என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Yashaswi Jaiswal"

    • முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 318 ரன்கள் குவித்தது.
    • ஜெய்ஸ்வால் 173 ரன்களுடனும் சுப்மன் கில் 20 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.

    வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. அகமதாபாத்தில் நடந்த முதல் டெஸ்டில் வெற்றி பெற்ற இந்தியா 1-0 என தொடரில் முன்னிலையில் உள்ளது.

    இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் டெல்லி பெரோஷா கோட்லா மைதானத்தில் இன்று தொடங்கியது.

    இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

    அதன்படி இந்திய அணியின் தொடக்க வீரர்களாக கேல் ராகுல், யஷஸ்வி ஜெய்ஸ்வால் களமிறங்கினர். இருவரும் தொடக்கம் சிறப்பாக அமைத்தனர். 38 ரன்கள் எடுத்த ராகுல் 19-வது ஓவரில் ஜோமல் வேரிகன் பந்தில் அவுட் ஆகி வெளியேறினார்.

    பின்னர் வந்த தமிழக வீரர் சாய்சுதர்சன் ஜெய்ஸ்வாலுடன் ஜோடி நிதானமாக விளையாடினார். அடுத்தடுத்த ஓவரில் சாய் சுதர்சன் அரை சதமும், மறுபுறம் ஜெய்ஸ்வால் சதமும் விளாசினர்.

    தொடர்ந்து விளையாடிய சாய் சுதர்சன் 87 ரன்னில் அவுட் ஆகினார். இதனை தொடர்ந்து கில்- ஜெய்ஸ்வால் ஜோடி பொறுப்புடன் விளையாடினர்.

    இதனால் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 318 ரன்கள் குவித்தது. ஜெய்ஸ்வால் 173 ரன்களுடனும் சுப்மன் கில் 20 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.

    • இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமான விராட் கோலி இளம் வீரரான ஜெய்ஸ்வாலுக்கு பேட்டிங் டிப்ஸ் கொடுத்தார்.
    • ஜெய்ஸ்வாலுக்கு பந்து வீசிய தமிழக வீரர் அஸ்வினும் அவருக்கு சில அறிவுரைகளை வழங்கினார்.

    புதுடெல்லி:

    உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி ஜூன் 7 முதல் 11-ந் தேதி வரை லண்டனில் ஓவல் மைதானத்தில் நடக்கிறது. இதில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன.

    இந்திய போட்டிக்கான இந்திய அணியின் மாற்று வீரராக ருதுராஜ் கெய்க்வாட் சேர்க்கப்பட்டு இருந்தார். அவருக்கு திருமணம் நடைபெற இருப்பதால் இந்தப் போட்டியில் மாற்று வீரராக பங்கேற்க இயலாது. இதனால் ருதுராஜ் கெய்க்வாடுக்கு பதிலாக ஜெய்ஷ்வால் தேர்வு செய்யப்பட்டார். ஐபிஎல் முடிந்ததும் சில வீரர்களை தவிர மற்ற வீரர்கள் டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் விளையாடுவதற்காக லண்டன் சென்றனர்.

    இந்நிலையில் டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்காக இந்திய வீரர்கள் நேற்று பயிற்சியில் ஈடுபட்டனர். அப்போது இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமான விராட் கோலி இளம் வீரரான ஜெய்ஸ்வாலுக்கு பேட்டிங் டிப்ஸ் கொடுத்தார். ஜெய்ஸ்வாலுக்கு பந்து வீசிய தமிழக வீரர் அஸ்வினும் அவருக்கு சில அறிவுரைகளை வழங்கினார். இந்த வீடியோ மற்றும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


    டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி 2019-ல் அறிமுகப்படுத்தப்பட்டது. சவுத்தாம்ப்டனில் நடந்த முதல் இறுதிப் போட்டியில் நியூசிலாந்து எட்டு விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி சாம்பியன் ஆனது. தற்போது 2-வது டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்தியா விளையாட உள்ளது. ரோகித் சர்மா தலைமையிலா இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வெல்லுமா என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

    • ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டெஸ்டின் 2-வது இன்னிங்சில் ஜெய்ஸ்வால் 161 ரன்கள் எடுத்தார்.
    • இந்த ஆண்டில் ஜெய்ஸ்வால் 3 சதம், 7 அரை சதத்துடன் 1,280 ரன்கள் குவித்துள்ளார்.

    அடிலெய்டு:

    இந்தியா, ஆஸ்திரேலியா இடையிலான 2-வது டெஸ்ட் அடிலெய்டில் நாளை மறுதினம் பகலிரவு போட்டியாக நடைபெறுகிறது. பிங்க் பந்து டெஸ்ட் போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றனர்.

    இந்நிலையில், இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரரான யஷஸ்வி ஜெய்ஸ்வால், சச்சின் டெண்டுல்கரின் சாதனையை தகர்ப்பதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

    ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் 2-வது இன்னிங்சில் ஜெய்ஸ்வால் 161 ரன்கள் எடுத்தார். இந்த ஆண்டில் ஜெய்ஸ்வால் இதுவரை 3 சதம், 7 அரை சதத்துடன் 58.18 சராசரி மற்றும் 72.52 ஸ்டிரைக் ரேட்டுடன் 1,280 ரன்கள் குவித்துள்ளார். இதில் அவரது அதிகபட்ச ரன் குவிப்பு 214 ஆகும்.

    அதன்படி, காலண்டர் ஆண்டில் அதிக ரன்கள் குவித்துள்ள சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடிக்க ஜெய்ஸ்வாலுக்கு மேலும் 282 ரன்கள் தேவையாக உள்ளது.

    கடந்த 2010-ம் ஆண்டில் சச்சின் 14 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 7 சதம், 5 அரை சதத்துடன் 1,562 ரன்களை 78.10 சராசரியுடன் குவித்திருந்தார்.

    ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் உள்ள ஜெய்ஸ்வாலுக்கு தற்போது இந்த சாதனையை தகர்ப்பதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

    டெஸ்ட் போட்டிகளில் ஒரு ஆண்டில் அதிக ரன் குவித்த சாதனை, பாகிஸ்தான் வீரர் முகம்மது யூசப் வசம் உள்ளது. அவர், 2006ல் 11 போட்டிகள், 19 இன்னிங்சில் 1,788 ரன் குவித்து முதலிடத்தில் உள்ளார்.

    • கோலி- ஜெய்ஸ்வால் 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.
    • 82 ரன்கள் அடித்த நிலையில் ஜெய்ஸ்வால் துரதிர்ஷ்டவசமாக ரன் அவுட் ஆனார்.

    மெல்போர்ன்:

    இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான 4-வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்த ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 474 ரன்கள் குவித்தது. இதனையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா 2-வது நாள் ஆட்ட நேர முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 164 ரன்களுடன் தடுமாறி வருகிறது.

    இதில் 51 ரன்களுக்குள் 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இந்திய அணியை ஜெய்ஸ்வால் - விராட் கோலி பார்ட்னர்ஷிப் அமைத்து மீட்டெடுத்தனர். 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் இந்த ஜோடி பிரிந்தது. 82 ரன்கள் அடித்த நிலையில் ஜெய்ஸ்வால் துரதிர்ஷ்டவசமாக ரன் அவுட் ஆனார்.

    இந்நிலையில் இந்த ரன் அவுட்டுக்கு விராட் கோலிதான் காரணம் என்று இந்திய முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ரேக்கர் விமர்சித்தார். அதை மற்றொரு இந்திய முன்னாள் வீரர் இர்பான் பதான் ஏற்றுக்கொள்ளவில்லை. அப்போது அவர்களுக்கிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

    மஞ்ரேக்கர் - இர்பான் பதான் இடையேயான உரையாடல் பின்வருமாறு:-

    மஞ்ரேக்கர்:

    இந்த தருணத்தை நாம் விராட் கோலியின் பக்கத்திலிருந்து கொஞ்சம் பார்க்க வேண்டும். அங்கே பந்தை மட்டும் பார்த்து ரன் இல்லை என்று விராட் கோலி சொன்னது பள்ளி வயது சிறுவனை போல் செய்த தவறாகும். பொதுவாக ரன்கள் எடுப்பதற்கு எதிர்ப்புறம் இருக்கும் பேட்ஸ்மேன்தான் அழைப்பை கொடுக்க வேண்டும். ஆனால் விராட் கோலி வேண்டாம் என்று சொன்னதால் ஜெய்ஸ்வாலுக்கு அங்கே வாய்ப்பு இல்லை.

