என் மலர்
நீங்கள் தேடியது "வெஸ்ட் இண்டீஸ் இந்தியா தொடர்"
- 2027 ஒருநாள் உலக கோப்பையில் விளையாட ரோகித், கோலி முனைப்பு காட்டவில்லை.
- 3 FORMAT-களுக்கு வெவ்வேறு கேப்டன்களை வைத்திருப்பதும் நடைமுறைக்கு சாத்தியமற்றது.
வெஸ்ட் இண்டீஸ் தொடர் முடிந்தவுடன் இந்திய அணி, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாட உள்ளது. இந்த ஒருநாள் தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக ரோகித் சர்மாவை நீக்கி விட்டு சுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் ஒருநாள் இந்திய அணியின் கேப்டனாக சுப்மன் கில்லை நியமித்ததுக்கான காரணத்தை இந்திய கிரிக்கெட் தேர்வுக்குழுத் தலைவர் அஜித் அகர்கர் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
2027 ஒருநாள் உலக கோப்பையில் விளையாட ரோஹித், கோலி முனைப்பு காட்டவில்லை. 3 FORMAT-களுக்கு வெவ்வேறு கேப்டன்களை வைத்திருப்பதும் நடைமுறைக்கு சாத்தியமற்றது. ஒருநாள் போட்டிகள் குறைவாகவே விளையாடுகிறோம். இப்போதே கில்லை கேப்டனாக நியமித்தால்தான் 2027 உலகக் கோப்பைக்கு தயாராக முடியும்.
என கில் கூறினார்.
- வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி விளையாட உள்ளது.
- இங்கிலாந்து தொடரில் இடம் பெற்ற கருண் நாயர், ஷர்துல் தாக்கூர், ஆகாஷ் தீப் உள்ளிட்டோர் நீக்கப்பட்டுள்ளனர்.
மும்பை:
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி விளையாட உள்ளது. இந்த டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ள 15 பேர் கொண்ட அணியில், இங்கிலாந்து தொடரில் இடம் பெற்ற கருண் நாயர், ஷர்துல் தாக்கூர், ஆகாஷ் தீப் உள்ளிட்டோர் நீக்கப்பட்டுள்ளனர்.
குறிப்பாக 7 ஆண்டுகளுக்கு பின் இந்திய அணியில் இடம்பிடித்த கருண் நாயர் இங்கிலாந்து டெஸ்ட் தொடருடன் நீக்கப்பட்டிருப்பது குறித்து பல்வேறு கருத்துக்கள் வெளியாகியது.
அந்த கருத்துக்கு இந்திய அணியின் தேர்வாளர் அஜித் அகர்கர், இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் கருண் நாயரிடம் இருந்து நாங்கள் கொஞ்சம் கூடுதலாக எதிர்பார்த்தோம் என்றும் அதை அவர் பூர்த்தி செய்யவில்லை என கூறினார்.
இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இந்த தேர்வை நான் எதிர்பார்த்தேன் என கருண் நாயர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
ஆமாம், நான் இந்த தேர்வை எதிர்பார்த்தேன். என்ன சொல்வதென்றே தெரியவில்லை. வார்த்தைகள் இல்லை. எனக்கு அதிக கருத்துகள் எதுவும் இல்லை. பதில் சொல்வது எனக்கு மிகவும் கடினம்.
தேர்வாளர்கள் என்ன நினைக்கிறார்கள் என்று அவர்களிடம்தான் கேட்க வேண்டும். ஒரே விஷயம் என்னவென்றால், கடைசி டெஸ்டில் முதல் இன்னிங்சில் வேறு யாரும் ரன் அடிக்காதபோது நான் அரை சதம் அடித்தேன். குறிப்பாக நாங்கள் வென்ற கடைசி ஆட்டத்தில் அணிக்காக நான் பங்களித்ததாக நினைத்தேன்.
என கருண் நாயர் கூறினார்.
- வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் கருண் நாயருக்கு இடம் கிடைக்கவில்லை.
- இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் கருண் நாயரிடம் இருந்து நாங்கள் கொஞ்சம் கூடுதலாக எதிர்பார்த்தோம் என அகர்கர் கூறினார்.
மும்பை:
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி விளையாட உள்ளது. இந்த டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ள 15 பேர் கொண்ட அணியில், சீனியர் வீரரான கருண் நாயர், ஷர்துல் தாக்கூர், ஆகாஷ் தீப் உள்ளிட்டோர் நீக்கப்பட்டுள்ளனர்.
குறிப்பாக 7 ஆண்டுகளுக்கு பின் இந்திய அணியில் இடம்பிடித்த கருண் நாயர் இங்கிலாந்து டெஸ்ட் தொடருடன் நீக்கப்பட்டிருப்பது பேசும்பொருளாக மாறி உள்ளது.
இந்த நிலையில் இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் கருண் நாயரிடம் இருந்து நாங்கள் கொஞ்சம் கூடுதலாக எதிர்பார்த்தோம் என்றும் அதை அவர் பூர்த்தி செய்யவில்லை எனவும் அஜித் அகார்கர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் கருண் நாயரிடம் இருந்து நாங்கள் கொஞ்சம் கூடுதலாக எதிர்பார்த்தோம். அதனை அவர் பூர்த்தி செய்யவில்லை. அதனால் மிடில் ஆர்டரில் தேவ்தத் படிக்கலால் கூடுதலாக பங்களிக்க முடியும் என்று நம்புகிறேன்.
இந்திய அணிக்காக தேர்வு செய்யப்படும் ஒவ்வொரு வீரருக்கும் 15 முதல் 20 டெஸ்ட் போட்டிகள் வரை வாய்ப்பு அளிக்க வேண்டும் என்பதே எங்களின் ஆசையாக உள்ளது. ஆனால் துரதிஷ்டவசமாக அப்படி நடக்கவில்லை.
தேவ்தத் படிக்கல் ஏற்கனவே ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஆடி இருந்தார். அதேபோல் தரம்சாலாவில் இங்கிலாந்து அணிக்கு எதிராக ஆடி அரைசதம் விளாசி இருந்தார். இந்திய ஏ அணிக்காக ஆடிய போட்டிகளிலும் நல்ல ஃபார்மில் இருக்கிறார்.
என்று அகர்கர் கூறினார்.
- 2 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டி, ஐந்து 20 ஓவரில் ஆடுகிறது.
- ஒருநாள் போட்டிகள் ஜூலை 27, 29 மற்றும் ஆகஸ்ட் 1-ந்தேதி நடக்கிறது.
புதுடெல்லி:
இந்திய கிரிக்கெட் அணி அடுத்த மாதம் (ஜூலை) வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டி மற்றும் ஐந்து 20 ஓவர் ஆட்டங்களில் விளையாடுகிறது. இதற்கான போட்டி அட்டவணையை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ளது.
ஜூலை 12 முதல் 16 வரை முதல் டெஸ்டும், ஜூலை 20 முதல் 24 வரை 2-வது டெஸ்ட்டும் நடக்கிறது. ஒருநாள் போட்டிகள் ஜூலை 27, 29 மற்றும் ஆகஸ்ட் 1-ந்தேதியும், 20 ஓவர் ஆட்டங்கள் ஆகஸ்ட் 3, 6, 8, 12 மற்றும் 13 ஆகிய தேதிகளிலும் நடக்கிறது. இந்திய நேரப்படி டெஸ்ட் போட்டிகள் இரவு 7.30 மணிக்கும், ஒருநாள் ஆட்டங்கள் இரவு 7 மணிக்கும், 20 ஓவர் போட்டிகள் இரவு 8 மணிக்கும் தொடங்குகிறது.
- ரோகித் சர்மா 7 டெஸ்டுக்கு கேப்டனாக இருந்து 4-ல் வெற்றி பெற்றுள்ளார். 2 டெஸ்டில் தோல்வி ஏற்பட்டது. ஒரு டெஸ்ட் ‘டிரா’ ஆனது.
