என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "electrocution"

    • உயர் அழுத்த மின் கம்பி மீது கை பட்டதில் திருப்பவர் என்பவர் மீது மின்சாரம் பாய்ந்தது.
    • கோர விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்தனர்.

    விருதுநகர் மாவட்டம் காரிசேரி என்ற ஊரில் திருவிழாவுக்கு மைக் செட் அமைத்தபோது மின்சாரம் தாக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலியாகியுள்ளனர்.

    திருவிழாவுக்கு மைக் செட் அமைத்தபோது உயர் அழுத்த மின் கம்பி மீது கை பட்டதில் திருப்பவர் என்பவர் மீது மின்சாரம் பாய்ந்தது.

    திருப்பதியை காப்பற்ற முயன்ற அவரது மனைவி லலிதா மற்றும் திருப்பதியின் பாட்டி பாக்கியம் ஆகியோரும் மின்சாரம் தாக்கியது.

    இந்த கோர விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்தனர்.

    • பாவூர்சத்திரம் அருகே உள்ள குறும்பலாப்பேரி கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம்.
    • 10-ம் வகுப்பு வரை படித்துவிட்டு கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்

    தென்காசி:

    பாவூர்சத்திரம் அருகே உள்ள குறும்பலாப்பேரி கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகன் ஜெகன் (வயது 19). இவர் 10-ம் வகுப்பு வரை படித்துவிட்டு கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். நேற்று மாலை அவர் குளித்து விட்டு தனது வீட்டில் அமைக்கப்பட்டிருந்த ஆஸ்பெட்டாஸ் சீட் மேற்கூரை அருகே துணியை காய போட சென்றுள்ளார்.

    அப்போது அருகில் இருந்த இரும்பு கம்பியில் மின்கசிவு ஏற்பட்டு அவரை மின்சாரம் தாக்கியது. இதில் தூக்கி வீசப்பட்ட ஜெகன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த பாவூர்சத்திரம் போலீசார் ஜெகன் உடலை மீட்டு தென்காசி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


    • தென்னை மரத்தில் தேங்காய் பறிப்பதற்காக இரும்பு கம்பியால் தேங்காய் பறிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தார்.
    • அவினாசிபாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள கொடுவாய் வினோபா நகரை சேர்ந்த ராமசாமி என்பவரது மகன் பழனிசாமி (வயது 47). இவருக்கு சொந்தமாக தென்னந்தோப்பு உள்ளது.

    இந்த நிலையில் சம்பவத்தன்று தென்னை மரத்தில் தேங்காய் பறிப்பதற்காக இரும்பு கம்பியால் தேங்காய் பறிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தார். அப்போது இரும்பு கம்பி அருகில் இருந்த உயர் அழுத்த மின்சார கம்பியில் எதிர்பாராத விதமாக பட்டதில் பழனிசாமி மீது மின்சாரம் பயந்து உடல் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அவினாசி பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பழனிசாமி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பல்லடம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை செய்து வருகிறார்கள்.

    • மின்சாரம் தாக்கி 10-ம் வகுப்பு மாணவர் பரிதாப இறந்தார்.
    • மின்மோட்டாரை இயக்க முற்பட்டபோது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியது.

    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தாலுகா மகிபாலன்பட்டி ஊராட்சிக்குட்பட்ட சாலபட்டி கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகன் ரமேஷ்(15). இவர் மகிபாலன்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். இவர் இன்று அதிகாலை வீட்டில் இருந்த மின்மோட்டாரை இயக்க முற்பட்டபோது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியது. இதில் தூக்கி வீசப்பட்ட ரமேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த கண்டவராயன்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மாணவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முன்னதாக மின்சாரம் தாக்கி உயிரிழந்த மாணவனின் உடலை பார்த்து பெற்றோர், குடும்பத்தினர் கதறி அழுதது பரிதாபமாக இருந்தது.

