search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Register"

    • பத்தாம் வகுப்பு தனித்தேர்வர்கள் அறிவியல் செய்முறை தேர்வுக்கு பதிவு செய்ய, ஆக., 10 முதல், 21 வரை வாய்ப்பு வழங்கப்பட்டு இருந்தது.
    • வருகிற, 10-ந்தேதிக்குள் (நாளை) திருப்பூர் மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகத்தில் நேரில் சென்று பதிவு கட்டணம், 125 ரூபாய் செலுத்தி, பதிவு செய்து கொள்ள வேண்டும்.

    உடுமலை:

    பத்தாம் வகுப்பு தனித்தேர்வர்கள் அறிவியல் செய்முறை தேர்வுக்கு பதிவு செய்ய, ஆக., 10 முதல், 21 வரை வாய்ப்பு வழங்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் மேலும் கூடுதல் வாய்ப்பு வழங்கும் வகையில் கடந்த 6-ந்தேதி முதல் வரும் 10-ந்தேதி வரை மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, விண்ணப்ப படிவம் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வு எழுதுவோர் தங்கள் விபரங்களை பூர்த்தி செய்து, இரண்டு நகல்கள் எடுத்து, வருகிற, 10-ந்தேதிக்குள் (நாளை) திருப்பூர் மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகத்தில் நேரில் சென்று பதிவு கட்டணம், 125 ரூபாய் செலுத்தி, பதிவு செய்து கொள்ள வேண்டும். பதிவுச்சீட்டு சமர்ப்பித்து, முன்னதாகவே 'ஹால் டிக்கெட்' பெற்று வருவோர் மட்டுமே, செய்முறைத் தேர்வுக்கு அனுமதிக்கப்படுவர் என, தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை பதிவு செய்யாத வர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளலாம்.

    • மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத்திட்டம் சிறப்பாக செயல்படுத்தும் பொருட்டு விண்ணப்பபதிவு முகாம்கள் இரண்டு கட்டமாக நடத்தப்படுகிறது.
    • டோக்கன்களையும் அந்தந்த பகுதியை சார்ந்த நியாய விலைக்கடை விற்பனையாளர்கள் ஒவ்வொரு வீடுகளுக்கும் நேரடியாக சென்று வழங்கினர்.

     காங்கயம்:

    தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் திருப்பூர் மாவட்டம் காங்கேயம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் இரண்டாம் கட்டமாக நடைபெற்று வரும் கலைஞர் மகளிர் உரிமைத்திட்ட விண்ணப்பம் பதிவு மையத்தினை ஆய்வு செய்தார். பின்னர் அமைச்சர் தெரிவித்ததாவது:-

    தமிழ்நாடு முதலமைச்சர் ஆணைக்கிணங்க திருப்பூர் மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத்திட்டம் சிறப்பாக செயல்படுத்தும் பொருட்டு விண்ணப்பபதிவு முகாம்கள் இரண்டு கட்டமாக நடத்தப்படுகிறது. முதல் கட்டமாக 24.7.2023 முதல் 4.8.2023 வரை திருப்பூர் மாநகராட்சி மண்டலம்-1 மற்றும் மண்டலம்-2 ஆகிய பகுதிகளுக்குட்பட்ட 30 வார்டுகளிலும், திருப்பூர் மாவட்டத்திலுள்ள 13 ஊராட்சி ஒன்றியங்களில் 265 ஊராட்சிகளில் முதற்கட்டமாக விண்ணப்ப பதிவு முகாம்கள் நடைபெற்று சுமார் 3,88,687 விண்ணப்பங்கள் பெறப்பட்டது.

    அந்த வகையில் இரண்டாம் கட்டமாக விண்ணப்ப பதிவு முகாம்கள் தொடங்கப்பட்டு 31,509 விண்ணப்பங்கள் பெறப்பட்டு திருப்பூர் மாவட்டத்தில் 24.7.2023 முதல் 5.8.2023 வரை 4,20,196 கலைஞர் மகளிர் உரிமைத்திட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது.

    அதனைத்தொடர்ந்து இன்று 6.8.2023 முதல் 16.8.2023 வரை திருப்பூர் மாநகராட்சி மண்டலம்-3 மற்றும் மண்டலம்-4 ஆகிய பகுதிகளுக்குட்பட்ட 30வார்டுகளிலும், 6 நகராட்சி பகுதிகளிலுள்ள 147 வார்டுகளிலும் மற்றும் 15 பேரூராட்சிகளுக்குட்பட்ட 233 வார்டுகளிலும் இரண்டாம் கட்டமாக விண்ணப்ப பதிவு முகாம்கள் நடைபெறும். இந்த விண்ணப்பபதிவு முகாம்கள் பொது மக்களின் வசதிக்கேற்ப அந்தந்த பகுதியில் உள்ள நியாய விலைக்கடை அருகில் உள்ள அரசுஅலுவலக கட்டடங்கள், சமுதாய நலக்கூடங்கள் மற்றும் பள்ளிகளில் விண்ணப்பபதிவு முகாம்கள் நடைபெறும். இரண்டாம் கட்டமாக நடைபெறும் முகாம்களுக்கு 1.8.2023 முதல் 4. 8.2023 வரை ஆகிய நான்கு நாட்கள் விண்ணப்பப்படிவம் மற்றும் டோக்கன்களையும் அந்தந்த பகுதியை சார்ந்த நியாய விலைக்கடை விற்பனையாளர்கள் ஒவ்வொரு வீடுகளுக்கும் நேரடியாக சென்று வழங்கினர்.

    இந்த டோக்கன்களில் டோக்கன் நம்பர், நாள் மற்றும் நேரம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் எந்த மையத்திற்கு வர வேண்டும் எந்த நாளில் வரவேண்டும் என்று டோக்கன்களில் எழுதப்பட்டு வழங்கப்படும். குறிப்பிடப்பட்ட அந்த மையத்திற்கு அந்த நாள் அந்த நேரத்திற்கு வந்தால் போதுமானது. இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

    காங்கேயம் நகராட்சிக்குட்பட்ட பழனியப்பா திருமண மண்டபம், ராஜாஜி வீதி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, பகுதிகளில் நடைபெற்ற கலைஞர் உரிமைத்திட்டம் விண்ணப்பம் பதிவு மையத்தினை அமைச்சர் ஆய்வு செய்தார்.

    இந்நிகழ்ச்சியில் திருப்பூர் மாநகராட்சி 4-ம் மண்டலத்தலைவர் இல.பத்மநாபன், காங்கேயம் வட்டாட்சியர் புவனேஸ்வரி மற்றும் தொடர்புடைய அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • பிரதம மந்திரி கிசான் சம்மன் யோஜனா மூலம் ரூ.2 ஆயிரம் நிதி மத்திய அரசு வழிகாட்டுதலின் படி ஆதார் எண் பதிவு செய்த விவசாயிகளுக்கு மட்டுமே வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
    • தற்பொழுது மத்திய அரசு 14-வது தவணைத் விடுவிப்பதில் சில புதிய வழிமுறைகளை விதித்துள் ளது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பர மத்திவேலூர் தாலுகா, பர மத்தி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் கோவிந்த சாமி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்ப தாவது:-

    பிரதம மந்திரி கிசான் சம்மன் யோஜனா மூலம் ரூ.2 ஆயிரம் நிதி மத்திய அரசு வழிகாட்டுதலின் படி ஆதார் எண் பதிவு செய்த விவசாயிகளுக்கு மட்டுமே வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

    தற்பொழுது மத்திய அரசு 14-வது தவணைத் விடுவிப்பதில் சில புதிய வழிமுறைகளை விதித்துள் ளது. அதன்படி ஜூலை மாதம் முதல் விடு விக்கப்படும் அனைத்து தவணைத் தொகைகளும் பயனாளி களின் ஆதார் எண் அடிப்ப டையில் மட்டுமே விடுவிக்கப்படும் என தெரிவித்துள்ளது.

