என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "UPSC Result"

    • முதன்மைத் தேர்வு, நேர்முகத் தேர்விலும் அடுத்து நீங்கள் முத்திரை பதிக்க வாழ்த்துகிறேன்.
    • தமிழ்க்கொடி உயர உயரப் பறக்கட்டும்!

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    தமிழ்நாடு அரசின் அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரியிலும் நான் முதல்வன் திட்டத்திலும் பயின்ற நம் மாணவர்கள் UPSC முதனிலைத் தேர்வு முடிவுகளில் இதுவரை இல்லாத எண்ணிக்கையில் சாதனை படைத்துள்ளனர்!

    முதன்மைத் தேர்வு, நேர்முகத் தேர்விலும் அடுத்து நீங்கள் முத்திரை பதிக்க வாழ்த்துகிறேன். உங்கள் வெற்றிமுகங்களை நேரில் காண ஆவலாய் இருக்கிறேன்.

    இந்தச் சாதனைக்கு உறுதுணையாக இருந்த அதிகாரிகளுக்கும் பயிற்றுநர்களுக்கும் என் பாராட்டுகளை உரித்தாக்குகிறேன்! தமிழ்க்கொடி உயர உயரப் பறக்கட்டும்!

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சிவில் சர்வீஸ் முதல் நிலை தேர்வு நாடு முழுவதும் கடந்த மே 25ம் தேதி நடைபெற்றது.
    • சென்னையில் உள்ள தேர்வு மையங்களில் 24,364 பேர் முதல்நிலை தேர்வை எழுதினார்கள்.

    ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எப்.எஸ். உள்ளிட்ட 24 வகையான குடிமை பணிகளுக்கு இந்த ஆண்டு 979 பேரை தேர்வு செய்வதற்கான சிவில் சர்வீஸ் முதல் நிலை தேர்வு நாடு முழுவதும் கடந்த மே 25ம் தேதி நடைபெற்றது.

    சென்னையில் 69 மையங்களில் தேர்வுகளுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இந்த தேர்வில் பங்கேற்பதற்காக பட்டதாரி வாலிபர்கள், டாக்டர் படிப்பை முடித்தவர்கள், என்ஜினீயர்கள் என பலர் தேர்வு மையங்களில் திரண்டனர்.

    சென்னையில் உள்ள தேர்வு மையங்களில் 24,364 பேர் முதல்நிலை தேர்வை எழுதினார்கள். இதில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு அடுத்த கட்டமாக முதன்மை தேர்வு நடத்தப்படும்.

    இந்நிலையில், யுபிஎஸ்சி-சிஎஸ்இ-ன் முதல் நிலை தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது. அதன்படி, தேர்வு முடிவுகளை upsc.gov.in என்ற இணையதளம் மூலம் தெரிந்துக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    • தேசிய அளவில் 23 ஆவது இடத்தைப் பிடித்துள்ளார் என்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.
    • தேர்ச்சி பெற்றுள்ள அனைவரும், தங்கள் பல ஆண்டு கால கடின உழைப்பின் பலனைப் பெற்றிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

    தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டு எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது:-

    இன்று வெளியாகியுள்ள UPSC தேர்வு முடிவுகளில், தமிழகத்தைச் சேர்ந்த சிவச்சந்திரன் தேசிய அளவில் 23 ஆவது இடத்தைப் பிடித்துள்ளார் என்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.

    தேர்ச்சி பெற்றுள்ள அனைவரும், தங்கள் பல ஆண்டு கால கடின உழைப்பின் பலனைப் பெற்றிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

    நாட்டின் எதிர்காலத்தை உருவாக்கும் பணியில் முன்வரிசையில் செயல்படவிருக்கும் அனைவரும், தங்கள் துறைகளில் வெகு சிறப்பாக பணிபுரிய மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

    • நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்ற 134 பேரில் 50 பேர் தேர்ச்சி.
    • தமிழில் தேர்வு எழுதிய காமராஜ், தங்கபாண்டியன் ஆகிய இருவரும் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    UPSC தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது. இதில் தமிழகத்தை சேர்ந்த சிவச்சந்திரன் மாநில அளவில் முதலிடமும் அகில இந்திய அளவில் 23 ஆம் இடமும் பெற்றுள்ளார். இவர் தமிழக அரசின் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பயின்றவர் ஆவார்.

    இதுபற்றி சிவச்சந்திரன் கூறுகையில், "யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்றது மகிழ்ச்சியாக இருக்கிறது. தேர்வில் வெற்றிபெற நான் முதல்வன் திட்டம் உதவிகரமாக இருந்தது" என்றார்.

