என் மலர்
நீங்கள் தேடியது "vacancies"
- திருப்பூா் மாநகர ஊா்க்காவல் படையில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு நவம்பா் 5 ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
- மண்டல துணைத் தலைவா் பதவிக்கான பணியிடத்துக்கு தகுதியான தன்னாா்வலா்கள் விண்ணப்பிக்கலாம்.
திருப்பூர் :
திருப்பூா் மாநகர ஊா்க்காவல் படையில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு தகுதியுடைய நபா்கள் நவம்பா் 5 ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என திருப்பூா் மாநகர காவல் ஆணையா் எஸ்.பிரபாகரன் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,திருப்பூா் மாநகர ஊா்க்காவல் படையில் காலியாக உள்ள மண்டல துணைத் தலைவா் பதவிக்கான பணியிடத்துக்கு தகுதியான தன்னாா்வலா்கள் விண்ணப்பிக்கலாம். பட்டப்படிப்பு முடித்தவராகவும் 18 வயது முதல் 50 வயதுக்கு உள்பட்ட ஆண், பெண் மற்றும் மூன்றாம் பாலினத்தவா் விண்ணப்பிக்கலாம். தமிழகத்தில் வசிப்பவராகவும் இருத்தல் வேண்டும். ஆகவே, மேற்கண்ட தகுதியுடைய மனுதாரா்கள் தங்களது விவரம் மற்றும் கல்வித் தகுதிகளுடன் கூடிய விண்ணப்பங்களை திருப்பூா் மாநகர காவல் ஆணையா் அலுவலகத்தில் நவம்பா் 5-ந்தேதிக்குள் சமா்ப்பிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளாா்.
- பெரும்பாலான இடங்களில் உதவியாளர் பணியிடமே நிரப்பப்படவில்லை.
- தற்காலிக பணியாளர்களை வைத்துதான் மின்வாரியம் இயங்கி வருகிறது.
திருப்பூர்:
வட கிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயாராகி வரும் நிலையில் மின் கம்பிகள் அறுந்து விழுவது,மின்கம்பம் சாய்வது, மின் கம்பிகள் மீது மரக்கிளை, மரங்கள் விழுவது போன்ற காரணங்களால் மின் சப்ளை தடைபடும். இத்தகைய பிரச்சினைகளை உடனுக்குடன் எதிர்கொண்டு தடையில்லா மின் சப்ளை வழங்க ஒவ்வொரு மின் பகிர்மான கழக வட்டத்திற்கும் செயற் பொறியாளர் தலைமையில் சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் மேற்பார்வையில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இது குறித்து திருப்பூர் மின்வாரிய அதிகாரிகள் கூறுகையில், குறிப்பிட்ட ஒரு பிரிவிற்கு உட்பட்ட இடத்தில் பாதிப்பு அதிகம் ஏற்பட்டு கூடுதல் பணியாளர்களின் உழைப்பு தேவைப்படும் போது, அருகேயுள்ள பிரிவில் இருந்து ஊழியர்கள் வரவழைக்கப்பட்டு பணி மேற்கொள்ளப்படும் என்றனர்.
திருப்பூர் தனி மாவட்டமாக இருந்தாலும் கோவை மண்டல மின் வாரிய கட்டுப்பாட்டில் தான் உள்ளது. கோவை மண்டலத்திற்கு உட்பட்ட கோவை, திருப்பூர், உடுமலை, பல்லடம், நீலகிரி மாவட்டத்தில் மின்வாரியத்தால் ஒரு பிரிவிற்கு 14 கம்பியாளர், 14 உதவியாளர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆனால், ஒவ்வொரு பிரிவிலும் அதிகபட்சம் 2 பேர் மட்டுமே பணியில் உள்ளனர். அதிலும் பெரும்பாலான இடங்களில் உதவியாளர் பணியிடமே நிரப்பப்படவில்லை.
