கீழக்கடையம் ஊராட்சியில் அண்ணா மறுமலர்ச்சி திட்டசிறப்பு முகாம்

அண்ணா மறுமலர்ச்சி திட்டம் பிற துறை பணிகளை ஒருங்கிணைத்து செயல்படுவதற்கான சிறப்பு முகாம் நடைபெற்றது.முகாமில் கல்வித்துறை சார்பாக மகேஷ் குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கீழக்கடையம் ஊராட்சியில் அண்ணா மறுமலர்ச்சி திட்ட முகாம் நடைபெற்ற காட்சி.
கீழக்கடையம் ஊராட்சியில் அண்ணா மறுமலர்ச்சி திட்ட முகாம் நடைபெற்ற காட்சி.
Published on

கடையம்:

கடையம் யூனியனுக்குட்பட்ட கீழக்கடையம் ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் பிற துறை பணிகளை ஒருங்கிணைத்து செயல்படுவதற்கான சிறப்பு முகாம் நடைபெற்றது.

கீழக்கடையம் ஊராட்சி மன்ற தலைவர் பூமிநாதன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் விக்டர் சேவியர்துரைசிங், வார்டு உறுப்பினர் வயலட் அல்லேலுயா ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக கடையம் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் ராஜசேகரன் கலந்து கொண்டு, கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தை பற்றி பேசினார். முகாமில் கல்வித்துறை சார்பாக மகேஷ் குமார், மாற்றுத்திறனாளி நலத்துறை சார்பாக சரவணன், தோட்டக்கலைத்துறை பானுமதி, சமூக நலத்துறை சார்பாக கார்த்திகேயன், சுகாதாரத்துறை ஆனந்தன், கால்நடைத்துறை சஹானா மற்றும் உள்ளாட்சி துறை சார்பாக பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஊராட்சி செயலர் ஜெயசக்திவேல் நன்றி கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com