என் மலர்
நீங்கள் தேடியது "Australia England Series"
- இங்கிலாந்து வீரர் பெத்தேல் 142 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.
- ஆஸ்திரேலியா தரப்பில் வெப்ஸ்டர் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
சிட்னி:
ஆஸ்திரேலியா-இங்கிலாந்து அணிகள் இடையேயான 5-வது மற்றும் கடைசி ஆஷஸ் டெஸ்ட் போட்டி சிட்னியில் நடைபெற்று வருகிறது.
இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 384 ரன் குவித்தது. இதற்கு ஆஸ்திரேலியா பதிலடி கொடுத்தது. தொடக்க வீரர் டிராவிஸ் ஹெட் (160 ரன்), கேப்டன் ஸ்டீவ் சுமித் ஆகியோர் சதம் அடித்தனர். நேற்றைய 3-வது நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலியா 7 விக்கெட் இழப்புக்கு 518 ரன் எடுத்து இருந்தது. சுமித் 129 ரன்னிலும், வெப்ஸ்டர் 42 ரன்னிலும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.
இன்று 4-வது நாள் ஆட்டம் நடைபெற்றது. 138 ரன்கள் முன்னிலை, கைவசம் 3 விக்கெட் என்ற நிலையில் ஆஸ்திரேலியா தொடர்ந்து ஆடியது.
அந்த அணி மேலும் 49 ரன் எடுப்பதற்குள் எஞ்சிய 3 விக்கெட்டை இழந்தது. ஆஸ்திரேலியா 133.5 ஓவரில் 567 ரன் குவித்து ஆல் அவுட் ஆனது. இது இங்கிலாந்தின் ஸ்கோரை விட 183 ரன் கூடுதலாகும்.
ஸ்டீவ் சுமித் 16 பவுண்டரி, 1 சிக்சருடன் 138 ரன்கள் எடுத்தார். 8-வது டெஸ்டில் விளையாடும் வெப்ஸ்டர் 5-வது அரை சதத்தை பதிவு செய்தார். 9-வது வீரராக களம் இறங்கிய அவர் 71 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். கார்ஸ், ஜோஷ் டங் தலா 3 விக்கெட்டும், பென் ஸ்டோக்ஸ் 2 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.
183 ரன்கள் பின்தங்கிய நிலையில் இங்கிலாந்து 2-வது இன்னிங்சை ஆடியது.தொடக்க வீரர் கிராவ்லி 1 ரன்னில் ஸ்டார்க் பந்தில் பெவிலியன் திரும்பினார். 2-வது விக்கெட்டான டக்கெட்-ஜேக்கப் பெத்தேல் ஜோடி பொறுப்புடன் விளையாடியது.
டக்கெட் 42 ரன்னிலும், அடுத்து வந்த ஜோரூட் 6 ரன்னிலும் வெளியேறினார்கள். இங்கிலாந்து 117 ரன்னில் 3 விக்கெட்டை இழந்தது. அடுத்து ஹாரி புரூக்களம் வந்தார். மறுமுனையில் இருந்த ஜேக்கப் பெத்தேல் பொறுப்புடன் ஆடி அரைசதம் எடுத்தார்.
ஹாரி ப்ரூக்- பெத்தேல் ஜோடி அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தது. அரைசதம் விளாசுவார் என எதிர்பார்த்த ப்ரூக் 42 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த வில் ஜக் டக் அவுட் ஆகி வெளியேறினார். அதனை தொடர்ந்து ஸ்மித் 26 ரன்னில் தேவையில்லாமல் ரன் அவுட் ஆகி வெளியேறினார்.
ஒருமுனை விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் சிறப்பாக விளையாடிய பெத்தேல் டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார். அடுத்து வந்த பென் ஸ்டோக்ஸ் 1 ரன்னிலும் கிராஸ் 16 ரன்னிலும் வெளியேறினர்.
இதனையடுத்து 4-வது நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. பெத்தேல் 142 ரன்களுடனும் மேத்யூ பாட்ஸ் 0 ரன்னிலும் ஆட்டமிழக்காமல் உள்ளனர். இங்கிலாந்து அணி 119 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. கடைசி நாள் ஆட்டம் நாளை நடைபெற உள்ளது. உணவு இடைவேளை வரை விளையாடினால் போட்டியை டிரா செய்ய இங்கிலாந்துக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கும். இல்லையென்றால் இங்கிலாந்து அணி தோல்வியடையும்.
- 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரில் ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகள் விளையாடி வருகிறது.
- முதலில் நடந்த 3 டெஸ்ட் போட்டியிலும் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.
இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் தொடரின் 3-வது போட்டியில் 82 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்றது. இதன்மூலம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 3-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா கைப்பற்றியுள்ளது.
இந்த தோல்வியின் மூலமாக ஆஸ்திரேலிய மண்ணில் தொடர்ச்சியாக 16 தோல்விகளை இங்கிலாந்து அணி சந்தித்துள்ளது.
'பாஸ்பால்' என்ற இங்கிலாந்து வீரர்களின் அதிரடி பேட்டிங் ஸ்டைல் ஆஸ்திரேலிய மண்ணில் எடுபடவில்லை. மூன்று டெஸ்டிலும் இங்கிலாந்தை ஆஸ்திரேலிய பவுலர்கள் புரட்டியெடுத்து விட்டனர். இங்கிலாந்து அணி ஆஸ்திரேலிய மண்ணில் கடைசியாக விளையாடிய 18 டெஸ்டுகளில் ஒன்றில் கூட ஜெயிக்கவில்லை. 16-ல் தோல்வியும், 2-ல் டிராவும் கண்டுள்ளது.
நியூசிலாந்து அணி 1985-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில் ஆஸ்திரேலியாவில் தொடர்ந்து 18 டெஸ்டுகளில் ஜெயித்ததில்லை. அது தான் ஆஸ்திரேலிய மண்ணில் ஒரு அணியின் வெற்றில்லா நீண்ட பயணமாக இருந்தது. அந்த மோசமான சாதனையை இங்கிலாந்து இப்போது சமன் செய்துள்ளது.
- இங்கிலாந்து அணி 4-ம் நாள் ஆட்ட நேர முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 207 ரன்கள் மட்டுமே எடுத்தது.
- இங்கிலாந்து அணிக்கு இன்னும் 228 ரன்கள் தேவை.
அடிலெய்டு:
ஆஸ்திரேலியா-இங்கிலாந்து அணிகள் இடையேயான ஆசஸ் தொடரின் 3-வது டெஸ்ட் போட்டி அடிலெய்டுவில் நடைபெற்று வருகிறது.
ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 371 ரன் குவித்தது. இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 286 ரன் எடுத்தது. 85 ரன்கள் முன்னிலையில் 2-வது இன்னிங்சை விளையாடிய ஆஸ்திரேலியா நேற்றைய 3-வது நாள் ஆட்ட நேர முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 271 ரன் எடுத்து இருந்தது. டிராவிஸ் ஹெட் சதம் அடித்தார். அவர் 142 ரன்னுடனும், அலெக்ஸ் கேரி 52 ரன்னுடனும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.
இன்று 4-வது நாள் ஆட்டம் நடைபெற்றது. 356 ரன்கள் முன்னிலை, கைவசம் 6 விக்கெட் என்ற நிலையில் ஆஸ்திரேலியா தொடர்ந்து ஆடியது. டிராவிஸ் ஹெட் 170 ரன் குவித்து அவுட் ஆனார். டெஸ்டில் அவரது 2-வது அதிகபட்ச ஸ்கோர் ஆகும். 5-வது விக்கெட் ஜோடி 162 ரன் எடுத்தது.
அலெக்ஸ் கேரி 72 ரன் எடுத்து பெவிலியன் திரும்பினார். மற்ற வீரர்கள் எளிதில் ஆட்டம் இழந்தனர். இதனால் ஆஸ்திரேலிய அணி 84.4 ஓவரில் 349 ரன்னில் ஆல் அவுட் ஆனது. இதனால் இங்கிலாந்துக்கு 435 ரன் இலக்காக இருந்தது.
இங்கிலாந்து தரப்பில் ஜோஸ் டங் 4 விக்கெட்டும், கார்ஸ் 3 விக்கெட்டும், ஜோப்ரா ஆர்ச்சர், வில் ஜேக்ஸ், பென் ஸ்டோக்ஸ் தலா 1 விக்கெட்டும் கைப்பற்றினார்கள். 435 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் இங்கிலாந்து அணி ஆடியது.
31 ரன் எடுப்பதற்குள் அந்த அணி 2 விக்கெட்டை இழந்தது. பென் டக்கெட் 4 ரன்னிலும், ஓலிபோப் 17 ரன்னிலும், கம்மின்ஸ் பந்தில் பெவிலியன் திரும்பினார்கள். 3-வது விக்கெட் டுக்கு கிராவ்லியுடன் ஜோ ரூட் ஜோடி சேர்ந்தார். இருவரும் பொறுமையாக விளையாடினர். இருந்தாலும் பேட் கம்மின்ஸ் 39 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.