ஒட்டு மொத்த கோவை மண்டலத்தில் மின்வாரியம் அனுமதித்துள்ள கம்பியாளர், உதவியாளர்கள் எண்ணிக்கை 5,921 பேர். ஆனால் பணியில் இருப்பவர்கள் வெறும் 482 பேர் மட்டுமே. 92 சதவீதம் காலி பணியிடம் நிரப்பப்படாமல் உள்ளது என்ற புள்ளி விபரத்தை மின்வாரிய தொழிற்சங்கத்தினர் வெளியிட்டு பணியாளர் பற்றாக்குறையால் ஊழியர்கள் படும் சிரமத்தை விளக்கும் வீடியோவை சமீபத்தில் சமூக வலைதளங்களில் வைரலாக்கினர். தற்காலிக பணியாளர்களை வைத்துதான் மின்வாரியம் இயங்கி வருகிறது.
இது குறித்து மின்வாரிய தொழிற்சங்கத்தினர் கூறுகையில், கோவை, திருப்பூர் உள்ளிட்ட இடங்களில் மின் ஊழியர் பற்றாக்குறையால் ஏற்பட்டுள்ள பணிச்சுமையால், பணிபுரியும் ஊழியர்களுக்கு மன உளைச்சல அதிகரித்துள்ளது. காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம் என்றார்.
- சென்ட் ஒன்றுக்கு ரூ. 5000 வீதம் முன்பணம் செலுத்தி தங்களது பெயரை முன்பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
- வணிக உபயோகத்திற்கு வெறும் காலி நிலமாக சென்ட் ஒன்றுக்கு ரூ.10 ஆயிரம் வீதம் முன்பணம் செலுத்தி தங்களது பெயரை முன் பதிவு செய்து கொள்ளலாம்
உடுமலை:
உடுமலை நகராட்சி ஆணையாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
உடுமலை நகராட்சிக்கு சொந்தமான தாராபுரம் ரோட்டில் அமைந்துள்ள பழைய குப்பை கிடங்கு உடுமலை கிராம 4 வது எண் 68.69/1 ல் உள்ள 4. 81 ஏக்கர் நிலத்தில் குடியிருப்பு அல்லாத வணிக நோக்கத்திற்காக மட்டும் காலி நிலமாக 21/2 சென்ட் 5 சென்ட் 10, 15 சென்ட் மற்றும் அதற்கு மேல் தேவைப்படும் பரப்பளவுக்கு ஏற்ப சென்ட் ஒன்றுக்கு ரூ. 5000 வீதம் முன்பணம் செலுத்தி தங்களது பெயரை முன்பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. அதேபோல் தாராபுரம் சாலை உள்ள நகராட்சி துவக்க பள்ளிக்கு அருகில் உள்ள காலியிடத்தை முழுவதுமாக வணிக உபயோகத்திற்கு வெறும் காலி நிலமாக சென்ட் ஒன்றுக்கு ரூ.10 ஆயிரம் வீதம் முன்பணம் செலுத்தி தங்களது பெயரை முன் பதிவு செய்து கொள்ளலாம்.முன்பணம் செலுத்துபவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப முன்னுரிமை அடிப்படையில் இடம் ஒதுக்கீடு செய்யப்படும். மேலும் தற்போது செலுத்தப்படும் பணம் முன்பணம் மட்டுமே. வடிவமைப்பிற்கு பிறகு சதுர அடிக்காக நிலவாடகை உரிய விதிகளின்படியும் அரசாணை படியும் தொகை செலுத்திய பிறகு இடம் ஒதுக்கீடு செய்யப்படும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
நகராட்சி ஆணையாளர் வெளியிட்டுள்ள மற்றொரு அறிவிப்பில், உடுமலை நகராட்சிக்கு சொந்தமான பழனி சாலையில் புதிதாக கட்டப்பட்டு வரும் பேருந்து நிலைய கடையில் மற்றும் ராஜேந்திரா சாலையில் உள்ள வாரச்சந்தை வளாகத்தில் கட்டப்பட்டு வரும் கடைகளுக்கு முன் ஏலம் நடைபெற உள்ளது .இதற்கும் விருப்பம் உள்ளவர்கள் வைப்புத்தொகை செலுத்தி ஏலத்தில் கலந்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.
- இந்திய குடிமைப் பணிகளில் 1472 காலிப்பணியிடங்கள் உள்ளதாக மத்திய இணை மந்திரி தெரிவித்தார்.
- மத்திய அரசு காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவது தொடர் நடவடிக்கை எடுத்து வருகிறது.
