தால் உடனே மனமுடைந்து தற்கொலை செய்துக் கொள்ளும் சம்பவங்களுக்கு மத்தியில், இதுவும் பெரிய விஷயம் தானே என்று ஜஸ்ட் பாஸ் ஆன மகனை பாராட்டிய செயல் பெற்றோர்களுக்கும் எடுத்துக்காட்டாக உள்ளனர்.
மராத்தி நடுநிலைப் பள்ளியில் படித்து 10ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவர் எடுத்த 35 சதவீத மதிப்பெண்ணை பெருமையோடு காண்பித்த பெற்றோரின் வீடியோவை ஐஏஎஸ் அதிகாரி அவனிஷ் சரண் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். மேலும், "மும்பையைச் சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவர் தேர்வில் 35% மதிப்பெண்கள் பெற்றுள்ளார். ஆனால், சோகமாகவோ, கோபமாகவோ இருப்பதற்குப் பதிலாக, அவரது பெற்றோர்கள் அவரது வெற்றியைக் கொண்டாடினர்" என்று அவர் பதிவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக, "குழந்தைகள் அதிக மதிப்பெண்கள் பெறுவதைத்தான் பல பெற்றோர் விரும்புகின்றனர். கொண்டாடுகின்றனர். ஆனால், எங்களைப் பொருத்தவரை விஷாலின் 35 சதவீத மதிப்பெண் கூட பெரிய விஷயம்தான்" என மாணவரின் தந்தை நெகிழ்ச்சியாக தெரிவித்துள்ளார்.
பெற்றோரின் மனதைக் கவரும் பதிலைக் கண்டு இணையப் பயனர்கள் இன்ப அதிர்ச்சியும் மகிழ்ச்சியும் அடைந்தனர்.
मुंबई के रहने वाले 10वीं के एक छात्र ने परीक्षा में 35% मार्क्स हासिल किए.
— Awanish Sharan ?? (@AwanishSharan) June 8, 2023
लेकिन उसके माता-पिता ने दुखी या नाराज होने की बजाय उसकी सफलता को सेलिब्रेट किया. pic.twitter.com/fAa6szayiF
- தேர்வு முடிவுகள் வருகிற 10 ந்தேதி வெளியாகிறது.
- துணைத் தேர்வில் பங்கேற்கும் வகையில் சிறப்பு பயிற்சிகள்.
சென்னை:
தமிழகத்தில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வுகள் கடந்த மார்ச் மாதம் 26 ந்தேதி முதல் ஏப்ரல் 8 ந்தேதி வரை நடந்தது. இந்த தேர்வை, 9.1 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதினார்கள். விடைத்தாள் திருத்தும் பணிகள் நிறைவடைந்துள்ளன. தேர்வு முடிவுகள் வருகிற 10 ந்தேதி வெளியாகிறது.
இந்த நிலையில், 'தொடர்ந்து கற்போம்' எனும் திட்டத்தின் கீழ், எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மற்றும் தேர்வுக்கு வருகை புரியாத மாணவர்களுக்கு, அவர்கள் துணைத் தேர்வில் பங்கேற்கும் வகையில் சிறப்பு பயிற்சிகள், வாராந்திர தேர்வுகள் நடத்த பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து, தமிழ்நாடு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநில திட்ட இயக்குனர் மற்றும் பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் ஆகியோர் கூட்டாக அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி, நடப்பாண்டு எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மற்றும் தேர்வுக்கு வருகை புரியாத மாணவர்களுக்கு, தேர்வு முடிவுகள் வெளியான நாள் முதல் துணைத் தேர்வு நடைபெறும் நாள் வரை உயர்நிலை, மேல்நிலை பள்ளி பட்டதாரி ஆசிரியர்களை கொண்டு சிறப்பு பயிற்சிகள் நடத்த திட்டமிட்டுள்ளது. மேலும், வாராந்திர தேர்வுகள் நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், மாணவர்கள் தங்கள் கல்வியை தொடர முடியும்.
பொதுத்தேர்வில் பங்கேற்காத மாணவர்களின் வீடுகளுக்கு சென்று பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி மாணவர்களை சிறப்பு பயிற்சி மையத்துக்கு அழைத்துவர பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். சிறப்பு வகுப்புக்கு மாணவர்கள் வருவதை பள்ளி தலைமை ஆசிரியர்கள் கண்காணிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவில் 91.55 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
- கடந்த ஆண்டு 91.39 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றிருந்த நிலையில் தற்போது தேர்ச்சி விகிதம் சற்றே அதிகரித்துள்ளது.
சென்னை:
தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவு கடந்த 6-ந்தேதி வெளியானது. தேர்வில் மொத்தம் 94.56 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு 94.03 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றிருந்த நிலையில், இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது.
அதே போல் நேற்று வெளியான பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவில் 91.55 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு 91.39 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றிருந்த நிலையில் தற்போது தேர்ச்சி விகிதம் சற்றே அதிகரித்துள்ளது.
இந்நிலையில், 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வருகிற 14-ந்தேதி வெளியாகும் என அரசு தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.
வருகிற செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணிக்கு பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகத்தில் அமைந்துள்ள அரசு தேர்வுகள் இயக்ககத்தில் முடிவுகள் வெளியிடப்பட உள்ளது.
- 8 லட்சத்து 20 ஆயிரத்து 187 பள்ளி மாணவர்களும் 4,945 தனித்தேர்வர்களும் என மொத்தம் 8.25 லட்சம் பேர் தேர்வு எழுதினர்.
- தேர்வு முடிவுகளை மாணவர்கள் www.tnresults.nic.in மற்றும் www.dge.tn.gov.in ஆகிய இணைய தளங்களில் அறிந்து கொள்ளலாம்.
