search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Anna Revival project"

    • அண்ணா மறுமலர்ச்சி திட்டம் பிற துறை பணிகளை ஒருங்கிணைத்து செயல்படுவதற்கான சிறப்பு முகாம் நடைபெற்றது.
    • முகாமில் கல்வித்துறை சார்பாக மகேஷ் குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    கடையம்:

    கடையம் யூனியனுக்குட்பட்ட கீழக்கடையம் ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் பிற துறை பணிகளை ஒருங்கிணைத்து செயல்படுவதற்கான சிறப்பு முகாம் நடைபெற்றது.

    கீழக்கடையம் ஊராட்சி மன்ற தலைவர் பூமிநாதன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் விக்டர் சேவியர்துரைசிங், வார்டு உறுப்பினர் வயலட் அல்லேலுயா ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக கடையம் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் ராஜசேகரன் கலந்து கொண்டு, கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தை பற்றி பேசினார். முகாமில் கல்வித்துறை சார்பாக மகேஷ் குமார், மாற்றுத்திறனாளி நலத்துறை சார்பாக சரவணன், தோட்டக்கலைத்துறை பானுமதி, சமூக நலத்துறை சார்பாக கார்த்திகேயன், சுகாதாரத்துறை ஆனந்தன், கால்நடைத்துறை சஹானா மற்றும் உள்ளாட்சி துறை சார்பாக பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஊராட்சி செயலர் ஜெயசக்திவேல் நன்றி கூறினார்.

    • அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தில் பிற துறைகளை இணைத்து செயல்படுத்துவதற்கான தொடக்க விழா நடைபெற்றது.
    • கடையம் பெரும்பத்து தி.மு.க. நிர்வாகி பரமசிவன் உட்பட பல்வேறு துறை அதிகாரிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    கடையம்:

    கடையம் ஊராட்சி ஒன்றியம் பெரும்பத்து ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தில் பிற துறைகளை இணைத்து செயல்படுத்துவதற்கான தொடக்க விழா நடைபெற்றது.கடையம் பெரும்பத்து பஞ்சாயத்து தலைவர் பொன்ஷீலா பரமசிவன் தலைமை தாங்கினார்.

    வட்டார வளர்ச்சி அலுவலர் திருமலை முருகன் முன்னிலை வகித்தார்.வேளாண்மை உதவி இயக்குநர் ஏஞ்சலின் பொன் ராணி, வேளாண்மை அலுவலர் அபிராமி, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் விஷ்ணுவர்தன், நிதி சார் கல்வி ஆலோசகர் இளங்கோ, கடையம் பெரும்பத்து தி.மு.க. நிர்வாகி பரமசிவன் உட்பட பல்வேறு துறை அதிகாரிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • தென்காசி மாவட்டம் கடையம் யூனியன் அனைத்து ஊராட்சி மன்ற கூட்டமைப்பு தலைவர் களின் கூட்டம் நடைபெற்றது.
    • அந்தந்த ஊராட்சி மன்ற தலைவர்கள் ஒப்பந்ததாரர்களை நியமிக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

    கடையம்:

    தென்காசி மாவட்டம் கடையம் யூனியன் அனைத்து ஊராட்சி மன்ற கூட்டமைப்பு தலைவர் களின் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கூட்டமைப்பு தலைவர் டி.கே.பாண்டியன் தலைமை தாங்கினார்.

    டெண்டரை ரத்து செய்ய வேண்டும்

    செயலாளர் பூமிநாத், கடையம் வட்டார வளர்ச்சி அலுவலர் திருமலை முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணைத் தலைவர் முகைதீன் பீவி ஆசன் வரவேற்றார். கூட்டத்தில் கோவிந்தபேரி, மேலாம்பூர், சிவசைலம், தர்மபுரமடம், கடையம் பெரும்பத்து, கடையம் பஞ்சாயத்து குட்பட்பட்ட 6 கிராமங்களில் வனத்துறையினரால் ஒன்றரை கிலோ மீட்டருக்கு சுற்றுச் சூழல் உணர்வு பகுதியாக அறிவிக்க கடும் எதிர்ப்பு தெரிவிப்பது எனவும்,

    அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் நடைபெறும் பணிகளுக்கு பேக்கேஜ் டெண்டரை ரத்து செய்து அந்தந்த ஊராட்சி மன்ற தலைவர்கள் ஒப்பந்ததாரர்களை நியமிக்க வேண்டும்,

    75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கடையம் ஒன்றியம் முழுவதும் கல்வெட்டு அமைத்து ஊராட்சி மன்றத்தில் வைர விழாவாக கொண்டாட வேண்டும். துப்புரவு பணியாளர் களையும், ஓஹச்டி ஆப்பரேட்டர்களையும் கூடுதலாக நியமிக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.


    கலந்து கொண்டவர்கள்


    ஊராட்சி மன்ற தலைவர்கள் தெற்கு கடையம் முத்து லட்சுமி ராமதுரை, ஏ.பி.நாடனுர் அழகுதுரை, கீழாம்பூர் மாரி சுப்பு, பாப்பான்குளம் முருகன், மேலஆம்பூர் குயிலி லட்சுமணன், துப்பாக்குடி செண்பக வல்லி ஜெகநாதன், மந்தியூர் கல்யாண சுந்தரம், மடத்தூர் முத்தமிழ் ரஞ்சித், தருமபுரமடம் ரூஹான் சன்னத் சதாம், சிவசைலம் மலர்மதி சங்கரபாண்டி, வெங்க டாம்பட்டி சாருகலா ரவி,

    கடையம் பெரும்பத்து பொன் சிலா பரமசிவன், பொட்டல் புதூர் கணேசன், திருமலையப்பபுரம் மாரியப்பன், ஓவர்சீயர் குளோரி, வீராசமுத்திரம் துணைத் தலைவர் நாகூர் மைதீன், வார்டு உறுப்பினர்கள் நாகூர்கனி பீவி, காசிம் ஜமீலா, ரமேஷா, தாஜீதின், பூமணி மற்றும் அமீர் அலி, அப்துல் ஜப்பார் யூசுபீ, அப்துல் காதர், அகமது ஈசாக், ஜாகிர் உசேன், மைதீன், பீர்முகம்மது, யாசிம், யூசுப், ஜமீன், ஊராட்சி செயலர் பரமசிவன், மக்கள் நல பணியாளர் கனியம்மாள், ஊராட்சி பணியாளர்கள் சித்தரசன், அமுதா, நபிஷா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சி ஏற்பாடுகளை வீராசமுத்திரம் ஊராட்சி மன்ற தலைவர் ஜீனத் பர்வீன் யாகூப் செய்திருந்தார்.

    ×