    எனவே அனைத்து பிரதம மந்திரி கிசான் திட்ட பயனாளிகளுக்கும் வேலூர் அஞ்சல் அலுவல கத்திலும், பரமத்தி வேளாண்மை உதவி இயக்குனர் அலுவல கத்தி லும் வரும் திங்கட்கி ழமை அன்று ஆதார் எண்ணை உள்ளீடு செய்து ஆதார் எண்ணுடன் இணை த்தல், சேமிப்பு கணக்கு தொடங்கு தல் மற்றும் ஆதார் கார்டில் முகவரி மாற்றம், கைபேசி எண் இணைத்தல் போன்ற அனைத்து பணிகளையும் செய்து தர உள்ளார்கள்.

    எனவே இந்த வாய்ப்பை பயன்படுத்தி, ஆதார் எண்ணை பதிவு செய்யாத விவசாயிகள் ஆதார் எண்ணை பதிவு செய்து பயனடையலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். 

    • வேளாண்துறை தோட்டக்கலைத்துறை உள்ளிட்ட அலுவலர்களால் பதிவேற்றம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது.
    • மத்திய அரசு புதிய இணையதளத்தில் விவசாயிகளின் தகவல்களை பதிவேற்றம் செய்ய வேளாண் அடுக்குத்திட்டத்தை செயல்படுத்தி வருகிறது

     மூலனூர்:

    மூலனூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் நிர்மலா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    மத்திய-மாநில அரசுகளின் திட்டங்கள் அனைத்து விவசாயிகளுக்கும் சென்று சேரும் வகையில் அரசு துறையை ஒருங்கிணைத்து மத்திய அரசு புதிய இணையதளத்தில் விவசாயிகளின் தகவல்களை பதிவேற்றம் செய்ய வேளாண் அடுக்குத்திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. அனைத்து விவசாயிகளும் அனைத்து திட்டங்களிலும் இணைந்து பயன் கிடைக்கும் வகையில் "கிரேன்ஸ்' (Grover online registration of agricultural input system) என்ற இணையதளத்தில் விவசாயிகள் தங்களின் நில உடமை விவரம், ஆதார், ரேஷன் கார்டு, வங்கி கணக்கு விவரம் உள்ளிட்ட அனைத்து விவரங்களும் வருவாய்த்துறை, வேளாண்துறை தோட்டக்கலைத்துறை உள்ளிட்ட அலுவலர்களால் பதிவேற்றம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

    இதன் மூலம் 13 துறைகளில் வழங்கப்படும் மத்திய-மாநில அரசுகளின் மானிய திட்டங்களில் பயன்பெற விவசாயிகள் விண்ணப்பிக்கும் போது ஒவ்வொரு முறையும் நிலம் சம்பந்தப்பட்ட ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டியதில்லை. எனவே முகநூல் வட்டார விவசாயிகள் தங்களுடைய வருவாய்த்துறை, வேளாண் துறை, தோட்டக்கலைத்துறை அலுவலர்களின் நில உடமை விவரம், சிட்டா நகல், ஆதார் நகல், குடும்ப அட்டை நகல், வங்கி கணக்கு புத்தக நகல், பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, கைபேசி எண் ஆகிய விவரங்களுடன் அணுகி வேளாண்மை அடுக்குத்திட்ட இணையதளத்தில் பதிவு செய்து கொண்டு பயன்பெற வேண்டுமாய் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கழிவுநீர் அகற்றும் வாகனங்கள் குறித்து உடுமலை நகராட்சியில் பதிவு செய்து உரிமம் பெற்றுக்கொள்ள வேண்டும்.
    • உரிமம் பெறாத வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

    உடுமலை:

    கழிவுநீர் அகற்றும் வாகனங்கள் குறித்து நகராட்சியில் பதிவு செய்து உரிமம் பெற்றுக்கொள்ள வேண்டும் என உடுமலை நகராட்சி அறிவித்துள்ளது.

