இந்து அறநிலையத்துறையில் காலி பணியிடங்களை நிரப்ப கோரிக்கை

தமிழகம் முழுவதும் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் ஏராளமான கோவில்கள் உள்ளது.கோவில்களுக்கு நிலம், கடைகள் உள்ளிட்ட பல்வேறு சொத்துக்கள் உள்ளன.
கோப்புபடம்.
கோப்புபடம்.
Published on

பல்லடம் :

இந்து அறநிலையத்துறையில் காலி பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் பூசாரிகள் சங்கம் வலியுறுத்தி உள்ளது. இது குறித்து பூசாரிகள் நலச் சங்கத்தின் மாநில தலைவர் வாசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழகம் முழுவதும் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் ஏராளமான கோவில்கள் உள்ளது. இந்த கோவில்களுக்கு நிலம், கடைகள் உள்ளிட்ட பல்வேறு சொத்துக்கள் உள்ளன. இவற்றை நிர்வகிக்கும் இந்து அறநிலையத்துறையில், அலுவலர் மற்றும் ஊழியர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன. இதனால் ஒரு அலுவலரே பல்வேறு பணிகளை மேற்கொள்ள வேண்டிய நிலை உள்ளது. இதனால் ஊழியர்கள் கூடுதல் பணிச்சுமையால் அவதிப்படுகின்றனர்.

மேலும் கோவில்களில் ஒரு கால பூஜை திட்டம், ஓய்வூதிய திட்டம், வைப்பு நிதி திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டப் பணிகளை உரிய காலத்தில் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இது போன்ற திட்டப் பணிகள் தேங்குவதால் பூசாரிகள், ஓய்வூதியர்கள் உள்ளிட்ட பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே தமிழக அரசு நடவடிக்கை எடுத்து இந்து அறநிலையத்துறையில் உள்ள காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com