- கடந்த 11 இன்னிங்சில் அவர் 50 ரன்னுக்கு மேல் எடுத்தது இல்லை.
புதுடெல்லி:
லண்டன் ஓவல் மைதானத்தில் சமீபத்தில் நடந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷின் இறுதிப் போட்டியில் இந்திய அணி 209 ரன் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவிடம் தோற்று கோப்பையை இழந்தது.
கடந்த 10 ஆண்டுகளாக இந்திய அணியால் ஐ.சி.சி. போட்டிகளில் கோப்பையை வெல்ல முடியவில்லை. இந்த தோல்வியால் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறார்.
11 பேர் கொண்ட அணியில் அஸ்வினை சேர்க்காதது மற்றும் இந்திய வீரர்கள் செயல்பாடு போன்றவற்றால் அவரும், பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டும் விமர்சனத்தை சந்தித்து வருகிறார்கள்.
இந்திய அணி அடுத்து வெஸ்ட் இண்டீசில் அடுத்த மாதம் சுற்றுப் பயணம் செய்து 2 டெஸ்ட், 3 ஒரு நாள் போட்டி, ஐந்து 20 ஓவர் ஆட்டத்தில் விளையாடுகிறது.
இந்த நிலையில் வெஸ்ட் இண்டீஸ் பயணத்துக்கு பிறகு கேப்டன் பதவியில் இருந்து ரோகித் சர்மா நீக்கப்படுவார் என்று தகவல் வெளியாகி உள்ளது. வெஸ்ட் இண்டீஸ் தொடரில் அவரது செயல்பாட்டை பொறுத்து கேப்டன் பதவியின் தலைவிதி நிர்ணயிக்கப்படும்.
இதுதொடர்பாக இந்திய கிரிக்கெட் கட்டுபாட்டு வாரிய நிர்வாகி ஒருவர் கூறியதாவது:-
கேப்டன் பதவியில் இருந்து ரோகித் சர்மா நீக்கப்படுவார் என்பது ஆதாரமற்றது. ஐ.சி.சி.யின் 3-வது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025-ம் ஆண்டில் முடிவடையும் போது அவருக்கு கிட்டத்தட்ட 38 வயதாகிவிடும். இதனால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2 வருட சுழற்சி முழுவதிலும் ரோகித் சர்மா கேப்டன் பதவியில் நீடிப்பாரா? என்பது ஒரு பெரிய கேள்வியாகவே உள்ளது.
வெஸ்ட் இண்டீசில் நடைபெறும் 2 டெஸ்ட் போட்டியில் அவரது பேட்டிங் நிலையை தேர்வுக் குழு பார்க்கும் என்று நம்புகிறேன்.
வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கு பிறகு இந்திய அணி தென் ஆப்பிரிக்காவுக்கு செல்லும். அதன் பிறகு டிசம்பர் இறுதி வரை டெஸ்ட் இல்லை. எனவே தேர்வுக்குழுவினர் ஆலோசித்து முடிவு எடுக்க அவகாசம் உள்ளது.
இவ்வாறு அந்த நிர்வாகி கூறியுள்ளார்.
ரோகித் சர்மா 7 டெஸ்டுக்கு கேப்டனாக இருந்து 4-ல் வெற்றி பெற்றுள்ளார். 2 டெஸ்டில் தோல்வி ஏற்பட்டது. ஒரு டெஸ்ட் 'டிரா' ஆனது.
36 வயதாகும் ரோகித் சர்மாவின் பேட்டிங் மிகவும் மோசமாக இருக்கிறது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நாக்பூா் டெஸ்டில் சதம் அடித்த பிறகு அவர் மிகப் பெரிய ஸ்கோரை எடுக்கவில்லை. கேப்டன் பதவியில் 7 டெஸ்டில் 390 ரன்கள் எடுத்துள்ளார்.
