என் மலர்
நீங்கள் தேடியது "முகாம்"
- லஷ்கர்-இ-தொய்பா உள்பட 9 பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன.
- பாகிஸ்தானில் 100-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
காஷ்மீரின் பகல்காமில் கடந்த ஏப்ரல் 22-ந்தேதி சுற்றுலா பயணிகள் உள்பட 26 பேரை பயங்கரவாதிகள் சுட்டுக்கொன்றனர். இத்தாக்குதலை லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத இயக்கத்தின் கிளை அமைப்பான தி ரெசிஸ்டன்ஸ் பிரண்ட் நடத்தியது.
இதற்கு பதிலடியாக ஆபரேசன் சிந்தூர் என்ற பெயரில் மே 7-ந்தேதி இந்தியா அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டது. ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டது. பாகிஸ்தானுக்குள் பல கிலோ மீட்டர் தூரத்துக்கு இந்திய போர் விமானங்கள் ஊடுருவி தாக்கியது.
பஹாவல்பூர், முரிட்கே, முசாபராபாத் மற்றும் பல இடங்களில் உள்ள லஷ்கர்-இ-தொய்பா உள்பட 9 பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன. மேலும் 100-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
இந்தியாவின் ஆபரேசன் சிந்தூர் தாக்குதலில் தங்களது முகாம்கள் அழிக்கப்பட்டதாக லஷ்கர்-இ-தொய்பா மற்றும் ஜெய்ஷ்-இ-முகமது இயக்க பயங்கரவாதிகள் ஒப்புக்கொண்டனர்.
இந்தநிலையில் ஆபரேசன் சிந்தூர் நடவடிக்கை எதிரொலியால் பாகிஸ்தானை தளமாகக் கொண்ட பயங்கரவாத குழுக்களான ஜெய்ஷ்-இ-முகமது, ஹிஸ்புல் முஜாஹிதீன் ஆகியவை பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்து தங்களது முகாம்களை வேறு இடத்துக்கு மாற்ற தொடங்கி உள்ளன. இதை இந்திய ராணுவ வட்டாரங்கள் கண்டறிந்து உள்ளது.
பயங்கரவாதிகள் தங்களது முகாம்களை ஆப்கானிஸ்தான் எல்லை அருகே உள்ள கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் அமைக்கும் நடவடிக்கையை எடுத்து வருகிறார்கள்.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியை இந்தியத் தாக்குதல்களுக்கு ஆளாகக்கூடியதாக பயங்கரவாதிகள் கருதுகிறார்கள்.
இதையடுத்து இந்திய எல்லையில் இருந்து அதிக தூரத்தில் ஆப்கானிஸ்தான் எல்லைக்கு அருகே உள்ள கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் பயங்கரவாத முகாம்களை அமைக்க முடிவு செய்துள்ளனர்.
இந்தியாவின் அதிரடி நடவடிக்கையால் பயங்கரவாதிகள் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்து ஓட்டம் பிடித்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- வீடு வீடாகச் சென்று மக்களிடம் தகவல் தெரிவித்து விண்ணப்பப் படிவங்கள் வழங்கும் பணி நாளை முதல் தொடங்கி நடைபெறும்.
- பொது மக்கள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் மற்றும் சென்னை மாநகராட்சியின் 6 வார்டுகளில் 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாம் வரும் 15-ந்தேதி தொடங்க உள்ளது. இதனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார்.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
தமிழ்நாடு முதலமைச்சர் 15.07.2025 அன்று "உங்களுடன் ஸ்டாலின்" திட்டத்தின் கீழ் முதல் கட்டமாக நடத்தப்படும் முகாமினை, கடலூர் மாவட்டம் சிதம்பரம் நகராட்சியில் தொடங்கி வைக்க உள்ளார். இந்தத் திட்டம் ஜூலை 15 முதல் நவம்பர் மாதம் வரை அனைத்து மாவட்டங்களிலும் நடைபெற உள்ளது.
இதனைத் தொடர்ந்து பெருநகர சென்னை மாநகராட்சியில் 15.7.2025 அன்று மாதவரம் மண்டலத்தில் வார்டு - 25, தண்டையார்பேட்டை மண்டலத்தில் வார்டு - 38, திரு.வி.க நகர் மண்டலத்தில் வார்டு - 76, தேனாம்பேட்டை மண்டலத்தில் வார்டு - 109, வளசரவாக்கம் மண்டலத்தில் வார்டு - 143 அடையாறு மண்டலத்தில் வார்டு - 168 ஆகிய 6 வார்டுகளில் "உங்களுடன் ஸ்டாலின்" திட்ட முகாம் தொடங்கி நடைபெற உள்ளது.
