என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சாய் சுதர்சன்"

    • 3 முறை சாம்பியனான தமிழ்நாடு ‘டி’ பிரிவில் இடம் பெற்றுள்ளது.
    • ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் 'சூப்பர் லீக்' சுற்றுக்கு தகுதி பெறும்.

    18-வது சையத் முஷ்டாக் அலி கோப்பைக்கான 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இன்று முதல் டிசம்பர் 18-ந் தேதி வரை ஐதராபாத், ஆமதாபாத், கொல்கத்தா, லக்னோ, புனே ஆகிய இடங்களில் நடக்கிறது. இதில் பங்கேற்கும் அணிகள் 'எலைட்', 'பிளேட்' என இருவகையாக பிரிக்கப்பட்டுள்ளன. 'எலைட்' பிரிவில் களம் காணும் 32 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு இருக்கின்றன.

    நடப்பு சாம்பியன் மும்பை அணி 'ஏ' பிரிவிலும், 3 முறை சாம்பியனான தமிழ்நாடு 'டி' பிரிவிலும் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும், தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் 'சூப்பர் லீக்' சுற்றுக்கு தகுதி பெறும்.

    'பிளேட்' பிரிவில் அருணாச்சலபிரதேசம், மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகாலாந்து, சிக்கிம் ஆகிய அணிகள் அங்கம் வகிக்கின்றன. இந்த பிரிவு ஆட்டங்கள் புனேயில் நடக்கின்றன. லீக் சுற்று முடிவில் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் அடுத்த ஆண்டு போட்டியில் 'எலைட்' பிரிவுக்கு ஏற்றம் பெறும். 'எலைட்' பிரிவில் கடைசி 2 இடத்தை பெறும் அணிகள் அடுத்த ஆண்டு 'பிளேட்' பிரிவுக்கு தரம் இறக்கப்படும்.

    இந்த போட்டியில் இந்திய 20 ஓவர் அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ், ஆல்-ரவுண்டர் ஷிவம் துபே (இருவரும் மும்பை), ஹர்திக் பாண்ட்யா (பரோடா), சஞ்சு சாம்சன் (கேரளா), அக்ஷர் பட்டேல் (குஜராத்), வருண் சக்ரவர்த்தி (தமிழ்நாடு), ரியான் பராக் (அசாம்), வெங்கடேஷ் அய்யர் (மத்தியபிரதேசம்), தீபக் ஹூடா (ராஜஸ்தான்), ரவி பிஷ்னோய் (குஜராத்) உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் கலந்து கொண்டு தங்கள் திறமையை நிரூபிக்க காத்திருக்கின்றனர்.

    இந்நிலையில், சையத் முஷ்டாக் அலி கோப்பை டி20 தொடரில் விளையாடும் தமிழ்நாடு சீனியர் அணியில் சாய் சுதர்சன் சேர்க்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது.

    • சுப்மன் கில் ஆடுவது சந்தேகமாகியுள்ளதால் ஆல்-ரவுண்டர் நிதிஷ்குமார் ரெட்டி சேர்க்கப்பட்டுள்ளார்.
    • இடக்கை பேட்ஸ்மேனான சாய் சுதர்சன் வலது காலில் காலுறை இன்றி வலை பயிற்சியில் ஈடுபட்டார்.

    தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக வருகிற 22-ந்தேதி கவுகாத்தியில் தொடங்கும் 2-வது டெஸ்டில், கழுத்துவலியால் அவதிப்படும் இந்திய கேப்டன் சுப்மன் கில் ஆடுவது சந்தேகமாகியுள்ளதால் அதை கவனத்தில் கொண்டு அணியில் கூடுதலாக ஆல்-ரவுண்டர் நிதிஷ்குமார் ரெட்டி சேர்க்கப்பட்டுள்ளார்.