சராசரி 35.45 ஆகும். கடந்த 11 இன்னிங்சில் அவர் 50 ரன்னுக்கு மேல் எடுத்தது இல்லை.
- டெஸ்ட் போட்டியில் சர்பராஸ் கான் போன்ற ஒருவரை சேர்க்க தேர்வாளர்கள் ஆர்வமாக உள்ளனர்.
- ஹர்திக் பாண்ட்யா ஒரு புதிய தோற்றம் கொண்ட டி20 அணிக்கு தலைமை தாங்குவார்.
இந்திய அணி அடுத்த மாதம் வெஸ்ட் இண்டீசுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறது. இந்த சுற்றுப்பயணத்தில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணிகளை ரோகித் சர்மா வழிநடத்துவார். டி20 அணிக்கு ஹர்திக் பாண்டியா பொறுப்பேற்பார்.
டெஸ்ட் தொடரில் இருந்து ரோகித்துக்கு ஓய்வு அளிக்கப்படலாம் என்றும், வேறொருவர் தற்காலிகமாக பொறுப்பேற்கலாம் என்றும் செய்திகள் வெளியாகின.
இந்நிலையில் அந்த வதந்திகளுக்கு பிசிசிஐ மூத்த அதிகாரி ஒருவர் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். ரோகித் சர்மா இந்த சுற்றுப்பயணத்தில் இருக்கிறார். மேலும் கேஎல் ராகுல், ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் காயத்தில் இருப்பதால் இந்த தொடரில் பங்கேற்கவில்லை. எனவே, புஜாரா தனது இடத்தை தக்கவைத்துக் கொள்ள உள்ளார்.
புஜாரா இருந்தபோதிலும், இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கு சர்பராஸ் கான் போன்ற ஒருவரை சேர்க்க தேர்வாளர்கள் ஆர்வமாக உள்ளனர்.
டி20 போட்டிகளில் ரோகித் மற்றும் விராட் கோலிக்கு இடம் இருக்காது. ஹர்திக் பாண்டியா ஒரு புதிய தோற்றம் கொண்ட டி20 அணிக்கு தலைமை தாங்குவார். ஐபிஎல் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய வீரர்கள் இதில் இடம் பெறுவார்கள் எனவும் அவர் தெரிவித்தார்.
- டெஸ்ட் அணியில் புஜாரா நீக்கப்பட்டுள்ளார்.
- ஒருநாள் அணியை பொறுத்தவரை சஞ்சு சாம்சன் மீண்டும் அணியில் இடம் பிடித்துள்ளார்.
வெஸ்ட் இண்டீஸ்-க்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி 2 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டி, 5 டி20 போட்டிகளில் விளையாடுகிறது. முதலில் டெஸ்ட் போட்டியும் அடுத்து ஒருநாள் போட்டிகளும் நடக்கிறது.
இந்நிலையில் ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. இரு அணிகளுக்கு ரோகித் சர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ஒருநாள் தொடருக்கு ஹர்திக் பாண்ட்யாவும், டெஸ்ட் தொடருக்கு ரகானேவும் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
டெஸ்ட் அணியில் புஜாரா நீக்கப்பட்டுள்ளார். புதுமுகமாக ருதுராஜ் கெய்க்வாட், ஜெய்ஸ்வால், முகேஷ் குமார் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.
ஒருநாள் அணியை பொறுத்தவரை சஞ்சு சாம்சன் மீண்டும் அணியில் இடம் பிடித்துள்ளார். மேலும் ருதுராஜ், ஜெய்ஸ்வால் மற்றும் உம்ரான் மாலிக், முகேஷ் குமார் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
ஒருநாள் அணி:
ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், ருதுராஜ் கெய்க்வாட், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், சஞ்சு சாம்சன், இஷான் கிஷன், ஹர்திக் பாண்ட்யா, ஷர்துல் தாக்கூர், ஜடேஜா, அக்சர் படேல், யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், ஜெய்தேவ் உனட்கட், முகமது. சிராஜ், உம்ரான் மாலிக், முகேஷ் குமார்.
