search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Womens entitlement scheme"

    • ஒரு கோடியே 6 லட்சம் மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் வகையில் திட்டம் தொடங்கப்பட்டது.
    • தகுதி இருந்தும் ஆயிரம் ரூபாய் கிடைக்கப்பெறாத பெண்கள் மேல்முறையீடு செய்யலாம் என அரசு அறிவிப்பு.

    தமிழகத்தில் ஒரு கோடிக்கும் அதிகமான பெண்களுக்கு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் ரூ.1000 வழங்கப்பட்டு வருகிறது. கடந்த மாதம் இந்த திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். ஒரு கோடியே 6 லட்சம் மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் வகையில் திட்டம் தொடங்கப்பட்டது.

    இந்த திட்டத்தில் பயன்பெற விண்ணப்பித்து நிராகரிக்கப்பட்ட பெண்கள் மீண்டும் மேல்முறையீடு செய்ய வாய்ப்பு வழங்கப்பட்டது. அதன்படி இ-சேவை மையங்களில் பெண்கள் மீண்டும் விண்ணப்பித்து வந்தனர்.

    இந்நிலையில், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் இதுவரை 7 லட்சம் பேர் மேல்முறையீடு செய்துள்ளனர்.

    • தமிழக அரசின் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்காக விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன.
    • கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் தொடர்பாக இன்று முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை மேற்கொள்கிறார்.

    சென்னை::

    தமிழக அரசின் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்காக விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன.

    இந்நிலையில், சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இது தொடர்பாக இன்று ஆலோசனை நடைபெற உள்ளது.

    மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு முதல்கட்டமாக இதுவரை 79.66 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். நேற்று நடைபெற்ற முகாமில் 2.63 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.

    இரண்டாம் கட்ட முகாம்கள் வரும் 5-ம் தேதி முதல் 16-ம் தேதி வரை நடைபெற உள்ளன. மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் 4-ம் தேதி வரை மீண்டும் விண்ணப்பம் விநியோகிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    ×