என் மலர்
நீங்கள் தேடியது "Electricity board"
- சென்னையில் நாளை அதிகபட்சமாக மணிக்கு 80 கி.மீ. வேகத்தில் காற்று வீச வாய்ப்புள்ளது.
- போதுமான அளவு மின் கம்பங்கள், மின் கம்பிகள், மின்மாற்றிகள் இருப்பதாக தகவல்.
தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகி உள்ள டிட்வா புயல் சென்னைக்கு தென்கிழக்கே 380 கி.மீ. தொலைவில் உள்ளது. டிட்வா புயல் வடக்கு-வடமேற்கு திசையில் மணிக்கு 8 கி.மீ. வேகத்தில் மெதுவாக நகர்ந்து வருகிறது. வடக்கு - வடமேற்கில் நகர்ந்து 30-ந்தேதி வட தமிழ்நாடு, புதுவை, ஆந்திர கடற்கரைகளுக்கு அருகே தென்மேற்கு வங்கக்கடலை வந்தடையும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் இன்று 7 மாவட்டங்களில் மணிக்கு 70 முதல் 90 கி.மீ. வேகத்தில் காற்று வீச வாய்ப்பு உள்ளது. கடலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரத்தில் 90 கி.மீ. வேகத்தில் காற்று வீச வாய்ப்பு உள்ளது.
சென்னையில் நாளை அதிகபட்சமாக மணிக்கு 80 கி.மீ. வேகத்தில் காற்று வீச வாய்ப்புள்ளது. திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம், தூத்துக்குடி, நெல்லை, குமரியில் நாளை 80 கி.மீ. வேகத்தில் காற்று வீச வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், வடகிழக்கு பருவமழை மற்றும் டிட்வா புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழ்நாடு மின்சார வாரியம் தயார் நிலையில் உள்ளதாக தெரிவித்துள்ளது.
3.30 லட்சம் மின் கம்பங்கள், 9,568 கி.மீ. மின் கம்பங்கள், 13,029 மின்மாற்றிகள் கையிருப்பில் உள்ளதாக மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. மேலும், போதுமான அளவு மின் கம்பங்கள், மின் கம்பிகள், மின்மாற்றிகள் இருப்பதாகவும் மின்சார வாரியம் உறுதி அளித்துள்ளது.
- விஜய் பேசி கொண்டிருந்தபோது மின்சாரம் துண்டிக்கப்பட்டதாக புகார் எழுந்தது.
- கரூர் மின்வாரிய அதிகாரி கண்ணன் சிபிஐ முன் விசாரணைக்காக ஆஜராகி உள்ளார்.
கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளது.
சிபிஐ விசாரணைக்காக மின்வாரிய அதிகாரிகள் 2 பேர் நேரில் ஆஜராகியுள்ளனர்.
கரூர் மின்வாரிய அதிகாரி கண்ணன் சிபிஐ முன் விசாரணைக்காக ஆஜராகி உள்ளார்.
கரூரில் நடைபெற்ற தாவெக கூட்டத்தில் விஜய் பேசி கொண்டிருந்தபோது மின்சாரம் துண்டிக்கப்பட்டதாக புகார் எழுந்தது.
விஜய் பேசி கொண்டிருந்தபோது மின்சாரம் துண்டிக்கப்படவில்லை என மின்வாரியம் தரப்பில் கூறியிருந்தது.
இந்நிலையில், மின்வாரிய அதிகாரிகளிடம் சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது.
- தமிழ்நாட்டில் மின்துறை சார்பாக சிறப்பு பராமரிப்பு பணிகள் நடைபெற்றது.
- மின்மாற்றிகள் உள்ளிட்ட பொருட்கள் தேவையான அளவு இருப்பதை உறுதி செய்துள்ளோம்.
