என் மலர்
நீங்கள் தேடியது "விராட் கோலி 36"
- நடப்பு ஐபிஎல் சீசனில் 759 ரன்கள் குவித்து ஆரஞ்ச் கோப்பையை சாய் சுதர்சன் கைப்பற்றினார்.
- வளர்ந்து வரும் வீரருக்கு வழங்கப்படும் எமெர்ஜிங் வீரருக்கான விருதை சாய் சுதர்சன் வென்றார்.
ஐபிஎல் 2025 இறுதிப் போட்டியில் பஞ்சாப் அணியை 6 ரன் வித்தியாசத்தில் வென்று ஆர்சிபி அணி கோப்பையை வென்றுள்ளது.
இதனையடுத்து நடப்பு ஐபிஎல் சீசனில் சிறப்பாக விளையாடிய வீரர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது. அதில், குஜராத் அணியை சேர்ந்த சாய் சுதர்சன் 4 விருதுகளை வென்று அசத்தியுள்ளார்.
நடப்பு ஐபிஎல் சீசனில் 759 ரன்கள் குவித்து ஆரஞ்ச் கோப்பையை கைப்பற்றிய சாய் சுதர்சன், 88 பவுண்டரிகள் அடித்து அதிக போர் அடுத்தவர்களின் பட்டியலில் முதலிடம் பிடித்து ரூபே ஆன் தி போர்ஸ் ஆப் தி சீசன் விருதையும் வென்றார்.
மேலும், வளர்ந்து வரும் வீரருக்கு வழங்கப்படும் எமெர்ஜிங் வீரருக்கான விருதை வென்ற அவர், 1495 பேண்டசி புள்ளிகள் பெற்று பேண்டசி கிங் விருதையும் வென்றார்.
- கோலி தனது 36-வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார்.
- இவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி. அவர் தனது 36-வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். இவருக்கு கிரிக்கெட் பிரபலங்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் விராட் கோலியின் பிறந்தநாளுக்கு இந்திய அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அதில், "சிறப்பான Comeback நம்முடைய Setback-ல் இருந்துதான் வருகிறது. இந்த உலகம் உங்களின் Comeback-ஐ எதிர்நோக்கி ஆவலுடன் காத்திருக்கிறது.
கடந்த காலத்தில் அதை நீங்கள் செய்தீர்கள். இப்போது மீண்டும் ஒருமுறை அதை செய்து காண்பிப்பீர்கள் என நான் நம்புகிறேன். பிறந்தநாள் வாழ்த்துகள் விராட் கோலி என யுவராஜ் சிங் கூறியுள்ளார்.






