என் மலர்

    நீங்கள் தேடியது "camp"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பிரதம மந்திரி தேசிய தொழில் பழகுநர் சேர்க்கை முகாம் நடக்கிறது.
    • இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள புதுவை தொழில்துறை அழைப்பு விடுத்துள்ளது.

    புதுச்சேரி

    இந்திய அரசின் திறன் மேம்பாடு, தொழில் முனைவோர் துறை மூலம் தொழில் பழகுநர் பயிற்சியை ஊக்குவிக்கும் நோக்கில் பிரதம மந்திரி தேசிய தொழில் பழகுநர் சேர்க்கை முகாம் நடக்கிறது.

    புதுவை அரசின் தொழிலாளர் துறை, துணை தொழில் பழகுநர் ஆலோசகர் அலுவலகம் சார்பில் நாளை வெள்ளிக்கிழமை காலை 9 முதல் மாலை 5 மணி வரை அரசு ஆண்கள் தொழில்பயிற்சி மையத்தில் முகாம் நடக்கிறது. இதில் மத்திய, மாநில நிறுவனங்கள், தனியார், சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் ஒரே இடத்தில் பங்கேற்கின்றன. இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள புதுவை தொழில்துறை அழைப்பு விடுத்துள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • உலக வெறிநோய் தினத்தையொட்டி தடுப்பூசி முகாம் நடந்தது.
    • தலைமை மருத்துவர் சரவணன் தலைமை தாங்கினார்.

    மதுரை

    உலக வெறிநோய் தினத்தையொட்டி தல்லாகுளம் கால்நடை மருத்துவமனையில் செல்ல பிராணிகளுக்கு இலவச வெறிநோய் தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

    முகாமை மதுரை மண்டல இணை இயக்குநர் நடராஜகுமார் தொடங்கி வைத்தார். மருத்துவமனை தலைமை மருத்துவர் சரவணன் தலைமை தாங்கினார்.

    கால்நடை உதவி மருத்துவர்கள் முத்துராமன், விஜயகுமார், அறிவழகன், முத்துராம், பயிற்சி மருத்துவர்கள், கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் சுதாகரன், சண்முகத்தாய், நிர்மலா, கார்த்திகா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    மேலும் மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து கால்நடை மருத்துவமனைகள், மருந்தகங்களில் வெறிநோய் தடுப்பூசி முகாம்கள் நடந்தன.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • எந்திரங்கள் மூலம் பாதுகாப்பான முறையில் சுத்தம் செய்வது குறித்த மாவட்ட அளவிலான ஒருநாள் பயிற்சிமுகாம் நடைபெற்றது.
    • பணியின்போது விபத்துகள் ஏற்பட்டால் மேற்கொள்ள வேண்டிய முதலுதவி சிகிச்சைகள் குறித்து விளக்கம்

    அரவேணு,

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரி புயல் நிவாரண கூடத்தில் நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல்துறை மற்றும் பேரூராட்சிகள் இயக்ககம் சார்பில் கழிவுநீர் சேகரிப்பு தொட்டியில் எந்திரங்கள் மூலம் பாதுகாப்பான முறையில் சுத்தம் செய்வது குறித்த மாவட்ட அளவிலான ஒருநாள் பயிற்சிமுகாம் நடைபெற்றது.

    மாவட்ட பேரூராட்சிகளின் உதவிஇயக்குனர் இப்ராகிம்ஷா, கோத்தகிரி பேரூராட்சி தலைவர் ஜெயக்குமாரி ஆகியோர் முகாமை தொடங்கி வைத்தனர்.

    அப்போது சென்னையை சேர்ந்த தூய்மைஇந்தியா திட்ட ஒருங்கிணைப்பாளர் விக்னேஸ்வரன், கழிவுநீர் தொட்டியில் இருந்து கழிவு நீரை எப்படி எந்திரங்கள் மூலம் பாதுகாப்பாக சுத்தம் செய்வது என்பது குறித்து பேசினார்.

    இந்த பயிற்சி முகாமில் நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த கழிவுநீர் எந்திர உரிமையாளர்கள், டிரைவர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர். முடிவில் சுகாதார ஆய்வாளர் ரஞ்சித் நன்றி கூறினார்

    முன்னதாக பேரூராட்சி அதிகாரிகள் கூறுகையில், கடந்த 35 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் கழிவுநீர் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்ட 300 தூய்மை பணியாளர்கள் உயிரிழந்து உள்ளனர்.