சென்னை:
பிளஸ்-2, 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் கடந்த வாரம் வெளியிடப்பட்டன. இதையடுத்து பிளஸ்-1 தேர்வு முடிவு நாளை (14-ந்தேதி) வெளியாகிறது.
பிளஸ்-1 பொதுத் தேர்வு தமிழகம் முழுவதும் 3,302 மையங்களில் கடந்த மார்ச் மாதம் 4-ந்தேதி முதல் 25-ந்தேதி வரை நடை பெற்றது. 8 லட்சத்து 20 ஆயிரத்து 187 பள்ளி மாணவர்களும் 4,945 தனித்தேர்வர்களும் என மொத்தம் 8.25 லட்சம் பேர் தேர்வு எழுதினர்.
இதைத் தொடர்ந்து விடைத்தாள் திருத்தும் பணி நடந்து மதிப்பெண் பதி வேற்றம் உள்ளிட்ட மற்ற பணிகள் நடந்து முடிந்துள்ளன.
இந்த நிலையில் பிளஸ்-1 தேர்வு முடிவு ஏற்கனவே அறிவித்தபடி நாளை காலை 9.30 மணிக்கு அரசு தேர்வுத் துறை வெளியிடுகிறது.
தேர்வு முடிவுகளை மாணவர்கள் www.tnresults.nic.in மற்றும் www.dge.tn.gov.in ஆகிய இணைய தளங்களில் அறிந்து கொள்ளலாம்.
மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகள் மூலமாக மதிப்பெண்களை தெரிந்து கொள்ளலாம். மேலும் மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் இயங்கும் தேசிய தகவலியல் மையங் கள் மற்றும் அனைத்து மைய கிளை நூலகங்களிலும் கட்டணமின்றி தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.
இது தவிர பள்ளி மாணவர்கள், தனித் தேர்வர்கள் பதிவு செய்துள்ள செல்போன் எண்ணுக்கு எஸ்.எம்.எஸ். வழியாகவும் தேர்வு முடிவுகள் அனுப்பப்படும். மாணவர்களின் மதிப்பெண் பட்டியலை www.dge.tn.gov.in என்ற இணைய தளத்தில் பள்ளி தலைமை ஆசிரியர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
- நாடுமுழுவதும் தேர்வெழுதிய மாணவர்களில் 87.99 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
- cbse.gov.in, cbscresults.nic.in ஆகிய இணையதளத்தில் தேர்வு முடிவுகளை அறியலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிபிஎஸ்இ நடத்திய 12ம் வகுப்புகளுக்கான தேர்வு முடிவுகள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் எந்த ஒரு அறிவிப்பு இன்றி இன்று தேர்வு முடிவுகள் வெளியானது.
இதை cbse.gov.in, cbscresults.nic.in ஆகிய இணையதளத்தில் தேர்வு முடிவுகளை அறியலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிபிஎஸ்இ பொது தேர்வு பிப்ரவரி மற்றும் மார்ச் மாதத்தில் நடைபெற்றது. இதில் 16,21,224 மாணவர்கள் தேர்வெழுதினர். இதில் 14,26,420 மாணவர்கள் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள்.
நாடுமுழுவதும் தேர்வெழுதிய மாணவர்களில் 87.99 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதிக பட்சமாக திருவனந்தபுரத்தில் 99.91 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். சென்னை மண்டலத்தில் 98.47 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இதில் பெங்களூர் மண்டலத்தில் 96.95 விழுக்காடு மாணவர்கள் தேர்ச்சி ஆகி உள்ளனர்.
- தேசிய தேர்வு முகமை நடத்தும் இளநிலை மருத்துவப் படிப்புகளுக்காக நீட் நுழைவுத் தேர்வு நாடு முழுவதும் கடந்த மே 5 ஆம் தேதி நடைபெற்று முடிந்தது.
- குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் வினாத்தாளில் குளறுபடி உள்ளிட்ட புகார்களும் எழுந்த வண்ணம் உள்ளன.
தேசிய தேர்வு முகமை (NTA) நடத்தும் இளநிலை மருத்துவப் படிப்புகளுக்காக நீட் நுழைவுத் தேர்வு நாடு முழுவதும் கடந்த மே 5 ஆம் தேதி நடைபெற்று முடிந்தது. வழக்கம் போல் கடும் கட்டுப்பாடுகளுடன் நடந்த இந்த ஆண்டு தேர்வில் தேர்வில் நாடு முழுவதும் மருத்துவக் கனவுடன் உள்ள லட்சக்கணக்கான மாணவர்கள் பங்கேற்றனர்.
குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் வினாத்தாளில் குளறுபடி உள்ளிட்ட புகார்களும் எழுந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் நடந்து முடித்த தேர்வுக்கான முதற்கட்ட மாதிரி விடைக் குறிப்பு விரைவில் வெளியிடப்படும் என்று என்று தகவல் வெளியாகி உள்ளது. விடைக்குறிப்பு வெளியானதும் மாணவர்கள், exams.nta.ac.in/NEET என்ற இணையத்தளத்தில் அதைப் பதிவிறக்கம் செய்து அந்த விடைகளில் ஏதேனும் ஆட்சேபனை இருந்தால் முறையிடலாம்.
அதைத்தொடர்ந்து அனைத்தையும் பரிசீலித்த பின்னர் இறுதிக்கட்ட விடைக்குறிப்பு வெளியிடப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இதனிடையே இளநிலை நீட் தேர்வு முடிவுகள் வரும் ஜூன் 14 ஆம் தேதி வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது






