என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Karun Nair"

    • கர்நாடகா அணி 2வது நாளில் 5 விக்கெட்டுக்கு 586 ரன்கள் குவித்தது.
    • அந்த அணியின் கருண் நாயர், ஸ்மான் ரவிச்சந்திரன் இரட்டை சதமடித்து அசத்தினர்.

    திருவனந்தபுரம்:

    ரஞ்சி டிராபி தொடரின் 3வது சுற்று போட்டி நடந்து வருகிறது.

    வெஸ்ட் இண்டீஸ் தொடரில் நீக்கப்பட்ட கருண் நாயர் கர்நாடகா அணிக்காக விளையாடி வருகிறார். இவர் கேரளா அணிக்கு எதிராக முதல் இன்னிங்சில் 142 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறார்.

    கர்நாடகா அணி முதல் நாள் முடிவில் 3 விக்கெட்டுக்கு 319 ரன்கள் குவித்துள்ளது. 4வது விக்கெட்டுக்கு இணைந்த கருண் நாயர்-ரவிச்சந்திரன் ஜோடி இதுவரை 183 ரன்கள் சேர்த்துள்ளது.

    இந்நிலையில், 2வது நாளில் கர்நாடக அணி தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. கருண் நாயர் இரட்டை சதமடித்து அசத்தினார். அவர் 233 ரன்னில் அவுட்டானார்.

    4வது விக்கெட்டுக்கு கருண் நாயர்-ரவிச்சந்திரன் ஜோடி 343 ரன்கள் சேர்த்து அசத்தியது. அவரைத் தொடர்ந்து பொறுப்புடன் ஆடிய ரவிச்சந்திரனும் இரட்டை சதமடித்தார்.

    இறுதியில், கர்நாடக அணி முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டுக்கு 586 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. ரவிச்சந்திரன் 220 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.

    இரண்டாம் நாள் முடிவில் கேரளா அணி முதல் இன்னிங்சில் 3 விக்கெட்டுக்கு 21 ரன் எடுத்துள்ளது.

    • முதல் நாள் முடிவில் கர்நாடகா 3 விக்கெட்டுக்கு 319 ரன்கள் குவித்தது.
    • அந்த அணியின் கருண் நாயர் 142 ரன்கள் விளாசினார்.

    திருவனந்தபுரம்:

    ரஞ்சி டிராபியின் 3வது போட்டி இன்று தொடங்கியது.

    வெஸ்ட் இண்டீஸ் தொடரில் நீக்கப்பட்ட கருண் நாயர் கர்நாடகா அணிக்காக விளையாடி வருகிறார். இவர் கேரளா அணிக்கு எதிராக முதல் இன்னிங்சில் 142 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறார்.

    கர்நாடகா அணி முதல் நாள் முடிவில் 3 விக்கெட்டுக்கு 319 ரன்கள் குவித்துள்ளது.

    இந்திய அணியின் முன்னணி டெஸ்ட் வீரராக திகழ்ந்த ரகானே, மும்பை அணிக்காக விளையாடி வருகிறார். இவர் சத்தீஸ்கர் அணிக்கெதிராக 159 ரன்கள் விளாசினார்.

    4வது விக்கெட்டுக்கு இணைந்த கருண் நாயர்-ரவிச்சந்திரன் ஜோடி இதுவரை 183 ரன்கள் சேர்த்துள்ளது.

    உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக ஆடி தொடர்ந்து சதமடித்த போதிலும் இந்திய அணியில் இடம் பிடிக்க முடியாமல் தவித்து வருகிறார்.

    • கருண் நாயர் 174 ரன்கள் விளாசினார்.
    • ருதுராஜ் கெய்க்வாட் 116 ரன்கள் சேர்த்தார்.

    ரஞ்சி டிராபியின் 2ஆவது போட்டி நேற்று தொடங்கியது. இங்கிலாந்து தொடரில் சேர்க்கப்பட்டு, வெஸ்ட் இண்டீஸ் தொடரில் நீக்கப்பட்ட கருண் நாயர் கர்நாடகா அணிக்காக விளையாடி வருகிறார். இவர் கோவா அணிக்கெதிராக முதல் இன்னிங்சில் 174 ரன்கள் விளாசினார். இதனால் கர்நாடகா முதல் இன்னிங்சில் 371 ரன்கள் குவித்துள்ளது.

