என் மலர்
நீங்கள் தேடியது "யுபிஎஸ்சி"
- கடந்த ஆகஸ்ட் மாதம் யுபிஎஸ்சி தேர்வு நடைபெற்றது.
- நடப்பு ஆண்டில் தேர்ச்சி விகிதம் 13.97 சதவீதம் அதிரித்துள்ளது.
யுபிஎஸ்சி 2025 பிரதான தேர்வு முடிவுகள் இணையத்தில் இன்று வெளியாகியுள்ளது.
கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் தேர்ச்சி விகிதம் 13.97 சதவீதம் அதிரித்துள்ளது.
அதன்படி, யுபிஎஸ்சி தேர்வு முடிவுகளை http://upsc.gov.in என்ற முகவரியில் பார்த்துக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தேர்வில், தமிழ்நாட்டில் இருந்து தேர்வு எழுதியவர்களில் 155 பேர் யுபிஎஸ்சி பிரதான தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
கடந்த ஆண்டு 136 பேர் தேர்ச்சி பெற்றிருந்த நிலையில் இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
- பயிற்சி பெற்று வரும்போது ஐஏஎஸ் அதிகாரிகளுக்கான அனைத்து வசதிகளையும் கேட்டதாக புகார்.
- புகாரை விசாரிக்கும்போது UPSC தேர்வுக்கான விண்ணப்பத்தில் முறைகேடு செய்தது கண்டுபிடிப்பு.
மகாராஷ்டிரா மாநிலம் புனேவைச் சேர்ந்த பூஜா கெத்கர் UPSC தேர்வில் தேர்ச்சி பெற்று ஐ.ஏ.எஸ். ஆனார். புனேயில் பயிற்சி பெற்று வரும்போதே ஐஏஎஸ் அதிகாரிகளுக்கான அனைத்து வசதிகளையும் கேட்டதாக புகார் எழுந்தது.
அதனைத் தொடர்ந்து ஐஏஎஸ் தேர்வுக்கு முறைகேடாக ஓபிசி மற்றும் உடல் ஊனம் சான்றிதழ் பெற்றதாக அவர் மீது அடுத்தடுத்து புகார்கள் கூறப்பட்டன. விசாரணை முடிவில் யுபிஎஸ்சி (Union Public Service Commission) பூஜா கெத்கரின் ஐஏஎஸ்-ஐ ரத்து செய்தது. மேலும் வாழ்நாள் முழுவதும் தேர்வு எழுத தடைவிதித்தது.
டெல்லி போலீசார் பூஜா கெத்கர் மீது பல்வேறு வழக்குகள் பதிவு செய்துள்ளனர். இதனால் தன்னை கைது செய்ய வாய்ப்புள்ளதாக கருதிய அவர், டெல்லி உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமின் கேட்டு மனுதாக்கல் செய்தார். டெல்லி உயர்நீதிமன்றம் அவருக்கு இடைக்கால ஜாமின் வழங்க மறுத்துவிட்டது.
இதனைத்தொடர்ந்து உச்சநீதிமன்றத்தில் முன்ஜாமின் கேட்டு மேல்முறையீடு செய்திருந்தார். இந்த மேல்முறையீடு மனு நீதிபதிகள் பி.வி. நாகரத்னா, சதீஷ் சந்திரா சர்மா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள் "பூஜா கெத்கர் விசாதணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். அதேவேளையில் அவருக்கு முன்ஜாமின் வழங்கப்படுகிறது" என உத்தரவிட்டனர்.
அத்துடன் "பூஜா கெத்கர் செய்த பெரிய குற்றம் என்ன?. அவர் போதைப்பொருள் தலைவனோ அல்லது பயங்கிரவாதியோ அல்ல. அவர்கள் கொலை குற்றத்தில் ஈடுபடவில்லை. அவர் NDFS குற்றத்தில் ஈடுபடவில்லை. அவர் எல்லைவற்றையும் இழந்து விட்டார். எங்கேயும் அவர் வேலை பெற முடியாது.
வழக்கின் உண்மைகள் மற்றும் சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு, டெல்லி உயர்நீதிமன்றம் ஜாமின் வழங்கியிருக்க வேண்டிய பொருத்தமான வழக்கு இது" எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
- ஏப்ரல் 29ம் தேதி யுபிஎஸ்சி தலைவர் பிரீத்தி சூடானின் பதவிக்காலம் முடிவுக்கு வந்தது.