கனமழை தொடரும் நிலையில் மின்வாரிய தலைமை அலுவலகத்தில் அமைச்சர் சிவசங்கர் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மின்சாரத்துறை அமைச்சர் சிவசங்கர் கூறியதாவது:-
வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில், மின்சார தேவை மற்றும் உற்பபத்தி ஆகியவை குறித்து ஆய்வு மேற்கொண்டோம்.
வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள மின்வாரியம் தயார் நிலையில் உள்ளது.
தமிழ்நாட்டில் மின்துறை சார்பாக சிறப்பு பராமரிப்பு பணிகள் நடைபெற்றது.
மின்மாற்றிகள் உள்ளிட்ட பொருட்கள் தேவையான அளவு இருப்பதை உறுதி செய்துள்ளோம்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- விஜய் பேசியபோது மின்தடை ஏற்பட்டதால் தான் கூட்ட நெரிசல் ஏற்பட்டது என குற்றச்சாட்டு.
- மின்சாரத்தை துண்டிக்க வேண்டும் என்ற தவெகவினரின் கோரிக்கை ஏற்கப்படவில்லை.
கரூரில் நேற்று இரவு தமிழக வெற்றிக்கழகத்தின் சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 9 குழந்தைகள் உட்பட 39 பேர் உயிரிழந்தனர்.
இச்சம்பவம் தமிழகம் மட்டுமல்லாது நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.
இந்நிலையில், கரூரில் விஜய் பேசியபோது மின்தடை ஏற்பட்டதால் தான் கூட்ட நெரிசல் ஏற்பட்டது என குற்றச்சாட்டுக்கு மின்சாரத்துறை மறுப்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மின்வாரிய தலைமை பொரியாளர் ராஜலட்சுமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்," கரூரில் விஜய் பிரசாரத்தின் போது மின்தடை ஏற்பவில்லை.
கரூரில் விஜய் உரையாற்றும்போது தெரு விளக்குகள் எரிந்து கொண்டிருந்தன.
நிகழ்ச்சி ஏற்பட்டாளரின் ஜெனரேட்டர் பயபன்படுத்தி எரியவிட்ட விளக்குகள்தான் அணைந்தன. மின்தடை செய்யவில்லை.
மின்சாரத்தை துண்டிக்க வேண்டும் என்ற தவெகவினரின் கோரிக்கை ஏற்கப்படவில்லை, நிராகரிக்கப்பட்டது.
சிலர் மரத்தில் ஏறியபோது மின்தடை செய்து போலீஸ் உதவியுடன் அவர்கள் இறங்கிய பின்பு மீண்டும் மின் விநியேகாம் செய்யப்பட்டது.
விஜய் வந்து பிரசாரம் செய்தபோது மின்தடை செய்யப்படவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
- நாகை, திருவாரூர் மாவட்டங்களில் விஜய் பரப்புரை மேற்கொள்ள இருக்கிறார்.
- விஜய் வரும் வழியில் உள்ள உயர் மின் அழுத்தக் கம்பிகளில் மின்சாரத்தை நிறுத்த வேண்டும் என கோரிக்கை.
தமிழகத்தில் சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு (2026) நடைபெற உள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், தமிழகம் முழுவதும் கடந்த 13-ந் தேதி சுற்றுப்பயணத்தை தொடங்கியுள்ளார்.
அந்த வகையில், நாளை (சனிக்கிழமை) நாகை, திருவாரூர் மாவட்டங்களில் விஜய் பரப்புரை மேற்கொள்ள இருக்கிறார்.
இந்நிலையில், நாகையில் நாளை த.வெ.க. தலைவர் விஜய் பரப்புரைப் பயணம் செல்லும் வழியில் மின்சாரத்தை நிறுத்தம் செய்ய அக்கட்சியின் மாவட்டச் செயலாளர், மின் வாரியத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
விஜய் வரும் வழியில் உள்ள உயர் மின் அழுத்தக் கம்பிகளில் மின்சாரத்தை நிறுத்த வேண்டும் அல்லது, மின் ஊழியர்களை நியமித்து பாதுகாப்பு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.