டெஸ்ட் அணி:
ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், ருதுராஜ் கெய்க்வாட், விராட் கோலி, யஷஸ்வி ஜெய்ஸ்வால், அஜிங்க்யா ரகானே, கேஎஸ் பரத், இஷான் கிஷான், அஷ்வின், ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், அக்சர் படேல், முகமது சிராஜ், முகேஷ் குமார், ஜெய்தேவ் உனட்கட், நவ்தீப் சைனி.
- ராகுல் டிராவிட் இளம் வீரர்களை சோபார்ஸிடம் அறிமுகம் செய்தார்.
- தமிழக வீரர் அஸ்வினும் அவரிடம் கை குலுக்கி அறிமுகம் செய்து கொண்டார்.
வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி, இம்மாதம் 12-ம் தேதி டொமினிகாவின் வின்ட்சர் பார்க் மைதானத்தில் தொடங்குகிறது.
இந்நிலையில் கிரிக்கெட் மைதானத்திற்கு வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் ஜாம்பவான் கேர்ஃபீல்டு சோபர்ஸ் வருகை தந்தார். அவரை உற்சாகமாக வரவேற்ற இந்திய அணியின் வீரர்கள் பேசி மகிழ்ந்தனர். விராட் கோலி, ரோகித் தங்களை முதலில் அறிமுகப்படுத்திக் கொண்டனர்.

பின்னர் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் இளம் வீரர்களை சோபார்ஸிடம் அறிமுகம் செய்தார். தமிழக வீரர் அஸ்வினும் அவரிடம் கை குலுக்கி அறிமுகம் செய்து கொண்டார்.
இது தொடர்பான வீடியோவை பிசிசிஐ தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
- இடது கை சுழற்பந்து வீரர் ஜோமல் வாரிகன், ரகீம் கான்வால் ஆகியோர் அணிக்கு மீண்டும் திரும்பி உள்ளனர்.
- குடாகேஷ் அணியில் இடம்பெறவில்லை.
போர்ட் ஆப் ஸ்பெயின்:
இந்திய கிரிக்கெட் அணி 2 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டி மற்றும் ஐந்து 20 ஓவர் போட்டிகளில் விளையாடுவதற்காக வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ளது.
இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி வருகிற 12-ந் தேதி தொடங்குகிறது. இதற்காக ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி ஏற்கனவே வெஸ்ட் இண்டீஸ் சென்று விட்டது. அங்கு வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் முதல் டெஸ்ட் போட்டிக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி இன்று அறிவிக்கப்பட்டது.
13 பேர் கொண்ட வெஸ்ட் இண்டீஸ் அணியில் இடது கை பேட்ஸ்மேனான கிரிக் மெக்கன்சி, அலிசிக் அதானஸ் ஆகிய 2 புதுமுக வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இடது கை சுழற்பந்து வீரர் ஜோமல் வாரிகன், ரகீம் கான்வால் ஆகியோர் அணிக்கு மீண்டும் திரும்பி உள்ளனர். குடாகேஷ் அணியில் இடம்பெறவில்லை.
இந்தியாவுக்கு எதிராக முதல் டெஸ்டில் விளையாடும் வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர்கள் வருமாறு:-
பிராத் வெயிட் (கேப்டன்) பிளாக்வுட், ஜேசன் ஹோல்டர், தெகனரின் சந்தர்பால், ரகீம் கான்வால், ஜோதவா சில்வா, அலிசிக் அதானஸ், கேப்ரியல் அல்ஜாரி ஜோசப், கிரிக் மெக்கன்சி, ரேமன் ரெய்பர், கேமர் ரோச், ஜோமல் வாரிகன்.
அகீம் ஜோர்டான், டெவின் இம்லாச் ஆகியோர் மாற்று வீரர்களாக இடம் பெற்றுள்ளனர்.
- நான் இளமையாக இருக்கிறேன். என்னுள் நிறைய கிரிக்கெட் உள்ளது.