- அஜய்குமார் இந்த பொறுப்பில் 6 ஆண்டுகள் அல்லது 65 வயது அடையும்வரை நீடிப்பார்.
யுபிஎஸ்சி தலைவராக, பாதுகாப்புத்துறை முன்னாள் செயலாளர் அஜய்குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அஜய்குமார் இந்த பொறுப்பில் 6 ஆண்டுகள் அல்லது 65 வயது அடையும்வரை நீடிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் 29ம் தேதி யுபிஎஸ்சி தலைவர் பிரீத்தி சூடானின் பதவிக்காலம் முடிவுக்கு வந்தது. இதனையடுத்து மத்திய பணியாளர் தேர்வாணையத்தின் (UPSC) தலைவர் பதவி காலியாக இருந்தது. இந்நிலையில் அஜய் குமாரின் நியமனத்திற்கு குடியரசு தலைவர் திரவுபதி முர்மு அனுமதி அளித்துள்ளார்.
1985ஆம் ஆண்டு கேரள பிரிவு ஐஏஎஸ் அதிகாரியான அஜய்குமார், 2019 முதல் 2022 வரை பாதுகாப்புத்துறைச் செயலாளராக பணியாற்றினார்
- மாணவர்கள் தங்கள் லட்சியத்தில் வெற்றி பெற ஆரம்பிக்கப்பட்ட திட்டம் தான் நான் முதல்வன் திட்டம்.
- நீங்கள் வென்றால் மட்டும் போதாது, மற்ற மாணவர்களையும் ஊக்குவிக்கும் வகையில் நடக்க வேண்டும்.
சென்னை பசுமை வழிச்சாலையில் யு.பி.எஸ்.சி. தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கான பாராட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாணவர்களை வாழ்த்தி உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
* யு.பி.எஸ்.சி. தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.
* தி.மு.க. ஆட்சியில் கல்வியை மேம்படுத்தி மாணவர்களின் வாழ்வில் மறுமலர்ச்சி ஏற்படுத்த வேண்டும் என திட்டமிட்டோம்.
* எப்படிப்பட்ட தேர்வாக இருந்தாலும் அதனை தமிழக மாணவர்கள் எதிர்கொள்ள வேண்டும் என நினைத்தோம்.
* மாணவர்கள் தங்கள் லட்சியத்தில் வெற்றி பெற ஆரம்பிக்கப்பட்ட திட்டம் தான் நான் முதல்வன் திட்டம்.
* மாணவர்கள் மீதும், நான் முதல்வன் திட்டத்தின் மீதும் வைத்த நம்பிக்கை வீண் போகவில்லை.
* நான் முதல்வன் திட்டம் ஆரம்பிக்கப்பட்டதன் நோக்கம் சிறப்பாக நிறைவேறி வருவதில் மகிழ்ச்சி.
* சாமானிய வீடுகளில் இருந்து வந்து வென்ற உங்களை பாராட்டுவதே திராவிட மாடல் ஆட்சியின் நோக்கம்
* நீங்கள் வென்றால் மட்டும் போதாது, மற்ற மாணவர்களையும் ஊக்குவிக்கும் வகையில் நடக்க வேண்டும்.
* யு.பி.எஸ்.சி. தேர்வில் வெற்றிகள் குறைந்த நேரத்தில் நீங்கள் கவலையை தீர்த்துள்ளீர்கள்.
* அதிகாரம் என்பது அனைவருக்கும் சமம், அதிகாரம் உங்கள் கையில் இருக்கிறது, அதனை சரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- தேசிய அளவில் 23 ஆவது இடத்தைப் பிடித்துள்ளார் என்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.
- தேர்ச்சி பெற்றுள்ள அனைவரும், தங்கள் பல ஆண்டு கால கடின உழைப்பின் பலனைப் பெற்றிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டு எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது:-
இன்று வெளியாகியுள்ள UPSC தேர்வு முடிவுகளில், தமிழகத்தைச் சேர்ந்த சிவச்சந்திரன் தேசிய அளவில் 23 ஆவது இடத்தைப் பிடித்துள்ளார் என்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.
