search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "west indies india series"

    • நாங்கள் பேட்டிங்கில் சாதிக்க தவறிவிட்டோம்.
    • தொடரை இழந்ததற்காக நான் பெரிதும் வருத்தப்படவில்லை.

    ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான இந்திய அணி கடைசி 20 ஓவர் போட்டியில் தோல்வியை தழுவியது. இதன்மூலம் 6 ஆண்டுகளுக்கு பிறகு வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக இந்திய அணி 20 ஓவர் தொடரை இழந்தது.

    இந்த தோல்வி குறித்து கேப்டன் ஹர்திக் பாண்ட்யா கூறியதாவது:-

    நாங்கள் பேட்டிங்கில் சாதிக்க தவறிவிட்டோம். அது ஆட்டத்தின் தன்மையை மாற்றிவிட்டது. இந்த ஆட்டத்தில் வெஸ்ட்இண்டீஸ் அதை சிறப்பாக பயன்படுத்திக்கொண்டு ஆடியது. 10 ஓவர்களுக்கு பிறகு நாங்கள் ஆட்டத்தின் தன்மையை இழந்தோம். மற்ற வீரர்கள் நன்றாக ஆடினார்கள். நான் அதிக நேரம் எடுத்துக் கொண்டேன். சிறப்பாக விளையாட தவறி விட்டேன். தோல்விக்கு நானே காரணம்.

    தொடரை இழந்ததற்காக நான் பெரிதும் வருத்தப்படவில்லை. அடுத்த 20 ஓவர் உலக கோப்பைக்கு (2024) இன்னும் நாட்கள் அதிகமாக இருக்கிறது. அடுத்து 50 ஓவர் உலக கோப்பை பற்றிய சிந்தனை தான் இருக்கிறது. தோல்வி சில நேரங்களில் நல்லது. அது நிறைய விஷயங்களை கற்றுக் கொடுக்கிறது.

    இவ்வாறு ஹர்திக் பாண்ட்யா கூறியுள்ளார்.

    • இந்தியா இத்தொடரை வெல்ல எஞ்சிய 3 போட்டிகளில் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
    • கடைசியாக கடந்த 2006-ம் ஆண்டு ராகுல் டிராவிட் தலைமையில் வெஸ்ட் இண்டீஸ் சென்ற போது இந்தியா 3 தோல்விகளை சந்தித்தது.

    இந்தியாவுக்கு எதிராக தங்களுடைய சொந்த மண்ணில் நடைபெற்று வரும் 5 போட்டியில் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் முதலிரண்டு போட்டிகளில் அடுத்தடுத்த வெற்றிகளை பெற்ற வெஸ்ட் இண்டீஸ் 2 - 0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. அடுத்தடுத்த தோல்விகளை சந்தித்துள்ள இந்தியா இத்தொடரை வெல்ல எஞ்சிய 3 போட்டிகளில் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

    முன்னதாக உலக கோப்பைகளில் தோற்றாலும் இருதரப்பு தொடர்களில் இந்தியா மிரட்டலாக செயல்பட்டு வெற்றி பெறுவது மட்டுமே ரசிகர்களுக்கு ஆறுதலாக இருந்து வந்தது. ஆனால் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக தோல்வியை தழுவியதன் மூலம் வரலாற்றிலேயே முதல் முறையாக அடுத்தடுத்த 2 தொடர்ச்சியான போட்டிகளில் இந்தியா தோல்வியை சந்தித்தது இதுவே முதல் முறையாகும்.

    இதற்கு முன் டோனி, விராட் கோலி, ரோகித் சர்மா போன்ற எந்த கேப்டன்கள் தலைமையிலும் அடுத்தடுத்த 2 டி20 போட்டிகளில் வெஸ்ட் இண்டீஸ் அணியிடம் இந்தியா தோற்றதில்லை. அதன் வாயிலாக வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக அடுத்தடுத்த 2 டி20 போட்டிகளில் தோல்வியை சந்தித்த முதல் கேப்டன் என்ற மோசமான சாதனையை ஹர்திக் பாண்டியா படைத்துள்ளார்.

    மேலும் நடைபெற்று முடிந்த ஒருநாள் தொடரிலும் 1 தோல்வியை சந்தித்த இந்தியா இந்த தோல்வியையும் சேர்த்து மொத்தம் 3 தோல்விகளை சந்தித்துள்ளது. இதன் வாயிலாக 18 வருடங்கள் கழித்து ஒரு வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தில் முதல் முறையாக 3 தோல்விகளை இந்தியா பதிவு செய்துள்ளது. கடைசியாக கடந்த 2006-ம் ஆண்டு ராகுல் டிராவிட் தலைமையில் வெஸ்ட் இண்டீஸ் சென்ற போது இந்தியா 3 தோல்விகளை சந்தித்தது. 

    • இடது கை சுழற்பந்து வீரர் ஜோமல் வாரிகன், ரகீம் கான்வால் ஆகியோர் அணிக்கு மீண்டும் திரும்பி உள்ளனர்.
    • குடாகேஷ் அணியில் இடம்பெறவில்லை.

    போர்ட் ஆப் ஸ்பெயின்:

    இந்திய கிரிக்கெட் அணி 2 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டி மற்றும் ஐந்து 20 ஓவர் போட்டிகளில் விளையாடுவதற்காக வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ளது.

    இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி வருகிற 12-ந் தேதி தொடங்குகிறது. இதற்காக ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி ஏற்கனவே வெஸ்ட் இண்டீஸ் சென்று விட்டது. அங்கு வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இந்த நிலையில் முதல் டெஸ்ட் போட்டிக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி இன்று அறிவிக்கப்பட்டது.

    13 பேர் கொண்ட வெஸ்ட் இண்டீஸ் அணியில் இடது கை பேட்ஸ்மேனான கிரிக் மெக்கன்சி, அலிசிக் அதானஸ் ஆகிய 2 புதுமுக வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

    இடது கை சுழற்பந்து வீரர் ஜோமல் வாரிகன், ரகீம் கான்வால் ஆகியோர் அணிக்கு மீண்டும் திரும்பி உள்ளனர். குடாகேஷ் அணியில் இடம்பெறவில்லை.

    இந்தியாவுக்கு எதிராக முதல் டெஸ்டில் விளையாடும் வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர்கள் வருமாறு:-

    பிராத் வெயிட் (கேப்டன்) பிளாக்வுட், ஜேசன் ஹோல்டர், தெகனரின் சந்தர்பால், ரகீம் கான்வால், ஜோதவா சில்வா, அலிசிக் அதானஸ், கேப்ரியல் அல்ஜாரி ஜோசப், கிரிக் மெக்கன்சி, ரேமன் ரெய்பர், கேமர் ரோச், ஜோமல் வாரிகன்.

    அகீம் ஜோர்டான், டெவின் இம்லாச் ஆகியோர் மாற்று வீரர்களாக இடம் பெற்றுள்ளனர்.

    ×