என் மலர்
நீங்கள் தேடியது "யஷஸ்வி ஜெய்ஸ்வால்"
- ஜெய்ஸ்வால் 175 ரன்னில் ரன் அவுட் ஆனார்.
- 258 பந்துகளில் 22 பவுண்டரியுடன் ஜெய்ஸ்வால் 175 ரன்னை எடுத்தார்.
புதுடெல்லி:
இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நேற்று தொடங்கியது.
முதலில் விளையாடிய இந்தியா நேற்றைய ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 318 ரன் எடுத்து இருந்தது.
ஜெய்ஸ்வால் சதம் அடித்தார். தமிழக வீரர் சாய் சுதர்ஷன் (87 ரன்) சதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். ஜெய்ஸ்வால் 173 ரன்னுடனும், கேப்டன் சுப்மன் கில் 20 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.
இன்று 2-வது நாள் ஆட்டம் காலை 9.30 மணிக்கு தொடங்கியது. ஜெய்ஸ்வாலும், சுப்மன் கில்லும் தொடர்ந்து விளையாடினார்கள்.
இரட்டை சதம் அடிப்பார் என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட ஜெய்ஸ்வால் 175 ரன்னில் ரன் அவுட் ஆனார். 1 ரன்னுக்கு ஆசைப்பட்டு இரட்டை சதத்தை கோட்டைவிட்டார்.
போட்டி தொடங்கிய 2-வது ஓவரிலேயே அவர் பெவிலியன் திரும்பினார். 258 பந்துகளில் 22 பவுண்டரியுடன் ஜெய்ஸ்வால் இந்த ரன்னை எடுத்தார். அவர் ரன் அவுட் ஆனது மிகுந்த ஏமாற்றத்தை அளித்தது.
அவர் தொடர்ந்து பேட்டிங் செய்திருந்தால் முச்சதம் அடிக்கும் வாய்ப்பு கூட பிரகாசமாக இருந்தது. அதனையும் அவர் தவறவிட்டார் என்றே சொல்லலாம்.
4-வது விக்கெட்டுக்கு சுப்மன் கில்லுடன் நிதிஷ் குமார் ரெட்டி ஜோடி சேர்ந்தார். 96.1-வது ஓவரில் இந்திய அணி 350 ரன்னை தொட்டது.
- முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 318 ரன்கள் குவித்தது.
- ஜெய்ஸ்வால் 173 ரன்களுடனும் சுப்மன் கில் 20 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.
வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. அகமதாபாத்தில் நடந்த முதல் டெஸ்டில் வெற்றி பெற்ற இந்தியா 1-0 என தொடரில் முன்னிலையில் உள்ளது.
இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் டெல்லி பெரோஷா கோட்லா மைதானத்தில் இன்று தொடங்கியது.
இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
அதன்படி இந்திய அணியின் தொடக்க வீரர்களாக கேல் ராகுல், யஷஸ்வி ஜெய்ஸ்வால் களமிறங்கினர். இருவரும் தொடக்கம் சிறப்பாக அமைத்தனர். 38 ரன்கள் எடுத்த ராகுல் 19-வது ஓவரில் ஜோமல் வேரிகன் பந்தில் அவுட் ஆகி வெளியேறினார்.
பின்னர் வந்த தமிழக வீரர் சாய்சுதர்சன் ஜெய்ஸ்வாலுடன் ஜோடி நிதானமாக விளையாடினார். அடுத்தடுத்த ஓவரில் சாய் சுதர்சன் அரை சதமும், மறுபுறம் ஜெய்ஸ்வால் சதமும் விளாசினர்.
தொடர்ந்து விளையாடிய சாய் சுதர்சன் 87 ரன்னில் அவுட் ஆகினார். இதனை தொடர்ந்து கில்- ஜெய்ஸ்வால் ஜோடி பொறுப்புடன் விளையாடினர்.
இதனால் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 318 ரன்கள் குவித்தது. ஜெய்ஸ்வால் 173 ரன்களுடனும் சுப்மன் கில் 20 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.
- இந்தியா 1-0 என தொடரில் முன்னிலையில் உள்ளது.
- ராகுல் 19வது ஓவரில் ஜோமல் வேரிகன் பந்தில் ஸ்டம்ப் அவுட் ஆகி வெளியேறினார்.
வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியாவில் பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.
அகமதாபாத்தில் நடந்த முதல் டெஸ்டில் வெற்றி பெற்ற இந்தியா 1-0 என தொடரில் முன்னிலையில் உள்ளது.
இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் டெல்லி பெரோஷா கோட்லா மைதானத்தில் இன்று தொடங்கியது.
போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி வெஸ்ட் இண்டீஸ் அணி பந்துவீச, இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது.
முதலில் கேல் ராகுல், யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஜோடி களமிறங்கி ரன்கள் குவிக்க தொடங்கியது. 38 ரன்கள் எடுத்த ராகுல் 19வது ஓவரில் ஜோமல் வேரிகன் பந்தில் ஸ்டம்ப் அவுட் ஆகி வெளியேறினார்.
பின்னர் தமிழக வீரர் சாய்சுதர்சன் ஜெய்ஸ்வாலுடன் ஜோடி சேர்ந்தார். அடுத்தடுத்த ஓவரில் சாய் சுதர்சன் 57 ரன்கள் எடுத்து அரை சதம் கடந்தார். மறுபுறம் ஸ்கோர் மெஷினாக செயல்பட்ட ஜெய்ஸ்வால் 101 ரன்கள் குவித்தார்.
50 ஓவர் முடிவில் இந்தியா ஒரு விக்கெட் இழப்புடன் 196 ரன்கள் எடுத்துள்ளது.
- ஜெய்ஸ்வாலை பொருத்தவரை அவர் மூன்று வடிவிலான போட்டிகளிலும் விளையாடக்கூடிய தகுதியான ஒரு வீரர்.
- இந்திய அணியில் ஜெய்ஸ்வாலுக்கு நடப்பதெல்லாம் ரொம்பவே அநியாயம்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஆசிய கோப்பை தொடரில் அபிஷேக் ஷர்மா மற்றும் சுப்மன் கில் ஆகியோர் தொடக்க வீரர்களாக இடம் பிடித்து விளையாடி வருகின்றனர்.
இந்த ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியில் தேர்வு செய்யப்பட தகுதியாக இருந்தும் ஒரு சில வீரர்களுக்கு இடம் கிடைக்காமல் போனது பலரது மத்தியிலும் பேசுபொருளானது.
அந்த வகையில் இந்திய அணியின் இளம் தொடக்க ஆட்டக்காரரான ஜெய்ஸ்வால் நிச்சயம் இந்த ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியில் விளையாடியிருக்க வேண்டும் என பல்வேறு முன்னாள் வீரர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் மூன்று வகையான இந்திய அணியிலும் இடம்பெற்று விளையாட தகுதியானவர் ஜெய்ஸ்வால் என அவரை ஆதரித்தும், இந்திய அணியின் நிர்வாகத்தை விமர்சித்தும் முன்னாள் வீரரான ஆகாஷ் சோப்ரா சில கருத்துக்களை கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
ஜெய்ஸ்வாலை பொருத்தவரை அவர் மூன்று வடிவிலான போட்டிகளிலும் விளையாடக்கூடிய தகுதியான ஒரு வீரர். ஆனால் அவர் டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே தற்போது விளையாட வைக்கப்பட்டு வருகிறார். இந்திய அணியில் ஜெய்ஸ்வாலுக்கு நடப்பதெல்லாம் ரொம்பவே அநியாயம்.
ஏனெனில் அவரைப் போன்ற ஒரு திறமையான துவக்க வீரர் 3 வடிவ கிரிக்கெட்டிலும் இடம்பிடித்து விளையாட வேண்டிய ஒரு நபர். ஆனால் அவரை ஒரு வடிவத்தில் மட்டுமே இந்திய அணி பயன்படுத்தி வருகிறது. எதிர்வரும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அவர் நிச்சயம் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்களை குவிப்பார்.
அதன்பின்னர் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான அணியிலும் அவர் இடம் பிடிப்பார் என்று நினைக்கிறேன். ஆனால் டி20 போட்டிகளை பொருத்தவரை ஏற்கனவே இந்திய அணிக்குள் பலத்த போட்டி நிலவுவதால் அவருக்கு அணியில் இடம் கிடைக்காமல் இருக்கலாம். ஆனால் நிச்சயம் டி20 போட்டிகளுக்கான இந்திய அணியிலும் அவர் விரைவாக தனது வாய்ப்பை எட்டிப்பிடிப்பார்.