    இது குறித்து உடுமலை நகராட்சி கமிஷனர் சத்தியநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:- உடுமலை நகராட்சியில் மனிதக்கழிவுகள் கழிவு நீர் அகற்றும் வாகன உரிமையாளர்களுக்கு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளால் இரண்டு ஆண்டுகள் செல்லும் வகையில் விண்ணப்பித்த 15 நாட்களுக்குள் உரிமம் வழங்கப்படுகிறது.

    எனவே கழிவுநீர் அகற்றும் வாகனங்கள் குறித்து உடுமலை நகராட்சியில் பதிவு செய்து உரிமம் பெற்றுக்கொள்ள வேண்டும். வாகனங்களில் சேகரிக்கப்படும் கழிவுநீரை பொது இடங்களில் கொட்ட கூடாது. நகராட்சி பாதாள சாக்கடை சுத்திகரிப்பு நிலையத்திற்கு கொண்டு வர வேண்டும் .உரிமம் பெறாத வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

    • 1 முதல் 7 வரையிலான கணக்கு புத்தகங்கள், பதிவேடுகளை ஆய்வு செய்தனர்.
    • ஊராட்சியில் நடைபெற்று வரும் அனைத்து பணிகளையும் பார்வையிட்டனர்.

    மெலட்டூர்:

    தஞ்சை மாவட்டம், அம்மாபேட்டை ஒன்றியம், திருவையாத்துக்குடி ஊராட்சியில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணி களை பார்வையிடுவதற்காக மத்திய ஊரக வளர்ச்சி அதிகாரிகள் பாலமுரளி, ஜஸ்டீன் பிரதீஷ் ஆகியோர் தலைமையிலான மத்திய குழுவினர் திருவை யாத்துக்குடி ஊராட்சிக்கு வருகை தந்தனர்.

    அவர்களை ஊராட்சி மன்ற தலைவர் வெண்ணி லாதர்மராஜ், தலை மையிலான கிராமமக்கள் மத்திய குழுவினரை வரவேற்றனர். முன்னதாக ஊராட்சி மன்றத்தில் பராமரித்து வரும் 1முதல் 7 வரையிலான கணக்கு புத்தகங்கள், பதிவேடுகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    அதனை தொடர்ந்து திருவையாத்துக்குடி ஊராட்சியில் நடைபெற்ற சாலைப்பணி, கட்டுமானப்பணி, தூர்வாரும் பணிகள் மற்றும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்டத்தின கீழ் நடைபெற்ற வாய்க்கால் தூர்வாரும் பணிகள், பிரதம மந்திரி வீடு வழங்கும் திட்டப்பணிகள், உள்பட ஊராட்சியில் நடைபெற்று வரும் அனைத்து பணிகளையும் நேரில் பார்வையிட்டனர்.

    மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்ட பயனாளிகளை நேரில் சந்தித்து அவர்களது குறைகளை கேட்டறிந்தனர்.

    இந்த ஆய்வின் போது அம்மாபேட்டை வட்டார கிராம வளர்ச்சி அலுவலர் அமானுல்லா, பாபநாசம் வருவாய் ஆய்வாளர் வரதராஜன், கிராமநிர்வாக அதிகாரி ஜோதிபிண்டியன் ஊராட்சி செயலாளர் ரமேஷ் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

    • 37 காவலர்கள் இருப்பதாக பதிவேடுகள் மட்டும் உள்ளன.
    • இரவு ரோந்து, வாகன தணிக்கை, குற்ற செயல்களை கண்காணித்து தடுப்பது போன்ற பணிகளில் சுனக்கம்.

    சீர்காழி:

    சீர்காழி காவல் உட்கோட்டத்தில் சீர்காழி, வைத்தீஸ்வரன்கோயில், திருவெண்காடு, புதுப்பட்டி னம், ஆணைக்காரன்சத்திரம், பூம்புகார் உள்ளிட்ட காவல்நி லையங்கள் உள்ளன.இதில் சீர்காழி காவல்நிலையத்திற்கு உட்பட்ட ஏரியா பரப்பளவு அதிகமாக உள்ளது. இதில் பல கிராமங்கள் உள்ளடங்கியுள்ளது.