    இதற்கிடையே, 2-வது டெஸ்டுக்கு புறப்படுவதற்கு முன்பாக கொல்கத்தாவில் இந்திய வீரர்கள் நேற்று பயிற்சி மேற்கொண்டனர். இதில் சாய் சுதர்சன், துருவ் ஜூரெல் ஆகியோர் ஒற்றைக்காலில் மட்டும் காலுறை (பேடு) கட்டிக் கொண்டு சுழற்பந்து வீச்சு யுக்தியை திறம்பட சமாளிப்பதற்கான பயிற்சி எடுத்தனர். இது கொஞ்சம் ஆபத்தான பழங்கால பயிற்சி முறையாகும். பந்து நேராக காலில் தாக்கினால் எலும்பு முறிவு கூட ஏற்படலாம்.

    இடக்கை பேட்ஸ்மேனான சாய் சுதர்சன் வலது காலில் காலுறை இன்றி வலை பயிற்சியில் ஈடுபட்டார். முன்னங்காலை எடுத்து வைத்து பந்தை தடுப்பதை காட்டிலும் பேட்டை அதிகமாக பயன்படுத்துவதற்கு இந்த பயிற்சி முறை வழிவகுக்கும். அத்துடன் கிரீசுக்கு வெளியே வந்து சுழற்பந்தை அடித்து ஆடுவதற்கும் ஊக்குவிக்கும். அவர்களின் வித்தியாசமான பயிற்சியை கம்பீர் உன்னிப்பாக கவனித்தார்.

    • சாய் சுதர்சன் எல்லைக் கோட்டின் அருகே தரையில் அமர்ந்து சாண்ட்விச் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்.
    • கடந்த ஐபிஎல் தொடரில் குஜராத் அணிக்காக 15 இன்னிங்சில் 759 ரன்களைக் குவித்தார்.

    புதுடெல்லி:

    இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி டெல்லியில் நடைபெற்றது. இதில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றதுடன் டெஸ்ட் தொடரை 2-0 என கைப்பற்றியது.

    இதற்கிடையே, டெல்லி டெஸ்ட்டின் 4-ம் நாள் ஆட்டத்தின்போது சாய் சுதர்சன் தனது பயிற்சி உடையில் எல்லைக் கோட்டிற்கு அருகே தரையில் அமர்ந்து மைதானத்தில் பந்து பொறுக்கும் சிறுவர்களுடன் சேர்ந்து சாண்ட்விச் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்.

    இந்நிலையில், சாய் சுதர்சன் பவுண்டரி லைனில் அமர்ந்திருந்தபோது ரசிகர் ஒருவர், குஜராத் டைட்டன்சை விட்டுவிட்டு சி.எஸ்.கே. அணிக்கு வாங்க என உணர்ச்சிப்பூர்வமாகக் கோரிக்கை விடுத்தார்.

    இந்த வீடியோ வெளியானதை தொடர்ந்து, சமூக வலைதளத்தில் சிஎஸ்கே ரசிகர்கள் அவருக்கு இதே கோரிக்கையை விடுதது வருகின்றனர்.

    கடந்த ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக 15 இன்னிங்ஸ்களில் 759 ரன்களைக் குவித்து 'மிஸ்டர் கன்சிஸ்டன்ட்' என பெயர் பெற்றவர் சாய் சுதர்சன் என்பது குறிப்பிடத்தக்கது.

    தமிழகத்தைச் சேர்ந்த சிறந்த வீரர் உள்ளூர் அணியான சிஎஸ்கேவில் விளையாட வேண்டும் என்பதே சி.எஸ்.கே. ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

    • முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 318 ரன்கள் குவித்தது.
    • ஜெய்ஸ்வால் 173 ரன்களுடனும் சுப்மன் கில் 20 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.

    வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. அகமதாபாத்தில் நடந்த முதல் டெஸ்டில் வெற்றி பெற்ற இந்தியா 1-0 என தொடரில் முன்னிலையில் உள்ளது.

    இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் டெல்லி பெரோஷா கோட்லா மைதானத்தில் இன்று தொடங்கியது.

    இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

    அதன்படி இந்திய அணியின் தொடக்க வீரர்களாக கேல் ராகுல், யஷஸ்வி ஜெய்ஸ்வால் களமிறங்கினர். இருவரும் தொடக்கம் சிறப்பாக அமைத்தனர். 38 ரன்கள் எடுத்த ராகுல் 19-வது ஓவரில் ஜோமல் வேரிகன் பந்தில் அவுட் ஆகி வெளியேறினார்.

    பின்னர் வந்த தமிழக வீரர் சாய்சுதர்சன் ஜெய்ஸ்வாலுடன் ஜோடி நிதானமாக விளையாடினார். அடுத்தடுத்த ஓவரில் சாய் சுதர்சன் அரை சதமும், மறுபுறம் ஜெய்ஸ்வால் சதமும் விளாசினர்.

    தொடர்ந்து விளையாடிய சாய் சுதர்சன் 87 ரன்னில் அவுட் ஆகினார். இதனை தொடர்ந்து கில்- ஜெய்ஸ்வால் ஜோடி பொறுப்புடன் விளையாடினர்.

    இதனால் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 318 ரன்கள் குவித்தது. ஜெய்ஸ்வால் 173 ரன்களுடனும் சுப்மன் கில் 20 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.

    • இந்தியா 1-0 என தொடரில் முன்னிலையில் உள்ளது.
    • ராகுல் 19வது ஓவரில் ஜோமல் வேரிகன் பந்தில் ஸ்டம்ப் அவுட் ஆகி வெளியேறினார்.

    வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியாவில் பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.

    அகமதாபாத்தில் நடந்த முதல் டெஸ்டில் வெற்றி பெற்ற இந்தியா 1-0 என தொடரில் முன்னிலையில் உள்ளது.

    இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் டெல்லி பெரோஷா கோட்லா மைதானத்தில் இன்று தொடங்கியது.

    போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி வெஸ்ட் இண்டீஸ் அணி பந்துவீச, இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது.

    முதலில் கேல் ராகுல், யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஜோடி களமிறங்கி ரன்கள் குவிக்க தொடங்கியது. 38 ரன்கள் எடுத்த ராகுல் 19வது ஓவரில் ஜோமல் வேரிகன் பந்தில் ஸ்டம்ப் அவுட் ஆகி வெளியேறினார்.

    பின்னர் தமிழக வீரர் சாய்சுதர்சன் ஜெய்ஸ்வாலுடன் ஜோடி சேர்ந்தார். அடுத்தடுத்த ஓவரில் சாய் சுதர்சன் 57 ரன்கள் எடுத்து அரை சதம் கடந்தார். மறுபுறம் ஸ்கோர் மெஷினாக செயல்பட்ட ஜெய்ஸ்வால் 101 ரன்கள் குவித்தார்.

    50 ஓவர் முடிவில் இந்தியா ஒரு விக்கெட் இழப்புடன் 196 ரன்கள் எடுத்துள்ளது.  

    • வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான முதல் டெஸ்டில் 7 ரன்னில் ஆட்டமிழந்தார்.
    • டெஸ்ட் போட்டியில் 7 இன்னிங்சில் 147 ரன்கள் மட்டுமே அடித்துள்ளார்.

    ஐபிஎல் கிரிக்கெட்டில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருபவர் தமிழகத்தைச் சேர்ந்த சாய் சுதர்சன். இவர் கவுன்ட்டி கிரிக்கெட்டில் விளையாடி ரன்கள் குவித்தார். நேர்த்தியான ஸ்ட்ரோக் பிளேயர் என்பதால் டெஸ்ட் அணியில் அவருக்கு இடம் கிடைத்துள்ளது.

    டெஸ்ட் கிரிக்கெட்டில் இங்கிலாந்து அணிக்கெதிராக அறிமுகம் ஆனார். தற்போது நடைபெற்று வரும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான தொடரிலும் இடம் பிடித்துள்ளார். சாய் சுதர்சன் 7 இன்னிங்சில் 147 ரன்கள் மட்டுமே அடித்துள்ளார். இதில் ஒரேயொரு அரைசதம் அடங்கும். கடினமான 3ஆவது இடத்தில் இன்னும் தன்னுடைய சிறப்பான ஆட்டத்தை அவர் காண்பிக்கவில்லை. இருந்தபோதிலும், அணி நிர்வாகம் அவருக்கு ஆதரவாக உள்ளது.

