என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Gujarat Titans"

    • ராஜஸ்தான் அணியின் 14 வயது வீரர் வைபவ் 35 பந்தில் சதம் விளாசி அசத்தினார்.
    • வைபவ் 101 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    ஐபிஎல் தொடரின் 47-வது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ்- குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் விளையாடிய குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 209 ரன்கள் அடித்துள்ளது. அதிகபட்சமாக சுப்மன் கில் 84 ரன்கள் எடுத்தார். ராஜஸ்தான் தரப்பில் தீக்ஷனா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    இதனையடுத்து ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக ஜெய்ஸ்வால் - வைபவ் களமிறங்கினர். தொடக்கம் முதலே இருவரும் அதிரடியாக விளையாடினர்.

    தொடர்ந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ராஜஸ்தான் அணியின் 14 வயது வீரர் வைபவ் 35 பந்தில் சதம் விளாசி அசத்தினார். அவர் 101 ரன்கள் எடுத்த நிலையில் போல்ட் ஆகி வெளியேறினார். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 166 ரன்கள் குவித்தது.

    அடுத்த சிறிது நேரத்தில் ஜெய்ஸ்வால் அரை சதம் விளாசினார். அடுத்து வந்த நிதிஷ் ரானா 4 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    இதனை தொடர்ந்து ஜெய்ஸ்வாலுடன் கேப்டன் ரியான் பராக் ஜோடி சேர்ந்து அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றனர்.

    இறுதியில் ராஜஸ்தான் அணி 15.5 ஓவர்களில் 212 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    • சுப்மன் கில் 50 பந்தில் பவுண்டரி, 4 சிக்சருடன் 84 ரன்கள் விளாசினார்.
    • ஜாஸ் பட்லர் 26 பந்தில் 3 பவுண்டரி, 4 சிக்சருடன் அரைசதம் அடித்தார்.

    ஐபிஎல் தொடரின் 47ஆவது போட்டி ஜெய்ப்பூரில் நடைபெற்று வருகிறது. இதில் ராஜஸ்தான் ராயல்ஸ்- குஜராத் டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்த வருகின்றன. டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி குஜராத் டைட்டன்ஸ் அணியின் சாய் சுதர்சன், சுப்மன் கில் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 10.2 ஓவரில் 93 ரன்கள் குவித்தது. சாய் சுதர்சன் 30 பந்தில் 39 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    அடுத்து ஜாஸ் பட்லர் களம் இறங்கினார். இவர் களம் இறங்கியதில் இருந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். சுப்மன் கில் 29 பந்தில் அரைசதம் விளாசினார். தொடர்ந்து விளையாடிய அவர் 50 பந்தில் 5 பவுண்டரி, 4 சிக்சருடன் 84 ரன்கள் அடித்தார். கில் ஆட்டமிழக்கும்போது குஜராத் டைட்டன்ஸ் 16.4 ஓவரில் 167 ரன்கள் எடுத்திருந்தது.

    அடுத்து வந்த வாஷிங்டன் சுந்தர் 13 ரன்னில் ஆட்டமிழந்தார். அப்போது குஜராத் டைட்டன்ஸ் 18.4 ஓவரில் 193 ரன்கள் குவித்திருந்தது. 4ஆவது விக்கெட்டுக்கு பட்லர் உடன் டெவாட்டியா ஜோடி சேர்ந்தார்.

    கடைசி ஓவரை ஆர்ச்சர் வீசினார். இந்த ஓவரின் கடைசி பந்தில் 2 ரன் அடித்து பட்லர் 26 பந்தில் 3 பவுண்டரி, 4 சிக்சருடன் அரைசதம் அடித்தார். குஜராத் இந்த ஓவரில் 13 ரன்கள் அடிக்க 20 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 209 ரன்கள் அடித்துள்ளது.

    • ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 4 புள்ளியுடன் 9-வது இடத்தில் இருக்கிறது
    • குஜராத் அணி 12 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் உள்ளது.

