என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தேர்வு முடிவுகள் வெளியீடு"

    • கிராம நிர்வாக அலுவலர், தட்டச்சர் உள்ளிட்ட 4662 காலிப் பணியிடங்களுக்கு தேர்வு நடைபெற்றது.
    • 11 லட்சத்து 48 ஆயிரம் பேர் குரூப் 4 தேர்வை எழுதினர்.

    4,662 பணியிடங்களை நிரப்ப கடந்த ஜூலை மாதம் 12ம் தேதி நடந்த குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியாகின.

    கிராம நிர்வாக அலுவலர், தட்டச்சர் உள்ளிட்ட 4662 காலிப் பணியிடங்களுக்கு தேர்வு நடைபெற்றது.

    இதில், 11 லட்சத்து 48 ஆயிரம் பேர் குரூப் 4 தேர்வை எழுதினர். இந்நிலையில், தேர்வு முடிவுகளை வெளியாகியுள்ளன.

    தேர்வர்கள் http://tnpsc.gov.in என்கிற தேர்வாணைய இணையதளத்தில் தங்களது பதிவு எண்களை உள்ளீடு செய்து முடிவுகளைப் பார்க்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • 70 பதவிகளுக்கு நடத்தப்பட்ட குரூப் 1 தேர்வு முடிவுகள் வெளியானது.
    • முதன்மை தேர்வு டிசம்பர் 1 முதல் 4ம் தேதி வரை சென்னையில் நடைபெற இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி. சார்பில் குரூப் 1 பதவியில் காலியாக உள்ள 70 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு கடந்த ஏப்ரல் 1-ந்தேதி வெளியிடப்பட்டது.

    இதில், துணை கலெக்டர் பதவிக்கு 28 இடங்கள், போலீஸ் டி.எஸ்.பி. பதவிக்கு 7 இடங்கள், வணிகவரி உதவி ஆணையர் பதவிக்கு 19 இடங்கள், ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர் பதவிக்கு 7 இடங்கள், மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரி பதவிக்கு 3 இடங்கள், தொழிலாளர் நல உதவி ஆணையர் பதவிக்கு 6 இடங்கள் ஆகிய 70 பணியிடங்கள் அடங்கும். அதோடு உதவி வன பாதுகாவலர் பதவிக்கு 2 காலியிடங்களுக்கான குரூப் 1 ஏ அறிவிப்பும் வெளியிடப்பட்டது.

    இந்த தேர்வை எழுத ஏராளமான பட்டதாரிகள் போட்டி போட்டு விண்ணப்பித்தனர். குரூப் 1, குரூப் 1 ஏ தேர்வுகளை எழுத மொத்தம் 2 லட்சத்து 49 ஆயிரத்து 296 பேர் விண்ணப்பித்தனர். குரூப் 1 தேர்வை எழுத 2 லட்சத்து 27 ஆயிரத்து 982 பேரும், குரூப் 1 ஏ தேர்வை எழுத 6,465 பேரும் அனுமதிக்கப்பட்டனர்.

    இந்த நிலையில், கடந்த ஜூன் 15ம் தேதி நடந்த குரூப்-1 முதல் நிலை தேர்வுக்கான முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

    இதைதொடர்ந்து, குரூப் 1 முதன்மை தேர்வு எழுத தகுதி பெற்றவர்கள் செப்டம்பர் 1ம் தேதி முதல் 12ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

    குரூப்-1 முதல்நிலை தேர்வு முடிவு வெளியான நிலையில் முதன்மை தேர்வு டிசம்பர் 1 முதல் 4ம் தேதி வரை சென்னையில் நடைபெற இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • சிவில் சர்வீஸ் முதல் நிலை தேர்வு நாடு முழுவதும் கடந்த மே 25ம் தேதி நடைபெற்றது.
    • சென்னையில் உள்ள தேர்வு மையங்களில் 24,364 பேர் முதல்நிலை தேர்வை எழுதினார்கள்.

    ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எப்.எஸ். உள்ளிட்ட 24 வகையான குடிமை பணிகளுக்கு இந்த ஆண்டு 979 பேரை தேர்வு செய்வதற்கான சிவில் சர்வீஸ் முதல் நிலை தேர்வு நாடு முழுவதும் கடந்த மே 25ம் தேதி நடைபெற்றது.

    சென்னையில் 69 மையங்களில் தேர்வுகளுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இந்த தேர்வில் பங்கேற்பதற்காக பட்டதாரி வாலிபர்கள், டாக்டர் படிப்பை முடித்தவர்கள், என்ஜினீயர்கள் என பலர் தேர்வு மையங்களில் திரண்டனர்.

    சென்னையில் உள்ள தேர்வு மையங்களில் 24,364 பேர் முதல்நிலை தேர்வை எழுதினார்கள். இதில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு அடுத்த கட்டமாக முதன்மை தேர்வு நடத்தப்படும்.