இதனையொட்டி நாளை (07.07.2025) 6 வார்டுகளிலும் தன்னார்வலர்கள் வாயிலாக வீடு வீடாகச் சென்று விண்ணப்பங்கள் வழங்கும் பணி தொடங்குகிறது.
பெருநகர சென்னை மாநகராட்சியில் "உங்களுடன் ஸ்டாலின்" திட்ட முகாம் மண்டலம் 1 முதல் 15 வரை உள்ள 200 வார்டுகளில் நாள்தோறும் சராசரியாக 6 வார்டுகளில் முகாம்கள் நடைபெற உள்ளது. மண்டலம் 1 முதல் 15 வரை 200 வார்டுகள் உள்ளன.
இதில் ஒவ்வொரு வார்டிலும் தலா இரண்டு முறை முகாம்கள் என 400 முகாம்கள் 15.07.2025 அன்று முதல் 31.10.2025 வரை நடைபெறவுள்ளது. முகாம்கள் குறித்த விவரங்களையும், விண்ணப்பப்படிவம் மற்றும் தகவல்களையும் சுமார் 2000 தன்னார்வலர்கள் மக்களிடம் தெரிவித்து வழங்கும் பணியினை மேற்கொள்வார்கள்.
முதற்கட்டமாக 15.07.2025 முதல் 14.08.2025 வரை காலை 09.00 முதல் மாலை 03.00 மணி வரை பெருநகர சென்னை மாநகராட்சியில் மண்டலம் 1 முதல் 15 வரைலுள்ள 200 வார்டுகளில் திட்டமிடப்பட்ட 109 வார்டுகளில் "உங்களுடன் ஸ்டாலின்" முகாம்கள் நடத்தப்பட உள்ளன.
பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 109 வார்டுகளில் நடைபெறவுள்ள "உங்களுடன் ஸ்டாலின்" முகாம்கள் குறித்த விவரங்களை ஒவ்வொரு முகாமும் திட்டமிட்டபடி நடைபெற உள்ள 7 தினங்களுக்கு முன்பாக தன்னார்வலர்கள் மூலம் வீடு வீடாகச் சென்று மக்களிடம் தகவல் தெரிவித்து விண்ணப்பப் படிவங்கள் வழங்கும் பணி நாளை (07.07.2025) முதல் தொடங்கி நடைபெறும்.
இதில் "உங்களுடன் ஸ்டாலின்" முகாம் நடைபெறும் நாள், இடம் குறித்த விவரங்கள் மற்றும் 13 அரசுத்துறைகள் மூலம் வழங்கப்படவுள்ள 43 சேவைகள் குறித்த முழு விவரங்கள் ஆகியவற்றை பொதுமக்களுக்கு விவரித்து பயன்களுக்கான தகுதிகள், தேவைப்படும் ஆவணங்கள் குறித்து பொதுமக்கள் பயன் பெறும் அனைத்து விவரங்களும் தெரிவிக்கப்படும்.
இந்த முகாம்களில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெறத் தகுதியுள்ள விடுபட்ட மகளிர் எவரேனும் இருப்பின் முகாம் நடைபெறும் நாளன்று நேரடியாகச் சென்று தங்கள் விண்ணப்பத்தினை அளிக்கலாம். கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கான விண்ணப்பம் "உங்களுடன் ஸ்டாலின்" முகாம்களில் மட்டுமே வழங்கப்படும்.
இம்முகாம்களில் பெறப்படும் விண்ணப்பங்கள் மீது 45 நாட்களில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அத்துடன் முகாம்களுக்கு வருகை தரும் பொதுமக்களின் உடல் நலனைப் பேணும் வகையில், மருத்துவ சேவைகளை வழங்க, மருத்துவ முகாம்களும் நடத்தப்படும்.
இந்தப் பணி மூன்று மாதங்கள் தொடர்ச்சியாக நடைபெறும். "உங்களுடன் ஸ்டாலின்" திட்டத்தில் பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நடைபெறும் முகாம்களில் முகாம் நடைபெறும் வார்டில் உள்ள பொது மக்கள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது."
இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
- வருகிற ஜூலை 15 முதல் மகளிர் உரிமைத் தொகைக்கு பெண்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பு.