இந்த நிலையில், நாகை மாவட்டத்தில் நாளை தவெக தலைவர் விஜய், பிரசாரம் மேற்கொள்ள செல்லும் பகுதிகள் மற்றும் உரையாற்றும் பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படும் என மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
நாகூர், புத்தூர் பகுதியில் விஜய் செல்லும்போது மின் விநியோகம் இருக்காது என மின்துறை தெரிவித்துள்ளது.
- முந்தைய உரிமையாளரின் ஒப்புதல் பெறும் படிவம் 2-ஐ, நுகர்வோரிடம் இருந்து பெற வேண்டியதில்லை என அறிவுறுத்தப்படுகிறது.
- பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த தலைமைப் பொறியாளர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழ்நாடு மின் உற்பத்திக் கழக வணிகப் பிரிவு சார்பில் அனைத்து தலைமைப் பொறியாளர்களுக்கு அனுப்பியுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
விண்ணப்பதார்களிடம் இருந்து ஏராளமான ஆவணங்களைக் கேட்பதால் வீட்டு மின் இணைப்பு பெயர் மாற்றம் செய்ய தேவையற்ற கால தாமதம் ஏற்படுகிறது. இப்பணிகளை விரைவுப்படுத்தும் வகையில், முந்தைய உரிமையாளரின் ஒப்புதல் பெறும் படிவம் 2-ஐ, நுகர்வோரிடம் இருந்து பெற வேண்டியதில்லை என அறிவுறுத்தப்படுகிறது.
அதேநேரம் விற்பனை பங்கு பிரித்தல், பரிசளித்தல் போன்றவற்றில் பெயர் மாற்றம் செய்ய வேண்டுமானால் விற்பனை பத்திரம், சொத்து வரி ரசீது, நீதிமன்ற தீர்ப்பு உள்ளிட்டவற்றில் ஏதேனும் ஒன்றையும், ஒப்புதல் கடிதம் ஆகியவற்றையும் சமர்ப்பிக்க வேண்டும்.
குடும்பத்தின் மூத்த உறுப்பினர்கள் உயிரிழந்தால், பெயர் மாற்றம் செய்ய வாரிசு சான்றிதழ் அல்லது அண்மைக் காலத்தில் பெறப்பட்ட சொத்து வரி ரசீது மற்றும் இழப்பீடு பத்திரத்தை சமர்ப்பிக்க வேண்டும்.
இது தொடர்பாக பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த தலைமைப் பொறியாளர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
- பெரும்பாலான இடங்களில் உதவியாளர் பணியிடமே நிரப்பப்படவில்லை.
- தற்காலிக பணியாளர்களை வைத்துதான் மின்வாரியம் இயங்கி வருகிறது.
திருப்பூர்:
வட கிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயாராகி வரும் நிலையில் மின் கம்பிகள் அறுந்து விழுவது,மின்கம்பம் சாய்வது, மின் கம்பிகள் மீது மரக்கிளை, மரங்கள் விழுவது போன்ற காரணங்களால் மின் சப்ளை தடைபடும். இத்தகைய பிரச்சினைகளை உடனுக்குடன் எதிர்கொண்டு தடையில்லா மின் சப்ளை வழங்க ஒவ்வொரு மின் பகிர்மான கழக வட்டத்திற்கும் செயற் பொறியாளர் தலைமையில் சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் மேற்பார்வையில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இது குறித்து திருப்பூர் மின்வாரிய அதிகாரிகள் கூறுகையில், குறிப்பிட்ட ஒரு பிரிவிற்கு உட்பட்ட இடத்தில் பாதிப்பு அதிகம் ஏற்பட்டு கூடுதல் பணியாளர்களின் உழைப்பு தேவைப்படும் போது, அருகேயுள்ள பிரிவில் இருந்து ஊழியர்கள் வரவழைக்கப்பட்டு பணி மேற்கொள்ளப்படும் என்றனர்.