    பதான்:

    கிரிக்கெட்டில் பந்து பாய்ண்ட் திசைக்கு அடிக்கப்பட்டால் எதிர்ப்புறம் இருக்கும் பேட்ஸ்மேன்தான் ரன் எடுப்பதற்கான அழைப்பை கொடுக்க வேண்டும் என்ற இன்னொரு உண்மை. அதை நிராகரிக்க ஸ்ட்ரைக்கர் பேட்ஸ்மேனுக்கு முழு சுதந்திரம் உள்ளது. சில நேரங்களில் வேண்டாம் என்றும் சொல்லலாம்.

    மஞ்ரேக்கர்:

    ஆனால் இர்பான் நீங்கள் இதைக் கேட்க விரும்பவில்லையெனில் வேறு எதுவுமில்லை. இர்பான் பதான் என்ற பெயரில் ரன்கள் எடுக்க எப்படி ஓடுவது என்ற புதிய பயிற்சி கையேடு வெளியிடப்பட வேண்டிய நேரம் வந்து விட்டது என்று நினைக்கிறேன்.

    இவ்வாறு அவர்களுக்கிடையேயான வாக்குவாதம் அமைந்தது.

    • விராட் கோலி அவுட்சைடு ஆஃப் ஸ்டம்ப் பந்துகளை எளிதாக கையாள முடிந்தது.
    • அவரின் ஆட்டம் ஒரு மாஸ்டர் கிளாஸை கவனிப்பது போல் இருந்தது.

    மெல்போர்ன்:

    ஆஸ்திரேலியா - இந்தியா அணிகளுக்கு இடையேயான 4-வது டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது. இதில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி முதல் இன்னிங்சில் 474 ரன்கள் குவித்தது. இதனையடுத்து களமிறங்கிய இந்திய 2-ம் நாள் ஆட்ட நேர முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 164 ரன்கள் சேர்த்தது.

    இந்நிலையில் அந்த ரன் அவுட் தான் கோலியின் மாஸ்டர் கிளாசிற்கு முற்றுப்புள்ளி வைத்தது என ஆஸ்திரேலிய அணி வீரர் ஸ்டீவ் ஸ்மித் கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    விராட் கோலியின் ஆட்டம் இன்று மிகச்சரியாக இருந்தது. அவரால் அவுட்சைடு ஆஃப் ஸ்டம்ப் பந்துகளை எளிதாக கையாள முடிந்தது. பவுலர்கள் அவரை நோக்கி வருவதற்காக காத்திருந்து ரன்களை சேர்த்தார். லெக் சைடு மற்றும் பவுன்சர் பந்துகளிலும் எளிதாக ரன்களை சேர்த்தார். அது ஒரு மாஸ்டர் கிளாஸை கவனிப்பது போல் இருந்தது.


    அந்த ரன் அவுட்டை பொறுத்தவரை, ஜெய்ஸ்வால் தான் அந்த ரன்னுக்கு அழைத்தார். ஆனால் விராட் கோலி வேண்டாம் என்று நிறுத்தியதை பார்த்தேன். அதன்பின் எல்லாம் நடந்து முடிந்துவிட்டது. சிறந்த பார்ட்னர்ஷிப் அமைக்கப்பட்ட நிலையில், அதனை எங்களால் உடைக்க முடிந்தது மகிழ்ச்சி.

    அந்த ரன் அவுட் தான் விராட் கோலியின் மாஸ்டர் கிளாஸை ஆட்டத்திற்கு இடையூறாக அமைந்தது. அதனால் அவர் ஆப் திசையில் வந்த பந்தில் அவுட் ஆனார். அதன்பின் கூடுதலாக 2 விக்கெட்டுகளை வீழ்த்த முடிந்தது. மொத்தமாக 2-வது நாள் எங்களுக்கு சிறப்பாக அமைந்தது என்று தெரிவித்துள்ளார்.

    ×