    இந்த நிலையில் இந்திய அணியின் துணை பயிற்சியாளரான ரியன் டென் டோஸ்கேட், 3ஆவது இடத்திற்கு போதுமான பேட்ஸ்மேன்கள் காத்திருக்கிறார்கள் என்பது சாய் சுதர்சனுக்கு தெரியும் எனத் தெரிவித்துள்ளார்.

    சாய் சுதர்சன் பற்றி ரியன் டென் டோஸ்கேட் கூறியதாவது:-

    சாய் சுதர்சனுக்கு கேப்டன் ஆதரவாக இருக்கிறார். கோச்சிங் ஸ்டாஃப் ஆதரவாக இருக்கிறார்கள் என்பதை சாய் சுதர்சன் உணர்ந்துள்ளார் என்பது என்னால் உறுதியாக கூற முடியும். உறுதியளித்த அவருடைய திறமையான ஆட்டத்தை விரைவில் வெளிப்படுத்துவார் என நாங்கள் உணர்கிறோம்.

    வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான போட்டியில் ஜுரல் சிறப்பாக விளையாடினார். அவர் மிடில் ஆர்டர் வரிசையில் களம் இறங்கும் வாய்ப்பை பெறலாம். முதல் மூன்று அல்லது நான்கு இடத்தில் விளையாட மற்ற சிறந்த வீரர்களும் உள்ளனர். சுப்மன் கில் தற்போது 4ஆவது இடத்தில் விளையாடி வருகிறார். ஆகவே, சாய் சுதர்சன் இதை அறிந்திருப்பார்.

    அந்த மாதிரியான போட்டியை நீங்கள் எதிர்பார்க்கவில்லை என்றால், இந்தியாவில் கிரிக்கெட் விளையாடுவதை நீங்கள் ஒரு தொழிலாகத் தொடரமாட்டீர்கள் என்று நான் நினைக்கிறேன். நான் சொன்ன மாதிரி, அவர் வெளியே சென்று நாம் நினைக்கும் அளவுக்கு ரன்கள் எடுக்க வேண்டும்.

    ஒரு இடத்திற்காக போராடுகிறீர்கள் என்பதை அவரால் மறைக்க முடியாது. உங்களுக்குத் தெரியும், கருண் நாயர் இங்கிலாந்தில் நான்கு டெஸ்ட் போட்டிகளில் விளையாடினார். அந்த இடத்திற்கு நிறைய நல்ல வீரர்கள் போராடுகிறார்கள். எனவே சாய் சுதர்சன் தன்னை நம்புவதில் கவனம் செலுத்த வேண்டும். அவர் மீது அதிக நம்பிக்கை வைத்து 3ஆவது இடம் அவருக்கு வழங்கியுள்ளோம்.

    இவ்வாறு ரியன் டென் டோஸ்கேட் தெரிவித்துள்ளார்.

    வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான முதல் டெஸ்டின் முதல் இன்னிங்சில் 7 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அடைந்தார். இந்தியா இன்னிங்ஸ் வெற்றி பெற்றதால் 2ஆவது இன்னிங்சில் பேட்டிங் செய்யவில்லை.

    • கே.எல். ராகுல் 11 ரன்னிலும், என். ஜெகதீசன் 38 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
    • சாய் சுதர்சன் மட்டும் தாக்குப்பிடித்து 75 ரன்கள் சேர்த்தார்.

    இந்தியா "ஏ"- ஆஸ்திரேலியா "ஏ" அணிகளுக்கு இடையில் அதிகாரப்பூர்வமற்ற 2ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லக்னோவில் நடைபெற்று வருகிறது. இதில் முதலில் களம் இறங்கிய ஆஸ்திரேலியா 420 ரன்கள் குவித்து ஆல்அவுட் ஆனது.