சிறப்பாக விளையாடிய கிராவ்லி அரைசதம் கடந்து அசத்தினர். அடுத்து வந்த ஹாரி ப்ரூக் 30 ரன்னிலும் பென் ஸ்டோக்ஸ் 5 ரன்னிலும் சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட கிராவ்லி 85 ரன்னிலும் நாதன் லயன் பந்துவீச்சில் வெளியேறினார்.
இதனால் இங்கிலாந்து அணி 4-ம் நாள் ஆட்ட நேர முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 207 ரன்கள் மட்டுமே எடுத்தது. இங்கிலாந்து அணிக்கு இன்னும் 228 ரன்கள் தேவை என்ற நிலையுடன் கடைசி நாளில் களமிறங்கும். 4 விக்கெட்டுகளை வீழ்த்தினால் போட்டியில் வெற்றி பெறலாம் மேலும் தொடரை கைப்பற்றி விடலாம் என்ற நோக்கி ஆஸ்திரேலியா நாளை களமிறங்கும். ஆஸ்திரேலிய அணிக்கே வெற்றி வாய்ப்பு அதிகம் இருக்கிறது.
- ஜனவரி 2-வது வாரத்தில் தாயகம் கிளம்பும் போது ஆஷஸ் கோப்பையுடன் செல்ல வேண்டும் என்பதே எங்களது லட்சியம்.
- ஸ்டீவன் சுமித் நீண்ட காலமாக எங்களுக்கு எதிராக சிறப்பாக விளையாடி ரன் குவித்து வருகிறார்.
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இதன்படி ஆஸ்திரேலியா- இங்கிலாந்து இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி பெர்த்தில் இன்று தொடங்கியது.
டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனை தொடர்ந்து இங்கிலாந்து அணி களமிறங்கி விளையாடி வருகிறது.
ஆஸ்திரேலிய அணியில் காயத்தால் கேப்டன் கம்மின்ஸ், ஹேசில்வுட் ஆகியோர் ஆடவில்லை. ஸ்டீவன் சுமித் அணியை வழிநடத்துகிறார். வேகப்பந்து வீச்சாளர் பிரன்டன் டாக்கெட், தொடக்க ஆட்டக்காரர் ஜேக் வெதரால்டு ஆகியோர் இந்த டெஸ்டில் அறிமுகமாகிறார்கள். ஆஸ்திரேலிய அணியில் ஒரே டெஸ்டில் இரு புதுமுக வீரர்கள் அடியெடுத்து வைப்பது 2019-ம் ஆண்டுக்கு பிறகு இதுவே முதல் முறையாகும். உள்ளூர் ரசிகர்களின் முன்னிலையில் வெற்றியோடு தொடங்குவதற்கு ஆவலுடன் உள்ளனர். 'முதல் 3 நாள் ஆட்டத்துக்கான டிக்கெட்டுகள் விற்று தீர்ந்து விட்டன. மைதானத்தில் மட்டுமின்றி, டி.வி.யிலும் ஏராளமான ரசிகர்கள் போட்டியை பார்ப்பார்கள். எனவே சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி ரசிகர்களை குதூகலப்படுத்துவோம் என நம்புகிறேன்' என ஆஸ்திரேலிய கேப்டன் சுமித் குறிப்பிட்டார்.
இங்கிலாந்து அணி கடைசியாக ஆஸ்திரேலிய மண்ணில் ஆடிய 15 டெஸ்டுகளில் ஒன்றில் கூட ஜெயித்ததில்லை. ஆஸ்திரேலியாவில் கடந்த 45 ஆண்டுகளில் 2 முறை மட்டுமே ஆஷஸ் கோப்பையை உச்சிமுகர்ந்துள்ளது. கடைசியாக 2010-11-ம் ஆண்டு அங்கு ஆஷஸ் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி இருந்தது. இப்போது ஆஸ்திரேலியாவின் ஆதிக்கத்துக்கு முடிவு கட்டும் முனைப்புடன் இங்கிலாந்து வீரர்கள் தீவிரமாக தயாராகியுள்ளனர்.
இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் நேற்று நிருபர்களிடம் கூறுகையில், 'ஆஷஸ் கிரிக்கெட் சரித்திரத்தை புரட்டிப்பார்த்தால், ஆஸ்திரேலிய மண்ணில் இங்கிலாந்தின் செயல்பாடு மெச்சம்படி இல்லை என்பதை அணியில் உள்ள ஒவ்வொருவரும் அறிவோம். அடுத்த 2½ மாதங்களில் இங்கு வரலாறு படைப்பதற்கு எங்களுக்கு இது அருமையான வாய்ப்பாகும். ஜனவரி 2-வது வாரத்தில் தாயகம் கிளம்பும் போது ஆஷஸ் கோப்பையுடன் செல்ல வேண்டும் என்பதே எங்களது லட்சியம். இதற்காக கடினமாக உழைத்துள்ளோம். ஆனால் இது மிகவும் கடினம் என்பது தெரியும். ஆஸ்திரேலியாவை அவர்களது சொந்த இடத்தில் வீழ்த்துவது எளிதான விஷயமல்ல.
ஸ்டீவன் சுமித் நீண்ட காலமாக எங்களுக்கு எதிராக சிறப்பாக விளையாடி ரன் குவித்து வருகிறார். அவரை போன்ற வீரரை கட்டுப்படுத்துவது சுலபமல்ல. பேட்டிங்கில் அவரையும், மற்ற வீரர்களையும் குறைந்த ரன்னில் வீழ்த்தினால் எங்களது லட்சியத்தை அடைய வாய்ப்பு கிடைக்கும்' என்றார்.
- ஆஸ்திரேலியா அணியின் கேப்டனாக ஸ்டீவ் ஸ்மித் நியமிக்கப்பட்டுள்ளார்.
- முதல் டெஸ்டில் பிரெண்டன் டாகெட் அறிமுகமாகிறார்.
ஆஸ்திரேலியா- இங்கிலாந்து அணிகள் மோதும் மிகவும் பிரபலமான ஆஷஸ் தொடர் வருகிற 21-ந் தேதி தொடங்க உள்ளது. இந்த தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெறுகிறது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி பெர்த் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த தொடருக்காக இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
இந்த தொடருக்கான கோப்பையை ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் அறிமுகப்படுத்தினர். இதற்கான போட்டோஷூட் நடத்தப்பட்டது.
இந்நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கான ஆஸ்திரேலியா லெவன் அறிவிக்கப்பட்டுள்ளது. கேப்டனாக ஸ்டீவ் ஸ்மித் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் பேட்டர் ஜேக் வெதரால்ட் மற்றும் வேகப்பந்து வீச்சாளர் பிரெண்டன் டாகெட் அறிமுக வீரர்களாக களமிறங்குகிறார்கள்.
முதல் டெஸ்ட்டுக்கான ஆஸ்திரேலிய லெவன்:-
உஸ்மான் கவாஜா, ஜேக் வெதரால்ட், மார்னஸ் லெபுசென், ஸ்டீவ் ஸ்மித் (கேப்டன்), டிராவிஸ் ஹெட், கேமரூன் கிரீன், அலெக்ஸ் கேரி (விக்கெட் கீப்பர்), மிட்செல் ஸ்டார்க், ஸ்காட் போலண்ட், நாதன் லியோன், பிரெண்டன் டாகெட்.
- முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 180 ரன்களில் ஆல் அவுட் ஆனது.
- இதனையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து 159 ரன்களில் ஆல் அவுட் ஆகி தோல்வியடைந்தது.
மெல்போர்ன்:
ஆஸ்திரேலியா - இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் அணிகளுக்கு இடையே 3 போட்டிகள் கொண்ட ஆஷஸ் ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் நடைபெற்ற முதல் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது.
இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையிலான 2-வது போட்டி இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி இங்கிலாந்து பந்துவீச்சில் தடுமாறியது. அந்த அணியில் முன்னணி வீராங்கனையான எல்லிஸ் பெர்ரி (60 ரன்கள்) தவிர மற்ற வீராங்கனைகள் யாரும் பெரிய அளவில் ரன் அடிக்கவில்லை. இதனால் 44.3 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த ஆஸ்திரேலியா 180 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இங்கிலாந்து தரப்பில் சோபி எக்லெஸ்டோன் 4 விக்கெட்டுகளும், ஆலிஸ் கேப்ஸி 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
இதனையடுத்து 181 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய இங்கிலாந்து அணியும் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்தது. மிடில் ஆர்டரில் நாட் ஸ்கைவர்-பிரண்ட் மற்றும் ஆமி ஜோன்ஸ் அணிக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் விளையாடினர். இருப்பினும் அவர்கள் ஆட்டமிழந்ததும் இங்கிலாந்து அணியின் வெற்றி வாய்ப்பு பறிபோனது.
48.1 ஓவர்கள் விளையாடிய இங்கிலாந்து 159 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா ஒருநாள் தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. ஆஸ்திரேலியா தரப்பில் அலனா கிங் 4 விக்கெட்டுகளும், கிம் கார்த் 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.






