என் மலர்
நீங்கள் தேடியது "City Police Force"
- திருப்பூா் மாநகர ஊா்க்காவல் படையில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு நவம்பா் 5 ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
- மண்டல துணைத் தலைவா் பதவிக்கான பணியிடத்துக்கு தகுதியான தன்னாா்வலா்கள் விண்ணப்பிக்கலாம்.
திருப்பூர் :
திருப்பூா் மாநகர ஊா்க்காவல் படையில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு தகுதியுடைய நபா்கள் நவம்பா் 5 ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என திருப்பூா் மாநகர காவல் ஆணையா் எஸ்.பிரபாகரன் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,திருப்பூா் மாநகர ஊா்க்காவல் படையில் காலியாக உள்ள மண்டல துணைத் தலைவா் பதவிக்கான பணியிடத்துக்கு தகுதியான தன்னாா்வலா்கள் விண்ணப்பிக்கலாம். பட்டப்படிப்பு முடித்தவராகவும் 18 வயது முதல் 50 வயதுக்கு உள்பட்ட ஆண், பெண் மற்றும் மூன்றாம் பாலினத்தவா் விண்ணப்பிக்கலாம். தமிழகத்தில் வசிப்பவராகவும் இருத்தல் வேண்டும். ஆகவே, மேற்கண்ட தகுதியுடைய மனுதாரா்கள் தங்களது விவரம் மற்றும் கல்வித் தகுதிகளுடன் கூடிய விண்ணப்பங்களை திருப்பூா் மாநகர காவல் ஆணையா் அலுவலகத்தில் நவம்பா் 5-ந்தேதிக்குள் சமா்ப்பிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளாா்.