    இந்நிலையில், யுபிஎஸ்சி-சிஎஸ்இ-ன் முதல் நிலை தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது. அதன்படி, தேர்வு முடிவுகளை upsc.gov.in என்ற இணையதளம் மூலம் தெரிந்துக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    • குரூப் 2ஏ பதவியில் 2006 பதவிக்கான மெயின் தேர்வு கடந்த பிப்ரவரி மாதம் 8ம் தேதி நடைபெற்றது.
    • குரூப் 2ஏ தேர்வு முடிவுகளை tnpsc.gov.in என்கிற இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

    தமிழகம் முழுவதும் குரூப் 2ஏ மெயின் தேர்வு 82 மையங்களில் கடந்த பிப்ரவரி 8ம் தேதி நடைபெற்றது. 2006 பதவிக்கு நடைபெற்ற தேர்வை 21,563 பேர் எழுதினர்.

    தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) குரூப் 2, குரூப் 2ஏ பணியில் காலியாக உள்ள 2,540 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்த ஆண்டு ஜூன் மாதம் 20ம் தேதி வெளியிட்டது.

    இந்நிலையில் குரூப் 2ஏ பதவியில் 2006 பதவிக்கான மெயின் தேர்வு கடந்த பிப்ரவரி மாதம் 8ம் தேதி நடைபெற்றது. மெயின் தேர்வு தாள் II பொது அறிவு மற்றும் பொது திறனறிவும் மனக்கணக்கு நுண்ணறிவும் மற்றும் மொழி (பொதுத்தமிழ் அல்லது பொது ஆங்கிலம்) கொள்குறி வகை தேர்வு நடைபெற்றது.

    இந்நிலையில், டிஎன்பிஎஸ்சி குரூப் 2ஏ மெயின் தேர்வு முடிவுகளை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.

    குரூப் 2ஏ தேர்வு முடிவுகளை tnpsc.gov.in என்கிற இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம் என தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.

    தொடர்ந்து, 12ஆவது முறையாக குறிப்பிட்ட மாதத்தில் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.

    • 90 காலி பணியிடங்களுக்கு நட்நத தேர்வை 1.59 லட்சம் பேர் எழுதியிருந்தனர்.
    • குரூப் 1 முதன்மை தேர்வுகள் டிசம்பர் 10ம் தேதி முதல் 13ம் தேதி வரை நடைபெறும்.

    தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 1 தேர்வு தமிழகம் முழுவதும் கடந்த ஜூலை மாதம் நடைபெற்றது. இந்த ஆண்டில் காலியாக உள்ள 90 பணியிடங்களுக்கு முதல் நிலை எழுத்து தேர்வு நடைபெற்றது.

    இந்த தேர்வுக்கான அறிவிப்பு கடந்த மார்ச் மாதம் 28-ந்தேதி வெளியிடப்பட்டது. குரூப் 1 தேர்வை எழுத 2 லட்சத்து 38 ஆயிரத்து 255 பேர் விண்ணப்பித்தனர். இதில் 2 லட்சத்து 38 ஆயிரத்து 247 பேர் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் ஆண்கள் 1,25,726 பேர், பெண்கள் 1,12,501 பேர், மூன்றாம் பாலினத்தவர் 20 பேர் ஆவர்.

    குரூப் 1 தேர்வை சுமார் 2 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் எழுதினார்கள். சென்னையில் மட்டும் 37 ஆயிரம் பேர் தேர்வு எழுதினார்கள்.

    டி.என்.பி.எஸ்.சி. குரூப் 1 பணிகளுக்கு முதல்நிலை தேர்வு மற்றும் முதன்மை தேர்வு என 2 தேர்வுகள் மற்றும் நேர்காணல் ஆகியவற்றின் முறையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். முதல் நிலை தேர்வு தகுதி தேர்வு மட்டுமே.

    இந்த தேர்வில் எடுக்கப்படும் மதிப்பெண்கள் பணி நியமனத்திற்கு எடுத்துக்கொள்ளப்படாது. முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு முதன்மைத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு இடஒதுக்கீடு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

    இந்நிலையில், டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதல்நிலை தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. குரூப் 1 முதல்நிலை தேர்வு நடந்து முடிந்து 50 நாட்களில் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.

    90 காலி பணியிடங்களுக்கு நடந்த தேர்வை 1.59 லட்சம் பேர் எழுதியிருந்தனர்.

    முதல் நிலை தேர்வில் தேர்ச்சி பெற்ற தேர்வர்களின் விவரங்கள் டிஎன்பிஎஸ்சி இணையதள பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

    குரூப் 1 முதன்மை தேர்வுகள் டிசம்பர் 10ம் தேதி முதல் 13ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    ×