    அதேபோல், இந்திய அளவில் 39ஆம் இடம் பிடித்த மோனிகா என்பவரும் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்றவர் ஆவார்.

    நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்ற 134 பேரில் 50 பேர் 2024 யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். 50 பேரில் 18 பேர் முழுநேர உறைவிட பயிற்சி மேற்கொண்டவர்கள் ஆவர். மேலும் தமிழில் தேர்வு எழுதிய காமராஜ், தங்கபாண்டியன் ஆகிய இருவரும் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    இந்த நிலையில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் பக்க பதிவில் கூறியிருப்பதாவது:-

    எது மகிழ்ச்சி?

    நான் மட்டும் முதல்வன் அல்ல; தமிழ்நாட்டிலுள்ள ஒவ்வொருவரும் முதல்வனாக என் பிறந்தநாளில் தொடங்கி வைத்த #நான்_முதல்வன் திட்டத்தில் பயிற்சி பெற்ற மாணவர் #UPSC தேர்வில் தமிழ்நாட்டுத் தரவரிசையில் முதல்வனாகியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது!

    பல்லாயிரக்கணக்கான மாணவர்களின் திறன்களை மேம்படுத்தும் இந்தத் திட்டம், வருங்காலங்களில் லட்சக்கணக்கானோரின் வாழ்வில் ஒளியேற்றிடும் என்ற நம்பிக்கை என் மகிழ்ச்சியாகியுள்ளது!

    இவ்வாறு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

    • இருவரும் சிவில் சர்வீசஸ் தேர்வு விதிகளுக்கு முரணாக செயல்பட்டுள்ளதாக யுபிஎஸ்சி கூறி உள்ளது
    • யுபிஎஸ்சி-யின் கட்டமைப்பு வலுவானது மற்றும் முறைகேடாக பயன்படுத்த முடியாது.

    புதுடெல்லி:

    மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய (யுபிஎஸ்சி) சிவில் சர்வீசஸ் தேர்வின் இறுதி முடிவுகள் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டன. இதில், மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த ஆயிஷா மக்ரானி, பீகாரைச் சேர்ந்த துஷார் ஆகியோர் தேர்வானதாக கூறியிருந்தனர். உண்மையிலேயே தேர்ச்சி பெற்ற இரண்டு நபர்களின் பெயர்களைப்போன்றே அவர்களின் பெயர்களும் இருந்ததால் அந்த பெயர்களை காட்டி அது தாங்கள்தான் என கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக ஊடகங்களில் செய்தி வெளியானது. யுபிஎஸ்சி தேர்வு முறையில் குளறுபடி நடந்திருக்கலாம் என்ற சர்ச்சையும் எழுந்தது.

    ஆனால் யுபிஎஸ்சி நிர்வாகம், ஆவணங்களை சரிபார்த்ததில் ஆயிஷா மக்ரானி,  துஷார் இருவரும் தேர்வாகவில்லை என்பது தெரியவந்தது. இதையடுத்து, தேர்வானதாகக் கூறப்படும் இரண்டு நபர்களுக்கு எதிராக கிரிமினல் மற்றும் ஒழுங்கு நடவடிக்கை எடுப்பது தொடர்பாக யுபிஎஸ்சி பரிசீலித்து வருகிறது.

    இதுதொடர்பாக யுபிஎஸ்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தேர்வானதாக இருவரும் கூறியது உண்மையல்ல. அவர்கள் தங்களுக்கு சாதகமாக போலியான ஆவணங்களைத் தயாரித்துள்ளனர். அவ்வாறு செய்வதன் மூலம், ஆயிஷா மக்ரானி மற்றும் துஷார் இருவரும் சிவில் சர்வீசஸ் தேர்வு விதிகளுக்கு முரணாக செயல்பட்டுள்ளனர்.

    எனவே, தேர்வு விதிகளின் விதிகளின்படி, அவர்களின் மோசடி செயல்களுக்கு எதிராக கிரிமினல் மற்றும் ஒழுங்குமுறை சட்ட நடவடிக்கை ஆகிய இரண்டையும் மேற்கொள்ள யுபிஎஸ்சி பரிசீலித்து வருகிறது. யுபிஎஸ்சி-யின் கட்டமைப்பு வலுவானது மற்றும் முறைகேடாக பயன்படுத்த முடியாது. எனவே அத்தகைய தவறுகள் நடக்க சாத்தியமில்லை.

    பத்திரிகைகள் மற்றும் ஊடகங்கள் இதுபோன்ற உரிமைகோரல்கள் தொடர்பான செய்திகளை வெளியிடுவதற்கு முன், யுபிஎஸ்சி-யிடமிருந்து உண்மைத்தன்மையை சரிபார்க்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

    இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×