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்திலும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தஞ்சாவூரில் நடைபெற்ற அரசு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று பேசினார். அப்போது அவர்," மக்களின் குறைகளை போக்குவதற்காக உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும். 10,000 உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் நடத்தப்படும்" என்றார்.
மக்களின் குறைகளை தீர்க்க, அரசு சேவைகளை பெற ஜூலை 15ஆம் தேதி முதல் அக்டோபர் மாதம் வரை தமிழ்நாடு முழுவதும் 10,000 இடங்களில் 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம்கள் நடத்தப்படும் என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக எக்ஸ் தள பக்கத்திலும் அறிவிக்கப்பட்டுள்ளது.
- சேலம் உருக்காலை நிர்வா கத்தின் சார்பில் மாற்றுத்திறனாளி களுக்கான உதவி உபகர ணங்கள் வழங்க அளவீடு செய்யும் முகாம் தாரமங்கலம் அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
- 96 மாற்று திறனாளிகள் கலந்து கொண்டு தங்களுக்கு தேவையான உபகரணங்கள் மற்றும் அதற்கான அளவு எடுத்துகொண்டனர்.
தாரமங்கலம்:
சேலம் உருக்காலை நிர்வா கத்தின் சார்பில் மாற்றுத்திறனாளி களுக்கான உதவி உபகர ணங்கள் வழங்க அளவீடு செய்யும் முகாம் தாரமங்கலம் அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இதில் தாரமங்கலம் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த 96 மாற்று திறனாளிகள் கலந்து கொண்டு தங்களுக்கு தேவையான உபகரணங்கள் மற்றும் அதற்கான அளவு எடுத்துகொண்டனர்.
இதில் கலந்துகொண்ட வர்களுக்கு ஊன்றுகோள், செவிதிரன் கருவி, செயற்கை கால், பேட்டரி சைக்கிள், கையுரை, வீல்சேர் உள்ளிட்ட உபகரணங்கள் வழங்க தேர்வு செய்தனர்.
இதற்கான கருவிகள் இந்திய செயற்கை அவயங்கள் உற்பத்தி கலகத்தில் தயார் செய்து வருகிற டிசம்பர் 3-ந் தேதி உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தில் வழங்க உள்ளதாக தகவல் தெரிவித்தனர்.
இந்த முகாமில் சேலம் உருக்கு ஆலை நிர்வாகத்தின் சார்பில் உலகநாதன், வெங்கடாசலபதி, ஆகியோறும், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் கண்ணன், பேச்சு பயிற்சி நிபுணர் ஸ்ரீ தேவி மற்றும் எக்காம்வெல் தொண்டு நிறுவனம், ஒருங்கிணைந்த கல்வி திட்ட சிறப்பு பயிற்று னர்கள், முட நீக்கு வல்லுநர்கள் கலந்து கொண்டனர்.
- நாளை (சனிக்கிழமை) சிறப்பு அஞ்சல் சேமிப்பு கணக்கு சேகரிப்பு முகாம் அனைத்து அஞ்சலகங்களிலும் நடைபெற உள்ளது.
- சேமிப்பு திட்டங்கள் ரூ.100 முதல் ஆரம்பமாகின்றது. உச்ச வரம்பு ஏதும் இல்லை.
சேலம்:
சேலம் கிழக்கு கோட்ட முதுநிலை அஞ்சல் கண்காணிப்பாளர் அருணாசலம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
வருகிற 30-ந் தேதி உலக சிக்கன நாள் கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி நாளை (சனிக்கிழமை) சிறப்பு அஞ்சல் சேமிப்பு கணக்கு சேகரிப்பு முகாம் அனைத்து அஞ்சலகங்களிலும் நடைபெற உள்ளது. ஒருவர் தனது சராசரி தேவைகளுக்கு பிறகு சேமிக்கும் சிறிய பணமும் சேமிப்பாகும். எனவே, பொதுமக்கள் அனைவரும் ஒவ்வொரு ரூபாயும் சரியான முறையில் சேமிக்கப்படுகிறது என்பதை உறுதி செய்ய அஞ்சலகங்களின் சேமிப்பு கணக்கு சிறந்ததாகும்.
