என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Steve Smith"

    • ஸ்டீவன் சுமித் வித்தியாசமாக தனது கண்களுக்கு நேர் கீழாக சிறிய பட்டை போன்று கருப்பு வர்ணத்தை தீட்டியுள்ளார்.
    • வெஸ்ட்இண்டீஸ் முன்னாள் வீரர் சந்தர்பால் இதே போன்ற கருப்பு பட்டையுடன் விளையாடி இருக்கிறார்.

    ஆஸ்திரேலியா-இங்கிலாந்து அணிகள் இடையேயான ஆசஸ் தொடரின் 2-வது டெஸ்ட் பகல் இரவாக பிரிஸ்பேனில் இன்று தொடங்கியது. இதில் முதலில் இங்கிலாந்து அணி பேட்டிங் செய்து வருகிறது.

    இந்த போட்டிக்கான பயிற்சியின் போது ஆஸ்திரேலிய அணியின் பொறுப்பு கேப்டன் ஸ்டீவன் சுமித் வித்தியாசமாக தனது கண்களுக்கு நேர் கீழாக சிறிய பட்டை போன்று கருப்பு வர்ணத்தை தீட்டியுள்ளார். இதற்கு முன்பு வெஸ்ட்இண்டீஸ் முன்னாள் வீரர் ஷிவ்நரைன் சந்தர்பால் இதே போன்ற கருப்பு பட்டையுடன் விளையாடி இருக்கிறார்.

    அவரது பாணியை பின்பற்றும் சுமித்திடம் இது பற்றி நிருபர்கள் கேட்ட போது, 'சந்தர்பாலிடம் நான் குறுஞ்செய்தி அனுப்பி இது பற்றி கேட்டேன். அதற்கு அவர் இவ்வாறு கண்ணுக்கு கீழ் பகுதியில் கருப்பு வர்ணம் இருக்கும் போது, கண்களை கூசும் வகையிலான ஒளி 65 சதவீதம் தடுக்கப்படுவதாக கூறினார். அது உண்மை தான் என்பதை பயிற்சியின் போது நானும் உணர்ந்தேன். மேலும் அவர் உங்களது புகைப்படங்களை பார்த்தேன். அதை தவறாக வரைந்துள்ளீர்கள் என்று கூறினார். இப்போது அதை சரி செய்து விட்டேன்' என்றார்.

    • முக்கியமான தருணங்களில் அற்புதமாக ரன் சேஸ் செய்வார்.
    • அவரின் ரன்களின் எண்ணிக்கை அசரவைக்கும் வகையில் இருக்கும்.

    இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி. இவர் டெஸ்ட், டி20 போட்டிகளில் ஓய்வு அறிவித்து விட்டு ஒருநாள் போட்டிகளில் மட்டும் விளையாடி வருகிறார். டெஸ்டில் 30 சதம், 31 அரைசதம் விளாசியுள்ளார். ஒருநாள் போட்டியில் 51 சதமும் 75 அரைசதமும் விளாசியுள்ளார். டி20 போட்டியில் ஒரு சதமும் 38 அரைசதமும் அடித்துள்ளார். மொத்தமாக 82 சதம் விளாசியுள்ளார்.

    ஜாம்பவான் வீரராக வலம் வரும் விராட் கோலிக்கு ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர் ஸ்டீவன் ஸ்மித் புகழாரம் சூட்டியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    விராட் கோலி ஒரு சிறந்த வீரர். முக்கியமான தருணங்களில் அற்புதமாக ரன் சேஸ் செய்வார். அவரின் ரன்களின் எண்ணிக்கை அசரவைக்கும் வகையில் இருக்கும் என ஸ்மித் கூறினார்.

    • நியூ சவுத் வேல்ஸ் அணிக்கு 425 ரன்கள் வெற்றி இலக்காக விக்டோரியா அணி நிர்ணயித்தது.
    • விக்டோரியா அணி 300 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    ஷெஃபீல்ட் சீல்ட் (Sheffield Shield 2025-26) தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இதில் நியூ சவுத் வேல்ஸ் மற்றும் விக்டோரியா அணிகளுக்கு இடையேயான ஆட்டம் கடந்த 10-ந் தேதி தொடங்கியது.

    இதில் டாஸ் வென்ற விக்டோரியா அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் விளையாடிய அந்த அணி 382 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனையடுத்து களமிறங்கிய நியூ சவுத் வேல்ஸ் 128 ரன்னில் ஆல் அவுட் ஆனது.

    தொடர்ந்து 2-வது இன்னிங்சை ஆடிய விக்டோரியா அணி 171/9 ரன்கள் எடுத்த நிலையில் டிக்ளேர் செய்வதாக அறிவித்தது. இதனால் நியூ சவுத் வேல்ஸ் அணிக்கு 425 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இந்த நிலையில் விளையாடிய சவுத் வேல்ஸ் அணி 125 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனால் விக்டோரியா அணி 300 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    முன்னதாக வேல்ஸ் அணியின் 2-வது இன்னிங்சில் 117 ரன்கள் எடுத்திருந்த போது நாதன் லயன் பந்து வீச்சை பேட்டரி பெர்கஸ் ஓ நீல் கட் ஷாட் அடிக்க முயற்சி செய்வார். அது அவரது பேட்டின் நுணியில் பட்டு சிலிப் திசையில் சென்றது. வேகமாகவும் சற்று விலகியும் வந்த பந்தை ஸ்மித் அசால்ட்டாக பிடித்து அசத்தினார். அவர் சிலிப் திசையில் பல அற்புதமான கேட்ச்கள் பிடித்தாலும் இந்த கேட்ச் மிரட்டலாக இருந்தது.

    அவர் கேட்ச் பிடித்ததை பார்த்த பேட்டர் ஷாக் ஆகி கிழே விழுவதுபோல ரியாக்ஷன் கொடுப்பார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    • ஆஷஸ் டெஸ்ட் தொடரில் இரு அணிகளும் இதுவரை 73 முறை மோதியுள்ளது
    • இதில் ஆஸ்திரேலியா 34 போட்டிகளிலும், இங்கிலாந்து 32 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.

    இங்கிலாந்து அணி அடுத்ததாக ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நவம்பர் 21-ம் தேதி பெர்த் மைதானத்தில் தொடங்கவுள்ளது.

    ஆஷஸ் டெஸ்ட் தொடரில் இரு அணிகளும் இதுவரை 73 முறை மோதியுள்ளது. இதில் ஆஸ்திரேலியா 34 போட்டிகளிலும், இங்கிலாந்து 32 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. 7 போட்டிகள் டிராவில் முடிந்தது.

    இந்நிலையில், முதல் ஆஷஸ் டெஸ்ட் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. காயம் காரணமாக பேட் கம்மின்ஸ் அணியில் இடம் பெறாததால் ஸ்டீவ் ஸ்மித் கேப்டனமாக நியமிக்கப்ட்டுள்ளார்.

    ஆஸ்திரேலிய அணி வீரர்கள் விவரம்:-

    ஸ்மித் (C), ஸ்டார்க், ஹேசில்வுட், டிராவிஸ் ஹெட், அபோட், போலண்ட், அலெக்ஸ் கேரி, பிரெண்டன் டாகெட், கேமரூன் கிரீன், ஜோஷ் இங்கிலிஸ், கவாஜா, லாபுசாக்னே, நாதன் லியோன், ஜேக் வெதரால்ட், வெப்ஸ்டர்

    • WTC இறுதிப் போட்டியின் போது ஸ்மித் காயம் அடைந்தார்/ Smith was injured during the WTC final.
    • காயம் காரணமாக வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் ஸ்மித் விளையாடவில்லை.

    ஆஸ்திரேலியா அணி 3 டெஸ்ட் மற்றும் 5 டி20 போட்டிகளில் விளையாடுவதற்காக வெஸ்ட் இண்டீஸுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இதில் முதலில் டெஸ்ட் தொடர் நடைபெற்றது. இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது.

    இதனையடுத்து இரு அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி ஜூலை 3-ந் தேதி தொடங்குகிறது. கை விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக முதல் டெஸ்ட்டில் ஆஸ்திரேலிய அணி வீரர் ஸ்டீவ் ஸ்மித் விலகியிருந்தார்.

    இந்நிலையில் காயத்தில் இருந்து குணமடைந்துள்ள ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித், மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் விளையாடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    WTC இறுதிப்போட்டியின் போது ஸ்மித் காயம் அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா அணி 212 ரன்களுக்கு ஆல் அவுட்டானது
    • இப்போட்டியில் சிறப்பாக விளையாடிய ஸ்டீவ் ஸ்மித் 66 ரன்கள் அடித்தார்.

    உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி இங்கிலாந்தில் உள்ள லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற தென்ஆப்பிரிக்கா பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி தென் ஆப்பிரிக்காவின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாத அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து 212 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக வெப்ஸ்டர் 72 ரன்களும் ஸ்டீவ் ஸ்மித் 66 ரன்களும் அடித்தனர்.

    தென் ஆப்பிரிக்கா தரப்பில் ரபாடா 5 விக்கெட்டும் யான்சன் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதனையடுத்து பேட்டிங் ஆடிய தென் ஆப்பிரிக்கா அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. முதல் நாள்முடிவில் தென் ஆப்பிரிக்கா 4 விக்கெட் இழப்பிற்கு 43 ரன்கள் அடித்துள்ளது. கேப்டன் பவுமா 3 ரன்களுடனும் பெடிங்ஹாம் 8 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

    இப்போட்டியில் அரைசதம் அடித்ததன் மூலம் சச்சினின் மிக முக்கியமான சாதனையை ஸ்டீவ் ஸ்மித் முறியடித்துள்ளார்.

    ஐசிசி நாக் அவுட் போட்டிகளில் அதிக அரைசதம் அடித்தவர்களின் பட்டியலில் சச்சினை ஸ்டீவ் ஸ்மித் முந்தியுள்ளார்.

    ஐசிசி நாக் அவுட் போட்டிகளில் சச்சின் 6 அரைசதங்கள் நடித்துள்ள நிலையில், ஸ்டீவ் ஸ்மித் 7 அரைசதங்கள் அடித்து சச்சினின் சாதனையை முறியடித்துள்ளார்.

    அதே சமயம் இப்பட்டியலில் 10 அரைசதங்களுடன் யாரும் நெருங்க முடியாத உயரத்தில் விராட் கோலி உள்ளார்.

    • உலகக் கோப்பை அணியில் விளையாடும் வாய்ப்பு கிடைக்கவில்லை.
    • இங்கிலாந்துக்கு எதிராக முதல் ஒருநாள் போட்டியில் சிறப்பாக விளையாடினார்.

    உலகின் நட்சத்திர கிரிக்கெட் வீரராக ஜொலித்து வந்தவர்களில் ஒருவர் ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித். மூன்று வடிவிலான கிரிக்கெட்டில் அசுர பலத்துடன் திகழ்ந்தார். பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் தடை பெற்று அணிக்கு திரும்பிய பிறகு, டெஸ்ட் போட்டியில் மட்டும் சிறப்பாக விளையாடினார். ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் மிகப்பெரிய அளவில் ஜொலிக்க முடியவில்லை.

    குறிப்பாக கடந்த ஒருவருடமாக இவரது ஆட்டம் எடுபடவில்லை. இதனால் சொந்த மண்ணில் நடந்த உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பெஞ்ச்-ல் அமர்ந்து இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

    இந்த நிலையில் தான் நேற்று இங்கிலாந்துக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் தொடங்கியது. இந்த போட்டியில் 78 பந்தில் 80 ரன்கள் விளாசி அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார் ஸ்மித்.

    இந்த ஆட்டம் முடிந்த பிறகு பேசுகையில், கடந்த ஆறு ஆண்டுகளில் தற்போது சிறந்த ஃபார்மில் இருப்பதாக உணர்கிறேன் எனத் தெரிவித்துள்ளார். இந்த கோடைக்கால கிரிக்கெட் சிறப்பாக விளையாடுவேன் எனவும் தெரிவித்துள்ளார்.

