search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Aadhaar documents"

    • கலெக்டர் வினீத் கொடியசைத்து பிரசார வாகனத்தை தொடங்கி வைத்தார்.
    • எல்காட் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் நாகராஜ் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

    திருப்பூர்:

    ஆதாரில் உள்ள விவரங்களின் (டெமோகிராபிக்) துல்லிய தன்மை தொடர ஆதார் ஆவணங்களை புதுப்பிக்கவும், ஆதார் ஆவணங்களை புதுப்பிக்க அடையாள சான்று மற்றும் முகவரிச்சான்று ஆவணங்களை பதிவேற்றவும் ஆன்-லைன் செயல்முறை குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பிரசார வாகனம் தொடக்க நிகழ்ச்சி திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.

    கலெக்டர் வினீத் கொடியசைத்து பிரசார வாகனத்தை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் யு.ஐ.டி.ஏ.ஐ. உதவி மேலாளர் தியாகராஜன், எல்காட் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் நாகராஜ் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

    ஆதார் ஆவண புதுப்பித்தல் தொடர்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்துடன் இந்திய தனித்துவ அடையாள ஆணையம், தேசிய திரைப்பட மேம்பாட்டு கழகத்துடன் இணைந்து 30 நாட்களுக்குள் திருப்பூர் மாவட்டத்தில் பிரசாரம் மேற்கொள்ளப்படுகிறது. ஆதார் ஆவண புதுப்பித்தல் தொடர்பான பணிகளை மேற்கொள்ள இந்தியாவில் உள்ள மாநிலங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்டங்களில் பயிற்சியை தொடங்குகிறது. அதன்படி திருப்பூர் மாவட்டத்தில் பல்வேறு நகரங்கள், கிராமங்களுக்கு நேற்று முதல் வருகிற 30 நாட்களுக்கு பிரசார வாகனம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது.

    திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் ஆதார் ஆவணங்கள் புதுப்பித்தல் தொடர்பான விழிப்புணர்வு பிரசாரம் நடைபெறும் நாட்களில் பிரசார வாகனத்தில் கொடுத்து ஆதார் ஆவணங்களை புதுப்பித்துக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    • திருப்பூர் மாவட்டத்தில் 88 ஆயிரத்து 775 விவசாயிகள் பயனடைந்து வருகின்றனர்.
    • ஆன்லைன் மூலம் புதுப்பித்தால் மட்டுமே தொடர்ந்து ஊக்கத்தொகை கிடைக்கும்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் (பொறுப்பு ) சின்னசாமி கூறியதாவது:- பிரதமரின் கிஷான் திட்டத்தின் கீழ் நிலமுள்ள விவசாயிகளுக்கு நான்கு மாதங்களுக்கு ஒரு முறை ரூ. 2 ஆயிரம் விதம் ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் வேளாண்மை இடுபொருட்கள் வாங்குதல் மற்றும் வேளாண்மை தொடர்பான செலவினங்கள் மேற்கொள்ள ஊக்கத்தொகையாக வழங்கப்பட்டு வருகிறது.இத்திட்டத்தின் கீழ் மாவட்டத்தில் 88 ஆயிரத்து 775 விவசாயிகள் பயனடைந்து வருகின்றனர்.

    இதுவரை பதிவு செய்த தேதியின் அடிப்படையில், 11 தவணை வரை தொகைகள் விடுவிக்கப்பட்டுள்ளன. தற்போது 12வது தவணை தொகை பெறுவதற்கு ஆதார் ஆவணங்களை பதிவேற்றம் செய்வது அவசியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த திட்டத்தில் இதுவரை 33 ஆயிரத்து 524 விவசாயிகள் மட்டுமே ஆன்லைன் பதிவு மூலம் புதுப்பித்துள்ளனர். மீதமுள்ள 55 ஆயிரத்து 251 விவசாயிகள் ஜூலை 31 ந் தேதிக்குள் 'இ-கே.ஒய்.சி.,' முறையில் ஆன்லைன் மூலம் புதுப்பித்தால் மட்டுமே தொடர்ந்து ஊக்கத்தொகை கிடைக்கும்.பெரும்பாலான விவசாயிகள் புதுப்பிக்காத காரணத்தால், மத்திய அரசு, ஆகஸ்டு 31-ந்தேதி வரை கால அவகாசம் நீட்டித்துள்ளது.ஆதார் விவரங்களை இ-சேவை மையத்தில், கிராம தபால் நிலையத்தில் அல்லது ஆன்லைன் மூலமாக பதிவேற்றம் செய்து கொள்ளலாம்.எனவே தவறாமல் 31ந் தேதிக்குள் பதிவேற்றம் செய்து, புதுப்பித்தால் மட்டுமே ஊக்கத்தொகை தொடர்ந்து கிடைக்கும். இதுகுறித்து, கூடுதல் தகவல் பெற அந்தந்த வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகலாம்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    ×