    இந்திய அணியின் முன்னணி டெஸ்ட் வீரராக திகழ்ந்த ரகானே, மும்பை அணிக்காக விளையாடி வருகிறார். இவர் சத்தீஸ்கர் அணிக்கெதிராக 159 ரன்கள் விளாசினார்.

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடி வருகிறார். மகாராஷ்டிரா அணிக்காக விளையாடி வரும் இவர், சண்டிகாருக்கு எதிராக 116 ரன்கள் விளாசினார்.

    உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடிய போதிலும், இந்திய அணியில் இடம் பிடிக்க முடியாமல் தவித்து வருகின்றனர்.

    • வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி விளையாட உள்ளது.
    • இங்கிலாந்து தொடரில் இடம் பெற்ற கருண் நாயர், ஷர்துல் தாக்கூர், ஆகாஷ் தீப் உள்ளிட்டோர் நீக்கப்பட்டுள்ளனர்.

    மும்பை:

    வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி விளையாட உள்ளது. இந்த டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ள 15 பேர் கொண்ட அணியில், இங்கிலாந்து தொடரில் இடம் பெற்ற கருண் நாயர், ஷர்துல் தாக்கூர், ஆகாஷ் தீப் உள்ளிட்டோர் நீக்கப்பட்டுள்ளனர்.

    குறிப்பாக 7 ஆண்டுகளுக்கு பின் இந்திய அணியில் இடம்பிடித்த கருண் நாயர் இங்கிலாந்து டெஸ்ட் தொடருடன் நீக்கப்பட்டிருப்பது குறித்து பல்வேறு கருத்துக்கள் வெளியாகியது.

    அந்த கருத்துக்கு இந்திய அணியின் தேர்வாளர் அஜித் அகர்கர், இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் கருண் நாயரிடம் இருந்து நாங்கள் கொஞ்சம் கூடுதலாக எதிர்பார்த்தோம் என்றும் அதை அவர் பூர்த்தி செய்யவில்லை என கூறினார்.

    இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இந்த தேர்வை நான் எதிர்பார்த்தேன் என கருண் நாயர் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    ஆமாம், நான் இந்த தேர்வை எதிர்பார்த்தேன். என்ன சொல்வதென்றே தெரியவில்லை. வார்த்தைகள் இல்லை. எனக்கு அதிக கருத்துகள் எதுவும் இல்லை. பதில் சொல்வது எனக்கு மிகவும் கடினம்.

    தேர்வாளர்கள் என்ன நினைக்கிறார்கள் என்று அவர்களிடம்தான் கேட்க வேண்டும். ஒரே விஷயம் என்னவென்றால், கடைசி டெஸ்டில் முதல் இன்னிங்சில் வேறு யாரும் ரன் அடிக்காதபோது நான் அரை சதம் அடித்தேன். குறிப்பாக நாங்கள் வென்ற கடைசி ஆட்டத்தில் அணிக்காக நான் பங்களித்ததாக நினைத்தேன்.

    என கருண் நாயர் கூறினார்.

    • வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் கருண் நாயருக்கு இடம் கிடைக்கவில்லை.
    • இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் கருண் நாயரிடம் இருந்து நாங்கள் கொஞ்சம் கூடுதலாக எதிர்பார்த்தோம் என அகர்கர் கூறினார்.

    மும்பை:

    வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி விளையாட உள்ளது. இந்த டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ள 15 பேர் கொண்ட அணியில், சீனியர் வீரரான கருண் நாயர், ஷர்துல் தாக்கூர், ஆகாஷ் தீப் உள்ளிட்டோர் நீக்கப்பட்டுள்ளனர்.

    குறிப்பாக 7 ஆண்டுகளுக்கு பின் இந்திய அணியில் இடம்பிடித்த கருண் நாயர் இங்கிலாந்து டெஸ்ட் தொடருடன் நீக்கப்பட்டிருப்பது பேசும்பொருளாக மாறி உள்ளது.

    இந்த நிலையில் இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் கருண் நாயரிடம் இருந்து நாங்கள் கொஞ்சம் கூடுதலாக எதிர்பார்த்தோம் என்றும் அதை அவர் பூர்த்தி செய்யவில்லை எனவும் அஜித் அகார்கர் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் கருண் நாயரிடம் இருந்து நாங்கள் கொஞ்சம் கூடுதலாக எதிர்பார்த்தோம். அதனை அவர் பூர்த்தி செய்யவில்லை. அதனால் மிடில் ஆர்டரில் தேவ்தத் படிக்கலால் கூடுதலாக பங்களிக்க முடியும் என்று நம்புகிறேன்.