    சீர்காழி காவல்நி லையத்தில் சுமார் அரசு நிர்ணயப்படி 39 காவலர்கள் இருக்கவேண்டும். இவற்றில் 37 காவலர்கள் இருப்பதாக பதிவேடுகள் மட்டும் உள்ளன. ஆனால் இந்த 37 காவலர்களில் 16 காவலர்கள் வெளி காவல் பணியில் வெவ்வேறு காவல்நிலையங்களில் உள்ளனர்.

    இதனால் காவலர்கள் பற்றாக்குறை உள்ளது. இரவு ரோந்து, வாகனதணிக்கை, குற்ற செயல்களை கண்காணித்து தடுப்பது போன்ற பணிகளில் சுனக்கம் ஏற்படுகிறது.இது குற்றசெயல்கள் நடைபெற ஏதுவாக அமைந்து விடுகிறது. சங்கிலிபறிப்பு, வாகனதிருட்டு, சாராயம், கஞ்சா கடத்தல்போன்ற சம்பவங்கள் அதிக ரித்துவருகிறது. இதனால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட்டு பொதுமக்கள் பாதிக்கப்படும் சூழல் நிலவுகிறது. ஆகையால் சீர்காழி காவல் நிலையத்திற்கு உட்பட்ட கொண்டல், திருமுல்லைவாசல் பகுதிகளில் புறகாவல் நிலையம் அமைக்கவேண்டும் என கோரிக்கை வலுபெற்று வருகிறது.

    இதன் மூலம் புறகாவல்நி லையத்தில் 1 உதவி காவல் ஆய்வா ளர், 4 காவலர்கள் பணிய மர்த்தப்படும் போது அந்த பகுதி மற்றும் சுற்றப்புற கிராமங்களில் ரோந்து சென்று குற்றசெல்களை தடுத்திட முடியும் ஆகை யால் காவல்துறைதலைவர் உடனடியாக முக்கியத்துவம் அளித்து தீர்வு காண வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • பி.எம். கிசான் திட்டத்தில் ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
    • விவசாயிகள் ஒரே குடும்பத்தில் ஒன்றுக்கும் மேற்பட்டோர் உதவித்தொகை பெற்று வந்துள்ளனர்.

    மடத்துக்குளம் :

    விவசாயம் என்னும் உணவு உற்பத்தித்தொழிலை மேற்கொண்டு வரும் விவசாயிகளை கவுரவப்படுத்தும் வகையிலும், அவர்களுக்கு துணையாக அரசின் உதவிக்கரம் உள்ளது என நம்பிக்கையளிக்கும் வகையிலும் மத்திய அரசின் மூலம் பி.எம். கிசான் திட்டத்தில் ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. 4 மாதங்களுக்கு ஒருமுறை ரூ.2 ஆயிரம் வீதம் இந்த தொகை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது.

    இந்த திட்டத்தில் பலன் பெற தகுதியற்ற விவசாயிகளுக்கு பணம் சென்று சேர்வதைத் தடுக்கும் விதமாக சமீபத்தில் ஆதார் இணைப்பு மற்றும் நில ஆவணங்கள் இணைப்பு உள்ளிட்ட புதிய நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் முறையான ஆவணங்கள் இணைக்காத விவசாயிகளுக்கு தற்போது உதவித்தொகை வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளது. இவர்களுக்கு மீண்டும் உதவித்தொகை கிடைக்குமா என்ற கேள்வி விவசாயிகளுக்கு எழுந்துள்ளது.

    இதுகுறித்து திருப்பூர் மாவட்ட வேளாண்மைத்துறையினர் கூறியதாவது:- தகுதியுள்ள அனைத்து விவசாயிகளுக்கும் நிதி உதவி சென்று சேர வேண்டும் என்ற அடிப்படையில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. உடுமலை வட்டாரத்தில் தற்போது 6 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட விவசாயிகளும், மடத்துக்குளம் வட்டாரத்தில் 5 ஆயிரத்து 500 க்கும் மேற்பட்ட விவசாயிகளும் இந்த திட்டத்தின் மூலம் ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் பெற்று பயனடைந்து வருகிறார்கள்.