தேர்ச்சி பெற்றுள்ள அனைவரும், தங்கள் பல ஆண்டு கால கடின உழைப்பின் பலனைப் பெற்றிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
நாட்டின் எதிர்காலத்தை உருவாக்கும் பணியில் முன்வரிசையில் செயல்படவிருக்கும் அனைவரும், தங்கள் துறைகளில் வெகு சிறப்பாக பணிபுரிய மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
- இறுதித் தேர்வு முடிவுகள் https://upsc.gov.in/ இணையதளத்தில் இன்று வெளியாகி உள்ளது.
- நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்ற 134 பேரில் 50 பேர் 2024 யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
2024 ஆம் ஆண்டுக்கான யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வின் இறுதி முடிவுகள் இன்று(ஏப்ரல் 22) வெளியிடப்பட்டுள்ளன.
ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ் ஐஆா்எஸ் உள்ளிட்ட குடிமைப் பணிகளுக்கு மத்திய பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) வருடந்தோறும் தேர்வு நடத்தி வருகிறது.
இந்த தேர்வு, முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு, நேர்முகத் தேர்வு என மூன்று படிநிலைகள் கொண்டது.
இந்நிலையில் 2024 ஆம் ஆண்டுக்கான இறுதித் தேர்வு முடிவுகள் https://upsc.gov.in/ இணையதளத்தில் இன்று வெளியாகி உள்ளது. அதன்படி இந்த தேர்வில் 1009 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இதில் தமிழகத்தை சேர்ந்த மாணவர் சிவச்சந்திரன் மாநில அளவில் முதலிடமும் அகில இந்திய அளவில் 23 ஆம் இடமும் பெற்றுள்ளார். இவர் தமிழக அரசின் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பயின்றவர் ஆவார். இதுபற்றி சிவச்சந்திரன் கூறுகையில், "யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்றது மகிழ்ச்சியாக இருக்கிறது. தேர்வில் வெற்றிபெற நான் முதல்வன் திட்டம் உதவிகரமாக இருந்தது" என்றார்.
அதேபோல, இந்திய அளவில் 39ஆம் இடம் பிடித்த மோனிகா என்பவரும் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்றவர் ஆவார்.
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்ற 134 பேரில் 50 பேர் 2024 யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். 50 பேரில் 18 பேர் முழுநேர உறைவிட பயிற்சி மேற்கொண்டவர்கள் ஆவர். மேலும்
தமிழில் தேர்வு எழுதிய காமராஜ், தங்கபாண்டியன் ஆகிய இருவரும் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
- தமிழகத்தில் சிவச்சந்திரன் என்ற மாணவர் மாநில அளவில் முதலிடமும் அகில இந்திய அளவில் 23 ஆம் இடமும் பெற்றுள்ளார்.
- 'நான் முதல்வன்' திட்டத்தின் கீழ் பயின்ற 50 பேர் இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
2024 ஆம் ஆண்டுக்கான யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வின் இறுதி முடிவுகள் இன்று(ஏப்ரல் 22) வெளியிடப்பட்டுள்ளன.
ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ், ஐஆா்எஸ் உள்ளிட்ட குடிமைப் பணிகளுக்கு ஆண்டுக்கு ஒருமுறை மத்திய பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) தேர்வுகள் நடத்துகிறது. இந்த தேர்வு, முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு, நேர்முகத் தேர்வு என மூன்று படிநிலைகள் கொண்டது.
இந்நிலையில் 2024 ஆம் ஆண்டுக்கான இறுதித் தேர்வு முடிவுகள் https://upsc.gov.in/ இணையதளத்தில் இன்று வெளியாகி உள்ளது. அதன்படி இந்த தேர்வில் 1009 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த சக்தி துபே என்ற மாணவி முதலிடம் பெற்றுள்ளார். ஹர்ஷிதா கோயல் என்பவர் இரண்டாமிடமும் டோங்க்ரே அர்ஷித் பராக் என்பவர் மூன்றாமிடமும் பெற்றுள்ளனர்.
தேர்ச்சி பெற்றவர்களில் 335 பேர் பொதுப்பிரிவினர், 109 பேர் பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினர், 318 பேர் ஓபிசி, 160 பேர் எஸ்சி, 87 பேர் எஸ்டி, 45 பேர் மாற்றுத்திறனாளிகள் ஆவர்.