    இந்திய அணிக்காக தேர்வு செய்யப்படும் ஒவ்வொரு வீரருக்கும் 15 முதல் 20 டெஸ்ட் போட்டிகள் வரை வாய்ப்பு அளிக்க வேண்டும் என்பதே எங்களின் ஆசையாக உள்ளது. ஆனால் துரதிஷ்டவசமாக அப்படி நடக்கவில்லை.

    தேவ்தத் படிக்கல் ஏற்கனவே ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஆடி இருந்தார். அதேபோல் தரம்சாலாவில் இங்கிலாந்து அணிக்கு எதிராக ஆடி அரைசதம் விளாசி இருந்தார். இந்திய ஏ அணிக்காக ஆடிய போட்டிகளிலும் நல்ல ஃபார்மில் இருக்கிறார்.

    என்று அகர்கர் கூறினார்.

    • இங்கிலாந்து தொடரில் விளையாடிய கருண் நாயருக்கு இந்த தொடரில் வாய்ப்பு வழங்கப்படவில்லை.
    • ரிஷப் பண்ட் விளையாடாததால் ஜடேஜா துணை கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

    இந்திய கிரிக்கெட் அணி தற்போது ஆசியக் கோப்பை யில் விளையாடி வருகிறது. இதன்பிறகு இந்திய அணி சொந்த மண்ணில் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுகிறது.

    முதல் டெஸ்ட் போட்டி அகமதாபாத்தில் அக்டோபர் 2-ம் தேதி முதல் 6-ம் தேதி வரை நடக்கிறது. 2-வது டெஸ்ட் அக்டோபர் 10-ம் தேதி முதல் 14-ம் தேதி வரை டெல்லியில் நடைபெறுகிறது.

    இந்நிலையில், வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. சுப்மன் கில் கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார். முன்னணி பேட்ஸ்மேனும், விக்கெட் கீப்பருமான ரிஷப் பண்ட் காயம் காரணமாக இந்த தொடரில் விளையாடாததால் ஜடேஜா துணை கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

    இங்கிலாந்து தொடரில் விளையாடிய கருண் நாயருக்கு இந்த தொடரில் வாய்ப்பு வழங்கப்படவில்லை. தமிழக வீரர் ஜெகதீசனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

    15 பேர் கொண்ட இந்திய அணி வீரர்கள்:-

    சுப்மன் கில் (C), யஷஸ்வி ஜெய்ஸ்வால், கே.எல். ராகுல், சாய் சுதர்சன், தேவ்தத் படிக்கல், துருவ் ஜூரல் (WK), ரவீந்திர ஜடேஜா (VC), வாஷிங்டன் சுந்தர், ஜஸ்பிரித் பும்ரா, அக்சர் படேல், நிதிஷ் குமார் ரெட்டி, ஜெகதீசன் (WK), முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, குல்தீப் யாதவ்,

    • ரிஷப் பண்ட் 4-வது டெஸ்ட் போட்டியில் போது காயத்துடன் விளையாடினார்.
    • கிறிஸ் வோக்ஸ் 5-வது டெஸ்ட் போட்டியில் காயத்துடன் விளையாடினார்.

    இங்கிலாந்து- இந்தியா அணிகளுக்கு இடையே நடைபெற்று முடிந்த 5 போட்டிகள் கொண்ட ஆண்டர்சன் டெண்டுல்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடர் (2-2) கணக்கில் சமநிலை அடைந்தது.

    இந்த இங்கிலாந்து தொடருக்கான இந்திய அணியில் இடம் பெற்றிருந்த பல்வேறு வீரர்கள் காயம் காரணமாக அவதிப்பட்டனர். அதிலும் குறிப்பாக ரிஷப் பண்டுக்கு 4-வது டெஸ்ட் போட்டியின் போது கால் பாதத்தில் எலும்பு முறிவு ஏற்பட்டு அவரால் 5-வது போட்டியில் விளையாட முடியாமல் போனது.