    18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஜெய்ப்பூரில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் 47-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் - குஜராத் அணிகள் மோதுகிறது. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இதுவரை 9 ஆட்டங்களில் விளையாடி 2-ல் வெற்றி, 7-ல் தோல்வி என 4 புள்ளியுடன் 9-வது இடத்தில் இருக்கிறது. குஜராத் அணி 6 வெற்றி, 2 தோல்வியுடன் 12 புள்ளிகள் பெற்று வலுவான நிலையில் காணப்படுகிறது.

    இவ்விரு அணிகளும் ஏற்கனவே சந்தித்த ஆட்டத்தில் குஜராத் 58 ரன்கள் வித்தியாசத்தில் எளிதில் வெற்றி பெற்றது. அந்த ஆதிக்கத்தை நீட்டிக்கும் வேட்கையுடன் ஆயத்தமாகிறது.

    • ராஜஸ்தான் அணியின் செயல்பாடு சீராக இல்லை.
    • சூப்பர் பார்மில் உள்ள குஜராத் அணி 6 வெற்றி, 2 தோல்வியுடன் 12 புள்ளிகள் பெற்று வலுவான நிலையில் காணப்படுகிறது.

    18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஜெய்ப்பூரில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் 47-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் - குஜராத் அணிகள் மோத உள்ளன.

    முன்னாள் சாம்பியனான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இதுவரை 9 ஆட்டங்களில் விளையாடி 2-ல் வெற்றி, 7-ல் தோல்வி என 4 புள்ளியுடன் 9-வது இடத்தில் இருக்கிறது. எஞ்சிய 5 ஆட்டங்களிலும் வெற்றி பெற்று, மற்ற அணிகளின் முடிவுகள் சாதகமாக அமைந்து, ரன்ரேட்டிலும் ஓங்கி இருக்க வேண்டும். இப்படி ஏதாவது அதிசயம் நிகழ்ந்தால் ராஜஸ்தானுக்கு 'பிளே-ஆப்' சுற்று கதவு திறக்கலாம். மற்றபடி அந்த அணிக்கு அடுத்த சுற்று வாய்ப்பு ஏறக்குறைய முடிந்து விட்டது என்றே சொல்ல வேண்டும்.

    ராஜஸ்தான் அணியின் செயல்பாடு சீராக இல்லை. பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் (4 அரைசதத்துடன் 356 ரன்) தவிர மற்றவர்களின் ஆட்டம் மெச்சம்படி இல்லை. பந்து வீச்சில் ஹசரங்கா, ஜோப்ரா ஆர்ச்சர் ஓரளவு கைகொடுக்கிறார்கள். ஆனால் முக்கியமான கட்டத்தில் கோட்டை விட்டுவிடுகிறார்கள். டெல்லி, லக்னோ, பெங்களூரு ஆகிய அணிகளுக்கு எதிரான முந்தைய ஆட்டங்களில் நெருங்கி வந்து தோல்வியை தழுவினார்கள். காயத்தால் அவதிப்படும் கேப்டன் சஞ்சு சாம்சன் இந்த ஆட்டத்திலும் ஆடுவது சந்தேகம் தான். அவர் உடல்தகுதியை எட்டாவிட்டால் ரியான் பராக் அணியை வழிநடத்துவார். இந்த சீசனில் சொந்த ஊர் மைதானத்தில் வெற்றி பெறாத ஒரே அணியான ராஜஸ்தான் அந்த சோகத்துக்கு முடிவு கட்டுமா என்பதை பார்க்கலாம்.

    சூப்பர் பார்மில் உள்ள குஜராத் அணி 6 வெற்றி, 2 தோல்வியுடன் 12 புள்ளிகள் பெற்று வலுவான நிலையில் காணப்படுகிறது. அந்த அணி பேட்டிங்கில் பலம் வாய்ந்ததாக திகழ்கிறது. முதலில் பேட் செய்த எல்லா ஆட்டங்களிலும் 180 ரன்களுக்கு மேல் குவித்து இருக்கிறார்கள். தமிழகத்தின் சாய் சுதர்சன் (5 அரைசதத்துடன் 417 ரன்), கேப்டன் சுப்மன் கில் (305 ரன்), ஜோஸ் பட்லர் (356 ரன்), ரூதர்போர்டு ஆகியோர் தொடர்ந்து சிறப்பாக ஆடுகிறார்கள். பந்து வீச்சில் பிரசித் கிருஷ்ணா (16 விக்கெட்), முகமது சிராஜ் (12 விக்கெட்), சாய் கிஷோர் (12 விக்கெட்) மிரட்டுகிறார்கள்.