தமிழகத்தில் சிவச்சந்திரன் என்ற மாணவர் மாநில அளவில் முதலிடமும் அகில இந்திய அளவில் 23 ஆம் இடமும் பெற்றுள்ளார். இவர் தமிழக அரசின் 'நான் முதல்வன்' திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்றவர் என்று தகவல் வெளியாகி உள்ளது. மேலும் 'நான் முதல்வன்' திட்டத்தின் கீழ் பயின்ற 50 பேர் இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
- அகில இந்திய அளவில் இஷிதா கிஷோர் முதலிடம் பிடித்துள்ளார்.
- யுபிஎஸ்சி தேர்வில் முதல் 4 இடங்களை பெண்களே பிடித்துள்ளனர்.
புதுடெல்லி:
ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ் போன்ற பணியிடங்களுக்கும், குரூப்-ஏ, குரூப்-பி பிரிவில் உள்ள பிற பணியிடங்களையும் நிரப்புவதற்கு மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) ஒவ்வொரு ஆண்டும் போட்டித்தேர்வை நடத்துகிறது. முதல் நிலை தேர்வு, பிரதான தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு என மூன்று நிலைகளில் இந்த தேர்வு நடத்தப்படுகிறது. அவ்வகையில் இந்த ஆண்டு நடைபெற்ற தேர்வின் இறுதி முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன. https://www.upsc.gov.in/ என்ற இணையதளத்தில் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
இந்த தேர்வில் மொத்தம் 933 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். முதல் 4 இடங்களை பெண்களே பிடித்துள்ளனர். அகில இந்திய அளவில் இஷிதா கிஷோர் முதலிடம் பிடித்துள்ளார். கரிமா லோகியா இரண்டாம் இடமும், உமா ஹராதி மூன்றாமிடமும், ஸ்மிருதி மிஷ்ரா நான்காம் இடமும் பிடித்தனர்.
தேர்ச்சி பெற்றவர்களில் 345 பேர் பொது பிரிவைச் சேர்ந்தவர்கள், 99 பேர் பொருளாதார ரீதியாக பின்தங்கிய வகுப்பைச் சேர்ந்தவர்கள், 263 பேர் ஓபிசி பிரிவைச் சேர்ந்தவர்கள், 154 பேர் எஸ்சி பிரிவையும், 72 பேர் எஸ்டி பிரிவையும் சேர்ந்தவர்கள்.
- இருவரும் சிவில் சர்வீசஸ் தேர்வு விதிகளுக்கு முரணாக செயல்பட்டுள்ளதாக யுபிஎஸ்சி கூறி உள்ளது
- யுபிஎஸ்சி-யின் கட்டமைப்பு வலுவானது மற்றும் முறைகேடாக பயன்படுத்த முடியாது.
புதுடெல்லி:
மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய (யுபிஎஸ்சி) சிவில் சர்வீசஸ் தேர்வின் இறுதி முடிவுகள் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டன. இதில், மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த ஆயிஷா மக்ரானி, பீகாரைச் சேர்ந்த துஷார் ஆகியோர் தேர்வானதாக கூறியிருந்தனர். உண்மையிலேயே தேர்ச்சி பெற்ற இரண்டு நபர்களின் பெயர்களைப்போன்றே அவர்களின் பெயர்களும் இருந்ததால் அந்த பெயர்களை காட்டி அது தாங்கள்தான் என கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக ஊடகங்களில் செய்தி வெளியானது. யுபிஎஸ்சி தேர்வு முறையில் குளறுபடி நடந்திருக்கலாம் என்ற சர்ச்சையும் எழுந்தது.
ஆனால் யுபிஎஸ்சி நிர்வாகம், ஆவணங்களை சரிபார்த்ததில் ஆயிஷா மக்ரானி, துஷார் இருவரும் தேர்வாகவில்லை என்பது தெரியவந்தது. இதையடுத்து, தேர்வானதாகக் கூறப்படும் இரண்டு நபர்களுக்கு எதிராக கிரிமினல் மற்றும் ஒழுங்கு நடவடிக்கை எடுப்பது தொடர்பாக யுபிஎஸ்சி பரிசீலித்து வருகிறது.
