வளர்ச்சி திட்ட பணிகளை மத்திய குழுவினர் ஆய்வு

1 முதல் 7 வரையிலான கணக்கு புத்தகங்கள், பதிவேடுகளை ஆய்வு செய்தனர்.ஊராட்சியில் நடைபெற்று வரும் அனைத்து பணிகளையும் பார்வையிட்டனர்.
மத்திய குழுவினர் மக்களிடம் குறைகளை கேட்டறிந்தனர்.
மத்திய குழுவினர் மக்களிடம் குறைகளை கேட்டறிந்தனர்.
Published on

மெலட்டூர்:

தஞ்சை மாவட்டம், அம்மாபேட்டை ஒன்றியம், திருவையாத்துக்குடி ஊராட்சியில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணி களை பார்வையிடுவதற்காக மத்திய ஊரக வளர்ச்சி அதிகாரிகள் பாலமுரளி, ஜஸ்டீன் பிரதீஷ் ஆகியோர் தலைமையிலான மத்திய குழுவினர் திருவை யாத்துக்குடி ஊராட்சிக்கு வருகை தந்தனர்.

அவர்களை ஊராட்சி மன்ற தலைவர் வெண்ணி லாதர்மராஜ், தலை மையிலான கிராமமக்கள் மத்திய குழுவினரை வரவேற்றனர். முன்னதாக ஊராட்சி மன்றத்தில் பராமரித்து வரும் 1முதல் 7 வரையிலான கணக்கு புத்தகங்கள், பதிவேடுகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

அதனை தொடர்ந்து திருவையாத்துக்குடி ஊராட்சியில் நடைபெற்ற சாலைப்பணி, கட்டுமானப்பணி, தூர்வாரும் பணிகள் மற்றும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்டத்தின கீழ் நடைபெற்ற வாய்க்கால் தூர்வாரும் பணிகள், பிரதம மந்திரி வீடு வழங்கும் திட்டப்பணிகள், உள்பட ஊராட்சியில் நடைபெற்று வரும் அனைத்து பணிகளையும் நேரில் பார்வையிட்டனர்.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்ட பயனாளிகளை நேரில் சந்தித்து அவர்களது குறைகளை கேட்டறிந்தனர்.

இந்த ஆய்வின் போது அம்மாபேட்டை வட்டார கிராம வளர்ச்சி அலுவலர் அமானுல்லா, பாபநாசம் வருவாய் ஆய்வாளர் வரதராஜன், கிராமநிர்வாக அதிகாரி ஜோதிபிண்டியன் ஊராட்சி செயலாளர் ரமேஷ் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com