என் மலர்
நீங்கள் தேடியது "ஐபிஎஸ்"
- மாநில குற்ற ஆவணக் காப்பக ஐஜியாக இருந்த ஜெய ஸ்ரீ ஐபிஎஸ், ஊர்க்காவல் படை ஐஜியாக மாற்றம்.
- சட்டம் ஒழுங்கு எஸ்பி ஆக உள்ள முத்தரசி ஐபிஎஸ், செய்தித் தொடர்பு அதிகாரியாக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 3 ஐபிஎஸ் உள்ளிட்ட காவல் அதிகாரிகள் இடமாற்றம் செய்து கூடுதல் தலைமை ஜெயலர் தீரஜ்குமார் உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி, மாநில குற்ற ஆவணக் காப்பக ஐஜியாக இருந்த ஜெய ஸ்ரீ ஐபிஎஸ், ஊர்க்காவல் படை ஐஜியாக மாற்றம்.
தொழில்நுட்ப பிரிவு ஐஜி ஆக உள்ள அவினாஷ் குமார் ஐபிஎஸ், குற்ற ஆவண காப்பக ஐஜி ஆக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
சட்டம் ஒழுங்கு எஸ்பி ஆக உள்ள முத்தரசி ஐபிஎஸ், செய்தித் தொடர்பு அதிகாரியாக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
ஆவடி காவல் ஆணையரக போக்குவரத்து டிசிபி-யான சங்கு செங்குன்றத்திற்கு கூடுதல் பொறுப்பாக நியமிக்கப்பட்டுள்ளார்.
காவல் பயற்சி பள்ளி எஸ்பி ஆக இருந்த மகேஸ்வரி, போலீஸ் பயிற்சி கல்லூரி எஸ்பி ஆக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
- திருச்சி டிஐஜி வருண்குமார் சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளார்.
- ஜெயஸ்ரீ ஐபிஎஸ் ஆகியோரும் பணியிடம் மாற்றப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் 4 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடம் மாற்றம் செய்யப்ட்டுள்ளனர்.
இதுகுறித்த உத்தரவை தமிழக கூடுதல் தலைமை செயலாளர் தீரஜ்குமார் வெளியிட்டார்.
அதன்படி, திருச்சி டிஐஜி வருண்குமார் சென்னை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளார்.
டான்ஜெட்கோ தலைமை விழிப்புணர்வு அதிகாரியாக இருந்த டிஜிபி பிரமோத்குமார், சென்னை ஊர்க்காவல்படை டிஜிபி ஆக நியமிக்கப்ட்டுள்ளார்.
சென்னை ஊர்க்காவல் படை ஐஜி ஜெயஸ்ரீ, மாநில குற்ற ஆவண காப்பக ஐஜி ஆக நியமிக்கப்ட்டுள்ளார்.
சென்னை குற்ற ஆவண காப்பக ஏடிஜிபி ஆயுஷ்மான் திவாரி, டான்ஜெட்கோ லஞ்ச ஒழிப்பு துறை தலைமை விழிப்புணர்வு அதிகாரி ( ஏடிஜிபி) ஆக நியமிக்கப்பட்டுள்ளார்.
- இப்போட்டியில் குஜராத் கேப்டன் ஜூப்மன் கில் டாஸ் வென்று பவுலிங் தேர்வு செய்தார்.
- டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி பேட்டிங் செய்ய முதலில் களம் இறங்குகிறது.
10 அணிகள் இடையிலான 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி தொடரில் இன்று இரவு டெல்லி அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் நடைபெறும் 60-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி, முன்னாள் சாம்பியனான குஜராத் டைட்டன்சை எதிர்கொள்கிறது.
டெல்லி அணி 11 ஆட்டங்களில் ஆடி 6 வெற்றி, 4 தோல்வி, ஒரு முடிவில்லை (ஐதராபாத்துக்கு எதிரான ஆட்டம் மழையால் ரத்து) என 13 புள்ளிகள் பெற்றுள்ளது.
குஜராத் அணி 11 ஆட்டங்களில் ஆடி 8 வெற்றி, 3 தோல்வியுடன் 16 புள்ளிகள் பெற்றுள்ளது. அந்த அணி எஞ்சியுள்ள 3 ஆட்டங்களில் ஒன்றில் வெற்றி பெற்றாலே அடுத்த சுற்றுக்குள் நுழைந்து விடும்.
இந்நிலையில், ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.
டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் குஜராத் கேப்டன் ஜூப்மன் கில் டாஸ் வென்று பவுலிங் தேர்வு செய்தார்.
அதன்படி, டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி பேட்டிங் செய்ய முதலில் களம் இறங்குகிறது.
- இறுதித் தேர்வு முடிவுகள் https://upsc.gov.in/ இணையதளத்தில் இன்று வெளியாகி உள்ளது.
- நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்ற 134 பேரில் 50 பேர் 2024 யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
2024 ஆம் ஆண்டுக்கான யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வின் இறுதி முடிவுகள் இன்று(ஏப்ரல் 22) வெளியிடப்பட்டுள்ளன.
ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ் ஐஆா்எஸ் உள்ளிட்ட குடிமைப் பணிகளுக்கு மத்திய பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) வருடந்தோறும் தேர்வு நடத்தி வருகிறது.
இந்த தேர்வு, முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு, நேர்முகத் தேர்வு என மூன்று படிநிலைகள் கொண்டது.
இந்நிலையில் 2024 ஆம் ஆண்டுக்கான இறுதித் தேர்வு முடிவுகள் https://upsc.gov.in/ இணையதளத்தில் இன்று வெளியாகி உள்ளது. அதன்படி இந்த தேர்வில் 1009 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இதில் தமிழகத்தை சேர்ந்த மாணவர் சிவச்சந்திரன் மாநில அளவில் முதலிடமும் அகில இந்திய அளவில் 23 ஆம் இடமும் பெற்றுள்ளார். இவர் தமிழக அரசின் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பயின்றவர் ஆவார். இதுபற்றி சிவச்சந்திரன் கூறுகையில், "யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்றது மகிழ்ச்சியாக இருக்கிறது. தேர்வில் வெற்றிபெற நான் முதல்வன் திட்டம் உதவிகரமாக இருந்தது" என்றார்.
அதேபோல, இந்திய அளவில் 39ஆம் இடம் பிடித்த மோனிகா என்பவரும் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்றவர் ஆவார்.
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்ற 134 பேரில் 50 பேர் 2024 யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். 50 பேரில் 18 பேர் முழுநேர உறைவிட பயிற்சி மேற்கொண்டவர்கள் ஆவர். மேலும்
தமிழில் தேர்வு எழுதிய காமராஜ், தங்கபாண்டியன் ஆகிய இருவரும் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
- தமிழகத்தில் சிவச்சந்திரன் என்ற மாணவர் மாநில அளவில் முதலிடமும் அகில இந்திய அளவில் 23 ஆம் இடமும் பெற்றுள்ளார்.
- 'நான் முதல்வன்' திட்டத்தின் கீழ் பயின்ற 50 பேர் இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
2024 ஆம் ஆண்டுக்கான யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வின் இறுதி முடிவுகள் இன்று(ஏப்ரல் 22) வெளியிடப்பட்டுள்ளன.
ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ், ஐஆா்எஸ் உள்ளிட்ட குடிமைப் பணிகளுக்கு ஆண்டுக்கு ஒருமுறை மத்திய பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) தேர்வுகள் நடத்துகிறது. இந்த தேர்வு, முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு, நேர்முகத் தேர்வு என மூன்று படிநிலைகள் கொண்டது.
இந்நிலையில் 2024 ஆம் ஆண்டுக்கான இறுதித் தேர்வு முடிவுகள் https://upsc.gov.in/ இணையதளத்தில் இன்று வெளியாகி உள்ளது. அதன்படி இந்த தேர்வில் 1009 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த சக்தி துபே என்ற மாணவி முதலிடம் பெற்றுள்ளார். ஹர்ஷிதா கோயல் என்பவர் இரண்டாமிடமும் டோங்க்ரே அர்ஷித் பராக் என்பவர் மூன்றாமிடமும் பெற்றுள்ளனர்.
தேர்ச்சி பெற்றவர்களில் 335 பேர் பொதுப்பிரிவினர், 109 பேர் பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினர், 318 பேர் ஓபிசி, 160 பேர் எஸ்சி, 87 பேர் எஸ்டி, 45 பேர் மாற்றுத்திறனாளிகள் ஆவர்.
தமிழகத்தில் சிவச்சந்திரன் என்ற மாணவர் மாநில அளவில் முதலிடமும் அகில இந்திய அளவில் 23 ஆம் இடமும் பெற்றுள்ளார். இவர் தமிழக அரசின் 'நான் முதல்வன்' திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்றவர் என்று தகவல் வெளியாகி உள்ளது. மேலும் 'நான் முதல்வன்' திட்டத்தின் கீழ் பயின்ற 50 பேர் இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
- தனிநபர்கள் வழங்கும் விருதுகளை வாங்க கூடாது என கேரள தலைமை செயலாளர் வி.பி.ஜாய் உத்தரவிட்டுள்ளார்.
- உத்தரவை மீறி செயல்படும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
திருவனந்தபுரம்:
அரசு துறைகளில் ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். அதிகாரிகளாக இருப்போருக்கு தனியார் அமைப்புகள் மற்றும் கிளப்புகள் பாராட்டி விருது வழங்கி கவுரவிப்பது பல மாநிலங்களில் நடந்து வருகிறது.