புதுடெல்லி:
மத்திய அரசுப் பணிகளில் 9.79 லட்சம் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது. மக்களவையில் காலிப்பணியிடங்கள் தொடர்பான கேள்விக்கு மத்திய பணியாளர் துறை இணை மந்திரி ஜித்தேந்திர சிங் எழுத்துப்பூர்வமாக இந்த பதிலை அளித்துள்ளார்.
மத்திய இணை மந்திரி ஜித்தேந்திர சிங் தனது பதிலில் மேலும் கூறுகையில், '2021 மார்ச் செலவினத் துறையின் ஊதிய ஆய்வு அறிக்கையின்படி மத்திய அரசுக்கு கீழ் உள்ள பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் துறைகளில் 9 லட்சத்து 79 ஆயிரத்து 327 பணியிடங்கள் காலியாக உள்ளன. மத்திய அரசு காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவது தொடர் நடவடிக்கை எடுத்து வருகிறது. அனைத்து துறைகளிலும் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மற்றொரு கேள்விக்கு பதிலளித்த்த ஜிதேந்திர சிங், இந்திய குடிமைப் பணிகளில் 1472 காலிப்பணியிடங்கள் உள்ளது என தெரிவித்தார்.
- அனைத்து துறை பணியாளர் சங்க பொதுக்குழுவில் தீர்மானம்
- ஏராளமாேனார் கலந்து கொண்டனர்
வேலூர்:
வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு அரசு அனைத்து துறை பணியாளர் சங்கம் சார்பில் மாநில பொதுக்குழு கூட்டம் இன்று நடந்தது.
கூட்டத்திற்கு மாநில கவுரவ தலைவர் ராஜவேலு தலைமை தாங்கினார். மாநில பொதுச் செயலாளர் தொல்காப்பியன் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் பாலாஜி சிங் வரவேற்பு நிகழ்த்தினார். கூட்டத்தில் மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தமிழ்நாடு அரசு பணியாளர்களுக்கு முன்பு போலவே வருங்கால வைப்பு நிதி பிரித்தம் செய்ய வேண்டும் பழைய ஓய்வு திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.
தமிழக அரசு தோட்டக்கலை பண்ணைகளில் பணி நிரந்தரம் செய்யப்பட்ட பணியாளர்களுக்கு ஓய்வூதியம் பணிக்கொடை பதவி உயர்வு குடும்ப நலநிதி வழங்க வேண்டும் தமிழக அரசியல் காலியாக உள்ள 3 லட்சம் பணியிடங்களை நிரப்ப வேண்டும்.
பேரூராட்சி தினக்கூலி பணியாளர்களின் அரசு தோட்டக்கலை பணியில் பணிபுரியும் கூலி பணியாளர்களையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் மாநில பொருளாளர் ஜோதி ராமலிங்கம், தலைமை நிலைய செயலாளர் விஜயகுமார், துணைத் தலைவர் மாயன், மாநில இணை செயலாளர் ஸ்ரீதர், மாவட்ட தலைவர் ரமேஷ் உட்பட ஏராளமாேனார் கலந்து கொண்டனர்.
- தமிழகம் முழுவதும் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் ஏராளமான கோவில்கள் உள்ளது.
- கோவில்களுக்கு நிலம், கடைகள் உள்ளிட்ட பல்வேறு சொத்துக்கள் உள்ளன.
பல்லடம் :
இந்து அறநிலையத்துறையில் காலி பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் பூசாரிகள் சங்கம் வலியுறுத்தி உள்ளது. இது குறித்து பூசாரிகள் நலச் சங்கத்தின் மாநில தலைவர் வாசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழகம் முழுவதும் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் ஏராளமான கோவில்கள் உள்ளது. இந்த கோவில்களுக்கு நிலம், கடைகள் உள்ளிட்ட பல்வேறு சொத்துக்கள் உள்ளன. இவற்றை நிர்வகிக்கும் இந்து அறநிலையத்துறையில், அலுவலர் மற்றும் ஊழியர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன. இதனால் ஒரு அலுவலரே பல்வேறு பணிகளை மேற்கொள்ள வேண்டிய நிலை உள்ளது. இதனால் ஊழியர்கள் கூடுதல் பணிச்சுமையால் அவதிப்படுகின்றனர்.