திருப்பூர் தனி மாவட்டமாக இருந்தாலும் கோவை மண்டல மின் வாரிய கட்டுப்பாட்டில் தான் உள்ளது. கோவை மண்டலத்திற்கு உட்பட்ட கோவை, திருப்பூர், உடுமலை, பல்லடம், நீலகிரி மாவட்டத்தில் மின்வாரியத்தால் ஒரு பிரிவிற்கு 14 கம்பியாளர், 14 உதவியாளர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆனால், ஒவ்வொரு பிரிவிலும் அதிகபட்சம் 2 பேர் மட்டுமே பணியில் உள்ளனர். அதிலும் பெரும்பாலான இடங்களில் உதவியாளர் பணியிடமே நிரப்பப்படவில்லை.
ஒட்டு மொத்த கோவை மண்டலத்தில் மின்வாரியம் அனுமதித்துள்ள கம்பியாளர், உதவியாளர்கள் எண்ணிக்கை 5,921 பேர். ஆனால் பணியில் இருப்பவர்கள் வெறும் 482 பேர் மட்டுமே. 92 சதவீதம் காலி பணியிடம் நிரப்பப்படாமல் உள்ளது என்ற புள்ளி விபரத்தை மின்வாரிய தொழிற்சங்கத்தினர் வெளியிட்டு பணியாளர் பற்றாக்குறையால் ஊழியர்கள் படும் சிரமத்தை விளக்கும் வீடியோவை சமீபத்தில் சமூக வலைதளங்களில் வைரலாக்கினர். தற்காலிக பணியாளர்களை வைத்துதான் மின்வாரியம் இயங்கி வருகிறது.
இது குறித்து மின்வாரிய தொழிற்சங்கத்தினர் கூறுகையில், கோவை, திருப்பூர் உள்ளிட்ட இடங்களில் மின் ஊழியர் பற்றாக்குறையால் ஏற்பட்டுள்ள பணிச்சுமையால், பணிபுரியும் ஊழியர்களுக்கு மன உளைச்சல அதிகரித்துள்ளது. காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம் என்றார்.
- கோரிக்கைகளை வலியுறுத்தி மின்வாரிய ஊழியர்கள் வருகிற 10-ந் தேதி வேலைநிறுத்தம் நடத்தினர்.
- கடந்த 1.12.2019 முதல் வழங்க வேண்டிய ஊதிய விகித மாற்றத்தினை உடனடியாக வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.
விருதுநகர்
தமிழ்நாடு எலக்ட்ரிசிட்டி போர்டு எம்ப்ளாயீஸ் பெடரேஷன் மாநில பொதுச்செயலாளர் சேக்கிழார் விருதுநகரில் நிருபர்களுக்கு பேட்டி யளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
விவசாயிகளையும், சாமானிய மக்களையும் பாதிக்கக்கூடிய மின்சார சட்ட திருத்தம் 2022-ஐ திரும்ப பெற வேண்டும். மேலும் கடந்த 1.12.2019 முதல் வழங்க வேண்டிய ஊதிய விகித மாற்றத்தினை உடனடியாக வழங்க வேண்டும். வாரியத்தில் உள்ள 58 ஆயிரம் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும்.
கேங்மேன் பணி யிடத்திற்கு தேர்வு செய்யப்பட்டுள்ள 5,000 பேரை பணியமர்த்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டம் நடத்தியும் நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில் ஜனவரி 10-ந் தேதியன்று அனைத்து தொழிற்சங்கத்தினரும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளோம்.
