என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    கடைசி 18 டெஸ்டில் வெற்றியே இல்லை.. நியூசிலாந்தின் மோசமான சமன் செய்த இங்கிலாந்து
    X

    கடைசி 18 டெஸ்டில் வெற்றியே இல்லை.. நியூசிலாந்தின் மோசமான சமன் செய்த இங்கிலாந்து

    • 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரில் ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகள் விளையாடி வருகிறது.
    • முதலில் நடந்த 3 டெஸ்ட் போட்டியிலும் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.

    இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் தொடரின் 3-வது போட்டியில் 82 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்றது. இதன்மூலம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 3-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா கைப்பற்றியுள்ளது.

    இந்த தோல்வியின் மூலமாக ஆஸ்திரேலிய மண்ணில் தொடர்ச்சியாக 16 தோல்விகளை இங்கிலாந்து அணி சந்தித்துள்ளது.

    'பாஸ்பால்' என்ற இங்கிலாந்து வீரர்களின் அதிரடி பேட்டிங் ஸ்டைல் ஆஸ்திரேலிய மண்ணில் எடுபடவில்லை. மூன்று டெஸ்டிலும் இங்கிலாந்தை ஆஸ்திரேலிய பவுலர்கள் புரட்டியெடுத்து விட்டனர். இங்கிலாந்து அணி ஆஸ்திரேலிய மண்ணில் கடைசியாக விளையாடிய 18 டெஸ்டுகளில் ஒன்றில் கூட ஜெயிக்கவில்லை. 16-ல் தோல்வியும், 2-ல் டிராவும் கண்டுள்ளது.

    நியூசிலாந்து அணி 1985-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில் ஆஸ்திரேலியாவில் தொடர்ந்து 18 டெஸ்டுகளில் ஜெயித்ததில்லை. அது தான் ஆஸ்திரேலிய மண்ணில் ஒரு அணியின் வெற்றில்லா நீண்ட பயணமாக இருந்தது. அந்த மோசமான சாதனையை இங்கிலாந்து இப்போது சமன் செய்துள்ளது.

    Next Story
    ×