இந்நிலையில் கேரளாவில் ஒரு கோவில் விழாவில் திறம்பட செயல்பட்டமைக்காக ஒரு தனியார் அமைப்பு கேரள ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவருக்கு பாராட்டும், சிறப்பு விருதும் வழங்கியது.
இதற்கு கேரள காவல்துறை அதிகாரிகளில் ஒரு பிரிவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இது சமூக வலைதளங்களிலும் வைரலானது.
இதையடுத்து கேரளாவில் ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். அதிகாரிகள் இனி தனியார் அமைப்புகள் மற்றும் தனிநபர்கள் வழங்கும் விருதுகளை வாங்க கூடாது என கேரள தலைமை செயலாளர் வி.பி.ஜாய் உத்தரவிட்டுள்ளார்.
மேலும் மாநில அரசின் முன் அனுமதி பெறாமல் எந்த ஒரு ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். அதிகாரிகள் விருது வாங்க கூடாது. இந்த உத்தரவை மீறி செயல்படும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தலைமை செயலாளர் வி.பி.ஜாய் எச்சரித்துள்ளார்.
- தமிழகத்தில் ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.
- காஞ்சிபுரம் எஸ்பி சுதாகருக்கு, செங்கல்பட்டு எஸ்பி-யாக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டு இருக்கிறது.
தமிழ் நாட்டில் ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை தமிழக உள்துறை செயலாளர் அமுதா ஐஏஎஸ் வெளியிட்டுள்ளார்.
அதன்படி, விழுப்புரம் மாவட்ட டிஐஜியாக, சிபிசிஐடி டிஐஜி ஜியாவுல் ஹக் நியமனம் செய்யப்பட்டுள்ளார். காஞ்சிபுரம் எஸ்பி சுதாகருக்கு, செங்கல்பட்டு எஸ்பி-யாக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டு இருக்கிறது. கள்ளக்குறிச்சி எஸ்பி மோகன்ராஜ்-க்கு, விழுப்புரம் எஸ்பி-யாக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
- தமிழகம் முழுக்க ஐ.பி.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம்.
- 16 காவல் துறை அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
தமிழ்நாடு முழுக்க 12 ஐ.பி.எஸ். அதிகாரிகள் உள்பட 16 காவல் துறை அதிகாரிகளை பணியிட மாற்றம் மற்றும் பணியிடம் ஒதுக்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, சிவில் சப்ளை டி.ஜி.பி. வன்னிய பெருமாள், ஊர்க்காவல்படை டி.ஜி.பி.-யாக நியமிக்கப்பட்டு இருக்கிறார். சென்னை வடக்கு சட்டம் ஒழுங்கு இணை ஆணையராக அபிஷேக் தீக்ஷித் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தென்காசி எஸ்.பி. ஆக சுரேஷ் குமார், கரூர் எஸ்.பி. ஆக பிரபாகர், நீலகிரி எஸ்.பி. ஆக சுந்தர வடிவேல் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டனர். தூத்துக்குடி ஆட்சியர் செந்தில் ராஜ், சிப்காட் நிர்வாக இயக்குநராக மாற்றப்பட்டார்.
திருவள்ளூர் ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ், சென்னை மாநகர போக்குவரத்துக்கழக நிர்வாக இயக்குநராக மாற்றப்பட்டுள்ளார். இதே போன்று கரூர் ஆட்சியர் பிரபுசங்கர் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியராகவும், செங்கல்பட்டு துணை ஆட்சியர் லட்சுமிபதி தூத்துக்குடி ஆட்சியராகவும் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.
நகர்ப்புற வளர்ச்சி மேலாண்மை வாரிய இணை நிர்வாக இயக்குநர் தங்கவேல், கரூர் ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் நிகழ்ச்சி குளறுபடியால் காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டிருந்த தீபா சத்யன், டி.ஜி.பி. அலுவலக எஸ்.பி.யாக மாற்றப்பட்டு உள்ளார்.
- 2 லட்ச ரூபாய் பணம் கொடுத்தால் போலீசில் வேலை வாங்கி தருகிறேன் என்று ஆசைவார்த்தை கூறியுள்ளார்.
- ஐபிஎஸ் அதிகாரியாக நடித்த 18 வயது இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
பீகார் மாநிலத்தில் ஐபிஎஸ் அதிகாரியாக நடித்த 18 வயது இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
மனோஜ் சிங் என்பவர் மித்லேஷ் மாஜி என்ற 18 வயது இளைஞரிடம் 2 லட்ச ரூபாய் பணம் கொடுத்தால் போலீசில் வேலை வாங்கி தருகிறேன் என்று ஆசைவார்த்தை கூறியுள்ளார்.