அஞ்சலகத்தில் எல்லா பிரிவினர், வயதினருக்கும் ஏற்ற சேமிப்பு திட்டங்கள் ரூ.100 முதல் ஆரம்பமாகின்றது. உச்ச வரம்பு ஏதும் இல்லை. இதுவரை அஞ்சலக சேமிப்பு திட்டத்தில் சேர்ந்து பயன் பெறாத பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி எளிய முறையில் கணக்கு தொடங்கலாம். எனவே, அஞ்சலக வாடிக்கையாளர்கள் தங்களுக்கு ஏற்ற வேறு திட்டத்தில் சேர்ந்து கூடுதல் பயன்பெற கேட்டுக்கொள்ளப்படு கிறார்கள். மேலும், கூடுதல் விவரங்களுக்கு அருகில் உள்ள அஞ்சலகங்களை தொடர்பு கொள்ளலாம். உலக சிக்கன தினத்தை முன்னிட்டு அனைத்து பெரிய தபால் அலுவலகங்களிலும் பொதுமக்கள் வசதிக்காக சிறப்பு கவுன்டர் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- முகாமை மருத்துவர் பிரேமலதா குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.
- மருத்துவமனை கண்காணிப்பாளர் ஜெஸ்லின் மார்பக பரிசோதனையின் அவசியத்தை எடுத்துக் கூறினார்.
தென்காசி:
தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவ மனையில் 'பிங்க் அக்டோபர் 2022' கொண்டாடப்பட்டது. இதையொட்டி மார்பக புற்றுநோய் பரிசோதனை மற்றும் விழிப்புணர்வு முகாமை இணை இயக்குனர் நலப்பணிகள் மருத்துவர் பிரேமலதா குத்துவிளக் கேற்றி தொடங்கி வைத்தார்.
மாவட்ட தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் மருத்துவர் ஜெஸ்லின் மார்பக பரிசோதனையின் அவசியத்தையும், கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகளைப் பற்றியும் எடுத்துக் கூறினார்.
முகாமில் அறுவை சிகிச்சை நிபுணர்கள் சொர்ணலதா, விஜயகுமார், முத்துக்குமாரசாமி, கார்த்திக், ஜெரின், விக்னேஷ்,பொது மருத்துவர்கள் லதா,கீதா, மல்லிகா,ஸ்கேன் மருத்துவர் நாகஜோதி, காது மூக்கு தொண்டை நிபுணர் மணிமாலா, மகப்பேறு மருத்துவர்கள்,செவிலிய கண்காணிப்பாளர்கள் பத்மாவதி, திருப்பதி, பயிற்சி மருத்துவர்கள் மேக்லி, எஸ்தர்,மருத்துவமனை செவிலியர்கள் மருத்துவமனை பணியாளர்கள் என அனைவரும் முகாமில் கலந்து கொண்டனர்.
இதில் 35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு கீழ்கண்ட அறிகுறிகளான மார்பில் கட்டி, வலி, மார்பகக் காம்புகள் உள்போகுதல், மார்பகக் காம்புகளில் இருந்து திரவம் வருதல், மார்பக சருமம் சிவந்து போதல், குடும்பத்தில் யாருக்கேனும் மார்பக புற்றுநோய் இருத்தல் போன்ற ஏதேனும் தொந்தரவு இருப்பவர்கள் முகாமில் கலந்து கொண்டு பயன் பெற்றனர். தென்காசி மாவட்டத்தை சார்ந்த அரசு அறுவை சிகிச்சை நிபுணர்கள், மகப்பேறு நிபுணர்கள்,ஸ்கேன் மருத்து வர்கள்,பொது மருத்துவர்கள் என பலர் கலந்து கொண்டு பரிசோதனை செய்து சிகிச்சை பெற்றனர்.
முகாமில் சுமார் 92 பயனாளிகள் பயன் பெற்றனர்.அனைவருக்கும் மார்பக பரிசோதனை செய்து, ஸ்கேன் மற்றும் மாமோ கிராம் செய்து சிகிச்சை அளி க்கப் பட்டது. அனைத்து ஏற்பாடு களை யும் உறைவிட மருத்துவர் எஸ் எஸ் ராஜேஷ் ஏற்பாடு செய்திருந்தார். என்.ஹச்.எம் நோடல் ஆபீசர் மருத்துவர் கார்த்திக் அறிவுடை நம்பி நன்றி கூறினார்.
- காதார துறை சார்பில் ஊராட்சி ஒன்றிய அலுவலக ஊழியர்கள், ஊராட்சி மன்ற ஊழியர்களுக்கு வட்டார சுகாதார அலுவலர் தலைமையில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.
