வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம்: ரோகித் சர்மாவுக்கு ஓய்வு இல்லை- மூத்த அதிகாரி தகவல்

டெஸ்ட் போட்டியில் சர்பராஸ் கான் போன்ற ஒருவரை சேர்க்க தேர்வாளர்கள் ஆர்வமாக உள்ளனர்.ஹர்திக் பாண்ட்யா ஒரு புதிய தோற்றம் கொண்ட டி20 அணிக்கு தலைமை தாங்குவார்.
வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம்: ரோகித் சர்மாவுக்கு ஓய்வு இல்லை- மூத்த அதிகாரி தகவல்
Published on

இந்திய அணி அடுத்த மாதம் வெஸ்ட் இண்டீசுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறது. இந்த சுற்றுப்பயணத்தில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணிகளை ரோகித் சர்மா வழிநடத்துவார். டி20 அணிக்கு ஹர்திக் பாண்டியா பொறுப்பேற்பார்.

டெஸ்ட் தொடரில் இருந்து ரோகித்துக்கு ஓய்வு அளிக்கப்படலாம் என்றும், வேறொருவர் தற்காலிகமாக பொறுப்பேற்கலாம் என்றும் செய்திகள் வெளியாகின.

இந்நிலையில் அந்த வதந்திகளுக்கு பிசிசிஐ மூத்த அதிகாரி ஒருவர் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். ரோகித் சர்மா இந்த சுற்றுப்பயணத்தில் இருக்கிறார். மேலும் கேஎல் ராகுல், ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் காயத்தில் இருப்பதால் இந்த தொடரில் பங்கேற்கவில்லை. எனவே, புஜாரா தனது இடத்தை தக்கவைத்துக் கொள்ள உள்ளார்.

புஜாரா இருந்தபோதிலும், இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கு சர்பராஸ் கான் போன்ற ஒருவரை சேர்க்க தேர்வாளர்கள் ஆர்வமாக உள்ளனர்.

டி20 போட்டிகளில் ரோகித் மற்றும் விராட் கோலிக்கு இடம் இருக்காது. ஹர்திக் பாண்டியா ஒரு புதிய தோற்றம் கொண்ட டி20 அணிக்கு தலைமை தாங்குவார். ஐபிஎல் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய வீரர்கள் இதில் இடம் பெறுவார்கள் எனவும் அவர் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com