என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து நீக்கம்- மவுனம் கலைத்த கருண் நாயர்
    X

    வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து நீக்கம்- மவுனம் கலைத்த கருண் நாயர்

    • வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி விளையாட உள்ளது.
    • இங்கிலாந்து தொடரில் இடம் பெற்ற கருண் நாயர், ஷர்துல் தாக்கூர், ஆகாஷ் தீப் உள்ளிட்டோர் நீக்கப்பட்டுள்ளனர்.

    மும்பை:

    வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி விளையாட உள்ளது. இந்த டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ள 15 பேர் கொண்ட அணியில், இங்கிலாந்து தொடரில் இடம் பெற்ற கருண் நாயர், ஷர்துல் தாக்கூர், ஆகாஷ் தீப் உள்ளிட்டோர் நீக்கப்பட்டுள்ளனர்.

    குறிப்பாக 7 ஆண்டுகளுக்கு பின் இந்திய அணியில் இடம்பிடித்த கருண் நாயர் இங்கிலாந்து டெஸ்ட் தொடருடன் நீக்கப்பட்டிருப்பது குறித்து பல்வேறு கருத்துக்கள் வெளியாகியது.

    அந்த கருத்துக்கு இந்திய அணியின் தேர்வாளர் அஜித் அகர்கர், இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் கருண் நாயரிடம் இருந்து நாங்கள் கொஞ்சம் கூடுதலாக எதிர்பார்த்தோம் என்றும் அதை அவர் பூர்த்தி செய்யவில்லை என கூறினார்.

    இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இந்த தேர்வை நான் எதிர்பார்த்தேன் என கருண் நாயர் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    ஆமாம், நான் இந்த தேர்வை எதிர்பார்த்தேன். என்ன சொல்வதென்றே தெரியவில்லை. வார்த்தைகள் இல்லை. எனக்கு அதிக கருத்துகள் எதுவும் இல்லை. பதில் சொல்வது எனக்கு மிகவும் கடினம்.

    தேர்வாளர்கள் என்ன நினைக்கிறார்கள் என்று அவர்களிடம்தான் கேட்க வேண்டும். ஒரே விஷயம் என்னவென்றால், கடைசி டெஸ்டில் முதல் இன்னிங்சில் வேறு யாரும் ரன் அடிக்காதபோது நான் அரை சதம் அடித்தேன். குறிப்பாக நாங்கள் வென்ற கடைசி ஆட்டத்தில் அணிக்காக நான் பங்களித்ததாக நினைத்தேன்.

    என கருண் நாயர் கூறினார்.

    Next Story
    ×