    இவ்விரு அணிகளும் ஏற்கனவே சந்தித்த ஆட்டத்தில் குஜராத் 58 ரன்கள் வித்தியாசத்தில் எளிதில் வெற்றி பெற்றது. அந்த ஆதிக்கத்தை நீட்டிக்கும் வேட்கையுடன் ஆயத்தமாகிறது.

    • பீல்டிங்கை தொடர்ந்து மாற்றுவதோடு, பவுலர்களுடன் தொடர் ஆலோசனையில் கில் இருந்து வருகிறார்.
    • கேகேஆர் அணிக்காக ஆடிய போது, சுப்மன் கில் வளர்ந்து வரும் வீரராகவே இருந்தார்.

    கேகேஆர் அணிக்கு எதிரான போட்டியில் சிறப்பாக ஆடிய சுப்மன் கில் 55 பந்துகளில் 3 சிக்ஸ், 10 பவுண்டரி உட்பட 90 ரன்களை விளாசி இருக்கிறார். மொத்தமாக இந்த சீசனில் 8 இன்னிங்ஸில் ஆடியுள்ள சுப்மன் கில் 3 அரைசதம் உட்பட 305 ரன்களை விளாசி இருக்கிறார்.

    கடந்த சீசனை போல் அல்லாமல் இந்த சீசனில் சுப்மன் கில் தலைமையில் களமிறங்கிய குஜராத் அணி மிகச்சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அதேபோல் சுப்மன் கில்லும் களத்தில் மிகச்சிறப்பாக அணியை வழிநடத்தி வருகிறார்.

    குஜராத் அணி 8 போட்டிகளில் 6 வெற்றி, 2 தோல்வியுடன் புள்ளிப் பட்டியலில் 12 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் இருக்கிறது. எஞ்சியுள்ள 6 போட்டிகளில் 2-ல் வென்றால் கூட குஜராத் அணி எளிதாக பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற முடியும்.

    இந்நிலையில் கேப்டசியில் சுப்மன் கில் சிறப்பாக செயல்படுவதாக சிஎஸ்கே அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா புகழாரம் சூட்டியுள்ளார்.

    இது குறித்து சுரேஷ் ரெய்னா கூறியதாவது:-

    கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் சுப்மன் கில் நிதானமாக நேரம் எடுத்து அவரின் திறமை மீது நம்பிக்கை வைத்தார். தற்போது சுப்மன் கில்லால் அதிரடியான ஷாட்களை ஆட முடிகிறது. அதேபோல் டாட் பால் சதவிகிதத்தையும் சுப்மன் கில் குறைத்துள்ளார். சுப்மன் கில்லால் எளிதாக ஸ்பின்னர்கள் மற்றும் வேகப்பந்துவீச்சாளர்களை அட்டாக் செய்ய முடிகிறது.

    அவரிடம் இருக்கும் மிகச்சிறந்த விஷயம் என்னவென்றால், சக வீரர்களுடன் அவர் தனது தேவையை சிறப்பாக சொல்வதுதான். அவர் களத்திற்கு வெளியிலும் நல்ல உறவுடன் இருப்பதே குஜராத் அணியின் வெற்றிக்கு காரணமாக இருந்து வருகிறது. பீல்டிங்கை தொடர்ந்து மாற்றுவதோடு, பவுலர்களுடன் தொடர் ஆலோசனையில் இருந்து வருகிறார்.

    கேகேஆர் அணிக்காக ஆடிய போது, சுப்மன் கில் வளர்ந்து வரும் வீரராகவே இருந்தார். ஆனால் இப்போது இந்திய கிரிக்கெட்டின் இளவரசனாக திரும்பி இருக்கிறார். இந்த இடம் அவருக்கு ஸ்பெஷலானது.

