என் மலர்tooltip icon

    இந்தியா

    தனியார் அமைப்புகள் நடத்தும் விழாக்களில் பங்கேற்று விருது பெறக்கூடாது- ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு உத்தரவு
    X

    தலைமை செயலாளர் வி.பி.ஜாய்.

    தனியார் அமைப்புகள் நடத்தும் விழாக்களில் பங்கேற்று விருது பெறக்கூடாது- ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு உத்தரவு

    • தனிநபர்கள் வழங்கும் விருதுகளை வாங்க கூடாது என கேரள தலைமை செயலாளர் வி.பி.ஜாய் உத்தரவிட்டுள்ளார்.
    • உத்தரவை மீறி செயல்படும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    திருவனந்தபுரம்:

    அரசு துறைகளில் ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். அதிகாரிகளாக இருப்போருக்கு தனியார் அமைப்புகள் மற்றும் கிளப்புகள் பாராட்டி விருது வழங்கி கவுரவிப்பது பல மாநிலங்களில் நடந்து வருகிறது.

    இந்நிலையில் கேரளாவில் ஒரு கோவில் விழாவில் திறம்பட செயல்பட்டமைக்காக ஒரு தனியார் அமைப்பு கேரள ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவருக்கு பாராட்டும், சிறப்பு விருதும் வழங்கியது.

    இதற்கு கேரள காவல்துறை அதிகாரிகளில் ஒரு பிரிவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இது சமூக வலைதளங்களிலும் வைரலானது.

    இதையடுத்து கேரளாவில் ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். அதிகாரிகள் இனி தனியார் அமைப்புகள் மற்றும் தனிநபர்கள் வழங்கும் விருதுகளை வாங்க கூடாது என கேரள தலைமை செயலாளர் வி.பி.ஜாய் உத்தரவிட்டுள்ளார்.

    மேலும் மாநில அரசின் முன் அனுமதி பெறாமல் எந்த ஒரு ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். அதிகாரிகள் விருது வாங்க கூடாது. இந்த உத்தரவை மீறி செயல்படும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தலைமை செயலாளர் வி.பி.ஜாய் எச்சரித்துள்ளார்.

    Next Story
    ×