    நேற்றைய ஆட்டம் குறித்து ஸ்டீவ் ஸ்மித் கூறுகையில் ''அனேகமாக இந்த வருடங்களில் சிறந்த ஆட்டமாக இது இருந்திருக்கிறது என உணர்கிறேன். உண்மையிலேயே இந்த ஆட்டத்தில் நான் மிகவும் நல்ல நிலையில் இருந்தேன். சிறந்ததாக உணர்கிறேன். கடந்த ஆறு ஆண்டுகளில் நான் இதுபோன்று உணரவில்லை.

    நாம் எப்போதும் முழு நிறைவை நோக்கி செல்கிறோம். நான் அதை பெற முதல் ஆட்டத்தில் அடித்த ரன்கள் நெருக்கமாக இருந்தது.'' என்றார்.

    உலகக் கோப்பையில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக மட்டும் களம் இறங்கினார். அதில் நான்கு ரன்கள் எடுத்து ஏமாற்றம் அளித்தார்.

    • லபுஸ்சேன் அபாரமாக ஆடி இரட்டை சதம் எடுத்தார்.
    • 88-வது டெஸ்டில் விளையாடும் ஸ்டீவ் சுமித்துக்கு 29-வது செஞ்சூரியாகும்.

    பெர்த்:

    ஆஸ்திரேலியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையேயான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பெர்த் மைதானத்தில் நேற்று தொடங்கியது.

    முதலில் ஆடிய ஆஸ்திரேலியா நேற்றைய முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 293 ரன் எடுத்து இருந்தது. தொடக்க வீரர் உஸ்மான் கவாஜா 65 ரன் எடுத்தார். 3-வது வீரராக களம் இறங்கிய மார்னஸ் லபுஸ்சேன் சதம் அடித்தார். அவர் 154 ரன்னும், ஸ்டீவ் சுமித் 59 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.

    இன்று 2-வது நாள் ஆட்டம் நடந்தது. ஆஸ்திரேலியா தொடர்ந்து ஆடியது. லபுஸ்சேன் அபாரமாக ஆடி இரட்டை சதம் எடுத்தார். அவர் 348 பந்துகளில் 20 பவுண்டரி, 1 சிக்சருடன் 200 ரன்னை தொட்டார். 204 ரன்கள் எடுத்த நிலையில் லபுஸ்சேன் ஆட்டம் இழந்தார். அப்போது ஸ்கோர் 402 ஆக இருந்தது.

    இதே போல ஸ்டீவ் சுமித்தும் சதம் அடித்தார். 88-வது டெஸ்டில் விளையாடும் அவருக்கு இது 29-வது செஞ்சூரியாகும். ஆஸ்திரேலியா அணி தற்போது வரை 141 ஓவரில் 3 விக்கெட்டுகளை இழந்து 513 ரன்கள் குவித்து ஆடி வருகிறது. ஸ்மித் 165 ரன்களிலும் ஹெட் 50 ரன்னிலும் தொடர்ந்து ஆடி வருகின்றனர்.

    • அஸ்வின் போலவே பந்து வீசக்கூடிய மகேஷ் பித்தியாவை வைத்து ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் பயிற்சி மேற்கொண்டனர்.
    • நாக்பூர் ஆடுகளம் மிகவும் வறண்டு காணப்படுகிறது. இதனால் சுழற்பந்து வீச்சுக்கு எடுபடும் என்று நினைக்கிறேன்.

    இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சுழற் பந்து வீச்சை எதிர் கொள்ள ஆஸ்திரேலிய வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக அஸ்வின் சுழலை சமாளிக்க வியூகங்களை வகுத்துள்ளனர். அஸ்வின் போலவே பந்து வீசக்கூடிய மகேஷ் பித்தியாவை வைத்து ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் பயிற்சி மேற்கொண்டனர்.

    இந்த நிலையில் அஸ்வின் பந்து வீச்சை எதிர் கொள்ள தயார் என்று ஆஸ்திரேலிய முன்னணி பேட்ஸ்மேன் ஸ்டீவ் சுமித் தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    நாங்கள் பல ஆப் ஸ்பின்னர்களுக்கு எதிராக விளையாடி இருக்கிறோம். அஸ்வின் போன்று மகேஷ் பித்தியா பந்து வீசுகிறார். நாங்கள் அதிகமாக சிந்திக்கவில்லை. அஸ்வின் ஒரு தரமான பந்து வீச்சாளர். ஆனால் அவரது பந்து வீச்சை எதிர் கொள்ள தயாராக இருக்கிறோம். அதற்கு வியூகங்கள் எங்களிடம் உள்ளது.

    நாக்பூர் ஆடுகளம் மிகவும் வறண்டு காணப்படுகிறது. இதனால் சுழற்பந்து வீச்சுக்கு எடுபடும் என்று நினைக்கிறேன் என்றார்.

    • தனது மனைவியின் பெயரை டேக் செய்வதற்குப் பதிலாக வேறொரு பெண்ணை டேக் செய்து அவருக்கு காதலர் தின வாழ்த்து கூறியுள்ளார்.
    • ஸ்டீவ் சுமித் மற்றும் டேனி வில்லீஸ் இருவரும் 8 ஆண்டுகளாக காதலித்து கடந்த 2018 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.

    புதுடெல்லி:

    ஆஸ்திரேலியா அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் தொடர் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதற்காக இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலியா அணியில் ஸ்டீவ் சுமித் இடம் பெற்று உள்ளார்.

    ஏற்கனவே நாக்பூர் மைதானத்தில் நடந்து முடிந்த முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. இதைத் தொடர்ந்து 2-வது டெஸ்ட் போட்டி டெல்லியில் வரும் 18-ம் தேதி நடக்கிறது.

    இந்த நிலையில், தனது மனைவிக்கு காதலர் தின வாழ்த்து கூறுவதாக நினைத்து வேறொரு பெண்ணிற்கு ஸ்டீவ் சுமித் வாழ்த்து கூறி பிரச்சனையில் சிக்கியுள்ளார்.

    டுவிட்டரில் அழகான மனைவி டேனி வில்லீஸூக்கு காதலர் தின வாழ்த்துக்கள்...! உன்னை பார்க்காமல் என்னால் இருக்க முடியவில்லை. இன்னும் சிறிது நாட்களில் உன்னை பார்ப்பதற்கு ஆவலுடன் காத்திருக்கிறேன் என்று தனது காதலை வெளிப்படுத்தியுள்ளார்.

    ஆனால், அவர் டேக் செய்தவர் தான் தவறு. ஸ்டீவ் சுமித்தின் மனைவி டேனி வில்லீஸ் (Danielle Willis நிக் நேம் Dani), Dani_willis இன்ஸ்டாவில் ஆக்டிவாக இருக்கிறார். ஆனால், டுவிட்டரில் டி.குயீன் என்ற வேறு ஒருவர் தான் இருக்கிறார். இதனை சற்றும் யோசிக்காத ஸ்டீவ் சுமித், தனது மனைவியின் பெயரை டேக் செய்வதற்குப் பதிலாக வேறொரு பெண்ணை டேக் செய்து அவருக்கு காதலர் தின வாழ்த்து கூறியுள்ளார்.

    ஸ்டீவ் சுமித் மற்றும் டேனி வில்லீஸ் இருவரும் 8 ஆண்டுகளாக காதலித்து கடந்த 2018 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். தனது கணவரை பார்ப்பதற்காக டேனி வில்லீஸ் விரைவில் இந்தியா வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • பேட் கம்மின்ஸ் இந்தியா திரும்புவதில் கால தாமதம் ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    • இதனை தொடர்ந்து இந்தியாவுக்கு எதிரான 3-வது டெஸ்ட்டில் ஆஸ்திரேலியாவின் கேப்டனாக ஸ்டீவ் ஸ்மித் நியமிக்கப்பட்டுள்ளார்.

    டெல்லி:

    இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான பார்டர்-கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. 4 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் 2 டெஸ்ட்கள் ஏற்கனவே நடைபெற்றுவிட்டன. இதில், 2-0 என்ற கணக்கில் இந்தியா முன்னிலையில் உள்ளது.

    இரு அணிகளும் மோதும் 3-வது டெஸ்ட் வரும் 1-ம் தேதி நடைபெற உள்ளது. இதனிடையே, பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொரில் கடந்த 2 டெஸ்ட்டிலும் ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக பேட் கம்மின்ஸ் செயல்பட்டு வந்தார். ஆனால், குடும்ப விவகாரம் தொடர்பாக பேட் கம்மின்ஸ் திடீரென ஆஸ்திரேலியா சென்றார். 3-வது டெஸ்ட் தொடங்குவதற்குள் கம்மின்ஸ் இந்தியா திரும்பிவிடுவார் என்று முதலில் தகவல் வெளியானது.

    இந்நிலையில் பேட் கம்மின்ஸ் இந்தியா திரும்புவதில் கால தாமதம் ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், 3-வது டெஸ்ட்டில் கம்மின்ஸ் களமிறங்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

    இதனை தொடர்ந்து இந்தியாவுக்கு எதிரான 3-வது டெஸ்ட்டில் ஆஸ்திரேலியாவின் கேப்டனாக ஸ்டீவ் ஸ்மித் நியமிக்கப்பட்டுள்ளார். ஸ்மித் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி வரும் 1-ம் தேதி நடைபெறும் 3-வது டெஸ்ட்டில் களமிறங்க உள்ளது.

    • வில்லியம்சனுக்கு மாற்று வீரராக ஸ்டீவ் ஸ்மித் ஒப்பந்தம் செய்ய வாய்ப்பு இருப்பதாக வதந்திகள் பரவியது.
    • வில்லியம்சன் காலில் ஏற்பட்ட காயம் காரணமாக மொத்தமாக தொடரில் இருந்தே விலகுவதாக தெரிவிக்கப்பட்டது.

    அகமதாபாத்:

    சென்னை அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் அணியின் முக்கியமான வீரர் கேல் வில்லியம்சன் விளையாடினார். குஜராத் அணியின் பவுலிங்கின் போது, ருதுராஜ் கெய்க்வாட் அடித்த சிக்சரை பிடிக்க முயன்ற போது, அவரது காலில் காயம் ஏற்பட்டது.

    இதனால் பாதிலேயே அவர் வெளியேறினார். அவருக்கு பதிலாக சாய் சுதர்சன் இம்பேக்ட் பிளேயராக களமிறக்கப்பட்டார். இந்த நிலையில் வில்லியம்சன் காலில் ஏற்பட்ட காயம் காரணமாக மொத்தமாக தொடரில் இருந்தே விலகுவதாக தெரிவிக்கப்பட்டது.

    இதனால் கேன் வில்லியம்சனுக்கு மாற்று வீரராக யார் வருவார்கள் என்ற கேள்வி எழுந்தது. இதனிடையே வில்லியம்சனுக்கு மாற்று வீரராக ஸ்டீவ் ஸ்மித் ஒப்பந்தம் செய்ய வாய்ப்பு இருப்பதாக வதந்திகள் பரவியது.

    இந்த நிலையில் குஜராத் அணிக்கு மாற்று வீரராக ஒப்பந்தம் செய்யப்பட வாய்ப்பு உள்ளதா என்ற கேள்விக்கு ஸ்டீவ் ஸ்மித் பதில் அளித்துள்ளார்.

    அதில், நான் ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான ஏலத்தில் பதிவு செய்யவில்லை. அதனால் மாற்று வீரராக என்னை ஒப்பந்தம் செய்ய வாய்ப்புகள் இல்லை என்று தெரிவித்துள்ளார்.

    பொதுவாக ஐபிஎல் ஏலத்தில் பதிவு செய்துள்ள வீரர்களையே மாற்று வீரர்களாக அணி நிர்வாகங்களால் ஒப்பந்தம் செய்ய முடியும். அதனால் ஐபிஎல் ஏலத்தில் பதிவு செய்யாத ஸ்டீவ் ஸ்மித் நடப்பு ஐபிஎல் தொடரில் வர்ணனையாளராக மட்டுமே செயல்படுவார். டி20 கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியா அணி பேட்டிங் வரிசையிலேயே ஸ்டீவ் ஸ்மித்திற்கு இடமில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    ×