    தற்போது உதவித்தொகை நிறுத்தப்பட்ட விவசாயிகள் தங்களது சொத்து ஆவணங்களை வேளாண்மைத்துறையினரிடம் வழங்கி பதிவு செய்து கொள்ளலாம். மேலும் பொது சேவை மையங்களுக்கு சென்று ekyc பதிவு செய்யாத விவசாயிகள் ஆதார் மற்றும் மொபைல் கொண்டு சென்று பதிவு செய்து கொள்ள வேண்டும். ஒரு சில விவசாயிகள் ஒரே குடும்பத்தில் ஒன்றுக்கும் மேற்பட்டோர் உதவித்தொகை பெற்று வந்துள்ளனர்.

    இதனால் இருவருக்கும் உதவித்தொகை நிறுத்தப்பட்டுள்ளது. இதில் ஒருவர் விட்டுக் கொடுப்பதாக எழுதிக் கொடுக்கும்போது மீதம் உள்ளவருக்கு உதவித்தொகை வருவதற்கு வாய்ப்புள்ளது. உதவித்தொகை வராத விவசாயிகள் வேளாண்மைத்துறை அலுவலகத்துக்கு வந்து சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்ளலாம். அல்லது தங்கள் பகுதி உதவி வேளாண்மை அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • சுற்றுலா முகவர்கள் இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் என்று கலெக்டர் கூறினார்.
    • மேற்கண்ட தகவலை மதுரை மாவட்ட கலெக்டர் அனீஷ் சேகர் தெரிவித்துள்ளார்.

    மதுரை

    சுற்றுலா பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு ஹோம் ஸ்டே நிறுவனங்கள், சாகச சுற்றுலா ஆபரேட்டர்கள், முகாம் ஆபரேட்டர்கள், கேரவன் டூர்- பார்க் ஆபரேட்டர்கள் செயல்பட்டு வருகின்றனர். அவர்களுக்கு அங்கீகாரம் வழங்கும் வகையில், வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப்பட்டு உள்ளன.

    அவர்கள் www.tntourismtors.com இணையதளம் மூலம் பதிவு செய்யலாம். கூடுதல் விவரங்களுக்கு மதுரை மேல வெளி வீதியில் உள்ள சுற்றுலா அலுவலகம் மற்றும் தொலைபேசி எண்: 0452-2334757 ஆகியவற்றை பயன்படுத்தி கொள்ளலாம். மேற்கண்ட தகவலை மதுரை மாவட்ட கலெக்டர் அனீஷ் சேகர் தெரிவித்துள்ளார்.

    • திருப்பூர் மாவட்டத்தில் 88 ஆயிரத்து 775 விவசாயிகள் பயனடைந்து வருகின்றனர்.
    • ஆன்லைன் மூலம் புதுப்பித்தால் மட்டுமே தொடர்ந்து ஊக்கத்தொகை கிடைக்கும்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் (பொறுப்பு ) சின்னசாமி கூறியதாவது:- பிரதமரின் கிஷான் திட்டத்தின் கீழ் நிலமுள்ள விவசாயிகளுக்கு நான்கு மாதங்களுக்கு ஒரு முறை ரூ. 2 ஆயிரம் விதம் ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் வேளாண்மை இடுபொருட்கள் வாங்குதல் மற்றும் வேளாண்மை தொடர்பான செலவினங்கள் மேற்கொள்ள ஊக்கத்தொகையாக வழங்கப்பட்டு வருகிறது.இத்திட்டத்தின் கீழ் மாவட்டத்தில் 88 ஆயிரத்து 775 விவசாயிகள் பயனடைந்து வருகின்றனர்.

