என் மலர்
நீங்கள் தேடியது "யுபிஎஸ்சி முதல்நிலைத் தேர்வு"
- முதன்மைத் தேர்வு, நேர்முகத் தேர்விலும் அடுத்து நீங்கள் முத்திரை பதிக்க வாழ்த்துகிறேன்.
- தமிழ்க்கொடி உயர உயரப் பறக்கட்டும்!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
தமிழ்நாடு அரசின் அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரியிலும் நான் முதல்வன் திட்டத்திலும் பயின்ற நம் மாணவர்கள் UPSC முதனிலைத் தேர்வு முடிவுகளில் இதுவரை இல்லாத எண்ணிக்கையில் சாதனை படைத்துள்ளனர்!
முதன்மைத் தேர்வு, நேர்முகத் தேர்விலும் அடுத்து நீங்கள் முத்திரை பதிக்க வாழ்த்துகிறேன். உங்கள் வெற்றிமுகங்களை நேரில் காண ஆவலாய் இருக்கிறேன்.
இந்தச் சாதனைக்கு உறுதுணையாக இருந்த அதிகாரிகளுக்கும் பயிற்றுநர்களுக்கும் என் பாராட்டுகளை உரித்தாக்குகிறேன்! தமிழ்க்கொடி உயர உயரப் பறக்கட்டும்!
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- சிவில் சர்வீஸ் முதல் நிலை தேர்வு நாடு முழுவதும் கடந்த மே 25ம் தேதி நடைபெற்றது.
- சென்னையில் உள்ள தேர்வு மையங்களில் 24,364 பேர் முதல்நிலை தேர்வை எழுதினார்கள்.
ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எப்.எஸ். உள்ளிட்ட 24 வகையான குடிமை பணிகளுக்கு இந்த ஆண்டு 979 பேரை தேர்வு செய்வதற்கான சிவில் சர்வீஸ் முதல் நிலை தேர்வு நாடு முழுவதும் கடந்த மே 25ம் தேதி நடைபெற்றது.
சென்னையில் 69 மையங்களில் தேர்வுகளுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இந்த தேர்வில் பங்கேற்பதற்காக பட்டதாரி வாலிபர்கள், டாக்டர் படிப்பை முடித்தவர்கள், என்ஜினீயர்கள் என பலர் தேர்வு மையங்களில் திரண்டனர்.
சென்னையில் உள்ள தேர்வு மையங்களில் 24,364 பேர் முதல்நிலை தேர்வை எழுதினார்கள். இதில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு அடுத்த கட்டமாக முதன்மை தேர்வு நடத்தப்படும்.
இந்நிலையில், யுபிஎஸ்சி-சிஎஸ்இ-ன் முதல் நிலை தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது. அதன்படி, தேர்வு முடிவுகளை upsc.gov.in என்ற இணையதளம் மூலம் தெரிந்துக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
- நடப்பு ஆண்டுக்கான யுபிஎஸ்சியின் முதல்நிலைத் தேர்வு வரும் 28ம் தேதி நாடு முழுவதும் நடைபெறுகிறது.
- பெங்களூருவை தொடர்ந்து நொய்டாவிலும் மெட்ரோ ரெயில் சேவையின் நேரம் மாற்றம்.
இந்திய ஆட்சிப் பணி, இந்திய காவல் பணி (ஐ.பி.எஸ்), இந்திய வெளியுறவுப் பணி (ஐ.எப்.எஸ்), இந்திய வருவாய் பணி (ஐ.ஆர்.எஸ்) உள்ளிட்ட குடிமைப் பணி அதிகாரிகளைத் தேர்வு செய்வதற்கான தேர்வை மூன்று நிலைகளில் யுபிஎஸ்சி ஆண்டுதோறும் நடத்தி வருகிறது.
கடந்த ஆண்டு நடைபெற்ற யுபிஎஸ்சி தேர்வுக்கான முடிவுகள் சமீபத்தில் வெளியானது. இந்நிலையில், நடப்பு ஆண்டுக்கான யுபிஎஸ்சியின் முதல்நிலைத் தேர்வு வரும் 28ம் தேதி நாடு முழுவதும் நடைபெறுகிறது.
சுமார் 1,105 அதிகாரிகளைத் தேர்வு செய்ய யுபிஎஸ்சி திட்டமிட்டுள்ளது. இதற்கான அறிவிக்கை கடந்த பிப்ரவரி மாதம் வெளியிடப்பட்டது. இந்த தேர்வில் பங்குபெற லட்சக்கணக்கானவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.
இந்நிலையில், வரும் 28ம் தேதி யுபிஎஸ்சி முதல்நிலைத் தேர்வு நடைபெறும் அன்று தேர்வர்களின் நலன் கருதி பெங்களூருவில் மெட்ரோ ரெயில் சேவை நேரத்தில் மாற்றம் கொண்டுவரப்படுகிறது.
வழக்கமாக மெட்ரோ ரெயில் சேவை காலை 7 மணிக்கு தொடங்குவதற்கு பதிலாக காலை 6 மணிக்கே சேவை தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
திருத்தப்பட்ட நேரம் அனைத்து முனைய நிலையங்களிலும் செயல்படுத்தப்படும் என்றும் தேர்வர்கள் சுமூகமான மற்றும் சிரமமில்லாத பயணத்தை மேற்கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளதாகவும் மெட்ரோ ரெயில் நிறுவனம் அறிவித்துள்ளது.
இதேபோல், பெங்களூருவை தொடர்ந்து நொய்டாவிலும் மெட்ரோ ரெயில் சேவையின் நேரம் காலை 6 மணிக்கு மாற்றம் செய்து அறிவிக்கப்பட்டுள்ளது.
- சிவில் சர்வீஸ் முதல்நிலைத்தேர்வு வரும் மே 25ம் தேதி நடைபெறுகிறது.
- 979 பணியிடங்களை நிரப்ப இந்த தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
சிவில் சர்வீஸ் தேர்வுக்கான தேதிகளை யு.பி.எஸ்.சி. வெளியிட்டுள்ளது. சிவில் சர்வீஸ் முதல்நிலைத்தேர்வு வரும் மே 25ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தேர்வுக்கு இன்று முதல் வரும் பிப்ரவரி 11ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று யு.பி.எஸ்.சி. அறிவித்துள்ளது. .
ஐ ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எஃப்.எஸ், ஐ.ஆர்.எஸ் போன்ற பல பணிகளுக்கான 979 பணியிடங்களை நிரப்ப இந்த தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த முறை 1056 பணியிடங்களை நிரப்ப சிவில் சர்வீஸ் தேர்வு நடத்தப்பட்ட நிலையில், தற்போது நடத்தப்படவுள்ள தேர்வில் அதிலிருந்து 77 பணியிடங்கள் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சிவில் சர்வீஸ் முதல்நிலைத்தேர்வு நடைபெறும் அதே நாளில் இந்திய வன சேவைக்கான (Indian Forest Service) தேர்வும் நடைபெறும் என்று யு.பி.எஸ்.சி. அறிவித்துள்ளது. 150 பணியிடங்களுக்காக இந்த தேர்வு நடத்தப்படுகிறது.