இதனை உண்மை என நம்பிய இளைஞர் தனது தாய்மாமாவிடம் இருந்து ரூ.2 லட்சம் பணத்தை கடனாக வாங்கி மனோஜ் சிங்கிடம் கொடுத்துள்ளார்.
பின்னர் மனோஜ் சிங் அவரது உடல் அளவீடுகளை எடுத்து அடுத்த நாள் அவரை அழைத்து, ஐபிஎஸ் உடை, பேட்ஜ் மற்றும் துப்பாக்கியை கொடுத்துள்ளார்.
இதனையடுத்து ஐபிஎஸ் அதிகாரி ஆன மகிழ்ச்சியில் ஐபிஎஸ் சீருடையை அணிந்து கொண்டு இடுப்பில் துப்பாக்கியுடன் தாயை சந்தித்து ஆசி பெற சென்றுள்ளார். பின்னர் மீண்டும் மனோஜ் சிங்கை சந்தித்து மீதமுள்ள பணத்தை கொடுக்க அவர் புறப்பட்டுள்ளார். அப்போது அவரைப் பார்க்க கூட்டம் கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர் இது தொடர்பாக அப்பகுதியில் உள்ள ஒருவர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் 'போலி ஐபிஎஸ் அதிகாரி'யை கைது செய்தனர். கைது செய்யப்படும்போது 'நான் ஒரு ஐபிஎஸ்' என்று அந்த இளைஞர் போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.
பின்னர் அந்த இளைஞரிடம் இருந்து சீருடை மற்றும் துப்பாக்கியை கைப்பற்றிய போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- எஸ்.பி-ஐ பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு கூடுதல் தலைமைச் செயலாளர் உத்தரவு.
- மனித உரிமைகள் ஆணையத்தின் ஐ.ஜி. ஆக எஸ்.மல்லிகா நியமனம்.
தமிழ்நாட்டில் 4 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம். மேலும் ஒரு எஸ்.பி-ஐ பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு கூடுதல் தலைமைச் செயலாளர் உத்தரவு.
தமிழ்நாட்டில் நான்கு ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு கூடுதல் தலைமை செயலாளர் தீரஜ்குமார் உத்தரவிட்டுள்ளார். மேலும், ஒரு எஸ்.பி. பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், கூட்டுறவு பால் உற்பத்தியாளர் கூட்டமைப்பு நிறுவனத்தின் லஞ்ச ஒழிப்பு பிரிவு டிஜிபியாக ராஜீவ் குமார் நியமனமிக்கப்பட்டுள்ளார். ரயில்வே காவல்துறை டிஜிபியாக வன்னியபெருமாள் நியமிக்கப்பட்டுள்ளார்.
மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் ஐ.ஜி. ஆக எஸ்.மல்லிகா, சாலை பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து காவல்துறை ஐ.ஜி. ஆக அபிஷேக் தீக்ஷித் நியமிக்கப்பட்டுள்ளனர். இதேபோல் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறை எஸ்.பி. ஆக முத்தமிழ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
- 28 பேருக்கு ஐ.பி.எஸ். அந்தஸ்து வழங்கி ஏற்கனவே தமிழக அரசு அறிவிப்பு வெளிட்டது.
- டி.செந்தில்குமார், மகேந்திரன், சுப்புலட்சுமி, ராஜன், செல்வராஜ், ஸ்டாலின் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்
சென்னை:
தமிழக போலீஸ் துறையில் சூப்பிரண்டுகளாக பணியாற்றும் 28 பேருக்கு ஐ.பி.எஸ். அந்தஸ்து வழங்கி ஏற்கனவே தமிழக அரசு அறிவிப்பு வெளிட்டது.
தற்போது அந்த 28 போலீஸ் சூப்பிரண்டுகளுக்கும் ஐ.பி.எஸ். அந்தஸ்து வழங்கியதற்கான ஆணையை மத்திய அரசு வெளியிட்டது.
அந்த ஆணையில் ஈஸ்வரன், மணி, செல்வக்குமார், டாக்டர் சுதாகர், எஸ்.ஆர்.செந்தில்குமார், முத்தரசி, பரோஸ்கான் அப்துல்லா, ராமகிருஷ்ணன், சக்திவேல், நாகஜோதி, சுகுமாரன், ராஜராஜன், விமலா, சுரேஷ்குமார், பாஸ்கரன், சண்முக பிரியா, ஜெயக்குமார், மயில்வாகணன், ஜெயலட்சுமி, சுந்தர வடிவேல், உமையாள், எஸ்.சரவணன், டி.செந்தில்குமார், மகேந்திரன், சுப்புலட்சுமி, ராஜன், செல்வராஜ், ஸ்டாலின் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.