மேலும் கோவில்களில் ஒரு கால பூஜை திட்டம், ஓய்வூதிய திட்டம், வைப்பு நிதி திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டப் பணிகளை உரிய காலத்தில் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இது போன்ற திட்டப் பணிகள் தேங்குவதால் பூசாரிகள், ஓய்வூதியர்கள் உள்ளிட்ட பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே தமிழக அரசு நடவடிக்கை எடுத்து இந்து அறநிலையத்துறையில் உள்ள காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
- பணிபுரிய விருப்பமுள்ள தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
- அரசு ஆஸ்பத்திரி வளாகம், தாம்பரம் (இருப்பு) குரோம்பேட்டையில் வருகிற 27-ந்தேதி (திங்கட்கிழமை) மாலை 5.30க்குள் விண்ணப்பிக்கவும்.
செங்கல்பட்டு:
செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
செங்கல்பட்டு மாவட்ட இணை இயக்குநர் நலப்பணிகள் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் அரசு ஆஸ்பத்திரிகளில் காலியாக உள்ள 5 சமையலர் மற்றும் சலவையாளர் போன்ற பணியிடங்களில் பணிபுரிய விருப்பமுள்ள தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விண்ணப்பங்கள் அரசு ஆஸ்பத்திரி வளாகம், தாம்பரம் (இருப்பு) குரோம்பேட்டையில் வருகிற 27-ந்தேதி (திங்கட்கிழமை) மாலை 5.30 மணிக்குள் தங்களது புகைப்படத்துடன் கூடிய விண்ணப்பம் மற்றும் தகுதி சான்று நகல்களுடன் விண்ணப்பிக்கவும்.
இதுபோல செங்கல்பட்டு மாவட்ட இணை இயக்குநர் நலப்பணிகள் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டுவரும் மாமல்லபுரம், திருப்போரூர் அரசு ஆஸ்பத்திரிகள் மற்றும ஈஞ்சம்பாக்கம் அரசு புறநகர் ஆஸ்பத்திரியில் 3 பல் மருத்துவ உதவியாளர் தற்காலிக பணியிடங்களில் பணிபுரிவதற்கு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வருகிற 15-ந்தேதி மாலை 5.45 மணிக்குள் விணணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- அரசு நகர்புற மருத்துவ நிலையங்களில் தற்காலிகமாக டாக்டர்கள், சுகாதார ஆய்வாளர் நிலை-2 மற்றும் உதவியாளர்கள் பதவிகள் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது.
- இதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது.
சேலம்:
சேலம் மாவட்டத்தில் உள்ள அரசு நகர்புற மருத்துவ நிலையங்களில் தற்காலிகமாக டாக்டர்கள், சுகாதார ஆய்வாளர் நிலை-2 மற்றும் உதவியாளர்கள் பதவிகள் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. இதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இதில் மொத்தம் 84 பதவிகள் நிரப்பப்படுகிறது.
இதில் டாக்டர்கள்- 28, பல்நோக்கு சுகாதார பணியா ளர்கள்- 28, உதவியாளர்கள்-28 பதவிடங்கள் வழங்கப்பட்டு இருக்கிறது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் நாளை மறுநாள் (10-ந்தேதி) அன்று மாலை 5.45 மணிக்குள் வரவேற்கப்படுகின்றன.
டாக்டர்கள் பதவிக்கு கல்வித்தகுதி எம்.பி.பி.எஸ், அல்லது அதற்கு மேற்பட்ட மருத்துவ படிப்பு படித்திருக்க வேண்டும். பல்நோக்கு சுகாதார பணியாளர் பதவிக்கு பல்நோக்கு சுகாதார பணியாளர் பயிற்சி பட்டம் பெற்று இருக்க வேண்டும். உதவியாளர்கள் பதவிக்கு 8-ம் வகுப்பு சான்றிதழ் பெற்று இருக்க வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் படிவங்கள் நிர்வாக செயலாளர், மாவட்ட நலவாழ்வு சங்கம், துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள் அலுவலகம் பழைய நாட்டாண்மை கழக கட்டட வளாகம்சே லம் மாவட்டம்-636001 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
- காலிபணியிடங்களுக்கு பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் கூறினார்.
