என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    ஆஷஸ் தொடரில் மீண்டும் வெற்றி பெறுமா இங்கிலாந்து: கடைசி டெஸ்ட் இன்று தொடக்கம்
    X

    ஆஷஸ் தொடரில் மீண்டும் வெற்றி பெறுமா இங்கிலாந்து: கடைசி டெஸ்ட் இன்று தொடக்கம்

    • மெல்போர்ன் டெஸ்ட் போட்டி இரு நாளுக்குள் முடிந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.
    • ஆஸ்திரேலியா 3-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

    சிட்னி:

    ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. முதல் 3 டெஸ்டுகளில் ஆஸ்திரேலியாவும், 4-வது டெஸ்டில் இங்கிலாந்தும் வெற்றி பெற்றன. இதனால் ஆஷஸ் தொடரில் ஆஸ்திரேலியா 3-1 என முன்னிலை வகிக்கிறது.

    இந்நிலையில், இவ்விரு அணிகளுக்கு இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் இன்று தொடங்குகிறது. இதையொட்டி இரு அணி வீரர்களும் பயிற்சியில் ஈடுபட்டனர்.

    மெல்போர்னில் நடந்த முந்தைய டெஸ்டில் இரு நாளுக்குள் அடங்கியதால் கடும் விமர்சனத்திற்கு உள்ளான ஆஸ்திரேலியா சரிவில் இருந்து வலிமையாக மீண்டு பதிலடி கொடுக்க முயற்சிக்கும்.

    அதேசமயம், மெல்போர்ன் டெஸ்டில் கிடைத்த வெற்றியால் பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணியினர் கூடுதல் உற்சாகம் அடைந்துள்ளனர். இந்த டெஸ்டிலும் வென்று தொடரை 2-3 என முடிக்க ஆர்வமாக உள்ளனர்.

    இன்று நடக்கும் இந்த டெஸ்ட் போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

    Next Story
    ×