    அந்த அணியைச் சார்ந்த யாரும் சதம் அடிக்கவில்லை என்றாலும் ஜேக் எட்வர்ட்ஸ் 88 ரன்களும், நாதன் மெக்ஸ்வீனி 74 ரன்களும், சாம் கோன்டாஸ் 49 ரன்களும் அடித்தனர். இந்தியா "ஏ" தரப்பில் மனவ் சுதர் 5 விக்கெட் சாய்த்தார்.

    பின்னர் இந்தியா "ஏ" முதல் இன்னி்ங்சை தொடங்கியது. ஆஸ்திரேலியா "ஏ"வின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் விக்கெட்டுக்களை அடுத்தடுத்து இழந்தது.

    கே.எல். ராகுல் 11 ரன்னிலும், என். ஜெகதீசன் 38 ரன்னிலும், ஆயுஷ் படோனி 21 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். மற்றவர்கள் சொதப்ப, சாய் சுதர்சன் மட்டும் தாக்குப்பிடித்து விளையாடினார். அவர் 75 ரன்னில் ஆட்டமிழக்க இந்தியா ஏ 194 ரன்னில் சுருண்டது.

    பின்னர் 2ஆவது இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலியா ஏ 16 ரன்னுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்துள்ளது.

    • சீரான தொடக்கம் கிடைத்த போதிலும் கருண் நாயர் ஒரு அரை சதம் மட்டும் அடித்தார்.
    • இந்தத் தொடரில் சாய் சுதர்சனின் செயல்பாட்டுக்கு 5 மார்க் அளிக்கிறேன்.

    புதுடெல்லி:

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல்-ரவுண்டர் இர்பான் பதான் தனது யூ டியூப் சேனலில் பேசியதாவது:

    இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் முழுவதும் இந்திய பேட்ஸ்மேன் கருண் நாயர் மோசமாக செயல்பட்டதாக தெரியவில்லை. ஆனால் அவருக்கு தொடர்ந்து சீரான தொடக்கம் கிடைத்த போதிலும், ஒரு அரை சதம் மட்டுமே அடித்துள்ளார். அத்துடன் கிரிக்கெட் அவருக்கு 2-வது வாய்ப்பு கொடுத்துள்ளது. அதனை அவர் சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை.

    குறிப்பாக, லண்டன் லார்ட்சில் நடந்த டெஸ்டில் போட்டியை வென்று தர அற்புதமான வாய்ப்பு கிட்டியது. இருப்பினும் அவரால் அதை செய்ய முடியவில்லை. நல்ல அடித்தளம் அமைத்து ஆடும்போது, திடீரென தவறான ஷாட்டை ஆடி ஆட்டமிழந்து விடுகிறார். ஓவலில் நடந்த கடைசி டெஸ்டில் பவுன்சர் பந்து அவருக்கு எதிராக பயன்படுத்தப்பட்டது. அது அவரை பதற்றம் அடைய செய்ததைப் பார்க்க முடிந்தது. அதனால் அவரது செயல்பாட்டுக்கு 10க்கு 4 மார்க் வழங்குகிறேன்.

    இந்தத் தொடரில் சாய் சுதர்சனின் செயல்பாட்டுக்கு 5 மார்க் அளிக்கிறேன். அவர் சில இடங்களில் ஏற்றம் காண வேண்டும் என்றாலும் திறமையான வீரராக தெரிகிறார். அவருக்கு வழங்கப்பட்ட வாய்ப்பை இன்னும் சிறப்பாக பயன்படுத்தி இருக்கலாம். என்றாலும் அவர் அனைத்து டெஸ்டிலும் விளையாடி இருந்தால், விஷயம் வேறுவிதமாக இருந்திருக்கும்.

    வெளிநாட்டு சுற்றுப்பயணத்தில் உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும், உங்களது அணி தோல்வியை தழுவும்போது, அணியில் இருந்து கழற்றிவிடப்படுவீர்கள். மீண்டும் அணிக்கு திரும்புவீர்கள் என அனைத்தும் நடக்கும். ஆனால் அதன் பிறகு ஆடும் லெவனில் இடம் கிடைப்பது கடினம். ஆனால் ஒரு வீரராக தொடர்ந்து வாய்ப்பு கிடைத்தால், நம்மால் நிறைய சாதிக்க முடியும் என அவர் நினைப்–பார். எனக்கு எப்போதும் முன்வரிசையில் களம் இறங்கும் இடதுகை பேட்ஸ்மேன்களைப் பிடிக்கும். சிறப்பாக பேட்டிங் செய்வதற்கான திறன் சுதர்சனிடம் இருக்கிறது. அதனால் தான் அவருக்கு 5 மார்க் கொடுத்தேன் என தெரிவித்தார்.

    • கிறிஸ் வோக்ஸ் வீசிய முதல் ஓவரின் 4 ஆவது பந்தில் ஜெய்ஸ்வால் டக் அவுட்டாகி வெளியேறினார்.
    • முதல் ஓவரின் 5 ஆவது பந்தில் சாய் சுதர்சன் கோல்டன் டக் அவுட்டாகி வெளியேறினார்.

    இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் 4-வது டெஸ்ட் போட்டி மான் செஸ்டரில் நடைபெற்று வருகிறது.

    இந்திய அணி முதல் இன்னிங்சில் 358 ரன் எடுத்தது. பின்னர் முதல் இன்னிங்சை விளையாடிய இங்கிலாந்து நேற்றைய 3-வது நாள் ஆட்ட நேர முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 544 ரன் குவித்து வலுவான நிலையில் இருந்தது.

    ஜோ ரூட் சதம் அடித்தார். அவர் 150 ரன்னும் , பென் டக்கெட் 94 ரன்னும் , கிராவ்லி 84 ரன்னும் , பென் ஸ்டோக்ஸ் 77 ரன்னும் ( அவுட் இல்லை), ஆலி போப் 71 ரன்னும் எடுத்தனர். ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர் தலா 2 விக்கெட்டும், பும்ரா, கம்போஜ், சிராஜ் தலா 1 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

    186 ரன்கள் முன்னிலையுடன் 4 ஆம் நாள் ஆட்டத்தை தொடர்ந்த இங்கிலாந்து அணி 669 ரன்கள் குவித்து ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 141 ரன்கள் குவித்து அவுட்டானார்.

    இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக ஜடேஜா 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

    இதனையடுத்து 311 ரன்கள் பின்னிலையுடன் களமிறங்கிய இந்திய அணி முதல் ஓவரிலேயே 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியுள்ளது. கிறிஸ் வோக்ஸ் வீசிய முதல் ஓவரின் 4 ஆவது பந்தில் ஜெய்ஸ்வால் டக் அவுட்டாகி வெளியேற அடுத்த பந்திலேயே சாய் சுதர்சன் கோல்டன் டக் அவுட்டாகி வெளியேறினார். இதனால் ரன் எதுவும் எடுக்காமலேயே இந்திய அணி 2 விக்கெட்டுகளை இழந்தது.

    இதனையடுத்து கே.எல்.ராகுல் - கில் ஜோடி தற்போது விளையாடி வருகிறது. 

    • முதல் டெஸ்டிற்குப் பிறகு அணியில் இருந்து நீக்கப்பட்டார்.
    • தனது 3ஆவது இன்னிங்சில் அரைசதத்தை பதிவு செய்துள்ளார்.

    இந்தியா- இங்கிலாந்து இடையிலான 4ஆவது டெஸ்ட் போட்டி மான்செஸ்டர் ஓல்டு டிராஃபோர்டில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி இந்தியா முதல் இன்னிங்சில் பேட்டிங் செய்து வருகிறது.

