என் மலர்tooltip icon

    இந்தியா

    பாதுகாப்புத்துறை முன்னாள் செயலாளர் அஜய்குமார் யுபிஎஸ்சி தலைவராக நியமனம்
    X

    பாதுகாப்புத்துறை முன்னாள் செயலாளர் அஜய்குமார் யுபிஎஸ்சி தலைவராக நியமனம்

    • ஏப்ரல் 29ம் தேதி யுபிஎஸ்சி தலைவர் பிரீத்தி சூடானின் பதவிக்காலம் முடிவுக்கு வந்தது.
    • அஜய்குமார் இந்த பொறுப்பில் 6 ஆண்டுகள் அல்லது 65 வயது அடையும்வரை நீடிப்பார்.

    யுபிஎஸ்சி தலைவராக, பாதுகாப்புத்துறை முன்னாள் செயலாளர் அஜய்குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அஜய்குமார் இந்த பொறுப்பில் 6 ஆண்டுகள் அல்லது 65 வயது அடையும்வரை நீடிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஏப்ரல் 29ம் தேதி யுபிஎஸ்சி தலைவர் பிரீத்தி சூடானின் பதவிக்காலம் முடிவுக்கு வந்தது. இதனையடுத்து மத்திய பணியாளர் தேர்வாணையத்தின் (UPSC) தலைவர் பதவி காலியாக இருந்தது. இந்நிலையில் அஜய் குமாரின் நியமனத்திற்கு குடியரசு தலைவர் திரவுபதி முர்மு அனுமதி அளித்துள்ளார்.

    1985ஆம் ஆண்டு கேரள பிரிவு ஐஏஎஸ் அதிகாரியான அஜய்குமார், 2019 முதல் 2022 வரை பாதுகாப்புத்துறைச் செயலாளராக பணியாற்றினார்

    Next Story
    ×