    எனவே தூய்மை பணியின்போது உயிரிழப்புக்களை தடுக்க மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், நவீன எந்திரங்கள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும் கழிவுநீர் சுத்தம் செய்யும் பணியில் விஷவாயுக்களால் ஏற்படும் அபாயம், பணிச்சூழலில் ஆபத்து உள்ளிட்டவற்றை எதிர்கொள்வது, பணியின்போது விபத்துகள் ஏற்பட்டால் மேற்கொள்ள வேண்டிய முதலுதவி சிகிச்சைகள் குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டது என்று தெரிவித்து உள்ளனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • அனைத்து துறை சார்ந்த வேலை வாய்ப்பு ஒருங்கி ணைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
    • 2023-24 இறுதி ஆண்டு இளங்கலை பொறியியல் துறை மாணவ-மாணவி கள் 200-க்கும் மேற்பட் டோர் கலந்து கொண்டு பயன் அடைந்தனர்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி மணக்குள விநாயகர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (எம்.ஐ.டி.) கல்லூரியில் சென்னை ரெனால்ட் நிசான் டெக் நிறுவனம் சார்பில் பொது வளாக வேலை வாய்ப்பு முகாம் நடந்தது.

    முகா மிற்கு அந்நிறுவ னத்தின் மனிதவளத்துறை மேலா ளர்கள் ராமசாமி, ஸ்ரீகாந்த் குழுவினர் முன்னிலையில் ஆன்லைன் எழுத்து தேர்வு, மற்றும் நேர் குழு விவாதம் முகத்தேர்வு ஆகிய சுற் றுக்களாக வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. மணக்குள விநாயகர் கல்வி குழும தலைவர் மற்றும் நிர்வாக இயக்கு னர் தனசேகரன், துணை தலைவர் சுகுமாறன், செய லாளர் நாராயணசாமி கேசவன், பொருளாளர் ராஜராஜன் ஆகியோர் தலைமை தாங்கினர். கல்லூரி முதல்வர் மலர்க்கண் முகாமை தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் அனைத்து துறை சார்ந்த வேலை வாய்ப்பு ஒருங்கி ணைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

    முகாமில் மணக்குள கல்வி குழுமத்தின் கீழ் இயங்கும் மணக்குள விநாயகர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, மயிலம் பொறியியல் கல்லூரி, ஸ்ரீம ணக்குள விநாயகர் பொறி யியல் கல்லூரி, மற்றும் புதுவை, கடலூர், விழுப்பு ரம் நகரை சுற்றியுள்ள அரசு மற்றும் தனியார் பொறியி யல் கல்லூரிகளிலிருந்து 2023-24 இறுதி ஆண்டு இளங்கலை பொறியியல் துறை மாணவ-மாணவி கள் 200-க்கும் மேற்பட் டோர் கலந்து கொண்டு பயன் அடைந்தனர்.

    ஏற்பா டுகளை கல்லூரி வேலை வாய்ப்பு துறை அதிகாரி ஜெயக்குமார் செய்திருந்தார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • இலவச கருத்தரித்தல் பரிசோதனை முகாம்
    • 115 தம்பதியினர் பயனடைந்தனர்.

    உசிலம்பட்டி

    தேனி நாட்டாத்தி நாடார் மருத்துவமனை மற்றும் கருத்தரித்தல் மையம் சார் பில் இலவச கருத்த ரித்தல் பரிசோதனை முகாம் மதுரை மாவட்டம் உசிலம் பட்டியில் உள்ள சரஸ்வதி மகாலில் நடைபெற்றது. முகாமில் தொடர்ச்சியாக கரு சிதைவால் பாதிக்கப் பட்டவர்கள், திருமணமாகி ஒரு வருடத்திற்கு மேல் குழந்தை இல்லாதவர்கள், கருக்குழாய் அடைப்பு உள்ள வர்கள், விந்தணு குறை பாடு உள்ளவர்கள், கர்ப் பப்பையில் நீர்க்கட்டி உள்ள வர்கள் பங்கேற்றனர்.

    அவர்கள் அனைவருக்கும் ஸ்கேன் பரிசோதனை உள்பட மருத்துவ பரிசோத னைகள் இலவசமாக பார்க்கப்பட்டது. மேலும் ஆண், பெண்களுக்கான குழந்தையின்மை பிரச்சி னைகள், கர்ப்பப்பை சம்பந் தமான பிரச்சினைகள், கர்ப்பப்பையில் விந்தணு உட்செலுத்தும் முறை, செயற்கை கருத்தரித்தல்,

    ஹார்மோன் சிகிச்சைகள், விந்தணுவை விதைப்பை யில் இருந்து பிரித்தெடுத்தல், விந்தணு கருமுட்டை மற்றும் கருவை தானமாக பெறுதல், விந்தணு கருமுட்டை மற்றும் கரு உறைநிலைப்படுத்துதல் உள்ளிட்ட பிரச்சினைக ளுக்கு முகாமில் இலவச ஆலோசனைகள் வழங்கப் பட்டன. இதில் 115 தம்பதிகள் கலந்து கொண்டு பயன டைந்தனர்.

    உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் அய்யப்பன், உசிலம்பட்டி நகர்மன்றத் தலைவர் சகுந்தலா கட்ட பொம்மன், உசிலம்பட்டி நாட்டாத்தி நாடார் உற வின்முறை தலைவர் எஸ்.எம்.எஸ்.ஆர்.நடராஜன் ஆகியோர் சிறப்பு விருந்தி னர்களாக கலந்துகொண்டு குத்துவிளக்கேற்றி முகாமை தொடங்கி வைத்தனர்.

    இதற்கான ஏற்பாடுகளை தேனி நாட்டாத்தி நாடார் மருத்துவமனை மேலாளர் சாந்தி, செயற்கை கருத்த ரித்தல் கிசிச்சைப்பிரிவு மேலாளர் ஏ.பி.ஜேம்ஸ், மக்கள் தொடர்பு அலுவ லர்கள் சலீம், சேக் பரீத், தீபன் மற்றும் கார்த்திக் ஆகி யோர் சிறப்பாக செய்தி ருந்தனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • 15-ந்தேதி முதல் காந்தி ஜெயந்தி அக்டோபர் இரண்டாம் தேதி வரை நடைபெற்று வருகிறது
    • வட்டார ஒருங்கிணைப்பாளர் விஜயலட்சுமி நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.

    கந்தர்வகோட்டை,  

    புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டையில் தூய்மை பாரத இயக்கம் சார்பில் குப்பை இல்லா இந்தியா திட்ட முகாம் 15-ந்தேதி முதல் காந்தி ஜெயந்தி அக்டோபர் இரண்டாம் தேதி வரை நடைபெற்று வருகிறது. இதில் ஒரு பகுதியாக குப்பை இல்லா இந்தியாவை உருவாக்கும் தூய்மை காவலர் மற்றும் துப்புரவு பணியாளர்களுக்கு உடல் பரிசோதனை முகாம் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பார்த்திபன் முன்னிலையில், கந்தர் கோட்டை ஊராட்சி மன்ற தலைவி தமிழ்ச்செல்வி தலைமையில் நடைபெற்றது.

    பரிசோதனைக்கு வந்த தூய்மை காவலர்களை கந்தர்வகோட்டை அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் சாரதா மற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள் மருத்துவ பரிசோதனை செய்து அவர்களுக்கு மருந்து மாத்திரைகள் வழங்கினார்கள். வட்டார ஒருங்கிணைப்பாளர் விஜயலட்சுமி நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் இலவச கண் பரிசோதனை முகாம் நடந்தது.
    • முடிவில் மன்ற தலைவர் கராத்தே சிவா நன்றி கூறினார்.

    வாடிப்பட்டி

    வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தில் மதுரை மாவட்டம் பார்வை இழப்பு தடுப்பு சங்கம், காக்கும் கரங்கள் நற்பணி மன்றத்துடன் இணைந்து, பாப்புரெட்டி நினைவு அறக்கட்டளை சார்பில் இலவச கண் பரிசோதனை முகாம் நடந்தது. பேரூராட்சி தலைவர் பால் பாண்டியன் தலைமை தாங்கினார். தி.மு.க ஒன்றிய செயலாளர் பால ராஜேந்திரன், பேரூராட்சி துணைத் தலைவர் வக்கீல் கார்த்திக் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    அறக்கட்டளை தலைவர் லதா வரவேற்றார். இந்த முகாமில் அ.தி.மு.க பேரூர் செயலாளர் அசோக்குமார், கவுன்சிலர் சூர்யா, காந்திதாஸ், பாபு, ஆட்டோ சேகர், முருகன் உள்படபலர் கலந்து கொண்டனர். இந்த முகாமில் கோவை சங்கரா கண் மருத்து வமனை டாக்டர் சுவாதி தலைமையில் மருத்துவ குழுவினர் கண் பரிசோதனை செய்தனர். முடிவில் மன்ற தலைவர் கராத்தே சிவா நன்றி கூறினார். இதற்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர் ஜெயகர், காக்கும் கரங்கள் நற்பணி மன்ற செயலாளர் கராத்தே கண்ணன் ஆகியோர் செய்திருந்தனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • புதுக்கோட்டை அன்னவாசலில் கர்ப்பிணிகளுக்கான மருத்துவ முகாம் நடைபெற்றது
    • கர்ப்பிணிகளுக்கு ஏ.என்.சி. பரிசோதனை உள்ளிட்ட பல்வேறு மருத்துவ பரிசோதனைகள் நடைபெற்றது