- இதில் உயர் ரத்த அழுத்தம், சக்கரைநோய் பரிசோதனை நடத்தப்பட்டது. மேலும் காய்ச்சல், சளிக்கு மருந்து வழங்கப்பட்டது.
ஏற்காடு:
ஏற்காடு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சுகாதார துறை சார்பில் ஊராட்சி ஒன்றிய அலுவலக ஊழியர்கள், ஊராட்சி மன்ற ஊழியர்களுக்கு வட்டார சுகாதார அலுவலர் தாம்சன் தலைமையில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.
இம்முகாமை ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் முரு கன் தொடங்கி வைத்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் வெங்கடேசன் வரவேற்றார். இதில் உயர் ரத்த அழுத்தம், சக்கரைநோய் பரிசோதனை நடத்தப்பட்டது. மேலும் காய்ச்சல், சளிக்கு மருந்து வழங்கப்பட்டது.
பிரியா தலைமையிலான மருத்துவ குழுவினர் ஊழியர்களை பரிசோதித்த னர். இம்முகாமில் ஊராட்சி ஒன்றிய ஊழியர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். வட்டார சுகாதார மேற்பார்வை யாளர் செல்வகுமார் ஏற்பாடு களை செய்திருந்தார்.
- கரூரில் நாளை அஞ்சல் குறைதீர் முகாம் நடந்தது
- குறைகளை நேரிலோ, தபால் மூலமாகவோ தெரிவிக்கலாம்
கரூர்:
கரூர் கோட்ட அஞ்சல் துறை அலுவல கத்தில், சிறப்பு குறைதீர் முகாம் நாளை (4-ந் தேதி ) நடக்கிறது. இதுகுறித்து, கோட்ட அஞ்சல் துறை கண்காணிப்பாளர் சிவக்குமார் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடந்த மாதம் 31ம் தேதி முதல் வரும் 6ம் தேதி வரை தபால் துறை விழிப்புணர்வு வாரம் கடைப்பிடிக்கப்படுகிறது. அதன்படி, கரூர் கோட்ட தபால் அலுவலகத்தில், நாளை மதியம் 3 மணிக்கு சிறப்பு குறைதீர் முகாம் நடக்கிறது. இதில், தபால் நிலையங்களில் அஞ்சல் சேவை தொடர்பான குறைகளை, வாடிக்கையாளர்கள் நேரிலோ, தபால் மூலமாகவோ தெரிவிக்கலாம். மேலும், dokarur.tn@indiapost.gov.in என்ற மின்னஞ்சல் மூலமாகவும் தெரிவிக்கலாம். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- நாட்டு நலப்பணி திட்ட 7 நாள் சிறப்பு முகாம்.
- “பறவைகள் பாதுகாப்பு” என்ற தலைப்பில் நாகப்பட்டினம் வனச்சரக அலுவலர் உரையாற்றினார்.
நாகப்பட்டினம்:
நாகூர் தேசிய மேல்நிலை ப்பள்ளி நாட்டு நல பணி திட்ட 7 நாள் சிறப்பு முகாம் முட்டம் கிராமத்தில் நடைபெற்று வருகிறது. தேசிய பசுமை படை சார்பில் பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டு அவர்களது இல்லங்களில் மரக்கன்றுகள் நடப்பட்டன.
"பறவைகள் பாதுகாப்பு" என்ற தலைப்பில் நாகப்பட்டினம் வனச்சரக அலுவலர் ஆதி லிங்கம் உரையாற்றினார்.
நகராட்சி துணைத் தலைவர் செந்தில்குமார், தேசிய பசுமை படை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மா.முத்தமிழ் ஆனந்தன். மரக்கன்றுகளை இலவசமாக வழங்கிய வெங்கடேசன். மற்றும் ஆசிரியர்கள் செங்குட்டுவன், முத்துக்குமார், விமல், தேசிய பசுமைப்படை ஆசிரியர் சக்தி வேல், ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதற்கான ஏற்பாடுகளை நாட்டு நலப் பணித்திட்ட அலுவலர் சுரேஷ் செய்திருந்தார்.
- அண்ணா மறுமலர்ச்சி திட்டம் சிறப்பு முகாம் நடைபெற்றது
- கல்லாலங்குடி ஊராட்சியில்
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தாலுகா திருவரங்குளம் ஒன்றி யம் கல்லாலங்குடி ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறும லர்ச்சி திட்டம் 2021-2022 பிற துறை பணிகளை ஒருங்கிணைத்து திட் டம் செயல்படுத்துவதற்கான சிறப்பு முகாம் ஊராட்சி மன்ற தலைவர் மலர் பழனிச்சாமி தலைமையில் நடைபெற்றது.