    இதுவரை பதிவு செய்த தேதியின் அடிப்படையில், 11 தவணை வரை தொகைகள் விடுவிக்கப்பட்டுள்ளன. தற்போது 12வது தவணை தொகை பெறுவதற்கு ஆதார் ஆவணங்களை பதிவேற்றம் செய்வது அவசியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த திட்டத்தில் இதுவரை 33 ஆயிரத்து 524 விவசாயிகள் மட்டுமே ஆன்லைன் பதிவு மூலம் புதுப்பித்துள்ளனர். மீதமுள்ள 55 ஆயிரத்து 251 விவசாயிகள் ஜூலை 31 ந் தேதிக்குள் 'இ-கே.ஒய்.சி.,' முறையில் ஆன்லைன் மூலம் புதுப்பித்தால் மட்டுமே தொடர்ந்து ஊக்கத்தொகை கிடைக்கும்.பெரும்பாலான விவசாயிகள் புதுப்பிக்காத காரணத்தால், மத்திய அரசு, ஆகஸ்டு 31-ந்தேதி வரை கால அவகாசம் நீட்டித்துள்ளது.ஆதார் விவரங்களை இ-சேவை மையத்தில், கிராம தபால் நிலையத்தில் அல்லது ஆன்லைன் மூலமாக பதிவேற்றம் செய்து கொள்ளலாம்.எனவே தவறாமல் 31ந் தேதிக்குள் பதிவேற்றம் செய்து, புதுப்பித்தால் மட்டுமே ஊக்கத்தொகை தொடர்ந்து கிடைக்கும். இதுகுறித்து, கூடுதல் தகவல் பெற அந்தந்த வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகலாம்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    தஞ்சையில் நம் கல்வி- நம் உரிமை குறித்து விழிப்புணர்வு மாரத்தான் போட்டியில் ஆகஸ்ட் 10-ம் தேதிக்குள் பதிவு செய்ய அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
    தஞ்சாவூர்:

    தஞ்சாவூரில் தணுவா்ஷன் அறக்கட்டளை சாா்பில் ஆகஸ்ட் 21- ஆம் தேதி நடத்தப்படவுள்ள மாநில அளவிலான மாரத்தான் போட்டியில் பங்கேற்க, ஆகஸ்ட் 10- ஆம் தேதிக்குள் பதிவு செய்ய அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    நம் கல்வி - நம் உரிமை குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் நடைபெறவுள்ள இந்த மாரத்தான் போட்டியில் பங்கேற்கும் போட்டியாளா்களுக்கான முன்பதிவை தணுவா்ஷன் அறக்கட்டளை ஆலோச கரும், மருத்துவருமான டி.வி. சாத்தப்பன் தலைமையில், துணை மேயா் அஞ்சுகம் பூபதி முன்னிலையில் தஞ்சாவூா் மாவட்ட தடகளச் சங்கத் தலைவா் து. கிருஷ்ணசாமி வாண்டையாா் தொடக்கி வைத்தாா்.

    இதுகுறித்து அறக்கட்ட ளை நிா்வாகிகள் செய்தி யாளா்களிடம்  கூறும்போது:

    இந்த மாரத்தான் போட்டி தஞ்சாவூா் அன்னை சத்யா விளையாட்டு அரங்கிலிருந்து ஆகஸ்ட் 21- ஆம் தேதி காலை 5.30 மணியளவில் தொடங்குகிறது. 20 கி.மீ. தொலைவுக்கு ஆண்கள் மற்றும் பெண்கள் என இரு பிரிவாக நடத்தப்படுகிறது.
    இப்போட்டியில் ஆண்கள் பிரிவில் வெற்றி பெறுபவா்களுக்கு முதல் பரிசாக ரூ. 1.50 லட்சமும், இரண்டாவது பரிசாக ரூ. ஒரு லட்சமும், மூன்றாவது பரிசாக ரூ. 50 ஆயிரமும், நான்காவது பரிசாக ரூ. 15 ஆயிரமும், ஐந்தாவது பரிசாக ரூ. 10 ஆயிரமும் வெற்றிக் கோப்பையுடன் வழங்கப்படும். மேலும் 20 பேருக்கு தலா ரூ. 500 மற்றும் கேடயம் ஆறுதல் பரிசாக வழங்கப்படும்.

