search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Shivnarine Chanderpaul"

    • சர்வதேச கிரிக்கெட்டில் தந்தை-மகன் ஜோடிக்கு எதிராக விளையாடிய வீரர்களின் பட்டியலில் சச்சினுடன் கோலி இணைந்துள்ளார்.
    • மேற்கிந்தியத் தீவுகளின் இளம் திறமைசாலியாக ‘ஜூனியர்’ சந்தர்பால் இதுவரை 6 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார்.

    வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி டெஸ்ட், ஒருநாள் போட்டி, டி20 ஆகிய தொடர்களில் விளையாட உள்ளது. முதலில் டெஸ்ட் தொடரும் அடுத்ததாக ஒருநாள் அதை தொடர்ந்து டி20 தொடரும் நடக்கவுள்ளது. இருஅணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி இந்திய நேரப்படி இன்று இரவு 7.30-க்கு தொடங்குகிறது.

    இந்நிலையில் இந்த டெஸ்ட் போட்டியில் விளையாடுவதன் மூலம் இந்திய அணி நட்சத்திர ஆட்டக்காரர் விராட் கோலி புதிய சாதனையை படைக்கவுள்ளார்.

    2011-ல் டெஸ்ட் போட்டியில் விராட் கோலி அறிமுகமானார். அத்துடன் வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஜாம்பவான் சந்தர்பாலுக்கு எதிராகவும் விளையாடினார். இன்று நடக்கும் முதல் டெஸ்ட் போட்டியில் ஜூனியர் சந்தர்பாலுடன் விளையாட உள்ளார்.

    இதன் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் தந்தை-மகன் ஜோடிக்கு எதிராக விளையாடிய வீரர்களின் பட்டியலில் சச்சினுடன் கோலி இணைந்துள்ளார்.

    சச்சின் டெண்டுல்கர் 1992-ல் ஆஸ்திரேலிய அணியின் ஜியோஃப் மார்ஷை எதிர்கொண்டார். அதன்பின் 2011/12 -ம் ஆண்டு ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தின் போது மார்ஷின் மகன் ஷான் மார்ஷுக்கு எதிராக விளையாடும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது.

    மேற்கிந்தியத் தீவுகளின் இளம் திறமைசாலியாக 'ஜூனியர்' சந்தர்பால் இதுவரை 6 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 45.30 சராசரியுடன் ரன் குவித்துள்ளார். அவர் தனது தந்தை செய்ததைப் போலவே இந்திய பந்துவீச்சாளர்களுக்கு சவால் விட ஆர்வமாக இருப்பார்.

    • முதல் சதத்தையே இரட்டை சதமாக மாற்றிய 10-வது வெஸ்ட் இண்டீஸ் வீரர் என்ற பெருமையையும் பெற்றார்.
    • பிராத்வெய்ட்-தேஜ்நரின், தொடக்க விக்கெட்டுக்கு 300 ரன்களுக்கு மேல் எடுத்த முதல் வெஸ்ட் இண்டீஸ் ஜோடி என்ற சிறப்பை பெற்றனர்.

    புலவாயோ:

    ஜிம்பாப்வே- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி புலவாயோவில் நடந்து வருகிறது. முதல் இரு நாட்களில் மழை பாதிப்புக்கு இடையே பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி விக்கெட் இழப்பின்றி 221 ரன்கள் எடுத்திருந்தது.

    கேப்டன் கிரேக் பிராத்வெய்ட் 116 ரன்களுடனும், தேஜ்நரின் சந்தர்பால் 101 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இந்த நிலையில் 3-வது நாளான நேற்று தொடர்ந்து பேட்டிங் செய்த பிராத்வெய்ட்-தேஜ்நரின், தொடக்க விக்கெட்டுக்கு 300 ரன்களுக்கு மேல் எடுத்த முதல் வெஸ்ட் இண்டீஸ் ஜோடி என்ற சிறப்பை பெற்றனர்.

    இந்த கூட்டணி ஸ்கோர் 336-ஐ எட்டிய போது உடைந்தது. பிராத்வெய்ட் 182 ரன்களில் எல்.பி.டபிள்யூ. ஆனார். மறுமுனையில் அபாரமாக ஆடிய தேஜ்நரின் சிக்சர் அடித்து தனது முதலாவது இரட்டை சதத்தை பூர்த்தி செய்தார். முதல் சதத்தையே இரட்டை சதமாக மாற்றிய 10-வது வெஸ்ட் இண்டீஸ் வீரர் என்ற பெருமையையும் பெற்றார்.

    வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்சில் 143 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 447 ரன்கள் சேர்த்து டிக்ளேர் செய்தது. தேஜ்நரின் 207 ரன்களுடன் (467 பந்து, 16 பவுண்டரி, 3 சிக்சர்) அவுட் ஆகாமல் இருந்தார். இவரது தந்தை ஷிவ் நரின் சந்தர்பால் டெஸ்ட் கிரிக்கெட்டில் 203 ரன்கள் எடுத்ததே அதிகபட்சமாக இருந்தது. அந்த ஸ்கோரை தனது 3-வது டெஸ்டிலேயே கடந்து அசத்தியிருக்கிறார். பின்னர் தனது முதல் இன்னிங்சை ஆடிய ஜிம்பாப்வே அணி ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட்டுக்கு 114 ரன்கள் எடுத்துள்ளது. இன்று 4-வது நாள் ஆட்டம் நடக்கிறது.

    • வெஸ்ட் இண்டீசை சேர்ந்த சந்தர்பால் அமெரிக்க பெண்கள் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
    • டெஸ்ட் கிரிக்கெட்டில் 10,000 ரன்களுக்கு மேல் எடுத்த 14 கிரிக்கெட் வீரர்களில் சந்தர்பால் ஒருவராவார்.

    வாஷிங்டன்:

    வெஸ்ட் இண்டீஸ் அணியின் சிறந்த பேட்ஸ்மேனான சிவனரைன் சந்தர்பால், அமெரிக்காவின் சீனியர் பெண்கள் மற்றும் யு-19 அணிகளின் தலைமைப் பயிற்சியாளராக 18 மாத காலத்திற்கு நியமிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க கிரிக்கெட் வாரியம் தெரிவித்து உள்ளது.

    தேசிய பெண்கள் மற்றும் 19 வயதுக்குட்பட்ட அணிகளின் தலைமைப் பயிற்சியாளராக சிவநரைன் சந்தர்பால் நியமிக்கப்பட்டுள்ளார் என்பதை யுஎஸ்ஏ கிரிக்கெட் அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறது" என்று யுஎஸ்ஏ கிரிக்கெட் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சந்தர்பால் கூறுகையில், "அமெரிக்க தேசிய மகளிர் அணி மற்றும் 19 வயதுக்குட்பட்ட பெண்கள் அணிக்கு தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.

    அமெரிக்க தேசிய மகளிர் அணி மற்றும் 19 வயதுக்குட்பட்ட பெண்கள் அணியை சிறந்த அணியாக முன்னெடுத்துச்செல்ல அனைத்து வகையிலும் பக்கபலமாக இருப்பேன். இவ்வாறு அவர் கூறினார்.

    வெஸ்ட் இண்டீசின் இடதுகை பேட்ஸ்மேனான சந்தர்பால், டெஸ்ட் கிரிக்கெட்டில் 10,000 ரன்களுக்கு மேல் எடுத்த 14 கிரிக்கெட் வீரர்களில் ஒருவராவார். வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக 164 டெஸ்ட் மற்றும் 268 சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் விளையாடியுள்ளார்.

    ×