    என்று ரெய்னா கூறினார்.

    • குஜராத் அணியில் இடம் பிடித்த தமிழக வீரர் சாய் சுதர்சன் 5-வது முறையாக அரை சதம் அடித்து அசத்தினார்.
    • நடப்பு தொடரில் சாய் சுதர்சன் 8 போட்டிகளில் விளையாடி மொத்தமாக 417 ரன்கள் அடித்திருக்கிறார்

    ஐபிஎல் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் கொல்கத்தா - குஜராத் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் விளையாடிய குஜராத் அணி 20 ஓவர் முடிவில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 198 ரன்கள் எடுத்தது.

    இதையடுத்து 199 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 159 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் குஐராத் அணி 39 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணியை வீழ்த்தியது.

    இந்த போட்டியில் குஜராத் அணியில் இடம் பிடித்த தமிழக வீரர் சாய் சுதர்சன் 5-வது முறையாக அரை சதம் அடித்து அசத்தினார். இதன் மூலம் 8 இன்னிங்ஸில் 5 அரை சதம் அடித்துள்ளார்.

    நடப்பு தொடரில் சாய் சுதர்சன் 8 போட்டிகளில் விளையாடி மொத்தமாக 417 ரன்கள் அடித்திருக்கிறார். இதன் மூலம் சாய் சுதர்சனுக்கு ஆரஞ்சு நிற தொப்பி கிடைத்திருக்கிறது.

    இந்நிலையில், சிறப்பாக விளையாடி வரும் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர் சாய் சுதர்சனின் ஆட்டத்தை நடிகர் சிவகார்த்திகேயன் பாராட்டியுள்ளார்.

    இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பதிவில், "நீங்க விளையாடுற விதம் ரொம்ப பிடிச்சிருக்கு சாய் சுதர்சன். இந்திய ஜெர்சியில் உங்களின் அபார திறமையை காண காத்திருக்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.

    • டாஸ் வென்ற கொல்கத்தா பந்து வீச்சை தேர்வு செய்தது.
    • கொல்கத்தா அணியில் ரஹானே 50 ரன்களில் வெளியேறினார்.

    ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் கொல்கத்தா - குஜராத் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் விளையாடிய குஜராத் அணி 20 ஓவர் முடிவில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 198 ரன்கள் எடுத்தது.

    கொல்கத்தா அணி தரப்பில் வைபவ், ஹர்சித் ராணா, ரசல் ஆகியோர் 1 விக்கெட்டை வீழ்த்தினர்.

    இதையடுத்து 199 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா அணி களமிறங்கியது. ஆனால் அந்த அணியில் ரஹானேவை தவிர வேறு யாரும் சரியாக பேட்டிங் செய்யவில்லை. ரஹானே மட்டுமே அதிகபட்சமாக 50 ரன்கள் எடுத்திருந்தார். குர்பாஸ் 1 ரன்களும், நரைன் 17 ரன்களும், வெங்கடேஷ் 14 ரன்களும்,  சிங் 1 ரன்களும் என வரிசையாக ஆட்டமிழந்தனர்.

    இறுதியில் கொல்கத்தா அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 159 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் குஐராத் அணி 39 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணியை வீழ்த்தியது.

    • சாய் சுதர்சன் 5-வது முறையாக அரை சதம் அடித்து அசத்தினார்.
    • நடப்பு தொடரில் சாய் சுதர்சன் 8 போட்டிகளில் விளையாடி மொத்தமாக 417 ரன்கள் அடித்திருக்கிறார்.

    கொல்கத்தா:

    ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் கொல்கத்தா- குஜராத் அணிகள் மோதி வருகின்றனர். இதில் முதலில் விளையாடிய குஜராத் அணி 20 ஓவர் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 198 ரன்கள் எடுத்தது. இலக்கை நோக்கி கொல்கத்தா அணி விளையாடி வருகிறது.