    ஜெய்ஸ்வால்- கே.எல். ராகுல் ஜோடி நல்ல அடித்தளம் அமைத்து கொடுத்தது. இந்திய அணியின் ஸ்கோர் 94 ரன்னாக இருக்கும்போது கே.எல். ராகுல் 46 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து சாய் சுதர்சன் களம் இறங்கினார். மற்றொரு முனையில் ஜெய்ஸ்வால் அரைசதம் அடித்து, 58 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    அடுத்து வந்த சுப்மன் கில் 12 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். அப்போது இந்தியா 140 ரன்கள் எடுத்திருந்தது.

    4ஆவது விக்கெட்டுக்கு சாய் சுதர்சன் உடன் ரிஷப் பண்ட் ஜோடி சேர்ந்தார். சாய் சுதர்சன் நிதானமாக விளையாட, ரிஷப் பண்ட் தனது வழக்கமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

    69ஆவது ஓவரை ஜோ ரூட் வீசினார். இந்த ஓவரின் 2ஆவது பந்தை பவுண்டரிக்கு விரட்டி சாய் சுதர்சன் 134 பந்தில் அரைசதம் கடந்தார். டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 3ஆவது இன்னிங்சில் அரைசதத்தை பதிவு செய்துள்ளார்.

    • பர்மிங்காம் மைதானத்தில் இதுவரை எந்த ஆசிய அணியும் வெற்றி பெற்றதில்லை.
    • இந்திய அணி 8 டெஸ்டில் ஆடி 7-ல் தோல்வியும், ஒன்றில் டிராவும் கண்டுள்ளது.

    பர்மிங்காம்:

    இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி லீட்சில் நடைபெற்றது. இந்த போட்டியில் இங்கிலாந்து 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி தொடரை வெற்றியுடன் தொடங்கி உள்ளது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி 0-1 என்ற கணக்கில் பின்தங்கி உள்ளது.

    இந்த நிலையில் இரு அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி பர்மிங்காமில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது. இந்திய அணியில் 3 மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பும்ரா, சாய் சுதர்சன், ஷர்துல் தாகூர் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு பதிலாக வாஷிங்டன் சுந்தர், நிதிஷ் குமார், ஆகாஷ் தீப் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

    பர்மிங்காம் மைதானத்தில் தொடக்கத்தில் வேகப்பந்து வீச்சும், போக போக பேட்டிங்குக்கும் அனுகூலமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இங்கு இதுவரை எந்த ஆசிய அணியும் வெற்றி பெற்றதில்லை. இந்திய அணி 8 டெஸ்டில் ஆடி 7-ல் தோல்வியும், ஒன்றில் டிராவும் கண்டுள்ளது. அதனால் இங்கிலாந்தின் ஆதிக்கத்துக்கு முடிவு கட்டி இந்தியா சரித்திரம் படைக்குமா அல்லது மறுபடியும் பணிந்து போகுமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

    • முதல் டெஸ்டில் 0 மற்றும் 30 என சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தார்.
    • 5ஆவது நாள் பீல்டிங் செய்தபோது தோள் பட்டையில் காயம் ஏற்பட்டதாக தகவல்.

    இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி லீட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இதில் இங்கிலாந்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் இது கை வீரரான சாய் சுதர்சன் இந்திய அணியில் அறிமுகம் ஆனார்.

    முதல் இன்னிங்சில் டக்அவுட் ஆன அவர், 2ஆவது இன்னிங்சில் 30 ரன்கள் சேர்த்தார். முதல் போட்டியின் 5ஆவது நாள் ஆட்டத்தின்போது பீல்டிங் செய்யும்போது, தோள்பட்டையில் காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் விளையாடுவது சந்தேகம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

    2ஆவது டெஸ்ட் எட்ஜ்பாஸ்டனில் வருகிற 2ஆம் தேதி தொடங்குகிறது. அதற்குள் காயம் சரியாகிவிட்டால், ஆடும் லெவனில் இடம் பெற வாய்ப்புள்ளது.

    வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷித் ரானா, 2ஆவது போட்டிக்கான இந்திய அணியில் இருந்து விடுவிக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

    ×