என்று ஆகாஷ் சோப்ரா கூறினார்.
- மும்பை அணியில் இருந்து விலகி கோவா அணிக்காக விளையாடபோவதாக சில தினங்களுக்கு முன்பு ஜெய்ஸ்வால் கூறினார்.
- மும்பை கிரிக்கெட் சங்கத்திடம் இதற்கான தடையில்லா சான்றிதழையும் ஜெய்ஸ்வால் கேட்டிருந்தார்.
இந்திய அணியின் நட்சத்திர தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால். இவர் கடந்த 2023-ம் ஆண்டு இந்திய அணிக்காக டெஸ்ட் மற்றும் டி20 கிரிக்கெட்டில் அறிமுகமானார். மேற்கொண்டு இந்த ஆண்டு இந்திய ஒருநாள் அணிக்காகவும் அறிமுகமானர்.
இந்திய அணியின் மிக முக்கிய தொடக்க வீரராக திகழும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் உள்ளூர் போட்டிகளில் மும்பை அணிக்காகவும், ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காகவும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் மூலம் இந்திய அணிக்கு தேர்வானார்.
இந்நிலையில் மும்பை அணியில் இருந்து விலகி கோவா அணிக்காக விளையாடபோவதாக சில தினங்களுக்கு முன்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தார். மேலும் அவர் மும்பை கிரிக்கெட் சங்கத்திடம் இதற்கான தடையில்லா சான்றிதழையும் கேட்டிருந்தார்.
மும்பை அணியில் ஏற்பட்ட சலசலப்பின் காரணமாகவும், கோவா அணியை வழிநடத்தும் வாய்ப்பு கிடைத்ததன் காரணமாகவும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் இந்த முடிவை எடுத்ததாக கூறப்பட்டிருந்தது.
இந்நிலையில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் கோவா அணிக்காக விளையாடும் தனது முடிவிலிருந்து பின்வாங்கி மீண்டும் மும்பை அணிக்காக விளையாடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளான.
இதுகுறித்து யஷஸ்வி ஜெய்ஸ்வால் மும்பை கிரிக்கெட் சங்கத்திற்கு அனுப்பிய மின்னஞ்சலில், "கீழே கையொப்பமிட்டுள்ள நான், கோவாவுக்குச் செல்வதற்கான சில குடும்பத் திட்டங்கள் தற்போதைக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால், எனக்கு வழங்கப்பட்ட தடையில்லா சான்றை திரும்பப் பெறுவதற்கான எனது கோரிக்கையை பரிசீலிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். எனவே, இந்த சீசனில் மும்பைக்காக விளையாட என்னை அனுமதிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.
- ரஞ்சி டிராபியில் மும்பை அணிக்காக யஷஸ்வி ஜெய்ஸ்வால் விளையாடினார்.
- தனிப்பட்ட காரணங்களுக்காக மும்பை அணியிலிருந்து விலகுகிறார்.
இந்தியாவில் உள்ளூர் போட்டிகளில் மும்பை அணிக்காக யஷஸ்வி ஜெய்ஸ்வால் விளையாடி வந்தவர். ரஞ்சி தொடரில் மும்பை அணியின் தொடக்க வீரராக ஜெய்ஸ்வால் களமிறங்கினார்.
இந்நிலையில் தனிப்பட்ட காரணங்களுக்காக மும்பை அணியில் இருந்து கோவா அணிக்கு மாற்றுவதற்கு மும்பை கிரிக்கெட் வாரியத்திடம் NOC (ஆட்சேபனை இல்லை சான்றிதழ்) சான்றிதலை ஜெய்ஸ்வால் கோரியுள்ளார்.
அடுத்த ரஞ்சி சீசனில் இருந்து கோவா அணிக்கு விளையாட ஜெய்ஸ்வால் விருப்பம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த சம்பவம் ரசிகர்களிடையே பேசும் பொருளாக மாறியுள்ளது.
- யஷஸ்வி ஜெய்ஸ்வால் முதல் இன்னிங்சில் இரட்டை சதமடித்தார்.
- இரண்டாவது இன்னிங்சில் 144 ரன்கள் குவித்தார்.
இரானி கோப்பை போட்டியில் மத்திய பிரதேசத்துக்கு எதிராக முதல் இன்னிங்சில் இரட்டை சதமும், 2-வது இன்னிங்சில் சதமும் அடித்து யஷஸ்வி ஜெய்ஸ்வால் வரலாற்று சாதனை படைத்துள்ளார்.
ரஞ்சி தொடரின் முன்னாள் சாம்பியன் அணியுடன், மற்ற அணிகளை சேர்ந்த வீரர்கள் ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணி என்ற பெயரில் மோதும் போட்டி இரானி கோப்பை போட்டி ஆகும். அந்தவகையில் மத்திய பிரதேசம் மற்றும் ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணிகளுக்கு இடையேயான போட்டி குவாலியரில் நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணியின் கேப்டன் மயன்க் அகர்வால் 2 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ஆனால் அதன்பின்னர் அபிமன்யூ ஈஸ்வரனும் யஷஸ்வி ஜெய்ஸ்வாலும் இணைந்து அபாரமாக பேட்டிங் ஆடி 2-வது விக்கெட்டுக்கு 371 ரன்களை குவித்தனர். சதமடித்த அபிமன்யூ ஈஸ்வரன் 154 ரன்கள் அடித்தார். அபாரமாக ஆடிய யஷஸ்வி ஜெய்ஸ்வால் இரட்டை சதமடித்து 213 ரன்களை குவித்தார். ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணி முதல் இன்னிங்ஸில் 484 ரன்களை குவித்தது.

இதையடுத்து முதல் இன்னிங்சை ஆடிய மத்திய பிரதேச அணி, யஷ் துபேவின் சதத்தால்(109) 294 ரன்கள் அடித்தது. மற்ற வீரர்கள் யாரும் பெரிய பங்களிப்பு செய்யாததால் அந்த அணியால் பெரிய ஸ்கோர் அடிக்க முடியவில்லை.
190 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் மீண்டும் சிறப்பாக பேட்டிங் ஆடி சதமடித்தார். யஷஸ்வி ஜெய்ஸ்வால் 144 ரன்களை குவிக்க, 2-வது இன்னிங்ஸில் ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணி 246 ரன்கள் அடித்தது. மொத்தமாக 436 ரன்கள் முன்னிலை பெற, மத்திய பிரதேச அணி 437 ரன்கள் என்ற கடின இலக்கை ரெஸ்ட் ஆஃப் இந்தியா நிர்ணயித்தது.
இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் இரட்டை சதம்(213) மற்றும் 2-வது இன்னிங்சில் சதமடித்ததன் (144) மூலம், இரானி கோப்பை வரலாற்றில் இரட்டை சதம் மற்றும் சதமடித்த முதல் வீரர் என்ற சாதனையை யஷஸ்வி ஜெய்ஸ்வால் படைத்துள்ளார்.
இரானி கோப்பையின் ஒரு பதிப்பில் அதிக ரன் குவித்த வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார். இரானி கோப்பை போட்டியில் 300 ரன்களுக்கு மேல் எடுத்த இரண்டாவது வீரர் என்ற பெருமையை ஜெய்ஸ்வால் பெற்றுள்ளார்.
- யஷஸ்வி ஜெய்ஸ்வால் 62 பந்தில் 16 பவுண்டரிகள் மற்றும் 8 சிக்சர்களுடன் 124 ரன்களை குவித்தார்.
- ஜெய்ஸ்வால் சதம் அடித்ததன் மூலம் ஐபிஎல்லில் இளம் வயதில் சதமடித்த 4-வது வீரர் என்ற சாதனையை படைத்தார்.
ஐபிஎல் 16-வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில், ஐபிஎல்லின் 1000-வது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் சஞ்சு சாம்சன் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி யஷஸ்வி ஜெய்ஸ்வாலின் அதிரடி சதத்தால் 212 ரன்கள் எடுத்தது.
இதனையடுத்து களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி கடைசி ஓவரில் த்ரில் வெற்றி பெற்றது.
ஜெய்ஸ்வால் சதம் அடித்ததன் மூலம் ஐபிஎல்லில் இளம் வயதில் சதமடித்த 4-வது வீரர் என்ற சாதனையை படைத்தார். 21 வயது 123 நாட்களில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் சதமடித்துள்ளார். இதன்மூலம் 22 வயதில் சதமடித்த சஞ்சு சாம்சனை 5-ம் இடத்திற்கு தள்ளி 4-ம் இடத்தை பிடித்துள்ளார். மனீஷ் பாண்டே, ரிஷப் பண்ட் மற்றும் தேவ்தத் படிக்கல் ஆகிய மூவரும் முதல் 3 இடங்களில் உள்ளனர்.
அவர் 62 பந்தில் 16 பவுண்டரிகள் மற்றும் 8 சிக்சர்களுடன் 124 ரன்களை குவித்தார். தேசிய அணியில் இடம்பிடிக்காத ஒரு வீரர் ஐபிஎல்லில் அடித்த அதிகபட்ச ஸ்கோர் இதுதான்.
- ஜெய்ஸ்வால் அதிரடியாக ஆடி 13 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தினார்.
- இறுதிவரை ஆட்டமிழக்காமல் 98 ரன்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு வித்திட்டார்.
கொல்கத்தா:
16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் 56-வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின.
டாஸ் வென்ற ராஜஸ்தான் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த கொல்கத்தா நிர்ணயிக்கப்பட்ட 20 ஒவர்களில் 8 விக்கெட்டுக்கு 149 ரன்கள் சேர்த்தது. அடுத்து ஆடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 13.1 ஒவர்களில் ஒரு விக்கெட்டை இழந்து 151 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
இந்தப் போட்டியில் ராஜஸ்தான் அணியின் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 47 பந்துகளில் 13 பவுண்டரி, 5 சிக்சர்களுடன் 98 ரன்களும், சஞ்சு சாம்சன் 29 பந்துகளில் 2 பவுண்டரி, 5 சிக்சர்களுடன் 48 ரன்களும் எடுத்து அவுட்டாகாமல் இருந்தனர்.
அதிரடியாக ஆடிய ஜெய்ஸ்வால் 13 பந்துகளில் அரை சதம் கடந்து அசத்தினார். இதன்மூலம் ஐ.பி.எல். வரலாற்றில் அதிவேக அரைசதம் அடித்து ஜெய்ஸ்வால் புதிய சாதனை படைத்துள்ளார்.
மேலும், கே.எல்.ராகுல் மற்றும் பேட் கம்மின்ஸ் ஆகியோர் 14 பந்துகளில் அரைசதம் அடித்த சாதனையை ஜெய்ஸ்வால் முறியடித்துள்ளார்.
- டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.
- தொடக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால் அதிரடியாக ஆடி சதமடித்தார்.
பீஜிங்:
ஆசிய விளையாட்டில் ஆண்கள் டி20 கிரிக்கெட் போட்டியில் இன்று முதல் காலிறுதி ஆட்டங்கள் தொடங்குகின்றன.
இன்று காலை 6.30 மணிக்கு தொடங்கிய முதல் காலிறுதியில் இந்தியா, நேபாளம் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கெயிக்வாட், ஜெயிஸ்வால் ஆகியோர் களமிறங்கினர்.
ஆரம்பம் முதல் ஜெயிஸ்வால் அதிரடியாக ஆடி சிக்சர், பவுண்டரிகளாக விளாசினார். 25 ரன்கள் எடுத்திருந்த கெயிக்வாட் அவுட்டானார்.
தொடர்ந்து சிறப்பாக ஆடிய ஜெயிஸ்வால் 47 பந்துகளில் சதமடித்து அசத்தினார்.
- முதலில் ஆடிய இந்தியா 202 ரன்கள் குவித்தது.
- யஷஸ்வி ஜெய்ஸ்வால் சதமடித்து அவுட்டானார்.
பீஜிங்:
ஆசிய விளையாட்டில் ஆண்கள் டி20 கிரிக்கெட் போட்டியில் இன்று முதல் காலிறுதி ஆட்டங்கள் தொடங்குகின்றன.