    • மின்சாரம் தாக்கி வாலிபர் பலியானார்.
    • சப்-இன்ஸ்பெக்டர் சந்திரமோகன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் ஆசிரியர் குடியிருப்பை சேர்ந்த முருகன் என்பவரது மகன் கார்த்திக் (வயது 25). இவரும், முத்துப்பாண்டி என்பவரும் சிவகாமிபுரம் தெருவில் வீட்டு உபயோக பொருட்கள் பழுது பார்க்கும் கடை நடத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் கார்த்திக் ஒரு பிரிட்ஜை பழுது பார்க்கும்போது அவரை மின்சாரம் தாக்கியது. இதில் அவர் பரிதாபமாக இறந்தார். இதுபற்றிய புகாரின்பேரில் ராஜபாளையம் தெற்கு போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் சந்திரமோகன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • ராமநாதபுரம் அருகே மின்சாரம் தாக்கி பெட்டிக்கடைக்காரர் பலியானார்.
    • இதுகுறித்து திருப்பாலைக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம் திருப்பாலைக்குடி பழங்கோட்டையை சேர்ந்தவர் பாலு (வயது 53).இவர் பெட்டிகடை மற்றும் டீக்கடை நடத்தி வருகிறார்.

    இவரது வீட்டின் மேல் பகுதியில் தேவி பட்டினத்தில் இருந்து திருப்பாலைக்குடி செல்லும் பிரதான மின்கம்பி செல்கிறது. மழையின் காரணமாக தொய்வடைந்து இருந்த இந்த மின்கம்பி குறித்து மின் வாரியத்திற்கு புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.

    இந்த நிலையில் பாலு மாடிக்கு செல்லும் போது தலையில் மின் கம்பி உரசியதில் அவர் மீது மின்சாரம் பாய்ந்தது. இதை கண்ட பாலு மனைவி மற்றும் அவரது தம்பி மனைவி ஆகியோர் அவரை காப்பாற்ற சென்றனர்.

    இதில் பாலுவுக்கு தலையில் படுகாயம் ஏற்பட்டது. அவர் திருப்பாலைக்குடி அரசு ஆரம்ப சுகதார நிலையத்தில் முதலுதவி பெற்று ராமநாதபுரம் மருத்துவ கல்லூரி மருத்துவ மனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு அவரை பரிசோதித்தபோது பாலு இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தார். காயமடைந்த பாலு தம்பி மனைவி காளிஸ்வரி (39) ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து திருப்பாலைக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • காட்டு யானை இறந்து கிடப்பதை அப்பகுதி விவசாயிகள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்
    • விவசாயி மாதேவனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தினர்

    ஈரோடு,

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் ஏராளமான காட்டு யானை கள் உள்ளன.

    தாளவாடி மலைப்பகுதியில் உள்ள ஜீரகள்ளி வனச்சரகம், மல்லன்குழி வனப்பகுதியில் 50-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் ஒரே பகுதியில் முகாமிட்டுள்ளன.

    இந்நிலையில் கடந்த 9-ந் தேதி மல்லன் குழி கிராமத்தில் விவசாயி மாதேவா என்பவரது விவசாய தோட்டத்திற்கு அருகே அரசு புறம்போக்கு நிலத்தில் பள்ளத்தின் அருகே ஒரு காட்டு யானை இறந்து கிடப்பதை அப்பகுதி விவசாயிகள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

    இது குறித்து உடனடியாக ஜீரகள்ளி வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர் யானை உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

    இதில் இறந்தது சுமார் 35 முதல் 40 வயது மதிக்கத்தக்க பெண் யானை என்பது தெரிய வந்தது.

    பெண் யானை உடல் நலக்குறைவால் இறந்ததா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என்பதை கண்டறிய வனத்துறையினர் கால்நடை மருத்துவர் மூலம் யானையின் உடலை பிரேத பரிசோதனை செய்வதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.

    பிரேத பரிசோதனை முடிவில் யானை மின்சாரம் பாய்ந்து உயிர் இழந்தது தெரிய வந்தது.

    இதனைத் தொடர்ந்து வனத்துறையினர் விசாரணை நடத்தியதில் அருகே உள்ள விவசாய நிலத்தின் உரிமையாளர் மாதேவா அவரது தோட்டத்தில் வன விலங்குகள் புகாமல் இருக்க அமைத்திருந்த மின் வேலியில் உயர் அழுத்தம் மின்சாரம் பாய்ச்சியதும், காட்டு யானை அந்த மின்வேலியில் சிக்கி உயிரிழந்திருப்பதும் தெரிய வந்தது.

    இதைத் தொடர்ந்து ஜீரகள்ளி வனத்துறையினர் விவசாயி மாதேவனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தினர். பின்னர் அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.  

