என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

கரூர் த.வெ.க பிரசார கூட்டத்தின்போது மின்தடை இல்லை- மின்வாரிய தலைமை பொறியாளர்
- விஜய் பேசியபோது மின்தடை ஏற்பட்டதால் தான் கூட்ட நெரிசல் ஏற்பட்டது என குற்றச்சாட்டு.
- மின்சாரத்தை துண்டிக்க வேண்டும் என்ற தவெகவினரின் கோரிக்கை ஏற்கப்படவில்லை.
கரூரில் நேற்று இரவு தமிழக வெற்றிக்கழகத்தின் சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 9 குழந்தைகள் உட்பட 39 பேர் உயிரிழந்தனர்.
இச்சம்பவம் தமிழகம் மட்டுமல்லாது நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.
இந்நிலையில், கரூரில் விஜய் பேசியபோது மின்தடை ஏற்பட்டதால் தான் கூட்ட நெரிசல் ஏற்பட்டது என குற்றச்சாட்டுக்கு மின்சாரத்துறை மறுப்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மின்வாரிய தலைமை பொரியாளர் ராஜலட்சுமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்," கரூரில் விஜய் பிரசாரத்தின் போது மின்தடை ஏற்பவில்லை.
கரூரில் விஜய் உரையாற்றும்போது தெரு விளக்குகள் எரிந்து கொண்டிருந்தன.
நிகழ்ச்சி ஏற்பட்டாளரின் ஜெனரேட்டர் பயபன்படுத்தி எரியவிட்ட விளக்குகள்தான் அணைந்தன. மின்தடை செய்யவில்லை.
மின்சாரத்தை துண்டிக்க வேண்டும் என்ற தவெகவினரின் கோரிக்கை ஏற்கப்படவில்லை, நிராகரிக்கப்பட்டது.
சிலர் மரத்தில் ஏறியபோது மின்தடை செய்து போலீஸ் உதவியுடன் அவர்கள் இறங்கிய பின்பு மீண்டும் மின் விநியேகாம் செய்யப்பட்டது.
விஜய் வந்து பிரசாரம் செய்தபோது மின்தடை செய்யப்படவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.