தொடர் வேலை நிறுத்த போராட்டம் நடத்தவும் வாய்ப்புள்ளது. எனவே தமிழக அரசும், மின்வாரியமும் கோரிக்கை களை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதனை தொடர்ந்து தமிழ்நாடு விருதுநகர் மின் பகிர்மான வட்டக்கிளையின் பொதுக்குழு கூட்டம் திட்ட தலைவர் இளங்கோவன் தலைமையில் நடந்தது. மாநில நிர்வாகிகள் துரைப்பா ண்டியன், ஞானகுரு ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயலாளர் ராதா கிருஷ்ணன் செயல் அறிக்கை சமர்ப்பித்தார்.
பொருளாளர் பாலசுப்பி ரமணியன் வரவு, செலவு அறிக்கை வாசித்தார். மாநில நிர்வாகிகள் சேக்கிழார், மணிகண்டன், பாண்டியராஜ் ஆகியோர் அருப்புக்கோட்டை, ராஜபாளையம், விருதுநகர் கோட்ட நிர்வாகிகள் இளங்கோவன், மாயாண்டி, ராஜ்குமார் ஆகியோரை பாராட்டி பேசினர்.
இதனை தொடர்ந்து 15 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தலை வராக இளங்கோவனும், செயலா ளராக ஞான குருவும், செயல் தலை வராக தங்கவேலும், அமைப்பு செயலாளராக ராதாகிருஷ்ணனும், பொருளாளராக பாலசுப்பி ரமணியமும் தேர்வு செய்யப்பட்டனர்.
- மின்சாரம் தாக்கி ஒருவர் பலியானார்.
- மின்கம்பிகளுக்கும் கட்டடங்களுக்கும் போதிய இடைவெளி இருக்குமாறு கட்ட அறிவுறுத்தப்படுகிறார்கள்.
பல்லடம் :
பல்லடம் அருகே உள்ள அவிநாசிபாளையம் பகுதியில் விவசாய தொழிலாளி ஒருவர் தென்னை மரத்தில் குச்சி மூலம் தேங்காய் பறிக்க சென்றபோது மின் கம்பியில் குச்சி பட்டதால் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார். இந்த நிலையில் மின்கம்பங்களின் அருகே செல்லும்போது கவனமுடன் செயல்பட மின்வாரிய அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
இது குறித்து, பல்லடம் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் (பொறுப்பு ) திருஞானசம்பந்தர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள தெற்கு அவிநாசி பாளையத்தில் கடந்த 27 ந்தேதி அன்று, தென்னை மரத்தில் குச்சி மூலம் தேங்காய் பறிக்கச் சென்றபோது மின் கம்பிகளில், அந்த குச்சி பட்டதால் மின்சாரம் தாக்கி ஒருவர் பலியானார். எனவே இத்தகைய மின்விபத்துகளை தவிர்க்க விவசாயிகள், மின் கம்பிகள் அருகே செல்லும்போது மிகவும் எச்சரிக்கையுடன் பணியாற்றுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் பொதுமக்கள் கட்டடங்கள் கட்டும் போதும் இருக்கும் கட்டடங்களை விஸ்தரிக்கும் போதும் மின்கம்பிகளுக்கும் கட்டடங்களுக்கும் போதிய இடைவெளி இருக்குமாறு கட்ட அறிவுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- கேபிள் டிவி ஆபரேட்டர்களுக்கு மின்சார வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
- அனுமதி இன்றி மின்கம்பத்தில் கட்டப்பட்டுள்ள கேபிள் டிவி வயர்களை மின்வாரியமே அப்புறப்படுத்தும் என கூறியுள்ளது.