    அதேபோன்று இங்கிலாந்து அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான கிரிஸ் வோக்ஸ்சும் இந்திய அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியின் போது தோள்பட்டை பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக அவதிப்பட்டார். இதில் ரிஷப் பண்ட் மற்றும் கிறிஸ் வோக்ஸ் ஆகியோர் அணிக்கு தேவையான நிலையில் உடைந்த காலோடும், உடைந்த கையோடும் களத்திற்கு வந்து விளையாடியது பாராட்டுக்களை பெற்றிருந்தது.

    இந்நிலையில் ரிஷப் பண்ட் மற்றும் கிறிஸ் வோக்ஸ் ஆகியோரை தவிர்த்து மேலும் ஒரு இந்திய வீரர் விரலில் ஏற்பட்ட எலும்பு முறிவோடு விளையாடியது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அந்த வகையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான 5-வது டெஸ்ட் போட்டியின் போது மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான கருண் நாயருக்கு விரலில் சிறியளவு எலும்பு முறிவு ஏற்பட்டிருந்ததாகவும் ஆனால் அணியின் சூழலை கணக்கில் கொண்டு அவர் அந்த எலும்பு முறிவுடனே பேட்டிங் செய்துள்ளார் என்று கூறப்படுகிறது.


    கடந்து 8 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய அணியில் வாய்ப்பினை பெற்ற அவர் இந்த தொடரில் சுமாரான ஆட்டத்தையே வெளிப்படுத்தியிருந்த வேளையில் இப்படி அவர் அர்ப்பணிப்புடன் விளையாடியது தெரிய வந்துள்ளது. அவருக்கு ஏற்பட்ட காயம் குணமடைய சில வாரங்கள் ஆகும் என்பதனால் எதிர்வரும் துலீப் டிராபி தொடரை அவர் தவறவிட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

    • சீரான தொடக்கம் கிடைத்த போதிலும் கருண் நாயர் ஒரு அரை சதம் மட்டும் அடித்தார்.
    • இந்தத் தொடரில் சாய் சுதர்சனின் செயல்பாட்டுக்கு 5 மார்க் அளிக்கிறேன்.

    புதுடெல்லி:

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல்-ரவுண்டர் இர்பான் பதான் தனது யூ டியூப் சேனலில் பேசியதாவது:

    இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் முழுவதும் இந்திய பேட்ஸ்மேன் கருண் நாயர் மோசமாக செயல்பட்டதாக தெரியவில்லை. ஆனால் அவருக்கு தொடர்ந்து சீரான தொடக்கம் கிடைத்த போதிலும், ஒரு அரை சதம் மட்டுமே அடித்துள்ளார். அத்துடன் கிரிக்கெட் அவருக்கு 2-வது வாய்ப்பு கொடுத்துள்ளது. அதனை அவர் சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை.

    குறிப்பாக, லண்டன் லார்ட்சில் நடந்த டெஸ்டில் போட்டியை வென்று தர அற்புதமான வாய்ப்பு கிட்டியது. இருப்பினும் அவரால் அதை செய்ய முடியவில்லை. நல்ல அடித்தளம் அமைத்து ஆடும்போது, திடீரென தவறான ஷாட்டை ஆடி ஆட்டமிழந்து விடுகிறார். ஓவலில் நடந்த கடைசி டெஸ்டில் பவுன்சர் பந்து அவருக்கு எதிராக பயன்படுத்தப்பட்டது. அது அவரை பதற்றம் அடைய செய்ததைப் பார்க்க முடிந்தது. அதனால் அவரது செயல்பாட்டுக்கு 10க்கு 4 மார்க் வழங்குகிறேன்.

    இந்தத் தொடரில் சாய் சுதர்சனின் செயல்பாட்டுக்கு 5 மார்க் அளிக்கிறேன். அவர் சில இடங்களில் ஏற்றம் காண வேண்டும் என்றாலும் திறமையான வீரராக தெரிகிறார். அவருக்கு வழங்கப்பட்ட வாய்ப்பை இன்னும் சிறப்பாக பயன்படுத்தி இருக்கலாம். என்றாலும் அவர் அனைத்து டெஸ்டிலும் விளையாடி இருந்தால், விஷயம் வேறுவிதமாக இருந்திருக்கும்.