    புதுக்கோட்டை,

    அன்னவாசல் அரசு மருத்துவமனையில் கர்ப்பிணிகளுக்கு சிறப்பு மருத்துவ முகாம் நேற்று நடைபெற்றது. முகாமிற்கு தலைமை மருத்துவ அலுவலர் மணியன் தலைமை தாங்கினார். இதில் மகப்பேறு டாக்டர் வித்யாலட்சுமி கலந்து கொண்டு கர்ப்பிணிகளுக்கு ஏ.என்.சி. பரிசோதனை உள்ளிட்ட பல்வேறு மருத்துவ பரிசோதனைகளை செய்தார். இதில் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவமனை பணியாளர்கள், கர்ப்பிணிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஆலங்குடியில் மாற்று திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது
    • கலெக்டர் மெர்சி ரம்யா உதவி உபகரணங்களை வழங்கினார்

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அரசு ஆண்கள்மேல்நிலைப்பள்ளியில், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு நடைபெற்ற மாற்றுத்தி றனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாமினை, மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா தொடங்கி வைத்து, மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு உதவி உபகரணங்களை வழங்கினார்.பின்னர் மாவட்ட கலெக்டர் கூறும்போது, இம்முகாமில் 39 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.3 லட்சத்து 56 ஆயிரத்து 500 மதிப்பிலான பல்வேறு உதவி உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

    இம்முகாமில், திருவரங்குளம் ஒன்றியக்குழுத் தலைவர் வள்ளியம்மை, தங்கமணி, ஆலங்குடி பேரூராட்சித் தலைவர் மு.ராசி முருகானந்தம், சுகாதாரப்பணிகள் அறந்தாங்கி துணை இயக்குநர் நமச்சிவாயம், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் எஸ்.உலகநாதன், பேரூராட்சி துணைத்தலைவர் ராஜேஸ்வரி பழனிகுமார், உதவித் திட்ட அலுவலர் தங்கமணி, வட்டார மருத்துவ அலுவலர் மரு.ராம்சந்தர், பேரூராட்சி உறுப்பினர் காஞ்சனா செல்வராஜ், ஆசிரியர் ஞானபிரகாசம், முடநீக்கு வல்லுநர் எஸ்.ஜெகன்முருகன், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பெரம்பலூரில் போலீசாரின் சிறப்பு விசாரணை முகாம் நடைபெற்றது
    • பொதுமக்களிடமிருந்து 24 மனுக்கள் பெறப்பட்டது

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் மாவட்ட போலீஸ் அலுவலகத்தில் போலீசாரின் சிறப்பு மனு விசாரணை முகாம் நடந்தது. முகாமிற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளா தேவி தலைமை தாங்கி, பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட மொத்தம் 24 மனுக்கள் சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையங்களுக்கு நடவடிக்கை மேற்கொள்ள அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கதிராமங்கலத்தில்விவசாயிகளுக்கான பயிற்சி முகாம்
    • வளர்ச்சி திட்டம் மூலம் கிடைக்கும் சலுகைகள் பயிற்சிகள் விவசாயிகளுக்கு அளிக்கப்பட்டது

    அறந்தாங்கி, 

    ஆவுடையார்கோவில் தாலுகா கதிராமங்கலம் கிராமத்தில் ஊராட்சி மன்றத் தலைவர் கண்ணன் ஏற்பாட்டில் நடைபெற்ற முகாமில் வேளாண்மை உதவி இயக்குனர் சவிதா பயிற்சி குறித்து விளக்கி பேசினார். அப்போது வேளாண்மை துறை மூலம் செயல்படுத்தப்படும் திட்ட செயல்பாடுகள், வேளாண்மை கிடங்கில் உள்ள இடுபொருட்கள், விதை இருப்பு, நேரடி நெல் விதைப்பு தொழில்நுட்பங்கள், மானியம் மற்றும் பயிர் பாதுகாப்பு முறைகள், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டம் மூலம் கிடைக்கும் சலுகைகள் உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் விவசாயிகளுக்கு அளிக்கப்பட்டது. முகாமில் அங்கக விதை சான்றளிப்பு துறை அலுவலர் இளஞ்செழியன், வட்டார தொழில்நுட்ப மேலாளர் ஜகுபர்அலி, பொறுப்பு அலுவலர் இன்பசேகரன், உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் ராமநாதன், கீர்த்திகா உள்ளிட்ட விவசாயிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin