என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    இங்கிலாந்து அணி மிகவும் சிறப்பாக விளையாடியது: கேப்டன் ஸ்மித்
    X

    இங்கிலாந்து அணி மிகவும் சிறப்பாக விளையாடியது: கேப்டன் ஸ்மித்

    • ஆஷஸ் டெஸ்ட் தொடரின் 4வது போட்டி மெல்போர்னில் நடைபெற்றது.
    • இதில் ஆஸ்திரேலியாவை இங்கிலாந்து வீழ்த்தி ஆறுதல் வெற்றி பெற்றது.

    மெல்போர்ன்:

    ஆஷஸ் டெஸ்ட் தொடரின் 4வது போட்டி மெல்போர்னில் நடைபெற்றது. இதில் ஆஸ்திரேலிய அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து வீழ்த்தி ஆறுதல் வெற்றியைப் பெற்றது.

    இதையடுத்து இரு அணிகளுக்கு இடையிலான ஆஷஸ் டெஸ்ட் தொடர் 3-1 என உள்ளது.

    இந்நிலையில், இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் தோல்வி குறித்து ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் கூறியதாவது:

    இங்கிலாந்து அணியினர் மிகவும் சிறப்பாக விளையாடினர். இது சவாலான ஒரு போட்டி. இன்னும் 50-60 ரன்கள் கூடுதலாக எடுத்திருந்தால் ஆட்டத்தின் முடிவு வேறு மாதிரி இருந்திருக்கும்.

    இன்றைய தினம் (நேற்று) பந்து கொஞ்சம் மென்மையானதும் நாங்கள் நினைத்த மாதிரி அது செல்லவில்லை.

    அவர்கள் தொடக்கம் முதலே மிகவும் ஆக்ரோஷமாக ஆடியதால் பந்து மேலும் மென்மையாக மாறியது.

    அதிலிருந்து ஆடுகளம் நாங்கள் எதிர்பார்த்த அளவுக்கு பந்து வீச்சாளர்களுக்கு பெரிய அளவில் உதவவில்லை என தெரிவித்தார்.

    Next Story
    ×