    இந்த போட்டியில் குஜராத் அணியில் இடம் பிடித்த தமிழக வீரர் சாய் சுதர்சன் 5-வது முறையாக அரை சதம் அடித்து அசத்தினார். இதன் மூலம் 8 இன்னிங்ஸில் 5 அரை சதம் அடித்துள்ளார்.

    நடப்பு தொடரில் சாய் சுதர்சன் 8 போட்டிகளில் விளையாடி மொத்தமாக 417 ரன்கள் அடித்திருக்கிறார். இதன் மூலம் சாய் சுதர்சனுக்கு ஆரஞ்சு நிற தொப்பி கிடைத்திருக்கிறது.

    லக்னோ அணி வீரர் நிக்கோலஸ் பூரான் 368 ரன்கள் எடுத்திருந்த நிலையில், சாய் சுதர்சனிடம் கடந்த போட்டியில் இருந்து ஆரஞ்சு நிற தொப்பியை வாங்கி இருந்தார். தற்போது சாய் சுதர்சன் மீண்டும் ஒரு அரை சதம் அடித்து நிக்கோலஸ் பூரானிடம் இருந்து ஆரஞ்சு நிற தொப்பியை தன்வசம் படுத்தியுள்ளார். தற்போது இருவருக்கும் இடையே 49 ரன்கள் வித்தியாசம் இருக்கின்றது.

    • குஜராத் தரப்பில் சுதர்சன், சுப்மன் கில் அரை சதம் விளாசினர்.
    • கொல்கத்தா அணி தரப்பில் வைபவ், ஹர்சித் ராணா, ரசல் ஆகியோர் 1 விக்கெட்டை வீழ்த்தினர்.

    ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் கொல்கத்தா - குஜராத் அணிகள் மோதி வருகிறது. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி குஜராத் அணியின் தொடக்க வீரர்களாக சுப்மன் கில்- சாய் சுதர்சன் களமிறங்கினர். இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் கடந்தனர். முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 114 ரன்கள் எடுத்தது. 52 ரன்கள் எடுத்த நிலையில் சாய் சுதர்சன் ஆட்டமிழந்தார்.

    இதனையடுத்த கில்லுடன் பட்லர் ஜோடி சேர்ந்து அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தனர். சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட கில் 90 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்த வந்த திவாட்டியா 0 ரன்னில் வெளியேறினார். தொடர்ந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய பட்லர் 41 ரன்களுடன் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    இறுதியில் குஜராத் அணி 20 ஓவர் முடிவில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 198 ரன்கள் எடுத்தது. கொல்கத்தா அணி தரப்பில் வைபவ், ஹர்சித் ராணா, ரசல் ஆகியோர் 1 விக்கெட்டை வீழ்த்தினர்.

    • குஜராத் அணி 5-ல் வெற்றி பெற்று 10 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதலிடம் வகிக்கிறது.
    • கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 7 ஆட்டங்களில் ஆடி 3-ல் வெற்றியும், 4-ல் தோல்வியும் கண்டுள்ளது.

    ஐபிஎல் தொடரில் கொல்கத்தாவில் இன்று நடைபெறும் 39-வது லீக் ஆட்டத்தில் ரகானே தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, சுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸை எதிர்கொள்கிறது. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    இதுவரை 7 ஆட்டங்களில் விளையாடியுள்ள முன்னாள் சாம்பியனான குஜராத் அணி 5-ல் வெற்றி பெற்று 10 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதலிடம் வகிக்கிறது.

    அதேவேளையில், நடப்பு சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 7 ஆட்டங்களில் ஆடி 3-ல் வெற்றியும், 4-ல் தோல்வியும் கண்டுள்ளது.

    • பேட்டிங்கில் சூப்பர் பார்மில் உள்ள குஜராத் அணி நடப்பு தொடரில் 5 முறை 180 ரன்களுக்கு மேல் குவித்துள்ளது.
    • நடப்பு சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 7 ஆட்டங்களில் ஆடி 3-ல் வெற்றியும், 4-ல் தோல்வியும் கண்டுள்ளது.

    ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இன்று இரவு 7.30 மணிக்கு கொல்கத்தாவில் நடைபெறும் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்- குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன.

    இதுவரை 7 ஆட்டங்களில் விளையாடியுள்ள முன்னாள் சாம்பியனான குஜராத் அணி 5-ல் வெற்றி பெற்று 10 புள்ளிகளுடன் முதலிடம் வகிக்கிறது. இரு தோல்வி கூட (பஞ்சாப், லக்னோவுக்கு எதிராக) நெருங்கி வந்து தான் தோற்றது.

    பேட்டிங்கில் சூப்பர் பார்மில் உள்ள குஜராத் அணி நடப்பு தொடரில் 5 முறை 180 ரன்களுக்கு மேல் குவித்துள்ளது. சாய் சுதர்சன் (4 அரைசதத்துடன் 365 ரன்), ஜோஸ் பட்லர் (3 அரைசதத்துடன் 315 ரன்), கேப்டன் சுப்மன் கில் (215 ரன்), ரூதர்போர்டு (201 ரன்) ஆகிய 4 பேரும் தான் அந்த அணியின் பேட்டிங் தூண்கள். பெரும்பாலும் இவர்களில் யாராவது ஒருவர் கைகொடுத்து விடுகிறார்கள். பந்து வீச்சில் பிரசித் கிருஷ்ணா (14 விக்கெட்), சாய் கிஷோர் (11 விக்கெட்), முகமது சிராஜ் (11 விக்கெட்) கலக்குகிறார்கள். முந்தைய ஆட்டத்தில் 204 ரன் இலக்கை விரட்டிப்பிடித்து டெல்லியை பதம் பார்த்த குஜராத் அணி வெற்றிப்பயணத்தை தொடரும் உத்வேகத்துடன் உள்ளது.

    நடப்பு சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 7 ஆட்டங்களில் ஆடி 3-ல் வெற்றியும், 4-ல் தோல்வியும் கண்டுள்ளது. அந்த அணியின் பேட்டிங், பந்து வீச்சு சீராக இல்லை. ஒன்றில் வெற்றி பெற்றால் அடுத்த ஆட்டத்தில் உடனே தோற்று விடுகிறார்கள். இதுவரை அப்படி தான் நடந்துள்ளது. பஞ்சாப்புக்கு எதிரான கடந்த ஆட்டத்தில் 112 ரன் இலக்கை கூட தொட முடியாமல் வெறும் 95 ரன்னில் சுருண்டு மோசமாக தோற்றது. பின்வரிசையில் ஆல்-ரவுண்டர் ஆந்த்ரே ரஸ்செல் (7 ஆட்டத்தில் 34 ரன்), ரமன்தீப்சிங் (29 ரன்) முக்கியமான தருணங்களில் சோபிக்காதது பலவீனமாக உள்ளது. கேப்டன் ரஹானே (221 ரன்) தவிர வேறு யாரும் அந்த அணியில் 200 ரன்களை தாண்டவில்லை. பேட்டிங், பந்து வீச்சில் நட்சத்திர வீரர்கள் நிறைய பேர் இருந்தாலும், ஒருங்கிணைந்து முழு திறமையை காட்டினால் மட்டுமே குஜராத்தின் சவாலை சமாளிக்க முடியும். இல்லாவிட்டால் சிக்கல் தான்.

    • ஐபிஎல் தொடரில் இதுவரை 34 லீக் ஆட்டங்கள் நிறைவடைந்துள்ளன.
    • இந்த தொடரில் இன்று 2 லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன.

    10 அணிகள் இடையிலான 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இதுவரை 34 லீக் ஆட்டங்கள் நிறைவடைந்துள்ளன. இந்நிலையில், இந்த தொடரில் இன்று 2 லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன.

    அதில் மாலை 3.30 மணிக்கு அகமதாபாத்தில் நடைபெறும் 35-வது லீக் ஆட்டத்தில் அக்சர் படேல் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணி, சுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் மோதுகிறது. இதில் டாஸ் வென்ற குஜராத் அணி பந்து விச்சை தேர்வு செய்துள்ளது. 

    ×