இத்திட்டத்தின் நோக்கம் குறித்து மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் அறங்குழவன் பேசினார். அப்போது அவர் தெரிவித்ததாவது:-
பெரும்பாலான உள்ளாட்சி நிறுவனங்கள் அவற்றின் தேவைகளை நிறைவு செய்ய போதிய சொந்த நிதி ஆதா ரங்கள் இல்லாததால் பல்வேறு திட்ட நிதி ஒதுக்கீடுகளை எதிர்நோக்கியே உள்ளன. தற்போது உள்ள திட்டங்களை செயல்படுத்துவதற்கு அவற்றின் வழி காட்டி நெறிமுறைகள் எளிமையானதாக இருக்கவும், உள்ளாட்சி நிறுவனங்கள் தங்களின் விருப்ப பணிகளை எடுத்துச் செய்யும் வகையி லும், கிராம வளர்ச்சிக்கு மிக அத்தியாவசியமாக தேவைப்படும் மத் திய அரசு திட்டங்களின் கீழ் எடுத்துச் செல்ல இயலாத அனைத்துக் கூறுகளையும் உள்ளடக்கியதாக உள்ள புதிய திட்டமே 'அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டம்' ஆகும் என பொது மக்களுக்கு விளக்கம் அளித்தார்.
சிறப்பு முகாமில் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் விமலா அறிவழகன், வேளாண்மை துறை மற்றும் தோட்டக்கலைத்துறை குணசீலன், இளமாறன், வெற்றியப்பன், வார்டு உறுப்பினர்கள், பொது மக்கள் கலந்து கொண்டனர். கூட்ட ஏற்பாட்டினை ஊராட்சி செயலாளர் ஜெனித் அரிஸ்டாட்டில் ஏற்பாடு செய்திருந்தார்.
- மகளிர் மற்றும் இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது.
- முகாமில் கடத்தூரை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களை சேர்ந்த மகளிர் மற்றும் இளைஞர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
கடத்தூர்,
தருமபுரி மாவட்டம், கடத்தூர் பேரூராட்சி பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி யில் மகளிர் மற்றும் இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது.
முகாமில் கடத்தூரை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களை சேர்ந்த மகளிர் மற்றும் இளைஞர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் தருமபுரி கலெக்டர் சாந்தி நேரில் சென்று பயிற்சிக்கு தேர்வான நபர்களுக்கு அதற்கான உத்தரவு களை வழங்கினார். நிகழ்சியில் ஒன்றிய குழுதலைவி உதயா, பேரூராட்சி கவுன்சிலர்கள் முனிராஜ், சபியுல்ல உள்டோர் கலந்துகொண்டனர்.
- நாசரேத் ஜெயராஜ் அன்னபாக்கியம் சி.எஸ்.ஐ. பொறியியல் கல்லூரியில் இலவச கண் பரிசோதனை முகாம் நடந்தது.
- முகாமில் 350 மாணவ- மாணவிகள் கலந்து கொண்டு கண் பரிசோதனை செய்தனர்.
நாசரேத்:
நாசரேத் ஜெயராஜ் அன்னபாக்கியம் சி.எஸ்.ஐ. பொறியியல் கல்லூரியில் நெல்லை டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை மற்றும் கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்டம் சார்பில் இலவச கண் பரிசோதனை முகாம் நடந்தது.கல்லூரி முதல்வர் ஜெயக்குமார் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.கணினி துறை தலைவி பேராசிரியை ஜெமில்டா ஆரம்ப ஜெபம் செய்தார். முகாமில் சுமார் 350 மாணவ- மாணவிகள் கலந்து கொண்டு கண் பரிசோதனை செய்தனர். இதில் 70 மாணவ, மாணவி களுக்கு மேல்சிகிச்சைக்கு பரிந்துரை செய்யப்பட்டது.
ஏற்பாடுகளை கல்லூரி தாளாளர் ஜெயக்குமார் ரூபன்,முதல்வர் ஜெயக்குமார், கல்லூரி நாட்டு நலப் பணித்திட்ட அலுவலர் ஞானசெல்வன், பேராசிரியை ஜெனிபர் கிரேனா மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.