    இதேபோல, பெண்கள் பிரிவில் வெற்றி பெறுபவா்களுக்கு முதல் பரிசாக ரூ. ஒரு லட்சமும், இரண்டாவது பரிசாக ரூ. 50 ஆயிரமும், மூன்றாவது பரிசாக ரூ. 25 ஆயிரமும், நான்காவது பரிசாக ரூ. 10 ஆயிரமும், ஐந்தாவது பரிசாக ரூ. 5 ஆயிரமும் வெற்றிக் கோப்பையுடன் வழங்கப்படும். மேலும் 20 பேருக்கு தலா ரூ. 500 மற்றும் கேடயம் ஆறுதல் பரிசாக வழங்கப்படும். பங்கேற்ற அனைவருக்கும் டி-ஷா்ட் மற்றும் சான்றிதழ் வழங்கப்படும்.

    இப்போட்டியில் பங்கேற்க விரும்பும் தமிழகத்தைச் சோ்ந்த அனைத்து வயது ஆண்கள் மற்றும் பெண்கள் ஆகஸ்ட் 10- ஆம் தேதிக்குள் ரூ. 500 செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 7598093559, 9345310527 என்ற எண்ணை தொடா்பு கொள்ளலாம் என்றனா் நிா்வாகிகள்.இந்த நிகழ்வில் தஞ்சாவூா் தடகளச் சங்கத்தின் செயலா் செந்தில், பொருளாளா் அசோக், தணுவா்ஷன் அறக்கட்டளை நிறுவனா் உலகநாதன்,

    இந்திய செஞ்சிலுவை சங்கப் பொருளாளா்  முத்துக்குமாா், மானோ ஜிபட்டி ஆதிதிராவிட நலப் பள்ளித் தலைமையாசிரியா் சந்திரமௌலி,  ஒருங்கிணை ப்பாளா் செந்தில்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
    வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் விவரத்தை பதிவு செய்ய வேண்டும் என நகராட்சி தலைவர் தகவல் தெரிவித்தார்.
    கீழக்கரை

    ராமேசுவரம் வடகாடு கிராமத்தில் இருந்து பாசி சேகரிக்க சென்ற மீனவ பெண்ணை ஒடிசா மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் 2 பேர் சேர்ந்து பலாத்காரம் செய்து கொலை செய்தனர். இதை தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வேலைக்காக தங்கியிருக்கும் வடமாநில இளைஞர்கள் விபரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது.

    கீழக்கரை நகராட்சி தலைவர் செஹனாஸ் ஆபிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கீழக்கரை நகராட்சிக்குட்பட்ட இடங்களில் குடியிருக்கும் வெளிமாநில நபர்கள் மற்றும் வெளிமாநில நபர்களை வைத்து வீடு கட்டும் கட்டிட உரிமையாளர்கள், கட்டிட என்ஜினியர்கள், கட்டிட காண்டிராக்டர்கள் மற்றும் ஓட்டல் உரிமையாளர்கள், விடுதி உரிமையாளர்கள், பானிபூரி மற்றும் குல்பி ஐஸ் தொழில் செய்து வருபவர்கள், உள்ளூர் வாசிகள் மூலமாக வேலை பார்க்கும் வெளிமாநில நபர்களின் பெயர், வயது, புகைப்படம், ஆதார் அட்டை, கைபேசி எண், தற்போது வேலை செய்து வரும் நிறுவனத்தின் பெயர், தற்போதைய முகவரி நிறுவனத்தின் உரிமையாளர் பெயர், நிறுவன உரிமையாளரின் ஆதார் எண், மொபைல் எண், தற்போதைய இருப்பிட முகவரி ஆகிய விபரங்களை கீழக்கரை நகராட்சி அலுவலகத்தில் வருகிற 
    15-ந் தேதிக்குள் சமர்ப்பித்து பதிவு செய்யப்பட வேண்டும். 

    தவறும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் மீது சட்டபூர்வமாக நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×