இன்று காலை நடைபெற்ற முதல் காலிறுதியில் இந்தியா, நேபாளம் அணிகள் மோதின. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய இந்தியா நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 202 ரன்கள் குவித்தது. தொடக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால் 49 பந்துகளில் சதமடித்து அவுட்டானார். கடைசி கட்டத்தில் அதிரடி காட்டிய ரிங்கு சிங் 15 பந்தில் 37 ரன்கள் சேர்த்தார்.
இதையடுத்து, 203 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நேபாளம் அணி களமிறங்கியது. திபேந்திர சிங் 32 ரன்னும், சந்தீப் ஜோரா, குஷால் மல்லா 29 ரன்னும் எடுத்தனர்.
இறுதியில், நேபாளம் 179 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 23 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறியது.
இந்தியா சார்பில் ரவி பிஷ்னோய், ஆவேஷ் கான் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.
- டெஸ்ட் மேச்களில் 15 இந்திய வீரர்கள் சிக்சர் அடித்து 100-ஐ கடந்துள்ளார்கள்
- ஜெய்ஸ்வால், டாம் ஹார்ட்லியின் பந்தில் சிக்சர் அடித்து 100 ரன்களை கடந்தார்
டெஸ்ட் மற்றும் ஒரு நாள் சர்வதேச போட்டிகளில் ஒரு பேட்ஸ்மேன் 100 ரன்கள் குவிப்பது அவருக்கும் அவரது நாட்டிற்கும், கிரிக்கெட் ரசிகர்களுக்கும் மிகவும் பெருமையை தரும் நிகழ்வு.
90 ரன்களை தாண்டிய நிலையில், பேட்ஸ்மேன்கள், 100 ரன்களை குறி வைத்து நிதானமாக விளையாட முற்படுவது இயற்கை.
தவறாக ஆடி விக்கெட்டை பறிகொடுக்காமல் இருக்கவும், 4 அல்லது 6 அடிக்க முற்பட்டு விக்கெட்டை இழக்காமல் இருக்கவும் அதிக கவனம் எடுத்து கொள்வார்கள்.
அபூர்வமாக ஒரு சில பேட்ஸ்மேன்கள், 90களை கடந்தாலும், பதட்டமின்றி, துணிச்சலுடன் சிக்சர் அடித்து முக்கிய 3 இலக்க மைல்கல்லான 100-ஐ கடப்பதுண்டு.
டெஸ்ட் போட்டிகளில் 90களை தாண்டி விளையாடும் போது, சிக்ச்ர் அடித்து 100-ஐ கடந்த இந்திய வீரர்கள், 15 பேர் உள்ளனர்.

சச்சின் டெண்டுல்கர் (6 முறை), ரோகித் சர்மா (3 முறை), கவுதம் கம்பீர் (2 முறை) கே எல் ராகுல் (2 முறை), ரிஷப் பண்ட் (2 முறை) ஆகியோருடன் பாலி உம்ரிகர், கபில் தேவ், முகமது அசாருதீன், ராகுல் டிராவிட், வீரேந்தர் சேவாக், இர்ஃபான் பத்தான், மகேந்திர சிங் டோனி, ஹர்பஜன் சிங், ஆர் அஸ்வின் மற்றும் சேத்தேஸ்வர் புஜாரா ஆகியோர் தலா 1 முறை நேரடியாக சிக்சர் அடித்து 100-ஐ தொட்ட இந்திய வீரர்கள்.
பிப்ரவரி 2 அன்று விசாகப்பட்டினம் ராஜசேகர ரெட்டி மைதானத்தில் இந்தியா மற்றும் இங்கிலாந்திற்கான 2-வது டெஸ்ட் மேட்சில், இந்திய இடது கை பேட்ஸ்மேன் யஷஸ்வி ஜெய்ஸ்வால் (Yashaswi Jaiswal), டாம் ஹார்ட்லியின் பந்தில் சிக்சர் அடித்து நூறு ரன்களை குவித்தார்.
இப்போட்டியில், ஜெய்ஸ்வால், 151 பந்துகளில் சென்சுரி அடித்தது குறிப்பிடத்தக்கது.
இதன் மூலம் சிக்சர் அடித்து 100-ஐ கடந்த இந்திய வீரர்களின் பட்டியலில் 16-வது இடத்தை பிடித்தார், ஜெய்ஸ்வால்.






