search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Udumalai Municipality"

    • இரவு நேரங்களில் செல்லும் வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி வருகின்றனர்.
    • சேதம் அடைந்த தரைமட்ட பாலத்தை சீரமைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    உடுமலை:

    உடுமலை நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் இணைப்பு சாலை சந்திப்பில் தரைமட்ட பாலங்கள் கட்டப்பட்டு உள்ளது. அந்த பாலங்கள் ஆங்காங்கே சேதம் அடைந்தும் வருகின்றது. அவற்றை புதுப்பிக்கும் பணிகள் ஒருபுறம் நடைபெற்று வந்தாலும், ஒரு சில சேதமடைந்த பாலங்கள் மாதக்கணக்கில் சீரமைக்கப்படாமல் உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் பொதுமக்கள் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள். அந்த வகையில் நகராட்சி பூங்காவுக்கு அருகே உள்ள ராஜேந்திர ரோடு சந்திப்பில் தரைமட்ட பாலம் சேதம் அடைந்தது. அதை சீரமைப்பதற்கு நிர்வாகத்தின் சார்பில் நடவடிக்கை எடுக்கவில்லை. மாறாக சேதம் அடைந்த பகுதியை தடுப்பு வைத்து மறைத்து உள்ளனர்.இதனால் இரவு நேரங்களில் செல்லும் வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி வருகின்றனர். இது குறித்து அதிகாரிகளும் கண்டு கொள்ளவில்லை இதனால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. எனவே ராஜேந்திரா ரோடு சந்திப்பில் சேதம் அடைந்த தரைமட்ட பாலத்தை சீரமைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • கழிவுநீர் அகற்றும் வாகனங்கள் குறித்து உடுமலை நகராட்சியில் பதிவு செய்து உரிமம் பெற்றுக்கொள்ள வேண்டும்.
    • உரிமம் பெறாத வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

    உடுமலை:

    கழிவுநீர் அகற்றும் வாகனங்கள் குறித்து நகராட்சியில் பதிவு செய்து உரிமம் பெற்றுக்கொள்ள வேண்டும் என உடுமலை நகராட்சி அறிவித்துள்ளது.

    இது குறித்து உடுமலை நகராட்சி கமிஷனர் சத்தியநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:- உடுமலை நகராட்சியில் மனிதக்கழிவுகள் கழிவு நீர் அகற்றும் வாகன உரிமையாளர்களுக்கு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளால் இரண்டு ஆண்டுகள் செல்லும் வகையில் விண்ணப்பித்த 15 நாட்களுக்குள் உரிமம் வழங்கப்படுகிறது.

    எனவே கழிவுநீர் அகற்றும் வாகனங்கள் குறித்து உடுமலை நகராட்சியில் பதிவு செய்து உரிமம் பெற்றுக்கொள்ள வேண்டும். வாகனங்களில் சேகரிக்கப்படும் கழிவுநீரை பொது இடங்களில் கொட்ட கூடாது. நகராட்சி பாதாள சாக்கடை சுத்திகரிப்பு நிலையத்திற்கு கொண்டு வர வேண்டும் .உரிமம் பெறாத வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

    • சென்ட் ஒன்றுக்கு ரூ. 5000 வீதம் முன்பணம் செலுத்தி தங்களது பெயரை முன்பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
    • வணிக உபயோகத்திற்கு வெறும் காலி நிலமாக சென்ட் ஒன்றுக்கு ரூ.10 ஆயிரம் வீதம் முன்பணம் செலுத்தி தங்களது பெயரை முன் பதிவு செய்து கொள்ளலாம்

    உடுமலை:

    உடுமலை நகராட்சி ஆணையாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    உடுமலை நகராட்சிக்கு சொந்தமான தாராபுரம் ரோட்டில் அமைந்துள்ள பழைய குப்பை கிடங்கு உடுமலை கிராம 4 வது எண் 68.69/1 ல் உள்ள 4. 81 ஏக்கர் நிலத்தில் குடியிருப்பு அல்லாத வணிக நோக்கத்திற்காக மட்டும் காலி நிலமாக 21/2 சென்ட் 5 சென்ட் 10, 15 சென்ட் மற்றும் அதற்கு மேல் தேவைப்படும் பரப்பளவுக்கு ஏற்ப சென்ட் ஒன்றுக்கு ரூ. 5000 வீதம் முன்பணம் செலுத்தி தங்களது பெயரை முன்பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. அதேபோல் தாராபுரம் சாலை உள்ள நகராட்சி துவக்க பள்ளிக்கு அருகில் உள்ள காலியிடத்தை முழுவதுமாக வணிக உபயோகத்திற்கு வெறும் காலி நிலமாக சென்ட் ஒன்றுக்கு ரூ.10 ஆயிரம் வீதம் முன்பணம் செலுத்தி தங்களது பெயரை முன் பதிவு செய்து கொள்ளலாம்.முன்பணம் செலுத்துபவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப முன்னுரிமை அடிப்படையில் இடம் ஒதுக்கீடு செய்யப்படும். மேலும் தற்போது செலுத்தப்படும் பணம் முன்பணம் மட்டுமே. வடிவமைப்பிற்கு பிறகு சதுர அடிக்காக நிலவாடகை உரிய விதிகளின்படியும் அரசாணை படியும் தொகை செலுத்திய பிறகு இடம் ஒதுக்கீடு செய்யப்படும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

    நகராட்சி ஆணையாளர் வெளியிட்டுள்ள மற்றொரு அறிவிப்பில், உடுமலை நகராட்சிக்கு சொந்தமான பழனி சாலையில் புதிதாக கட்டப்பட்டு வரும் பேருந்து நிலைய கடையில் மற்றும் ராஜேந்திரா சாலையில் உள்ள வாரச்சந்தை வளாகத்தில் கட்டப்பட்டு வரும் கடைகளுக்கு முன் ஏலம் நடைபெற உள்ளது .இதற்கும் விருப்பம் உள்ளவர்கள் வைப்புத்தொகை செலுத்தி ஏலத்தில் கலந்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.

    ×