- கடந்த ஒரு ஆண்டாக எனது உடற்தகுதிக்காக நான் நிறைய உழைத்துள்ளேன்.
இந்திய அணி 2 டெஸ்ட் போட்டி 3 ஒருநாள் போட்டி மற்றும் 5 டி20 போட்டிகளில் விளையாடுவதற்காக வெஸ்ட் இண்டீசுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. முதலில் டெஸ்ட் போட்டி நடைபெறுகிறது. இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நாளை தொடங்குகிறது.
இந்நிலையில் நான் இளமையாக இருக்கிறேன். என்னுல் நிறைய கிரிக்கெட் உள்ளது என இந்திய அணியின் துணை கேப்டன் ரகானே தெரிவித்துள்ளார்.
இது குறித்து ரகானே கூறியதாவது:-
நான் இளமையாக இருக்கிறேன். என்னுள் நிறைய கிரிக்கெட் உள்ளது. கடந்த ஒரு ஆண்டாக எனது உடற்தகுதிக்காக நான் நிறைய உழைத்துள்ளேன். பேட்டிங்கில் சில நுணுக்களை கற்று கொண்டு பயிற்சி எடுத்துள்ளேன். நான் எனது கிரிக்கெட்டை மிகவும் ரசிக்கிறேன், எனது பேட்டிங்கை ரசிக்கிறேன். நான் எதிர்காலத்தைப் பற்றி அதிகம் சிந்திக்கவில்லை. ஒவ்வொரு ஆட்டமும் தனிப்பட்ட முறையில் மற்றும் குழுவின் பார்வையில் முக்கியமானது. நான் அதில் தான் கவனம் செலுத்துகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
- ஜெய்ஸ்வால் அறிமுக வீரராக களம் இறங்குவார் என கேப்டன் ரோகித் சர்மா கூறியுள்ளார்.
- பிளேயிங் லெவனில் 2 சுழற் பந்துவீச்சாளர்கள் இடம் பெறுவார்கள் என இந்திய அணி கேப்டன் கூறினார்.
டொமினிகா:
இந்திய அணி 2 டெஸ்ட் போட்டி, 3 ஒருநாள் போட்டி மற்றும் 5 டி20 போட்டிகளில் விளையாடுவதற்காக வெஸ்ட் இண்டீசுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. முதலில் டெஸ்ட் போட்டி நடைபெறுகிறது.
இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி டொமினிகாவில் இன்று தொடங்குகிறது.
இந்திய அணியில் புஜாராவின் இடத்தில் யார் பிளேயிங் லெவனில் இடம் பெறப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உள்ளது.
இந்நிலையில், இன்றைய ஆட்டத்தில் ஜெய்ஸ்வால் அறிமுக வீரராகவும், தொடக்க வீரராகவும் களம் இறங்குவார் என கேப்டன் ரோகித் சர்மா கூறியுள்ளார்.
இந்திய அணியின் 3-வது வரிசை வீரராக ஷுப்மன் கில் களமிறங்குவார். இந்திய அணியின் பிளேயிங் லெவனில் 2 சுழற் பந்துவீச்சாளர்கள் இடம் பெறுவார்கள் என தெரிவித்துள்ளார்.
இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் போட்டி இந்திய நேரப்படி இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.
- வேகப்பந்து வீரர்களான முகமது ஷமி, உமேஷ் யாதவ் ஆகியோருக்கு வெஸ்ட் இண்டீஸ் தொடரில் ஓய்வு கொடுக்கப்பட்டு உள்ளது.
- இந்திய அணி வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக கடைசியாக விளையாடிய 4 டெஸ்டிலும் வெற்றி பெற்று இருந்தது.
ரோசவ்:
இந்திய கிரிக்கெட் அணி 2 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டி மற்றும் 5 இருபது ஓவர் போட்டிகளில் விளையாடுவதற்காக வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ளது.
இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி டொமினிகாவில் உள்ள ரோசவ்வில் இன்று (12-ந் தேதி) தொடங்குகிறது. ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி வெற்றியுடன் கணக்கை தொடங்கும் ஆர்வத்தில் உள்ளது.
லண்டன் ஓவல் மைதானத்தில் கடந்த மாதம் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்திய அணி மோசமாக தோற்று இருந்ததால் கடும் விமர்சனத்துக்கு உள்ளானது. அதில் இருந்து மீண்டு இந்த தொடரில் இந்திய வீரர்கள் சிறப்பாக விளையாடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
3-வது வரிசையில் விளையாடும் புஜாரா இந்த தொடரில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இதனால் அவர் இடத்தில் இடம் பெறப்போவது யார்? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. ஐ.பி.எல். தொடரில் அபாரமாக ஆடிய ஜெய்ஷ்வாலுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று கருதப்படுகிறது.
அவர் தொடக்க வீரராக ஆடுவாரா? அல்லது 3-வது வரிசையில் களம் இறங்குவாரா? என்பது தெரியவில்லை. ரோகித் சர்மாவுடன் ஜெய்ஷ்வால் தொடக்க வரிசையில் ஆடினால் சுப்மன்கில் 3-வது வீரராக விளையாடுவார்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ஸ்ரீகர் பரத் ஆட்டம் ஏமாற்றம் அளிப்பதாக இருந்தது. இதனால் அவர் இடத்தில் இஷான் கிஷன் இடம் பெறுவார் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது.
முன்னணி சுழற்பந்து வீச்சாளரான அஸ்வினை உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் 11 பேர் கொண்ட அணியில் சேர்க்காதது கடும் விமர்சனத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்த டெஸ்டில் அவர் ஜடேஜாவுடன் இணைந்து தாக்கத்தை ஏற்படுத்துவார்.
வேகப்பந்து வீரர்களான முகமது ஷமி, உமேஷ் யாதவ் ஆகியோருக்கு வெஸ்ட் இண்டீஸ் தொடரில் ஓய்வு கொடுக்கப்பட்டு உள்ளது. இதனால் முகமது சிராஜ், ஷர்துல் தாகூர் முதன்மை பந்துவீச்சாளர்களாக இருப்பார்கள். 3-வது வேகப்பந்து வீரராக புதுமுகமான முகேஷ் குமாருக்கு வாய்ப்பு வழங்கப்படுமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவருக்கு வாய்ப்பு கிடைக்காவிட்டால் ஜெய்தேவ் உனத்கட் அல்லது நவ்தீப் சைனி இடம் பெறுவர்.
இந்திய அணி வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக கடைசியாக விளையாடிய 4 டெஸ்டிலும் வெற்றி பெற்று இருந்தது. 2002-ம் ஆண்டுக்கு பிறகு இந்திய அணி வெஸ்ட்இண்டீசிடம் தோற்றது இல்லை. அதாவது கடைசியாக ஆடிய 23 டெஸ்டில் வெஸ்ட் இண்டீ சுக்கு எதிராக தோற்றது கிடையாது.
இரு அணிகள் இடையே கடைசியாக நடந்த 8 டெஸ்ட் தொடரையும் இந்தியாவே வென்று இருந்தது. இதனால் ரோகித்சர்மா தலைமையிலான அணி மிகுந்த நம்பிக்கையுடன் வெஸ்ட்இண்டீசை எதிர்கொள்ளும்.
பிராத்வெயிட் தலைமையிலான வெஸ்ட்இண்டீஸ் அணி கடந்த பிப்ரவரி, மார்ச் மாதம் தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்டிலும் தோற்று தொடரை இழந்தது.
ஒரு காலத்தில் ஜாம்பவானாக திகழ்ந்த அந்த அணி இன்று மோசமான நிலையில் காணப்படுகிறது. இந்தியாவுக்கு எதிராக சிறப்பாக விளையாட அந்த அணி கடுமையாக போராடும்.
இன்றைய டெஸ்ட் இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.