கமுதி
கமுதி மின்சார வாரிய உதவி செயற்பொறியாளர் பகிர்மானம் விஜயன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் கமுதி உபகோட்டத்திற்கு உட்பட்ட பகுதியான கமுதி நகர், கமுதி தெற்கு, கமுதி வடக்கு மற்றும் பெருநாழி அபிராமம் பிரிவு உட்பட்ட பகுதிகளில் மின்வாரிய அனுமதி இன்றி மின் கம்பத்தில் கட்டப்பட்டுள்ள கேபிள் டிவி வயர்கள் மற்றும் சாதனங்களை மின் விபத்துகளை தவிர்க்கும் பொருட்டு உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் கேபிள் டிவி உரிமையாளர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். தவறும் பட்சத்தில் பொதுமக்கள், மாணவ-மாணவியர் நலன் கருதி மின் கட்டமைப்புகளில் அனுமதி இன்றி மின்கம்பத்தில் கட்டப்பட்டுள்ள கேபிள் டிவி வயர்களை மின்வாரியமே அப்புறப்படுத்தும் என இதன் மூலம் எச்சரிக்கை விடுக்கப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- டிஜிட்டல் பணபரிமாற்றம் (மொபைல் டிரேன்ஸ்லேசன்) செய்யுமாறு கூறப்படும் போலியான தகவல்கள் சமூக வலைத்தளத்தில் பரவுவதை கண்டு மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்–டும்.
- தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் இணையதளம் www.tnebltd.gov.in வழியாக மின்கட்டணம் செலுத்தி மக்கள் பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
திருப்பூர்:
திருப்பூர் மின்சார வாரிய மேற்பார்வை பொறியாளர் சா.முத்துவேல் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
திருப்பூர் மின் பகிர்மான வட்டத்தில் மின் கட்டணம் செலுத்தாததால் மின் துண்டிப்பு செய்யப்படும் என குறுஞ்செய்தி மூலம் தகவல் கொடுத்து அதன் மூலம் டிஜிட்டல் பணபரிமாற்றம் (மொபைல் டிரேன்ஸ்லேசன்) செய்யுமாறு கூறப்படும் போலியான தகவல்கள் சமூக வலைத்தளத்தில் பரவுவதை கண்டு மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.
அவ்வாறான போலியான தகவல்கள் தங்களது செல்போனுக்கு கிடைக்கப்பெற்றால் தங்களது 10 இலக்க மின் இணைப்பு எண் மற்றும் நிலுவையில் உள்ள மின் கட்டணம் போன்ற தகவல்கள் அருகில் உள்ள மின்சார வாரிய அலுவலகத்தை தொடர்பு கொண்டு உறுதி செய்துகொள்ள வேண்டும்.
மேலும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் இணையதளம் www.tnebltd.gov.in வழியாக மின்கட்டணம் செலுத்தி மக்கள் பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- டிரான்ஸ் பார்மரில் வேலுசாமி ஏறி மின் கம்பியை பிடித்தார்.
- மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே இறந்தார்.
ஈரோடு:
திருப்பூர் மாவட்டம் காங்கயம் அருகே உள்ள வெள்ளகோவில் அடுத்த அய்யம்மபாளையம் மேட்டுபாளையம் பகுதியை சேர்ந்தவர் வேலுசாமி (49).
இவர் காங்கயம் பகுதியில் உள்ள மின் வாரிய அலுவலகத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.இவரது மனைவி கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இறந்து விட்டார்.
மேலும் அவருக்கு குழந்தைகள் இல்லாததால் அவரது தம்பியுடன் இருந்து வந்தார். மேலும் அவருக்கு மனநிலை பாதிக்கப்பட்டு வேலைக்கு செல்லாமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் வேலுசாமி ஈரோடு மாவட்டம் சிவகிரி அடுத்த அஞ்சூரில் உள்ள தனது அக்கா வீட்டுக்கு சென்று வருவதாக கூறி விட்டு சென்றார்.
இந்த நிலையில் சிவகிரி அடுத்த நல்லசெல்லிபாளையம் பகுதியில் உள்ள ஒரு டிரான்ஸ் பார்மரில் வேலுசாமி ஏறி மின் கம்பியை பிடித்தார். அப்போது அவர் மீது மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே இறந்தார்.
இதையடுத்து ஆம்புலன்சு மூலம் அவரது உடலை மீட்டு பெருந்துறை மருத்துவ கல்லூரி மருத்துவ மனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இது குறித்து சிவகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.






