என் மலர்
நீங்கள் தேடியது "Metro services"
- நடப்பு ஆண்டுக்கான யுபிஎஸ்சியின் முதல்நிலைத் தேர்வு வரும் 28ம் தேதி நாடு முழுவதும் நடைபெறுகிறது.
- பெங்களூருவை தொடர்ந்து நொய்டாவிலும் மெட்ரோ ரெயில் சேவையின் நேரம் மாற்றம்.
இந்திய ஆட்சிப் பணி, இந்திய காவல் பணி (ஐ.பி.எஸ்), இந்திய வெளியுறவுப் பணி (ஐ.எப்.எஸ்), இந்திய வருவாய் பணி (ஐ.ஆர்.எஸ்) உள்ளிட்ட குடிமைப் பணி அதிகாரிகளைத் தேர்வு செய்வதற்கான தேர்வை மூன்று நிலைகளில் யுபிஎஸ்சி ஆண்டுதோறும் நடத்தி வருகிறது.
கடந்த ஆண்டு நடைபெற்ற யுபிஎஸ்சி தேர்வுக்கான முடிவுகள் சமீபத்தில் வெளியானது. இந்நிலையில், நடப்பு ஆண்டுக்கான யுபிஎஸ்சியின் முதல்நிலைத் தேர்வு வரும் 28ம் தேதி நாடு முழுவதும் நடைபெறுகிறது.
சுமார் 1,105 அதிகாரிகளைத் தேர்வு செய்ய யுபிஎஸ்சி திட்டமிட்டுள்ளது. இதற்கான அறிவிக்கை கடந்த பிப்ரவரி மாதம் வெளியிடப்பட்டது. இந்த தேர்வில் பங்குபெற லட்சக்கணக்கானவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.
இந்நிலையில், வரும் 28ம் தேதி யுபிஎஸ்சி முதல்நிலைத் தேர்வு நடைபெறும் அன்று தேர்வர்களின் நலன் கருதி பெங்களூருவில் மெட்ரோ ரெயில் சேவை நேரத்தில் மாற்றம் கொண்டுவரப்படுகிறது.
வழக்கமாக மெட்ரோ ரெயில் சேவை காலை 7 மணிக்கு தொடங்குவதற்கு பதிலாக காலை 6 மணிக்கே சேவை தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
திருத்தப்பட்ட நேரம் அனைத்து முனைய நிலையங்களிலும் செயல்படுத்தப்படும் என்றும் தேர்வர்கள் சுமூகமான மற்றும் சிரமமில்லாத பயணத்தை மேற்கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளதாகவும் மெட்ரோ ரெயில் நிறுவனம் அறிவித்துள்ளது.
இதேபோல், பெங்களூருவை தொடர்ந்து நொய்டாவிலும் மெட்ரோ ரெயில் சேவையின் நேரம் காலை 6 மணிக்கு மாற்றம் செய்து அறிவிக்கப்பட்டுள்ளது.