    • மயில்சாமி ஒரு வீட்டில் எலக்ட்ரிக்கல் சம்பந்தமான வேலையில் ஈடுபட்டு கொண்டிருந்தார்.
    • அப்போது எதிர்பாராத விதமாக மயில்சாமியை மின்சாரம் தாக்கியது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் பவானி அடுத்த ஜம்பை அருகே உள்ள சின்ன வடமலை பாளையம் பகுதியை சேர்ந்தவர் மயில்சாமி (23). எலக்ட்ரீசியன்.

    சம்பவத்தன்று மயில்சாமி ஒரு வீட்டில் எலக்ட்ரிக்கல் சம்பந்தமான வேலையில் ஈடுபட்டு கொண்டிருந்தார். அப்போது யு.பி.எஸ்-ஐ ஒரு அறையில் இருந்து மற்றொரு அறையில் மாற்றி அதற்கான மின்சார வயர்களை இணைத்து கொண்டிருந்தார்.

    அப்போது மெயின் பாக்ஸ் ஸ்விட்சை அணைக்கவில்லை என கூறப்படுகிறது. அப்போது எதிர்பாராத விதமாக மயில்சாமியை மின்சாரம் தாக்கியது.

    இதில் தூக்கி வீசப்பட்ட அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு பவானி அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக கொண்டு சேர்த்தனர்.

    அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே மயில்சாமி இறந்து விட்டதாக தெரிவித்தனர். பின்னர் அவர் உடல் பிரேத பரிசோதனைக்காக பெருந்துறையில் உள்ள மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    இது குறித்து பவானி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சவுந்தரராஜன் டிரான்ஸ்பார்மரில் ஏறி பீஸ் மாற்றி கொண்டு இருந்த போது எதிர்பாராத விதமாக அவர் மீது மின்சாரம் பாய்ந்தது.
    • இதையடுத்து அவர் மயங்கி டிரான்ஸ்பாரிலேயே தொங்கி கொண்டு இருந்தார்.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அருகே உள்ள பெரிய கள்ளிப்பட்டி ஓலக் காரன் பாளையம் பகுதியை சேர்ந்தவர் சவுந்தரராஜன் (வயது 43). விவசாயி. இவருக்கு உமா என்ற மனைவியும், ஒரு மகனும் உள்ளனர்.

    சவுந்தரராஜன் அந்த பகுதியில் உள்ள ஒரு விவசாய தோட்டத்தை குத்த கைக்கு எடுத்து மல்லிகைப்பூ சாகுபடி செய்து தோட்ட வேலைகளை கவனித்து வந்தார்.

    இந்த தோட்டத்துக்கு அருகே பம்ப் செட் கிணறு ஒன்று உள்ளது. மேலும் அருகே டிரான்ஸ் பார்மர் உள்ளது. மேலும் பம்ப் செட்டில் மின் இணைப்பு பழுது ஏற்படும். அப்போது அருகே உள்ள டிரான்ஸ்பார்மரில் சுவிட்ஸ் ஆப் செய்து விட்டு சுந்தரராஜன் ஏறி சரி செய்வது வழக்கம்.

    இந்த நிலையில் நேற்று சவுந்தரராஜன் தோட்டத்தில் தண்ணீர் பாய்ச்சி கொண்டு இருந்தார். அப்போது பம்ப் செட்டில் மின்சாரம் தடைபட்டது.

    இதையடுத்து வழக்கம் போல் சவுந்தரராஜன் டிரான்ஸ்பார்மரில் ஏறி பீஸ் மாற்றி கொண்டு இருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக அவர் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் அவர் அலறி துடித்தார்.

    இதையடுத்து அவர் மயங்கி டிரான்ஸ்பாரி லேயே தொங்கி கொண்டு இருந்தார்.

