என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

த.வெ.க. சுற்றுப்பயணம்: நாகையில் நாளை மின்தடை- மின்சார வாரியம் அறிவிப்பு
- நாகை, திருவாரூர் மாவட்டங்களில் விஜய் பரப்புரை மேற்கொள்ள இருக்கிறார்.
- விஜய் வரும் வழியில் உள்ள உயர் மின் அழுத்தக் கம்பிகளில் மின்சாரத்தை நிறுத்த வேண்டும் என கோரிக்கை.
தமிழகத்தில் சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு (2026) நடைபெற உள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், தமிழகம் முழுவதும் கடந்த 13-ந் தேதி சுற்றுப்பயணத்தை தொடங்கியுள்ளார்.
அந்த வகையில், நாளை (சனிக்கிழமை) நாகை, திருவாரூர் மாவட்டங்களில் விஜய் பரப்புரை மேற்கொள்ள இருக்கிறார்.
இந்நிலையில், நாகையில் நாளை த.வெ.க. தலைவர் விஜய் பரப்புரைப் பயணம் செல்லும் வழியில் மின்சாரத்தை நிறுத்தம் செய்ய அக்கட்சியின் மாவட்டச் செயலாளர், மின் வாரியத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
விஜய் வரும் வழியில் உள்ள உயர் மின் அழுத்தக் கம்பிகளில் மின்சாரத்தை நிறுத்த வேண்டும் அல்லது, மின் ஊழியர்களை நியமித்து பாதுகாப்பு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.
இந்த நிலையில், நாகை மாவட்டத்தில் நாளை தவெக தலைவர் விஜய், பிரசாரம் மேற்கொள்ள செல்லும் பகுதிகள் மற்றும் உரையாற்றும் பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படும் என மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
நாகூர், புத்தூர் பகுதியில் விஜய் செல்லும்போது மின் விநியோகம் இருக்காது என மின்துறை தெரிவித்துள்ளது.






