search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தஞ்சாவூரில் தணுவா்ஷன் அறக்கட்டளை சாா்பில்  மாநில அளவிலான மாரத்தான் போட்டி தொடர்பாக அறிவிப்பு வெளியிடப்பட்டது.
    X
    தஞ்சாவூரில் தணுவா்ஷன் அறக்கட்டளை சாா்பில் மாநில அளவிலான மாரத்தான் போட்டி தொடர்பாக அறிவிப்பு வெளியிடப்பட்டது.

    மாரத்தான் போட்டிக்கு பதிவு செய்ய அழைப்பு

    தஞ்சையில் நம் கல்வி- நம் உரிமை குறித்து விழிப்புணர்வு மாரத்தான் போட்டியில் ஆகஸ்ட் 10-ம் தேதிக்குள் பதிவு செய்ய அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
    தஞ்சாவூர்:

    தஞ்சாவூரில் தணுவா்ஷன் அறக்கட்டளை சாா்பில் ஆகஸ்ட் 21- ஆம் தேதி நடத்தப்படவுள்ள மாநில அளவிலான மாரத்தான் போட்டியில் பங்கேற்க, ஆகஸ்ட் 10- ஆம் தேதிக்குள் பதிவு செய்ய அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    நம் கல்வி - நம் உரிமை குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் நடைபெறவுள்ள இந்த மாரத்தான் போட்டியில் பங்கேற்கும் போட்டியாளா்களுக்கான முன்பதிவை தணுவா்ஷன் அறக்கட்டளை ஆலோச கரும், மருத்துவருமான டி.வி. சாத்தப்பன் தலைமையில், துணை மேயா் அஞ்சுகம் பூபதி முன்னிலையில் தஞ்சாவூா் மாவட்ட தடகளச் சங்கத் தலைவா் து. கிருஷ்ணசாமி வாண்டையாா் தொடக்கி வைத்தாா்.

    இதுகுறித்து அறக்கட்ட ளை நிா்வாகிகள் செய்தி யாளா்களிடம்  கூறும்போது:

    இந்த மாரத்தான் போட்டி தஞ்சாவூா் அன்னை சத்யா விளையாட்டு அரங்கிலிருந்து ஆகஸ்ட் 21- ஆம் தேதி காலை 5.30 மணியளவில் தொடங்குகிறது. 20 கி.மீ. தொலைவுக்கு ஆண்கள் மற்றும் பெண்கள் என இரு பிரிவாக நடத்தப்படுகிறது.
    இப்போட்டியில் ஆண்கள் பிரிவில் வெற்றி பெறுபவா்களுக்கு முதல் பரிசாக ரூ. 1.50 லட்சமும், இரண்டாவது பரிசாக ரூ. ஒரு லட்சமும், மூன்றாவது பரிசாக ரூ. 50 ஆயிரமும், நான்காவது பரிசாக ரூ. 15 ஆயிரமும், ஐந்தாவது பரிசாக ரூ. 10 ஆயிரமும் வெற்றிக் கோப்பையுடன் வழங்கப்படும். மேலும் 20 பேருக்கு தலா ரூ. 500 மற்றும் கேடயம் ஆறுதல் பரிசாக வழங்கப்படும்.

    இதேபோல, பெண்கள் பிரிவில் வெற்றி பெறுபவா்களுக்கு முதல் பரிசாக ரூ. ஒரு லட்சமும், இரண்டாவது பரிசாக ரூ. 50 ஆயிரமும், மூன்றாவது பரிசாக ரூ. 25 ஆயிரமும், நான்காவது பரிசாக ரூ. 10 ஆயிரமும், ஐந்தாவது பரிசாக ரூ. 5 ஆயிரமும் வெற்றிக் கோப்பையுடன் வழங்கப்படும். மேலும் 20 பேருக்கு தலா ரூ. 500 மற்றும் கேடயம் ஆறுதல் பரிசாக வழங்கப்படும். பங்கேற்ற அனைவருக்கும் டி-ஷா்ட் மற்றும் சான்றிதழ் வழங்கப்படும்.

    இப்போட்டியில் பங்கேற்க விரும்பும் தமிழகத்தைச் சோ்ந்த அனைத்து வயது ஆண்கள் மற்றும் பெண்கள் ஆகஸ்ட் 10- ஆம் தேதிக்குள் ரூ. 500 செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 7598093559, 9345310527 என்ற எண்ணை தொடா்பு கொள்ளலாம் என்றனா் நிா்வாகிகள்.இந்த நிகழ்வில் தஞ்சாவூா் தடகளச் சங்கத்தின் செயலா் செந்தில், பொருளாளா் அசோக், தணுவா்ஷன் அறக்கட்டளை நிறுவனா் உலகநாதன்,

    இந்திய செஞ்சிலுவை சங்கப் பொருளாளா்  முத்துக்குமாா், மானோ ஜிபட்டி ஆதிதிராவிட நலப் பள்ளித் தலைமையாசிரியா் சந்திரமௌலி,  ஒருங்கிணை ப்பாளா் செந்தில்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
    Next Story
    ×