    இதை கண்ட அக்கம் பக்கத்தினர் மற்றும் அவரது உறவினர்கள் அவரை மீட்டு பு.புளியம்பட்டியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    மேல் சிகிச்சைக்காக சத்தியமங்க லம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து பவானிசாகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • திருப்பூா் மின்வாரிய அலுவலகத்தில் கடந்த 10 ஆண்டுகளாக ஒப்பந்தத் தொழிலாளியாகப் பணியாற்றி வந்தாா்.
    • ராதா நகா் 3 வது வீதியில் உள்ள மின்சார கம்பத்தில் தொழிலாளா்கள் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

    திருப்பூர் :

    திருப்பூா் நெருப்பெரிச்சலை அடுத்த குருவாயூரப்பன் பகுதியைச் சோ்ந்தவா் கே.மகேஷ்குமாா் (வயது 32), இவா் திருப்பூா் மின்வாரிய அலுவலகத்தில் கடந்த 10 ஆண்டுகளாக ஒப்பந்தத் தொழிலாளியாகப் பணியாற்றி வந்தாா். இந்நிலையில், போயம்பாளையம் பகுதியில் உள்ள ஆா்.கே.நகா் மின்வாரிய பிரிவு அலுவலகத்துக்குள்பட்ட ராதா நகா் 3 வது வீதியில் உள்ள மின்சார கம்பத்தில் தொழிலாளா்கள் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது எதிா்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்ததில் மகேஷ்வரன் பலத்த காயமடைந்தாா். இதையடுத்து, அருகில் இருந்த சக தொழிலாளா்கள் அவரை மீட்டு தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக திருப்பூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா்.

    அங்கு சிகிச்சை பெற்று வந்த மகேஷ்குமாா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.இச்சம்பவம் குறித்து திருப்பூா் வடக்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனா். 

    • வீட்டின் முன்நிழல் கூறை அமைப்பதற்காக இரும்பு தூண்கள் அமைக்கப்பட்டு இருந்தது.
    • அதில் மின்கசிவு இருந்துள்ளது.

    அந்தியூர்:

    அந்தியூர் அருகே உள்ள மாத்தூர் மரவபாளையம் பகுதியை சேர்ந்தவர் மோகனசுந்தரம் (43). கட்டுமான தொழிலாளி.

    இவர் சம்பவத்தன்று இரவு வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். பின்னர் நள்ளிரவில் எழுந்து வீட்டிற்கு வெளியே வந்துள்ளார்.

    அப்போது வீட்டின் முன்நிழல் கூறை அமைப்பதற்காக இரும்பு தூண்கள் அமைக்கப்பட்டு இருந்தது. அந்த துணை பிடித்துள்ளார். அதில் மின்கசிவு இருந்துள்ளது. இதனால் மோகனசுந்தரம் தூக்கி வீசப்பட்டார்.

    அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்து உடனடியாக அவரை மீட்டு அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி மோகனசுந்தரம் பரிதாபமாக இறந்தார்.

    இவருக்கு திருமணம் ஆகி மனைவி, மகன், மகள் உள்ளனர். இது குறித்து வெள்ளித்திருப்பூர் சப்- இன்ஸ்பெக்டர் விஜயகுமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • டிரான்ஸ் பார்மரில் வேலுசாமி ஏறி மின் கம்பியை பிடித்தார்.
    • மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே இறந்தார்.

    ஈரோடு:

    திருப்பூர் மாவட்டம் காங்கயம் அருகே உள்ள வெள்ளகோவில் அடுத்த அய்யம்மபாளையம் மேட்டுபாளையம் பகுதியை சேர்ந்தவர் வேலுசாமி (49).

    இவர் காங்கயம் பகுதியில் உள்ள மின் வாரிய அலுவலகத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.இவரது மனைவி கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இறந்து விட்டார்.

    மேலும் அவருக்கு குழந்தைகள் இல்லாததால் அவரது தம்பியுடன் இருந்து வந்தார். மேலும் அவருக்கு மனநிலை பாதிக்கப்பட்டு வேலைக்கு செல்லாமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் வேலுசாமி ஈரோடு மாவட்டம் சிவகிரி அடுத்த அஞ்சூரில் உள்ள தனது அக்கா வீட்டுக்கு சென்று வருவதாக கூறி விட்டு சென்றார்.

    இந்த நிலையில் சிவகிரி அடுத்த நல்லசெல்லிபாளையம் பகுதியில் உள்ள ஒரு டிரான்ஸ் பார்மரில் வேலுசாமி ஏறி மின் கம்பியை பிடித்தார். அப்போது அவர் மீது மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே இறந்தார்.

    இதையடுத்து ஆம்புலன்சு மூலம் அவரது உடலை மீட்டு பெருந்துறை மருத்துவ கல்லூரி மருத்துவ மனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    இது குறித்து சிவகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×