- மேற்கண்ட தகவலை மதுரை மாவட்ட கலெக்டர் அனீஷ்சேகர் தெரி வித்துள்ளார்.
மதுரை
மத்திய பணியாளர்கள் தேர்வாணையத்தால் நடத்தப்பட உள்ள ஒருங்கிணைந்த பட்டதாரி நிலையிலான தேர்வு-2023 -ல் தமிழ்நாட்டில் உள்ள போட்டித் தேர்வர்கள் கலந்து கொள்ளலாம்.
மத்திய பணியாளர்கள் தேர்வாணையம் (Staff Selection Commission, Government of India) "ஒருங்கிணைந்த பட்டதாரி நிலையிலானத் தேர்வு - 2023 (Combined Graduate Level Examination, 2023)" தொடர்பான அறிவிப்பை 3.4.2023-அன்று வெளியிட்டுள்ளது.
மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள் / துறைகள் / நிறுவனங்கள் மற்றும் பல்வேறு அரசியலமைப்பு சார்ந்த அமைப்புகள் / சட்டப்பூர்வ அமைப்புகள்/ தீர்ப்பாயங்கள் போன்றவற்றில் உள்ள குரூப் "B" மற்றும் குரூப் "C" நிலையில், 7,500-க்கும் மேற்பட்ட பணிக்காலியிடங்களை அறிவித்துள்ளது. இந்த தேர்வில் நாட்டில் உள்ள தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.
பணியிடங்களின் விவரம், வயது வரம்பு, தேவையான கல்வித் தகுதி, செலுத்த வேண்டிய கட்டணம், தேர்வுத் திட்டம், விண்ணப்பிக்கும் முறை போன்ற விவரங்கள் ஆள்சேர்ப்பு அறிவிப்பில் (Recruitment Notice) விரிவாக வழங்கப்பட்டுள்ளது. மேலும், இந்த விவரங்கள் https://ssc.nic.in/SSCFileServer/ PortalManagement/UploadedFiles/noticeCG LE03042023.pdf என்ற இணையதள முகவரி யிலும் உள்ளது.
இந்த காலிபணியிடங்களுக்கு www.ssc.nic.in என்ற பணியாளர் தேர்வாணையத்தின் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும். கணினி அடிப்ப டையிலான இந்த தேர்வுகளுக்கு உரிய கட்டணத்துடன் இணைய வழியாக விண்ணப்பிக்க கடைசி நாள் 3.5.2023 மற்றும் ஆன்லைனில் கட்டணம் செலுத்துவதற்கான கடைசி நாள் 4.5.2023 ஆகும்.
தென் மண்டலத்தில், கணினி அடிப்படையிலான தேர்வு, ஜூலை 2023-ல் ஆந்திரப்பிரதேச மாநிலத்தில் 10 மையங்களிலும், புதுச்சேரியில் 1 மையத்திலும், தமிழ்நாட்டில் 7 மையங்க ளிலும். தெலுங்கானா மாநிலத்தில் 3 மையங்களிலும் ஆக மொத்தம் 21 மையங்கள், நகரங்களில் நடைபெற உள்ளது.
தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்களில் செயல்படும் தன்னார்வ பயிலும் வட்டங்களில் பணியாளர் தேர்வாணைய போட்டித் தேர்வுகளுக்கான (Staff Selection Commission Exam - CGL) கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் நேரடியாக நடத்தப்படவுள்ளன. இந்த தேர்விற்கான பாடத்திட்டங்கள் மற்றும் பாடக்குறிப்புகள் தமிழ்நாடு அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் மெய்நிகர் கற்றல் இணையதளத்தில் (https://tamilnaducareerservices.tn.gov.in/) பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
மேலும் இந்த இணைய தளத்தில் " TN Career Services Employment" மற்றும் அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரியின் "AIM TN" என்ற YouTube Channel-களில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள இந்த தேர்விற்கான காணொளிகளை கண்டு பயன்பெறலாம்.
இந்த தேர்விற்கு விண்ணப்பித்த மற்றும் விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் உரிய மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தினைத் தொடர்பு கொண்டு இப்பயிற்சி வகுப்புகளில் கலந்துகொண்டு பயனடையலாம்.