    வெளிநாட்டு சுற்றுப்பயணத்தில் உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும், உங்களது அணி தோல்வியை தழுவும்போது, அணியில் இருந்து கழற்றிவிடப்படுவீர்கள். மீண்டும் அணிக்கு திரும்புவீர்கள் என அனைத்தும் நடக்கும். ஆனால் அதன் பிறகு ஆடும் லெவனில் இடம் கிடைப்பது கடினம். ஆனால் ஒரு வீரராக தொடர்ந்து வாய்ப்பு கிடைத்தால், நம்மால் நிறைய சாதிக்க முடியும் என அவர் நினைப்–பார். எனக்கு எப்போதும் முன்வரிசையில் களம் இறங்கும் இடதுகை பேட்ஸ்மேன்களைப் பிடிக்கும். சிறப்பாக பேட்டிங் செய்வதற்கான திறன் சுதர்சனிடம் இருக்கிறது. அதனால் தான் அவருக்கு 5 மார்க் கொடுத்தேன் என தெரிவித்தார்.

    • இந்திய தரப்பில் கருண் நாயர் 57 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
    • இங்கிலாந்து தரப்பில் கஸ் அட்கின்சன் 5 விக்கெட் வீழ்த்தினார்.

    ஓவல்:

    இங்கிலாந்து, இந்தியா இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் லண்டன் ஓவலில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, இந்திய அணியின் ஜெய்ஸ்வால், கே.எல்.ராகுல் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். ஜெய்ஸ்வால் 2 ரன்னில் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். கே.எல்.ராகுல் 14 ரன்னில் அவுட்டானார். சாய் சுதர்சனுடன் சுப்மன் கில் ஜோடி சேர்ந்தார்.

    3வது விக்கெட்டுக்கு 45 ரன்கள் சேர்த்த நிலையில் சுப்மன் கில் 21 ரன்னில் ரன் அவுட்டாகி வெளியேறினார். நிதானமாக ஆடிய சாய் சுதர்சன் 38 ரன்னில் ஆட்டமிழந்தார். ஜடேஜா 9 ரன்னில் அவுட்டானார். மழை காரணமாக ஆட்டம் தடைபட்டது.

    7வது விக்கெட்டுக்கு கருண் நாயருடன் வாஷிங்டன் சுந்தர் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நிதானமாக ஆடியது. பொறுப்புடன் ஆடிய கருண் நாயர் அரை சதம் கடந்தார்.

    இறுதியில், முதல் நாள் முடிவில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 6 விக்கெட் இழப்புக்கு 204 ரன்கள் எடுத்துள்ளது. கருண் நாயர் 52 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.

    இந்நிலையில் 2-வது நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. தொடங்கிய சிறிது நேரத்தில் இந்திய பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். கருண் நாயர் 57 ரன்னிலும் வாஷிங்டன் சுந்தர் 26 ரன்னிலும் சிராஜ் 0, பிரஷித் கிருஷ்ணா 0 எனவும் வெளியேறினார்.

    இதனால் இந்திய அணி 224 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இங்கிலாந்து தரப்பில் கஸ் அட்கின்சன் 5 விக்கெட் வீழ்த்தினார்.

    • பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தில் அரைசதம் அடித்து களத்தில் உள்ளார்.
    • 100 ரன்கள் கடப்பார் என நம்புவதாக கெவின் பீட்டர்சன் தெரிவித்துள்ளார்.

    இந்தியா- இங்கிலாந்து இடையிலான 5ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நேற்று தொடங்கியது. பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தில் இந்திய வீரர் கருண் நாயர் சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்தார். இவரது அரை சதத்தால் இந்தியா முதல்நாள் ஆட்ட முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 204 ரன்கள் எடுத்துள்ளது. கருண் நாயர் 98 பந்தில் 52 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.

    இந்த நிலையில் கருண் நாயர் குறித்து கெவின் பீட்டர்சன் கூறியதாவது:-

    நேற்றைய முதல்நாள் நாளில் இந்தியாவின் பேட்டிங்கை நிலை நிறுத்திய கருண் நாயரின் ஆட்டம் மகிழ்ச்சி அளிக்கிறது. அவரது ஆட்டத்தில் மிகப்பெரிய அளவில் கடின உழைப்பை போட்டுள்ளார். இங்கிலாந்தில் பேட்டிங் செய்வது குறித்து ஐபிஎல் தொடரின்போது, பலமணி நேரம் நாங்கள் இருவரும் பேசியுள்ளோம். இன்று அற்புதமான 100 ரன்களை கடப்பார் என்று நம்புகிறேன்.

    இவ்வாறு கருண் நாயர் தெரிவித்துள்ளார்.