இதுதொடர்பாக யுபிஎஸ்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தேர்வானதாக இருவரும் கூறியது உண்மையல்ல. அவர்கள் தங்களுக்கு சாதகமாக போலியான ஆவணங்களைத் தயாரித்துள்ளனர். அவ்வாறு செய்வதன் மூலம், ஆயிஷா மக்ரானி மற்றும் துஷார் இருவரும் சிவில் சர்வீசஸ் தேர்வு விதிகளுக்கு முரணாக செயல்பட்டுள்ளனர்.
எனவே, தேர்வு விதிகளின் விதிகளின்படி, அவர்களின் மோசடி செயல்களுக்கு எதிராக கிரிமினல் மற்றும் ஒழுங்குமுறை சட்ட நடவடிக்கை ஆகிய இரண்டையும் மேற்கொள்ள யுபிஎஸ்சி பரிசீலித்து வருகிறது. யுபிஎஸ்சி-யின் கட்டமைப்பு வலுவானது மற்றும் முறைகேடாக பயன்படுத்த முடியாது. எனவே அத்தகைய தவறுகள் நடக்க சாத்தியமில்லை.
பத்திரிகைகள் மற்றும் ஊடகங்கள் இதுபோன்ற உரிமைகோரல்கள் தொடர்பான செய்திகளை வெளியிடுவதற்கு முன், யுபிஎஸ்சி-யிடமிருந்து உண்மைத்தன்மையை சரிபார்க்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- தன்னுடைய தரவரிசை பட்டியலுக்கு ஐ.பி.எஸ். ஒதுக்கீடு கிடைக்கும்
- ஓரிரு முறை தோல்வியடைந்தாலும் துவண்டு விடாமல் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டால் வெற்றி பெற்று சாதிக்கலாம்
பொன்னேரி அடுத்த சயனாவரம் கிராமத்தை சேர்ந்த விவசாயி குணசேகர்- சசிகலா தம்பதியரின் மகள் அஸ்வினி (பொறியியல் பட்டதாரி). இவர்கள் கல்வி உள்ளிட்டவற்றிற்காக தற்போது சென்னையில் வசித்து வருகின்றனர். அண்மையில் வெளியான குடிமை பணிகள் தேர்வில் அகில இந்திய அளவில் 229-வது இடம் பிடித்து வெற்றி பெற்றுள்ளார்.
தங்களது கிராமத்தில் இருந்து முதன் முதலாக குடிமை பணிகள் தேர்வில் ஒருவர் தேர்ச்சி பெற்றதை கொண்டாடும் வகையில் கிராம மக்கள் சார்பில் பாராட்டு விழா நடத்தப்பட்டது. முன்னதாக பொன்னேரி எம்.எல்.ஏ. துரை சந்திரசேகர் தேர்ச்சி பெற்ற மாணவிக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.
பின்னர் முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் சிறுணியம் பலராமன் தலைமையில் கிராம மக்கள் சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது. தேர்ச்சி பெற்ற மாணவிக்கு பொன்னாடை அணிவித்தும், பூங்கோத்து கொடுத்தும் கிராம மக்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர். தொடர்ந்து வெற்றியை கொண்டாடும் வகையில் கேக் வெட்டி அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன.
தொடர்ந்து பேசிய சாதனை மாணவி அஸ்வினி பொறியியல் பட்டப்படிப்பை முடித்து தகவல் தொழில்நுட்ப துறையில் சிறந்த ஊதியத்தில் பணியாற்றி வந்ததாகவும், ஐ.ஏ.எஸ். லட்சியத்திற்காக வேலையை உதறி தள்ளிவிட்டு தொடர்ந்து பயிற்சிகள் மேற்கொண்டு 4 முறை தோல்வியடைந்தாலும் விடா முயற்சியின் காரணமாக ஐந்தாவது முறை தேர்வெழுதி அகில இந்திய அளவில் 229-வது பிடித்து தேர்ச்சி பெற்றுள்ளது மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தார்.
