search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ashes Test"

    • ஆஷஸ் தொடரில் 2-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா முன்னிலையில் உள்ளது.
    • இரு அணிகளுக்கும் இடையேயான கடைசி டெஸ்ட் போட்டி வரும் 27-ம் தேதி தொடங்குகிறது.

    லண்டன்:

    இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி அங்கு 5 போட்டிகள் ஆஷஸ் டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. தொடரில் இதுவரை 4 டெஸ்ட் போட்டிகள் நிறைவடைந்த நிலையில் 2-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா முன்னிலையில் உள்ளது.

    முதல் 2 டெஸ்ட் போட்டிகளை கைப்பற்றிய ஆஸ்திரேலியா 3-வது போட்டியில் இங்கிலாந்திடம் தோல்வி கண்டது. 4-வது போட்டியில் இங்கிலாந்துக்கு வெற்றி வாய்ப்பு அதிகமாக இருந்த நிலையில் கடைசி நாள் ஆட்டம் மழை காரணமாக ஒரு பந்து கூட வீசாமல் ரத்தானது. இதனால் 4வது போட்டி டிரா ஆனது.

    இவ்விரு அணிகள் இடையிலான கடைசி டெஸ்ட் போட்டி வரும் 27-ம் தேதி தொடங்குகிறது. இங்கிலாந்து அணி தொடரை சமன் செய்ய கடைசி போட்டியில் கட்டாய வெற்றி பெற வேண்டும் என்ற நிலையில் உள்ளது.

    இந்நிலையில் 5-வது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

    பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), மொயீன் அலி, ஜேம்ஸ் ஆண்டர்சன், பேர்ஸ்டோவ், ஸ்டூவர்ட் பிராட், ஹாரி புரூக், ஜேக் க்ராவ்லி, பென் டக்கட், டேன் லாரன்ஸ், ஓலி ராபின்சன், ஜோ ரூட், ஜோஷ் டங்கு, கிறிஸ் வோக்ஸ், மார்க் வுட்.

    • இங்கிலாந்து அணியில் 1893-ல் முதல் ஏழு பேட்ஸ்மேன்களில் 6 பேர் அரைசதம்
    • 500 ரன்களுக்கு மேல் எடுத்து சராசரி 5-க்கு மேல் என்பது 4-வது முறையாகும்

    இங்கிலாந்து- ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான ஆஷஸ் தொடரின் 4-வது டெஸ்ட் மான்செஸ்டரில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 592 ரன்கள் குவித்தது. அந்த அணியின் முதல் ஏழு பேட்ஸ்மேன்களில் ஆறு பேர் 50 ரன்களை கடந்தனர்.

    இதன்மூலம் ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து அணியின் முதல் ஏழு பேரில் ஆறுபேர் அரைசதம் தொட்ட நிகழ்வு 2-வது முறையாக நிகழ்ந்துள்ளது. இதற்கு முன் 1893-ம் ஆண்டு இங்கிலாந்து அணியின் முதல் ஏழு பேரில் ஆறு பேர் 50 ரன்களுக்கு மேல் அடித்துள்ளனர். தற்போது 130 ஆண்டுகளுக்குப் பிறகு இங்கிலாந்து அந்த சாதனையை சமன் செய்துள்ளார்.

    500 ரன்களுக்கு மேல் அடித்து 5-க்கு மேல் சராசரி வைத்திருப்பது டெஸ்ட் கிரிக்கெட்டில் இது 4-வது முறையாகும்.

    மான்செஸ்டர் டெஸ்டில் இங்கிலாந்து 107.4 ஓவரில் 592 ரன்கள் குவித்தது. சராசரி 5.49 ஆகும்.

    இதற்கு முன்,

    ராவல்பிண்டியில் பாகிஸ்தானுக்கு எஆஷஸ் 4-வது டெஸ்ட்டில் 130 வருட சாதனையை சமன் செய்த இங்கிலாந்து அணிதிராக 2022-ல் இங்கிலாந்து 107 ஓவரில் 657 ரன்கள் குவித்தது. சராசரி 6.50 ஆகும்.

    அயர்லாந்துக்கு எதிராக லார்ட்ஸ் மைதானத்தில் இங்கிலாந்து 82.4 ஓவரில் 524 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. அப்போது ரன்ரேட் 6.33 ஆகும்

    2001-ம் ஆண்டு கொழும்பில் வங்காளதேசத்திற்கு எதிராக இலங்கை 103.3 ஓவரில் 555 ரன்கள் குவித்தது. சராசரி 5.36 ஆகும்.

    • ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 416 ரன்கள் எடுத்தது.
    • அந்த அணியின் ஸ்டீவன் ஸ்மித் சதமடித்து அசத்தினார்.

    லண்டன்:

    இங்கிலாந்து, ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறுகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.

    அதன்படி, முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி முதல் நாள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 339 ரன்கள் எடுத்துள்ளது. ஸ்மித் 85 ரன்னும், அலெக்ஸ் கேரி 11 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். டிராவிஸ் ஹெட் 77 ரன்னில் அவுட்டானார். டேவிட் வார்னர் அரை சதம் கடந்து 66 ரன்னில் ஆட்டமிழந்தார். லாபுசேன் 47 ரன்னில் வெளியேறினார்.

    இந்நிலையில், இரண்டாம் நாள் ஆட்டம் நேற்று நடைபெற்றது. ஆஸ்திரேலியாவின் ஸ்மித் சதமடித்து அசத்தினார். இறுதியில் ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 416 ரன்கள் சேர்த்தது. ஸ்மித் 110 ரன்னில் அவுட்டானார்.

    இங்கிலாந்து சார்பில் ஒல்லி ராபின்சன், ஜோஷ் டங் தலா 3 விக்கெட்டும், ஜோ ரூட் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. ஜாக் கிராலே, பென் டக்கெட் ஜோடி நிதானமாக ஆடியது. கிராலே 48 ரன்னில் அவுட்டானார். அடுத்து இறங்கிய ஒல்லி போப் 42 ரன்னில் வெளியேறினார்.

    சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பென் டக்கெட் 98 ரன்னில் ஆட்டமிழந்தார். ஜோ ரூட் 10 ரன்னில் அவுட்டானார்.

    இரண்டாம் நாள் முடிவில் இங்கிலாந்து 4 விக்கெட் இழப்புக்கு 274 ரன்கள் எடுத்துள்ளது. ஹாரி புருக் 45 ரன்னும், பென் ஸ்டோக்ஸ் 17 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

    • சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்டீவ் ஸ்மித் 110 ரன்கள் விளாசினார்.
    • இங்கிலாந்து தரப்பில் ஒல்லி ராபின்சன், ஜோஷ் டாங் ஆகியோர் தலா 3 விக்கெட் எடுத்தனர்.

    லண்டன்:

    ஆஷஸ் டெஸ்ட் தொடரின் 2-வது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறுகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் முதலில் பந்துவீசுவதாக அறிவித்தார். ஆஸ்திரேலியா பேட்டிங் செய்தது.

    ஆஸ்திரேலிய அணியின் துவக்க வீரர் டேவிட் வார்னர் 66 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். லபுஷேன் 47 ரன்கள் சேர்த்தார். ஸ்டீவ் ஸ்மித்-டிராவிஸ் ஹெட் ஜோடி அபாரமான ஆடி ஸ்கோரை உயர்த்தியது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்டீவ் ஸ்மித் சதம் அடித்தார். அவர் 110 ரன்களில் வெளியேறினார். அதன்பின், டிராவிஸ் ஹெட் 77 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனால் 2ம் நாளான இன்று ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 416 ரன்களில் ஆல் அவுட் ஆனது.

    இங்கிலாந்து தரப்பில் ஒல்லி ராபின்சன், ஜோஷ் டாங் ஆகியோர் தலா 3 விக்கெட் எடுத்தனர்.

    இதையடுத்து இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சை ஆடி வருகிறது.

    • முதல் நாள் முடிவில் ஆஸ்திரேலியா 339 ரன்கள் எடுத்தது.
    • அந்த அணியின் வார்னர், ஸ்மித், டிராவிஸ் ஹெட் ஆகியோர் அரை சதம் கடந்தனர்.

    லண்டன்:

    ஆஷஸ் டெஸ்ட் தொடரில் பங்கேற்பதற்காக பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது.

    முதலாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா 2 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 1-0 என தொடரில் முன்னிலையில் உள்ளது.

    இந்நிலையில் இரு அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் முதலில் பந்துவீசுவதாக அறிவித்தார்.

    அதன்படி, ஆஸ்திரேலியா அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் உஸ்மான் கவாஜா 17 ரன்னில் அவுட்டானார். பொறுப்புடன் ஆடிய டேவிட் வார்னர் அரை சதம் கடந்து 66 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    3வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த லாபுசேன், ஸ்மித் ஜோடி 102 ரன்களை சேர்த்தது. அரை சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் லாபுசேன் 47 ரன்னில் வெளியேறினார்.

    ஸ்டீவன் ஸ்மித் அரை சதம் அடித்தார். அடுத்து இறங்கிய டிராவிஸ் ஹெட் நன்கு ஒத்துழைப்பு கொடுத்தார். 4வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 118 ரன்கள் சேர்த்தது. ஹெட் 77 ரன்னில் அவுட்டானார். கிரீன் டக் அவுட்டானார்.

    இறுதியில், முதல் நாள் முடிவில் ஆஸ்திரேலியா 5 விக்கெட் இழப்புக்கு 339 ரன்கள் எடுத்துள்ளது. ஸ்மித் 85 ரன்னும், அலெக்ஸ் கேரி 11 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

    இங்கிலாந்து சார்பில் ஜோஷ் டங், ஜோ ரூட் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    • இங்கிலாந்து அணி 273 ரன்களில் ஆல் அவுட் ஆனது.
    • ஐந்தாவது நாள் ஆட்டம் இடைவிடாத மழை காரணமாக தாமதமாக தொடங்கியது.

    இங்கிலாந்து- ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான ஆஷஸ் தொடரின் முதலாவது டெஸ்ட் போட்டி பர்மிங்காமில் நடந்து வருகிறது.

    இதில் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 393 ரன்களும், ஆஸ்திரேலியா 386 ரன்களும் எடுத்தன.

    7 ரன் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து 3-வது நாள் முடிவில் 2 விக்கெட்டுக்கு 28 ரன்கள் எடுத்திருந்தது.

    3-வது நாளில் பெரும்பகுதி ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டன. 32.4 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்டன.

    இந்த நிலையில் 4-வது நாளான நேற்று இங்கிலாந்து தொடர்ந்து பேட்டிங் செய்தது. தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

    இறுதியில் இங்கிலாந்து அணி 273 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதனால் ஆஸ்திரேலியாவுக்கு 281 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

    இந்நிலையில் ஐந்தாவது நாள் ஆட்டம் காலை 11:00 மணிக்கு (பிற்பகல் 3:30 மணி ) தொடங்குவதாக இருந்தது. ஆனால் இடைவிடாத மழை காரணமாக, ஆடுகளம் முழுமையாக மூடப்பட்டது.

    இதையடுத்து மதிய உணவுக்குப் பிறகு போட்டி தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி, மழை நின்ற பிறகு ஆட்டம் தொடங்கியது.

    இந்த ஆட்டத்தில் முதலில் உஸ்மான் கவாஜா மற்றும் டேவிட் வார்னர் களமிறங்கினர். இதில், டேவிட் வார்னர் 36 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    பின்னர் இறங்கிய மார்னஸ் 13 ரன்களில் அவுட்டானார். தொடர்ந்து, ஸ்டீவன் ஸ்மித் 6 ரன்களும், ஸ்காட் போலாந்து 20 ரன்களும், டிராவிஸ் ஹெட் 16 ரன்களும், கேமரூன் கிரின் 28 ரன்களும் எடுத்தனர்.

    ஆட்டத்தின் தொடக்கம் முதல் விளையாடிய உஸ்மான் கவாஜா 197 பந்துகளில் அரை சதம் அடித்து 65 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    பின்னர், அப்ரம் அலெக்ஸ் கேரி 20 ரன்களில் ஆட்டமிழந்தார். 87 ஓவரில் பேட் கம்மின்ஸ் மற்றும் நாதன் லயன் களத்தில் இருந்தனர்.

    87.3 ஓவரில் 15 ரன்கள் எடுத்தார் வெற்றி என்ற இலக்குடன் இருவரும் விளையாடினர்.

    இதில், பேட் கம்மின்ஸ் 44 ரன்களும், நாதன் லயன் 16 ரன்களும எடுத்தனர்.

    இறுதியில், 92.3 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 282 ரன்கள் எடுத்து ஆஸ்திரேலியா 2 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி அபாரமாக வெற்றிப்பெற்றுள்ளது.

    • மதிய உணவுக்குப் பிறகு போட்டி தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    • முதல் டெஸ்டின் 3-வது நாள் ஆட்டமும் மழையால் பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    இங்கிலாந்து- ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான ஆஷஸ் தொடரின் முதலாவது டெஸ்ட் போட்டி பர்மிங்காமில் நடந்து வருகிறது. இதில் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 393 ரன்களும், ஆஸ்திரேலியா 386 ரன்களும் எடுத்தன. 7 ரன் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து 3-வது நாள் முடிவில் 2 விக்கெட்டுக்கு 28 ரன்கள் எடுத்திருந்தது.

    3-வது நாளில் பெரும்பகுதி ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டன. 32.4 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்டன. இந்த நிலையில் 4-வது நாளான நேற்று இங்கிலாந்து தொடர்ந்து பேட்டிங் செய்தது. தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இறுதியில் இங்கிலாந்து அணி 273 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதனால் ஆஸ்திரேலியாவுக்கு 281 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

    இந்நிலையில் ஐந்தாவது நாள் ஆட்டம் காலை 11:00 மணிக்கு (பிற்பகல் 3:30 மணி ) தொடங்குவதாக இருந்தது. ஆனால் இடைவிடாத மழை காரணமாக, ஆடுகளம் முழுமையாக மூடப்பட்டது.

    இதையடுத்து மதிய உணவுக்குப் பிறகு போட்டி தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதல் டெஸ்டின் 3-வது நாள் ஆட்டமும் மழையால் பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    ×