    • முதல் நாள் முடிவில் இந்தியா 6 விக்கெட்டுக்கு 204 ரன்கள் எடுத்தது.
    • 3வது விக்கெட்டுக்கு சாய் சுதர்சன், சுப்மன் கில் ஜோடி 45 ரன்கள் சேர்த்தது.

    ஓவல்:

    இங்கிலாந்து, இந்தியா இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் லண்டன் ஓவலில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது.

    இந்திய அணியில் பும்ரா, பண்ட், அன்ஷுல் கம்போஜ், ஷர்துல் தாகூர் ஆகியோர் நீக்கப்பட்டு ஆகாஷ் தீப், கருண் நாயர், பிரசித் கிருஷ்ணா, ஜுரெல் ஆகியோர் சேர்க்கப்பட்டனர்.

    அதன்படி, இந்திய அணியின் ஜெய்ஸ்வால், கே.எல்.ராகுல் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். ஜெய்ஸ்வால் 2 ரன்னில் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். கே.எல்.ராகுல் 14 ரன்னில் அவுட்டானார். சாய் சுதர்சனுடன் சுப்மன் கில் ஜோடி சேர்ந்தார்.

    3வது விக்கெட்டுக்கு 45 ரன்கள் சேர்த்த நிலையில் சுப்மன் கில் 21 ரன்னில் ரன் அவுட்டாகி வெளியேறினார். நிதானமாக ஆடிய சாய் சுதர்சன் 38 ரன்னில் ஆட்டமிழந்தார். ஜடேஜா 9 ரன்னில் அவுட்டானார். மழை காரணமாக ஆட்டம் தடைபட்டது.

    7வது விக்கெட்டுக்கு கருண் நாயருடன் வாஷிங்டன் சுந்தர் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நிதானமாக ஆடியது. பொறுப்புடன் ஆடிய கருண் நாயர் அரை சதம் கடந்தார்.

    இறுதியில், முதல் நாள் முடிவில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 6 விக்கெட் இழப்புக்கு 204 ரன்கள் எடுத்துள்ளது. கருண் நாயர் 52 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.

    இங்கிலாந்து சார்பில் ஜோஷ் டாங்க், அட்கின்சன் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    • இன்னொரு வாய்ப்புக்கு தகுதியானவர் என்பதை உறுதிப்படுத்த சுப்மன் கில்லுக்கு இன்று வாய்ப்பு இருந்தது.
    • அவர் கருண் நாயரை தேர்வு செய்திருக்க வேண்டும்.

    இந்தியா- இங்கிலாந்து இடையிலான 4ஆவது டெஸ்ட் போட்டி மான்செஸ்டர் ஓல்டு டிராஃபோர்டில் இன்று தொடங்கியது. இந்திய அணியில் மூன்று மாற்றங்கள் செய்யப்பட்டன. காயம் காரணமாக ஆகாஷ் தீப், நிதிஷ் ரெட்டி ஆகியோர் நீக்கப்பட்டு அன்ஷுல் கம்போஜ், ஷர்துல் தாகூர் சேர்க்கப்பட்டனர்.

    சுமார் 8 வருடத்திற்குப் பிறகு இந்திய டெஸ்ட் அணியில் இடம் பிடித்த கருண் நாயர், 6 இன்னிங்சில் 0, 20, 31, 26, 40 மற்றும் 14 ரன்களே அடித்ததால் அணியில் இருந்து நீக்கப்பட்டார். அவருக்குப் பதிலாக சாய் சுதர்சன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

    கருண் நாயருக்கு இன்னும் ஒரு வாய்ப்பு கொடுத்திருக்க வேண்டும் என கிரிக்கெட் விமர்சகர்கள் மற்றும் முன்னாள் வீரர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் முகமது கைஃப் தனது எக்ஸ் பக்கத்தில் "கருண் நாயர் குறிப்பிடத்தகுந்த வகையில் விளையாட வில்லை என்றாலும், இன்னொரு வாய்ப்புக்கு தகுதியானவர் என்பதை உறுதிப்படுத்த சுப்மன் கில்லுக்கு இன்று வாய்ப்பு இருந்தது. அவர் கருண் நாயரை தேர்வு செய்திருக்க வேண்டும். அணித் தலைவராக கடினமான முடிவு எடுக்கும்போது, மரியாதை பெறுவதற்கான வாய்ப்பை இழந்து விட்டார்" எனத் தெரிவித்துள்ளார்.

    ×