தன்னுடைய தரவரிசை பட்டியலுக்கு ஐ.பி.எஸ். ஒதுக்கீடு கிடைக்கும் எனவும், மகளிர் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளித்து பணியாற்றுவேன் என தெரிவித்தார். மேலும் குடிமை பணிகள் தேர்வு என்பது எளிதானதுதான் எனவும், தொடர் பயிற்சியும், விடா முயற்சியும் மேற்கொள்ள வேண்டும் எனவும், ஓரிரு முறை தோல்வியடைந்தாலும் துவண்டு விடாமல் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டால் வெற்றி பெற்று சாதிக்கலாம் என நம்பிக்கை தெரிவித்தார்.
தங்களது கிராமத்தில் இருந்து முதல் முறையாக குடிமை பணிகளில் தேர்ச்சி பெற்ற மாணவியை கிராம மக்கள் பாராட்டு தெரிவித்து கொண்டாடி வருகின்றனர். இந்த நிகழ்ச்சியில் அதிமுக நிர்வாகிகள் பானு பிரசாத்,செல்வகுமார்,கோளூர் கோதண்டன்,ஆமூர் செல்வமணி,ராஜ்குமார்,மாதவரம் ரமேஷ்பாபு, வழக்கறிஞர் கார்த்திக் உள்ளிட்ட பல்வேறு கட்சி பிரமுகர்கள்,கிராம மக்கள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
- மொத்தம் 334 அறை கண்காணிப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
- தேர்வு மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
கோவை,
இன்று நாடு முழுவதும் யு.பி.எஸ்.சி. தேர்வு நடந்து வருகிறது. கோவை மாவட் டத்தில் 8 மையங்களில் இந்த தேர்வானது நடந்தது.
கோவையில் 8 மையங்களில் யுபிஎஸ்சி தேர்வு நடைபெற்றது. இதனையொட்டி காலையிலேயே தேர்வர்கள் தேர்வு மையங்களுக்கு வந்திருந்தனர்.
தேர்வு மையத்திற்கு வந்ததும், அவர்களின் ஹால் டிக்கெட் உள்ளிட்டவற்றை சரி பார்த்து விட்டு தேர்வு அறைக்கு அனுப்பினர்.பின்னர் தேர்வறைக்கு சென்று தேர்வர்கள் தேர்வினை எழுதினர்.
இந்த தேர்வினையொட்டி மத்திய அரசுப்பணியாளர் தேர்வாணைய மாவட்ட ஒருங்கிணைப்பு மேற்பார்வையாளர், மாவட்ட ஆட்சியரின் தலைமையில் துணை ஆட்சியர் நிலையில் 2 உதவி ஒருங்கிணைப்பு மேற்பார்வையாளர்கள், வட்டாட்சியர் நிலையில் 8 தேர்வு மையங்களுக்கு தலா ஒரு தேர்வு மைய உதவி கண்காணிப்பாளர்கள், 171 அறைக் கண்காணிப்பாளர்கள் மாவட்ட நிர்வாகத்தின் மூலமும், 163 அறைக் கண்காணிப்பாளர்கள் தேர்வு மைய கண்காணிப்பாளர்கள் மூலமும் என மொத்தம் 334 அறை கண்காணிப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.தேர்வின் செயல்பாடுகளை ஆய்வு செய்ய மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் துணை செயலர் நிலையில் அலுவலர் ஒருவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர்கள் தேர்வு அறைகளில் அடிக்கடி ஆய்வு மேற்கொண்டனர்.
ேதர்வினையொட்டி தேர்வு மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது. தேர்வு மையங்களுக்கு செல்வதற்கு வசதியாக கோவை உக்கடம், சிங்காநல்லூர், சூலூர், காந்திபுரம் பஸ் நிலையங்களில் இருந்து பஸ்களும் இயக்கப்பட்டன.
- செப்டம்பர் 15ம் தேதி முதல் 24ம் தேதி வரை யுபிஎஸ்சி முதன்மை தேர்வு நடைபெற்றது.
- தேர்வானவர்களுக்கு நேர்முகத் தேர்வுக்கான அழைப்பானை விரைவில் வரும்.
செப்டம்பர் 15ம் தேதி முதல் 24ம் தேதி வரை நடைபெற்ற யுபிஎஸ்சி முதன்மை தேர்வுக்கான முடிவுகள் வெளியானது.
தேர்வு முடிவுகளை upsc.gov.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். தேர்வானவர்களுக்கு நேர்முகத் தேர்வுக்கான அழைப்பானை விரைவில் வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.