மேற்கண்ட தகவலை மதுரை மாவட்ட கலெக்டர் அனீஷ்சேகர் தெரி வித்துள்ளார்.
- அரசு மருத்துவமனைகளில் காலியாகவுள்ள காலி பணியிடங்கள் மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் (எம்ஆர்பி) மூலம் நிரப்பப்பட்டு வருகின்றன.
- 1,021 உதவி மருத்துவர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை எம்.ஆர்.பி. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 11-ந் தேதி வெளியிட்டது.
சேலம்:
தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் காலியாகவுள்ள 1,021 மருத்துவர் பணியிடங்க ளைத் நிரப்புவதற்கான தேர்வு நாளை நடைபெறுகிறது.
தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் காலியாகவுள்ள காலி பணியிடங்கள் மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் (எம்ஆர்பி) மூலம் நிரப்பப்பட்டு வருகின்றன. அதன்படி 1,021 உதவி மருத்துவர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை எம்.ஆர்.பி. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 11-ந் தேதி வெளியிட்டது.
அதற்கு www.mrb.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கும் நடைமுறை தொடங்கி கடந்த அக்டோபர் மாதம் 25-ந் தேதியுடன் நிறை வடைந்தது. எம்.பி.பி.எஸ். நிறைவு செய்த 25 ஆயிரம் டாக்டர்கள் தேர்வுக்கு விண்ணப்பித்தனர்.
இந்த தேர்வை கணினி வழியே கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடத்த திட்டமிடப்பட்டிருந்த நிலையில், நிர்வாகக் காரணங்களால் நடத்த முடியாத நிலை ஏற்பட்டது.
இந்த நிலையில், 1,021 உதவி மருத்துவர் பணியி டங்களை நிரப்புவதற்கான தேர்வு தமிழகம் முழுவதும் நாளை (25-ந் தேதி) நடை பெறவுள்ளதாக மருத்துவப் பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.
- வரவேற்பாளா் மற்றும் தட்டச்சா், அலுவலக பணியாளா் பணியிடங்கள் காலியாகவுள்ளன.
- தொகுப்பூதியம் அடிப்படையில் நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன.
திருப்பூர் :
திருப்பூா் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுவில் காலியாகவுள்ள பல்வேறு பணியிடங்களுக்கு தகுதியான நபா்கள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட முதன்மை நீதிபதி (பொறுப்பு) பாலு தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:- திருப்பூா் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவில் லீக் எய்ட் டிபென்ஸ் கவுன்சில் சிஸ்டம் பிரிவில் அலுவலக உதவியாளா் 3 போ், தலா ஒரு வரவேற்பாளா் மற்றும் தட்டச்சா், அலுவலக பணியாளா் பணியிடங்கள் காலியாகவுள்ளன. இப்பணியிடங்களை தொகுப்பூதியம் அடிப்படையில் நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. இதற்கு தகுதியான நபா்கள் விண்ணப்பிக்கலாம்.மேற்கண்ட பணியிடங்களுக்கான தகுதி, தோ்வுமுறை, விண்ணப்பம், விண்ணப்பிப்பதற்கான கால அவசகாம் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் திருப்பூா் மாவட்ட நீதிமன்ற இணையதளத்தை பாா்வையிட்டு தெரிந்துகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- அரசு துறைகளில் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
- கூட்டத்தில் மாநில, மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
மதுரை
தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர் மற்றும் அடிப்படை பணியாளர்கள் மாநில சங்கத்தின் ஆலோசனை கூட்டம் மற்றும் தமிழ்நாடு அனைத்து துறை 4-ம் பிரிவு ஓய்வூதியர்கள் சங்க மாநில செயற்குழு கூட்டம் மதுரையில் நடைபெற்றது.
கூட்டத்தில் ஓய்வு பெற்ற பணியாளர் களுக்கென தனி கேண்டீன் ஒதுக்க வேண்டும், ஓய்வூதியர் நிதியை ரூ. 2 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும், அனைத்து துறைகளிலும் அலுவலக உதவியாளர் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் தினக்கூலி அடிப்படையில் பணிபுரியும் பணியாளர் களின் தினக்கூலியை உயர்த்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில் மாநில, மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.






